Tuesday, July 5, 2011

பட்ட பிறகே புத்தி பெறும் அரசாங்கம்.



கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்கள்.நம்முடைய அரசுகளின் நிலையும் இதுதான்.கும்பகோணம் பள்ளி தீவிபத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.ஆனால் அதற்கு பிறகு நடந்த்து நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.கும்பகோணத்தில் மட்டுமல்ல தென்ன்ங்கீற்று வேய்ந்த பள்ளிகள் ஏராளமான இடங்களில் இருந்த்து.அதிகாரிகள் ஓடினார்கள்.இந்த் தேதிக்குள் பிரித்துவிடவேண்டுமென்று கெடு விதித்தார்கள்.குறைகளை கண்டுபிடித்தார்கள்.

                                குடிசை பள்ளிகள் சில ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுக்கு அவசரமாக மாறின.சில குறைகள் களையப்பட்டன.அப்புறம் கஷ்டப்பட்டு காங்கிரீட்டானது.அதுவும் பெற்றோர்களின் பணத்தில்தான்.குடியிருக்க கட்டிய வீடுகளில் பள்ளிகள் இருந்தன.பல கிராமங்களில் ஆங்கிலப்பள்ளிகள் இப்படித்தான்.எப்படியோ அதிகாரிகள் கஷ்டப்பட்டு ஒவ்வொரு ஊராகப்போய் கொஞ்சம் சீரானது.

                                 சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் என்ற இட்த்தில் நடந்த விபத்தை நீங்கள் படித்திருக்கலாம்.தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.பல குழந்தைகளுக்கு காயம்.மூன்று பேருக்கு கைகள் நசுங்கியது.பள்ளி வாகனத்தை ஓட்டியவர் லைசன்ஸ் பெற்ற டிரைவர் அல்ல!கிளீனர்.டிரைவர் விடுப்பில் இருந்த்தால் கிளீனர் டிரைவரானார்.குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து அவர் டிரைவிங் கற்றுக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

                                  பள்ளி வாகனம் தொடர்பான இன்னொரு விபத்து சங்க்கிரி அருகே நடந்த்து.தண்டவாளத்தில் நின்று விபத்துக்குள்ளானது.வாகனத்தை ஓட்டியவர் 71 வயது முதியவர்.அவரது தைரியத்தை மெச்சவேண்டும்.இந்த தள்ளாத வயதிலும் சம்பாதிக்கவேண்டிய நிலை அவருக்கு.பள்ளி நிர்வாகத்துக்கு குறைவான சம்பளத்தில் ஆள் கிடைக்கவேண்டும்.பணம் ஒன்றே நோக்கமாக இருக்கும்போது குழந்தைகளின் உயிர்களை பற்றி அவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்.

                                  பள்ளிக்குழந்தைகள் விபத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.அப்போது ஒரு அரசு மருத்துவமனையில் இருந்தேன்.நிறைய குழந்தைகளின் அழுகுரலுடன் வாகனம் ஒன்று வந்து நின்றது.ஒவ்வொரு குழந்தைகளாக அழைத்துவந்தார்கள்.ஆறு,ஏழு வயது குழந்தைகள்.நான்கு பேருக்கு மட்டும் கை கால்களில் காயம்.ரத்தம் கசிந்து கொண்டிருந்த்து.ஆனால் எல்லா குழந்தைகளும் வீறிட்டுக்கொண்டிருந்தார்கள்.பல குழந்தைகள் ஒரே நேரத்தில் கதறி அழுவதை நேரில் பார்ப்பது கொடூரமானது.என் மனதை வெகுவாக பாதித்த சம்பவம் அது.

                                  நமக்கு ஒரு அனுபவம் இருக்கிறது.ஆங்காங்கே திடீரென்று சாலையில் இரண்டு சக்கர வாகன்ங்களை நிறுத்தி சோதனையிட்டுக்கொண்டிருப்பார்கள்.லைசன்ஸ் இருக்கா? ஆர்.சி.புக் இருக்கா? இத்யாதி...ஆனால் எப்போதும் ஒரு பள்ளி வாகனத்தை நிறுத்தி ஓட்டி வருபவர் தகுதியுடையவரா என்று பார்த்த்தில்லை.தனியார் பள்ளிகள் லாப நோக்கோடு செயல்படுபவர்கள் என்பது தெரிந்த விஷயம்.இன்னொன்று பள்ளி வாகன்ங்களின் டிரைவர்களின் தகுதி!

