ஆடி மாதம் என்றாலே
தள்ளுபடிகள் என்பது வியாபாரத்தின் பெரும் தந்திரம்.முக்கியமாக திருமணங்கள் நடைபெறாத
காலம் என்பதால் விற்பனை படுத்து விடுகிறது.பொருட்களை துணிகளை வாங்க வைப்பதற்காக
ஆடித்தள்ளுபடி என்று உருவாகிவிட்ட்து.ஜோரான விறபனை என்பது பண்டிகை காலமும்,திருமண
நாட்களும்தான்.
ஆடி மாத்த்தில்
திருமணம் செய்யாமல் இருப்பதற்கு ஆளுக்கொரு காரணம் சொல்கிறார்கள்.புது மணத்தம்பதிகளை
பிரிக்கும் அதே காரணத்தை இதற்கும் சொல்கிறார்கள்.சித்திரையில் குழந்தை
பிறக்கும்,அதனால்தான் என்பவர்கள் உண்டு.திருமணமானவுடன் பிரித்துவைப்பது சரியாக
இருக்காது.கிராமத்தில் ஒரு பெரியவர் சொன்ன விஷயம் சரியாக இருக்குமோ என்றுபட்ட்து
ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள்.காற்று அதிகமாக
இருக்கும்.பேருந்து வசதியில்லாத காலத்தில் மாட்டு வண்டியில் அல்லது நடந்தேதான் பெண்
வீட்டுக்கோ,பையன் வீட்டுக்கோ போக வேண்டியிருக்கும்.அதிகமான காற்றில் மாட்டு
வண்டியிலோ,நடந்தோ பயணிப்பது சிரம்ம் என்பதால் ஆடி மாத்த்தில் செய்வதில்லை என்றார்.
பாரதப்போர் நடந்த்தால் செய்வதில்லை
என்றார் இன்னொருவர்.ஆனால் பிராமணர்கள் திட்டமிட்டு ஏற்படுத்தியது என்று
சொன்னதையும்எங்கோ படித்திருக்கிறேன்.ஆடியில் அவர்கள் திருமணம் வழக்கம்.விலைகள்
மலிவாக இருக்கும் என்பதால் மற்றவர்கள் செய்வதை தடுத்துவிட்டு அவர்கள் மட்டும்
திருமணம் செய்கிறார்கள் என்று யாரோ வாதிட்டார்கள்.ஆனால் எனக்கு சரியென்று
படவில்லை.இந்த வழக்கம் உருவான காலத்தில் கடைக்குப்போய் பொருள் வாங்குவது,மண்டபம்
எல்லாம் இல்லை.
மற்ற
சமூகத்தினர் திருமணம் செய்யாத போது அவர்கள் வேலையின்றி இருப்பார்கள்.அந்த நேரத்தை
பயன்படுத்திக்கொண்டார்கள் என்று தோன்றுகிறது.தவிர ஆடிப்பட்டம் தேடிவிதை என்று
பழமொழி உண்டு.விவசாயப்பணிகளுக்காக முக்கியத்துவம் தந்து திருமண நிகழ்வுகளை இந்த
மாத்த்தில் ஒதுக்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஆடி மாதம்
ஏன் கல்யாணம் இல்லை என்று தலைப்பு வைத்திருக்கலாம் போலிருக்கிறது.போகட்டும்.விற்பனையை
ஓரளவு அதிகரித்துக்கொள்ள தள்ளுபடியை அறிவித்து விடுகிறார்கள்.50 சதவீதம்
தள்ளுபடியாம்.நஷ்ட்த்திற்கு பொருட்களை விற்பார்களா என்ன? விலையை ஏற்றிவிட்டு இதோ
தள்ளுபடி என்பதே பெரும்பாலான இடங்களில் நடக்கிறது.
நமக்கு இலவசம்,தள்ளுபடி என்பதெல்லாம்
கொண்டாட்டம்.இந்த பலவீன்ங்களை நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.பல காலமாக விற்காத
பொருளை தள்ளுபடியில் எளிதாக விற்கலாம்.நுகர்வோரை பொருத்தவரை இது மோசடி
என்பதைத்தவிர வேறில்லை.பிராண்ட்ட் துணிகளில் தள்ளுபடியை கேட்டுப்பாருங்கள் உண்மை
புரியும்.
நுகர்வோர்
விழிப்புணர்வு இந்தியாவில் மிகவும் குறைவு.சேவை செய்யும் நிறுவன்ங்கள் கூட அதிகம்
கண்டு கொள்வதில்லை.”ஆடி அழைத்துக்கொண்டுவரும்’’ என்பார்கள்.இம்மாத்த்திலிருந்துதான்
விழாக்காலம் துவங்கும் என்பதை அப்படிச்சொன்னார்கள்.அனைவருடைய மன்ங்களில் நல்லதை
கொண்டுவந்து விதைக்கட்டும்.
ஹிஹி முட்டாள் மக்கள்...கூர்ந்து கவனித்தால் தள்ளுபடியா இல்லை உங்கள்கிட்ட தள்ளி விடுறாங்களா என்பது புரியும்!
ReplyDeleteதீபாவளிக்கு புதிய சரக்குகள் இறக்கும் முன் பழையவற்றை விற்பார்கள். பீட்டர் இங்கிலாண்ட் ஷோ ரூமில்கூட வாரக்கடைசியில் தள்ளுபடி தருகிறார்கள்
ReplyDelete@மைந்தன் சிவா said...
ReplyDeleteஹிஹி முட்டாள் மக்கள்...கூர்ந்து கவனித்தால் தள்ளுபடியா இல்லை உங்கள்கிட்ட தள்ளி விடுறாங்களா என்பது புரியும்!
ஆமாம் சிவா ,நன்றி
@சாகம்பரி said...
ReplyDeleteதீபாவளிக்கு புதிய சரக்குகள் இறக்கும் முன் பழையவற்றை விற்பார்கள். பீட்டர் இங்கிலாண்ட் ஷோ ரூமில்கூட வாரக்கடைசியில் தள்ளுபடி தருகிறார்கள்
உண்மைதான் .ஆனால் மிக பழையதாக இருக்கும்.அதிக நாட்கள் உளைக்கவேண்டுமே! நன்றி
”ஆடி அழைத்துக்கொண்டுவரும்’//
ReplyDeleteதள்ளுபடியா தள்ளும்படியா??
ஆடியில் இடம் பெறும் விற்பனைச் தள்ளுபடியின் பின்னாலுள்ள விடயங்களை, விளக்கமாகத் தந்திருக்கிறது உங்களின் இப் பதிவு.
ReplyDelete//ஆடி மாதம் ஏன் கல்யாணம் இல்லை என்று தலைப்பு வைத்திருக்கலாம் போலிருக்கிறது.//
ReplyDeleteஎங்க கமெண்டையும் நீங்களே எழுதினா எப்பிடி??? :-)
பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/