Saturday, April 23, 2011

இணையத்தால் கற்பழிப்புகள் அதிகரிக்கிறதா?


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு சாபக்கேடு.ஆண்டுதோறும் தொடர்ந்து இவை அதிகரித்து வருகின்றன.1990-ஆம் ஆண்டு 9518 ஆக இருந்த கற்பழிப்புகளின் எண்ணிக்கை 2009-ல்   21397 ஆக அதிகரித்துள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் இது.

                            பெருநகரங்களில்தான் கற்பழிப்புகளும்,பெண்களுக்கெதிரான குற்றங்களும் மலிந்துள்ளன.பல வல்லுநர்களும் நகரமயமாதலை முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.பணி காரணமாக பெண்கள் தனியாக வாழ்வது நகரங்களில் அதிகம்.குறிப்பிட்ட வயதில் உள்ள ஆண்களும்  அதிகம்.

                            வீட்டைவிட்டு வெளியில் தங்கி பணிபுரியும் ஆண்களிடம் சகவாசம் காரணமாக போதைப்பழக்கங்கள் உள்பட பல்வேறு சீரழிவுகள்.இந்தியாவில் குற்றங்களின் தலைநகரமாக டெல்லியே முதலிட்த்தில் இருக்கிறது.ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான சமூக தொடர்பில்லாத நிலையில் இன்னொரு மனிதனை மிருகமாகவே கருதுகிறார்கள்.

                             அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ள தாதாக்களும் அவர்களது அடியாட்களும் இம்மாதிரியான குற்ற நிகழ்வுகளில் பெரிதும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.ஈவ் டீசிங்,கட்த்தல்,பாலியல் தொல்லைகளும் இவர்களால் நாள்தோறும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

                             பத்தாண்டுகளில் அதிகரித்துள்ள இன்னொரு விஷயம் இணையம்.தியேட்டர்களில் பிட்டுப்படங்களுக்கு தயங்கி தயங்கி போய்க் கொண்டிருந்தவர்களுக்கு இன்று இருபது ரூபாயில் ஒருமணி நேரம் ஆபாசபடம் பார்க்கலாம்.நகரங்களில் பெரும்பாலான பிரௌசிங் செண்டர்களில் முக்கியமான முகவரி போன்று ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆபாசமும்,போதையும் சேரும்போது விளைவுகள் மோசமாகின்றன.

                               புள்ளிவிவரங்களை தாண்டி பல கற்பழிப்புகள் மூடி மறைக்கப்பட்டு விடுவதுதான் அதிகம்.வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை போய்விடும் என்ற பயத்தால் தடுக்கப்பட்டன.ஓரளவு கல்வியறிவு காரணமாக இப்போது வழக்கு பதிவாவது அதிகரித்திருக்கிறது.எண்ணிக்கை அதிகம் காணப்படுவதற்கு இதுவும் காரணம்.

                               இன்னொரு வகை கற்பழிப்புகள் சுத்தமாக மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.அவை நெருங்கிய உறவினர்களால் நடக்கும் கொடூரங்கள்.தனது அக்காள் கணவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப்பற்றி வேறொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.எப்போதும் இதெல்லாம் வெளியில் வராது.இந்த வகை கற்பழிப்புகள் அதிகம்.

                               குழந்தைகளுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளும் நெருங்கிய உறவினர்களாலும்,தெரிந்தவர்களாலும்தான் நடக்கின்றன்.52 சதவீத குழந்தைகள் பாதிக்க்ப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.தொழில்நுட்பம் மேம்பட்ட அளவுக்கு இன்னும் மனம் மேம்படவில்லை என்பது கவலை தரும் ஒன்று.
-

2 comments:

Sankar Gurusamy said...

பாலியல் வன்முறைகள் இப்போது கிராமங்களிலும் அதிகமாகி உள்ளது.. ஆனால் அவை பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன. சொல்லப்போனால் நகரங்களைவிட கிராமங்களிலேதான் இது அதிகம்.

இணையத்தைவிட சினிமாவும் டிவி யும் உருவாக்கிய தாக்கம் மிக அதிகம்.

ஆனால் இணையம் அதைவிட பெரிய தாக்கம் உண்டுபண்னும் சாத்தியம் வருங்காலத்தில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மிகத்தேவையான விழிப்புணர்வுப்பதிவு. பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

நன்றி சங்கர்