Monday, April 18, 2011

பெண்மைக் குறைவு-ஆண்மைக்குறைவு-நரம்புத்தளர்ச்சி


                                 திருமணமான பெண் தாம்பத்யத்தில் ஆர்வமில்லாத நிலையை பெண்மைக்குறைவு(Frigidity) என்று சொல்ல்லாம்.ஆர்வமின்மையும் வெறுப்பும் இருக்க்க் கூடும்.குறிப்பிட்ட சதவீதம் இப்பிரச்சினை உள்ளதாக கருதப்படுகிறது.இதுதான் காரணம் என்று குறிப்பாகச் சொல்லமுடியாது.

                                 நெருக்கமில்லாத தம்பதிகள்-அதிரும் மணவாழ்க்கை என்ற பதிவில் சிலவற்றை கூறியிருக்கிறேன்.ஏதோ ஒரு காரணத்தால் கணவன் மனைவி அன்பில்லாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம்.பெரும்பாலும் இதனாலேயே வெறுப்பும் ஆர்வமின்மையும் தோன்றக்கூடும்.

                                பலருக்கு இதனால் உடல்நலக்குறைவும் அடிக்கடி ஏற்பட்டுவிடும்.மனம் சார்ந்த உடல்நோய்கள் என்று சொல்வார்கள்.விருப்பமில்லாத நிலை உடல்நல பாதிப்பாக தோன்றும்.அடிக்கடி மாலையில் தலைவலி,உடல்வலி இருப்பதாக கூறிய பெண்ணை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்.

                               முழுமையாக பரிசோதித்த மருத்துவர் உடலில் கோளாறு எதுவும் இல்லாத்தை கண்டுபிடித்தார்.அவருக்கு தாம்பத்யத்தில் உள்ள வெறுப்பே காரணம் என்பது பின்னர் தெரிய வந்த்து.விஷயம் தெரிந்துவிட்டால் சீர் செய்து விடலாம்.

                               யாரையாவது காதலித்துவிட்டு பின்னர் குடும்பத்தினர் சம்மதம் கிடைக்காமல் அல்லது தவிர்க்க முடியாத சூழலால் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு பெண்மைக்குறைவு ஏற்படுவது அதிகம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

                               சிறு வயதில் ஏற்படும் அனுபவங்களும் நம்பிக்கைகளும் இன்னொரு பிரச்சினை.இந்தியாவில் இது சகஜமாக காணப்படுகிறது.நம் பண்பாட்டில் பாலியல் என்பது சீச்சீ! இதெல்லாம் தவறு என்ற எண்ணத்துடனே சிறு வயதில் இருந்து வளரும் குழந்தைகள் ஆர்வமில்லாத,வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்கிறார்கள்.

                                இன்னொன்று மனநிலையில் ஏற்படும் பாதிப்புகள்.மன அழுத்தம் போன்ற சிக்கல்களில் இருக்கும்போது பெண்மைக்குறைவு சாதாரணம்.சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் காரணமாகலாம்.நீண்ட காலம் கர்ப்பமுறாமல் இருக்கும் பெண்ணுக்கும் இந்நிலை தோன்றலாம்.

                                 தாழ்வு மனப்பான்மை உள்ள பெண்களுக்கு வெறுப்பும்,ஆர்வமின்மையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தன் அழகு,குடும்பம்,கல்வி,உடலமைப்பு போன்றவை சிறப்பாக இல்லை என்று தனக்குள்ளேயே தாழ்வு மனப்பானமை கொண்டிருப்பது பெண்மைக்குறைவில் கொண்டுபோய் விட்டுவிடும்.

                                 சிறப்பான ஆலோசனையும்,மருத்துவ உதவியும்,ஹார்மோன் சிகிச்சைகளும் இப்பிரச்சினையை போக்க உதவும்.தங்களுக்குள்ளேயே மூடி வைத்துக்கொள்ளாமல் நிபுணர்களை நாடுவது நல்ல எதிர்காலத்தை உறுதி செய்யும்.

   ஆண்மைக்குறைவும்,நரம்புத்தளர்ச்சியும் பதிவு இங்கே
-

8 comments:

MANO நாஞ்சில் மனோ said...

பிரயோஜனமான பதிவு இது....

சக்தி கல்வி மையம் said...

உருப்படியான பதிவு..

Unknown said...

வாழ்க்கைக்கு உகந்த பதிவு...தொடருங்கள் பாஸ்..
பலர் சொல்ல தயங்கும் விடயங்கள் !!

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

பிரயோஜனமான பதிவு இது....

நன்றி மனோ

Jana said...

அதிக வேலைப்பழு உள்ள பெண்களுக்கும், கூடுதலாக பெண்கள் சுற்றத்துடன் வளர்ந்த பெண்களுக்கும் பெண்மைக்குறைவு தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் ஒரு கட்டுரையில் படித்திருக்கின்றேன்.
சிறப்பான ஒரு பதிவு. அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றும் கூட.

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உருப்படியான பதிவு..

நன்றி கருன்

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

வாழ்க்கைக்கு உகந்த பதிவு...தொடருங்கள் பாஸ்..
பலர் சொல்ல தயங்கும் விடயங்கள் !!


ஆமாம் சிவா! நன்றி

shanmugavel said...

@Jana said...

அதிக வேலைப்பழு உள்ள பெண்களுக்கும், கூடுதலாக பெண்கள் சுற்றத்துடன் வளர்ந்த பெண்களுக்கும் பெண்மைக்குறைவு தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் ஒரு கட்டுரையில் படித்திருக்கின்றேன்.
சிறப்பான ஒரு பதிவு. அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றும் கூட.

நல்ல தகவல் ஜனா.நன்றி