                                 காலையில் ஒருமணி நேரம்,மாலையில் ஒரு மணி நேரம் என்று நாளைக்கு இரண்டுமணி நேர வேலைதான் என்பதால் அடிமாட்டு விலைக்கு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.தகுதி வாய்ந்த டிரைவர்கள் இந்த சம்பளத்திற்கு வரமாட்டார்கள்.கை நடுங்கும் முதியவர்கள் தான் இவர்களது இலக்கு.இனியாவது விழித்துக்கொள்வார்கள் என்று நம்புவோம்.
-

10 comments:

Unknown said...

நல்லா விழிச்சாங்க போங்க!!!

A.K.RASAN said...

// காலையில் ஒருமணி நேரம்,மாலையில் ஒரு மணி நேரம் என்று நாளைக்கு இரண்டுமணி நேர வேலைதான் என்பதால் அடிமாட்டு விலைக்கு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.//

உண்மை.நல்ல பதிவு.

A.K.RASAN said...

//இனியாவது விழித்துக்கொள்வார்கள் என்று நம்புவோம்//

இப்போதே உஷாராயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

கூடல் பாலா said...

பட்ட உடனே ஓவரா பில்ட் அப் குடுப்பாங்க ....அல்லாத நேரம் குத்தினாலும் விழிக்கமாட்டாங்க....

சக்தி கல்வி மையம் said...

Nice post.,

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

நியாயமான கருத்துக்கள் தோழரே..

இதுபோன்ற செய்தியை தரவேண்டும் என்று நானும் விரும்பினேன்..

இயலவில்லை..

இதுமட்டுமல்ல..
காலை மாலை நேரங்களில் அரசு பேருந்துகளில் சீட் பிடிக்க இல்லை இல்லை ஏறுவதற்கே அடிதடி நடத்தவேண்டிய சூழலில் உள்ள குழந்தைகள் குறித்தும் ஒரு ஆக்கம் தரவேண்டும் என விரும்புகிறேன்.

தாங்களே எழுதுங்களேன்.

அரசு குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ் தந்தாலும் - அரசு டிரைவர்களும் + கண்டக்டர்களும் குழந்தைகளை குழந்தைகளாகவே மதிக்காமல் வேண்டுமென்றே பேருந்தை தள்ளி நிறுத்துவதும்,

குழந்தைகள் ஏற ஏறு பேருந்தை இயக்குவதும் கொடுமை..

மாலை நேரங்களில் இந்த காட்சியை பார்க்கும்போது மனம் ரொம்பவே கனத்துப் போகிறது..

நிச்சயம் இதற்கு அரசு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி...

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

அம்பாளடியாள் said...

நல்ல பதிவு.நன்றி...

வெட்டிப்பேச்சு said...

//காலையில் ஒருமணி நேரம்,மாலையில் ஒரு மணி நேரம் என்று நாளைக்கு இரண்டுமணி நேர வேலைதான் என்பதால் அடிமாட்டு விலைக்கு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.தகுதி வாய்ந்த டிரைவர்கள் இந்த சம்பளத்திற்கு வரமாட்டார்கள்.கை நடுங்கும் முதியவர்கள் தான் இவர்களது இலக்கு.//


உண்மைதான் நண்பரே..

நல்ல பதிவு.

நன்றிகள்.

Sankar Gurusamy said...

தேவையான விழிப்புணர்வு.. ஆனால் அடைவார்களா என்பது தெரியவில்லை.

அருமையான பதிவு... பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...

.தகுதி வாய்ந்த டிரைவர்கள் இந்த சம்பளத்திற்கு வரமாட்டார்கள்.கை நடுங்கும் முதியவர்கள் தான் இவர்களது இலக்கு.இனியாவது விழித்துக்கொள்வார்கள் என்று நம்புவோம்.