உயிரின்ங்கள்
உயிர்வாழ அத்தியாவசியமான ஒன்று நீர்.உடலியக்கம் சீராக நடைபெற போதுமான அளவு நீர்
குடிப்பது அவசியம்.கொழுப்பு நீங்கலாக உடலில் எழுபது சதவீதம் தண்ணீர்தான்.வைட்டமின்களில்
பி,சி ஆகியவை தண்ணீரில் கறையும்.இம்மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு மஞ்சளாக
சிறுநீர் வெளியேறுவதை பார்க்கலாம்.எத்தனை கிராம் வைட்டமின் எடுத்துக்கொண்டாலும்
உடல் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றவற்றை சிறுநீர் மூலம் வெளியேற்றி விடுகிறது.
எட்டு தம்ளர்
தண்ணீர் குடிக்கலாம் என்று பொதுவாக சொல்வார்கள்.ஆனால் அவரவர் வாழ்க்கை முறைக்கு
தக்கவாறு அளவு நிர்ணயிக்கப்படவேண்டும்.வெயிலில் கடுமையாக உழைப்பவருக்கும்,குளிர்
சாதன அறையில் அமர்ந்திருப்பவருக்கும் ஒரே அளவு பொருந்தாது.மாத்திரைகள் உட்கொண்ட
நேரம் தவிர சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் நீர் குறைவாக குடித்திருக்கிறீர்கள்
என்று பொருள்.
சர்வதேச அளவிலும் இரண்டு லிட்டர்
தண்ணீர் நாளொன்றுக்கு போதுமானது என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.அதிகமாக தண்ணீர்
குடித்தால் நல்லது என்று இஷ்ட்த்திற்கு குடித்துக்கொண்டிருந்தாலும் இதயம்,சிறுநீரகம்
போன்றவை அதிக சுமைக்கு உள்ளாகும்.”அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு” என்பது நீருக்கும் பொருந்தும்.
தினமும்
காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால் பல நோய்கள் ஏற்படாது என்று எப்போதோ
படித்த நினைவு.நிபுணர்களும் இது நன்மையைத்தரக்கூடும் என்றுதான்
சொல்கிறார்கள்.குறைந்த பட்சம் மலச்சிக்கலை போக்கும்.மலச்சிக்கல் இல்லாவிட்டாலே பல
நோய்கள் அண்டாது.ஒன்றரை லிட்டர் இல்லாவிட்டாலும் காலையில் தண்ணீர் குடிப்பது
நல்லதுதான்.
இன்று குடிநீர் மிகப்பெரிய
வியாபார வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்ட்து.பத்தாண்டுகளுக்கு முன்புகூட இதை எதிர்பார்க்கவில்லை.சிறு
நகரங்களில் கூட பல வீடுகளில் இன்று கேன் வாங்குகிறார்கள்.பாக்கெட்களில்
அடைக்கப்பட்ட குடி நீர் பரபரப்பாக விற்பனையாகிறது.இவற்றில் பெருமளவு தரமற்றவை
என்றும் கண்டறிந்து அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சுமார்
எண்பது சதவீத நோய்கள் குடிநீரால் பரவுகின்றன.முக்கியமானவை
வயிற்றுப்போக்கு,டைபாய்டு,ஒருவகை மஞ்சள் காமலை போன்றவை.உலகில் அதிக குழந்தைகள்
வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றன.எப்போதும் கொதிக்க வைத்த நீரைத்தான்
பயன்படுத்துகிறோம்.ஆனால் என் மகனுக்கு டைபாய்டு வந்துவிட்ட்து என்று ஒருவர்
சொன்னார்.இதற்கெல்லாம் வெளியில் சாப்பிடும் பழரசங்கள்,ஜஸ்கிரீம்,நீர் கலக்கப்பட்ட
சட்னி போன்ற உணவு வகைகள் காரணமாக இருக்கலாம்.
தர்மபுரி
போன்ற சில மாவட்டங்கள் ஃப்ளூரைடு கலந்த நீரால் பாதிக்கப்பட்டிருக்கிறது.பற்கள்
மஞ்சளாக இருக்கும்.எலும்பையும் பல்லையும் பாதிக்கும் இப்பிரச்சினைக்கு ஒகேனக்கல்
கூட்டுக்குடிநீர் திட்ட்த்தை நம்பி இருக்கிறார்கள்.எப்போதோ வந்திருக்க
வேண்டியது,பொக்ரான் அணுகுண்டு வெடிப்பால் தாமதமாகிவிட்ட்து.நிதியுதவி அளிப்பதை
ஜப்பான் அப்போது ரத்து செய்து விட்ட்து.
