Pages

Thursday, March 31, 2011

ஆணும் ஆணும்

ஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள்ள வேண்டும்.எப்போதாவது உங்களை மாதிரி இருக்கும் நண்பரிடம் பேசலாம்.இம்மாதிரி வாழ்க்கையை உலகில் சுமார் 5சதவீத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் தங்களுடைய பழக்கங்களை,ஆர்வங்களை வெளியே பேசினால் கேவலமாக பார்ப்பார்கள்.  

                           அவர்கள் தனது ஜோடியுடன் அவசரமாக லாட்ஜில் ரூம் எடுப்பார்கள்.சில நேரம் குழுவாக! போலீஸ் பயம் வேறு.அப்படி ஒரு பழக்கம்.ரகசிய உலகத்தில் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் ஆணும்,பெண்ணும் அல்ல! ஆணும் ஆணும்! ஆமாம்,அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள்.

 


                            நகரில் ஒரு பெரிய வீட்டில் குடும்பம் நட்த்திக் கொண்டிருந்த அந்த பிரபல அரசியல் புள்ளி கொலை செய்யப்பட்டார்.செல்போனில் கடைசியாக கொல்லப்படும் முன்பு தொடர்பு கொண்டிருந்த எண்ணை துருவினார்கள்.அது அவரது ஆண் ஜோடியின் செல்போன் எண் என்பது கண்டுபிடித்தார்கள்.

                            மேலே கண்ட அரசியல்வாதியை போல பலர் இருக்கிறார்கள்.அவர்கள் ஆர்வம் ஆணிடம்தான் என்றாலும் வெளியே சொல்ல முடியாமல் திருமணம் செய்து கொள்வார்கள்.மனைவியிடம் ஈடுபாடு அதிகம் இருக்காது.வெளியில் மட்டும் மற்றவர்களைபோலவே குடும்பம் நட்த்துவார்கள்.இவர்களை bisexual என்பார்கள்.

 

                              பரம்பரை கூறுகள் காரணமாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறினாலும் அறியாத வயதில் ஓரினச்சேர்க்கை நபர்களால் பழக்கத்துக்கு உள்ளாகி விட முடியாமல் போய்விட்டவர்கள்தான் அதிகம்.விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம்.ஆணுடன் ஆண் சேர்க்கையில் பழகுவது,போதை சிகரெட் போன்றவற்றுக்கு அடிமையாவது போலவேதான்.

                               குற்ற உணர்வு,வெளியே தெரிந்து விடுமோ என்ற பயம்,விளைவுகள் பற்றிய கலக்கம்,தன்மீது சுயமதிப்பு குறைந்து அதிகம் சமூக ஒட்டுதலின்றி வாழவேண்டும்.கிட்ட்த்தட்ட வாழ்நாள் முழுக்க நரகம் போலவே!சமூகம் கேவலமாக பார்க்கும்.இப்போது நீதிமன்றங்கள் ஓரளவு ஆதரவு நிலை எடுத்து வருகின்றன. அவர்கள் இப்படிப்பட்ட பழக்கத்திற்கு உள்ளாகும் சூழல் எதிர்பாராமல் நடக்கும் ஒன்று. 

               

                                                                  கல்லூரி விடுதியில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அவனுக்கு முதல் அனுபவம்.பிறகு அதுவே பழக்கமாகிப் போனது.இன்று அவன் ஆணுடன் ஆண் உறவு கொள்ளும் Homosexual.அவனுக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை.பால்வினை நோய்கள் வேறு இருக்கிறது.வீட்டில் திருமணத்திற்கு  கட்டாயப்படுத்துகிறார்கள்.மன உளைச்சலில் அலைந்து கொண்டிருக்கிறான்.பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல,ஆண் குழந்தைக்கும் வெளியில் ஆபத்து இருக்கிறது என்கிறார் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர்.

                             மேலே தெரிவித்த்து போல உலக மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் வரை இருக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள்.சிலருக்கு குறிப்பிட்ட சதவீதம்வரை பெண் தன்மை இருக்கலாம்.அவர்களில் பணத்திற்காக தொழில் செய்பவர்களும் உண்டு.அவர்கள் கண்டிக்கத்தக்கவர்களோ,பாவிகளோ அல்ல!பரிதாபத்துக்குரியவர்கள்.சக மனிதப்பிறவிகளாக மதிக்கப்பட வேண்டியவர்களே!

12 comments:

  1. எப்படி பாஸ் சொல்லி வைத்தது போல.. நீங்க சுருக்கமாய் எழுதியதை நான் விரிவாக எழுதி இருக்கேன்.... நல்ல பதிவு...

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரம், சமூகத்திற்கு அவசியமான விடயத்தை அலசியுள்ளீர்கள். இன்று வரை எமது சமூகம் இந்த ஓரினச் சேர்க்கையாளர்களைத் தவறான புரிதலிப் பார்ப்பதனால் தான் இந்த கொலை நிகழ்வுகளும், மறைவு வாழ்க்கையும், துஷ்பிரயோகங்களும் ஏற்படுகின்றன.

    ReplyDelete
  3. @இக்பால் செல்வன் said...

    எப்படி பாஸ் சொல்லி வைத்தது போல.. நீங்க சுருக்கமாய் எழுதியதை நான் விரிவாக எழுதி இருக்கேன்.... நல்ல பதிவு...

    பேசிவச்சு எழுதறாங்கன்னு சொல்வாங்களோ!நன்றி

    ReplyDelete
  4. @நிரூபன் said...

    வணக்கம் சகோதரம், சமூகத்திற்கு அவசியமான விடயத்தை அலசியுள்ளீர்கள். இன்று வரை எமது சமூகம் இந்த ஓரினச் சேர்க்கையாளர்களைத் தவறான புரிதலிப் பார்ப்பதனால் தான் இந்த கொலை நிகழ்வுகளும், மறைவு வாழ்க்கையும், துஷ்பிரயோகங்களும் ஏற்படுகின்றன.

    ஆம்,சகோதரம்.நன்றி

    ReplyDelete
  5. வசீகரிக்கும் டைட்டில்.. நியாயமான கருத்துக்கள்

    ReplyDelete
  6. @சி.பி.செந்தில்குமார் said...

    வசீகரிக்கும் டைட்டில்.. நியாயமான கருத்துக்கள்

    ஆம்,சி.பி.ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் பகிர்ந்து கொள்ளும்போது தலைப்பில் உள்ள வார்த்தைகளையே முதலில் பயன்படுத்தினார்.விடுதிகள் தாண்டி வந்தவர்களுக்கு இடம் ஒரு பெரிய பிரச்சினை.அதை உணரவைக்கவே தலைப்பு

    ReplyDelete
  7. ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

    ReplyDelete
  8. @Jana said...

    ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

    தங்களது மீள்வருகைக்கு நன்றி,ஜனா

    ReplyDelete
  9. !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    நானும் வந்துட்டேன்..

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. இப்படி 5% இல்லை நன்ப்ரே. 5 பேரில் ஒருத்தர் இருக்கிறார். வெளியில் தெரிவதில்லை. ஆனால் நம்மளை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள்.நானும் சிலரை நம்பி கண்ணியத்துடன்பழகி அவர்களிடம் மாட்ட பார்த்தேன். கடவுள் அருளால் தப்பினேன். இது ஒன்று, இரண்டு அல்ல. 10’கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்தது. முக்கிய காரணம், சரியான வயதில் திருமணம் செய்யாமையே!!!

    ReplyDelete