தேநீர்க்கடைகளில்
தூசு விழுந்த நீரையும் சாதாரணமாக குடிப்பவர்களை நீங்கள் பார்க்கலாம்.அவர்கள் அதிக
உடல் உழைப்பு கொண்டவர்கள்.நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகம் இருக்கும்.ஆனாலும் இது
அபாயமான பழக்கம்தான்.விழிப்புணர்வு இல்லாத நிலையே காரணம்.
அனைவரையும் சிந்திக்க வைக்கும் பகிர்வு .நன்றி
ReplyDeleteஒருமுறை பாக்கெட் வாட்டரில் தவளைகுட்டி இருந்து பத்திரிக்கையில்கூட வந்தது நண்பரே... பல நோயிகளின் ஆரம்பமே தண்ணீரில் ஆரம்பிப்பதால் கவனிக்க பட வேண்டிய பதிவு... நன்றியுடன் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்போது டாக்டர்ஸ் பாட்டில் தண்ணீரை சூடாக்கி குடிக்க சொல்கிரர்கள்
ReplyDeleteநன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)
அருமையான தகவல் நன்றி சகோதரரே பகிர்வு.
ReplyDeleteதவறென்று தெரிந்தே மீண்டும் மீண்டும் அத் தவறை செய்வோம்.
ReplyDeleteதண்ணீர் விசயத்திலும் அப்படித்தான்.
விழிப்புறாமல் இருக்கிறோம்.
ஆனாலும், தொடர்ந்த தூண்டுதலால் வரும் நாட்களில் மாற்றம் வரலாம்.
நன்றியும், வாழ்த்துக்களும்.
எந்த நீராக இருந்தாலும் நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்தால் நலம்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
@M.R said...
ReplyDeleteஅனைவரையும் சிந்திக்க வைக்கும் பகிர்வு .நன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@மாய உலகம் said...
ReplyDeleteஒருமுறை பாக்கெட் வாட்டரில் தவளைகுட்டி இருந்து பத்திரிக்கையில்கூட வந்தது நண்பரே... பல நோயிகளின் ஆரம்பமே தண்ணீரில் ஆரம்பிப்பதால் கவனிக்க பட வேண்டிய பதிவு... நன்றியுடன் வாழ்த்துக்கள்
நன்றி சார்.
@JesusJoseph said...
ReplyDeleteஇப்போது டாக்டர்ஸ் பாட்டில் தண்ணீரை சூடாக்கி குடிக்க சொல்கிரர்கள்
உண்மை.கொதிக்க வைத்த நீர்தான் பாதுகாப்பானது.நன்றி
@அம்பாளடியாள் said...
ReplyDeleteஅருமையான தகவல் நன்றி சகோதரரே பகிர்வு.
தங்களுக்கும் நன்றி
@அம்பாளடியாள் said...
ReplyDeleteஅருமையான தகவல் நன்றி சகோதரரே பகிர்வு.
தங்களுக்கும் நன்றி
@சத்ரியன் said...
ReplyDeleteதவறென்று தெரிந்தே மீண்டும் மீண்டும் அத் தவறை செய்வோம்.
தண்ணீர் விசயத்திலும் அப்படித்தான்.
விழிப்புறாமல் இருக்கிறோம்.
ஆனாலும், தொடர்ந்த தூண்டுதலால் வரும் நாட்களில் மாற்றம் வரலாம்.
நன்றியும், வாழ்த்துக்களும்.
நன்றி சத்ரியன்
@Sankar Gurusamy said...
ReplyDeleteஎந்த நீராக இருந்தாலும் நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்தால் நலம்.
பகிர்வுக்கு நன்றி..
உண்மைதான் சங்கர்.கொதிக்கவைத்தால் மட்டுமே கிருமிகள் அழியும்.நன்றி
பயனுள்ள தகவல் சகோ..
ReplyDeleteதண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் தத்ரூபமான பதிவு சகோ.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
எந்த நீராக இருந்தாலும் நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்தால் நலம்.
ReplyDelete