Pages

Monday, October 25, 2010

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பற்றிய எனது பதிவை படித்துவிட்டு ஒருவர் கேட்டார்.ஆண்களுக்கு இவையெல்லாம் ஏற்படாதா?.விதி விலக்குகள் விதிகள் ஆகுமா என்று தெரியவில்லை.சில ஆண்களுக்கு பெண்கள் மீது தீராத ஆத்திரம் உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.எங்கேயாவது ஆணுக்கு இப்படிப்பட்ட தொல்லைகள் நேர்ந்தால் அவன் பாவம்.அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த சந்தோஷமும் இல்லை.பெண்களைப்போல அவனால் வெளியே சொல்லவும் முடியாது.அடேயப்பா என்று மேலும் கீழும் பார்ப்பார்கள்.
ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெண்களுக்கு கிடைக்கும் சமூக ஆதரவு ஆண்களுக்கு கிடைக்காது.பெண்களுக்கு மற்ற பெண்கள் ஆதரவாக இருக்கும்போது,ஆண்கள் இன்னொரு ஆணுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்.எதிர்பாலினர் அங்கீகாரம் ஆண்களுக்கு ஒரு பிரச்சினையாவதால்பெண் தனக்கு ஆதரவாக திசைதிருப்புவது எளிது.ஆண்களைப்போல பெண்களின் தொல்லைகள் வெளிப்படையாக இருக்காது.பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஆண்,தனது நண்பர்களை இழக்க வேண்டியிருக்கலாம்.அந்த இடத்தை விட்டு மாறுதல் பெற்றுக்கொள்வதுதான் நல்லது.
எனக்கொரு நண்பன் இருந்தான்.அவனுக்கு திருமணமாகவில்லை.அவனுடைய அலுவலகத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு -திருமணமானவர்-அவனை பிடித்துப்போனது.சாப்பாடு எடுத்து வரத்தொடங்கினார்.கணவர் பற்றி தொடர்ந்து குறை கூறுவது,கணவர் வீட்டில் இல்லைஎன்பதை அழுத்தமாக தெரிவிப்பது.அடிக்கடி போனில் பேசுவது என்று ஆரம்பித்தார்.அவனுக்கு பிடிக்கவில்லை.நேரில் பார்ப்பதை தவிர்த்தான்.போனை எடுக்கவில்லை.யாரிடமும் வெளியே சொல்லாமல் எனக்கு போன் செய்தான்.அந்த பெண்,நிறுவன தலைமையிடம் நெருக்கமாக இருந்தார்.அமைதி காக்குமாறு கூறினேன்.மற்ற பெண்களும் இவனை பார்த்தாலே குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.அப்பெண்ணின் திட்டமிட்ட அணுகுமுறையால் அலுவலக நண்பர்கள் இவனை விட்டுவிட்டு பெண்களிடமே அதிகம் பேசிக்கொண்டிருக்க தனிமைப்படுத்தப்பட்டான்.ஒரு கட்டத்தில் மாறுதல் பெற்று வெளியேறினான்.
பெண் என்னதான் செய்வாள் ?
  • நண்பர்களை பிரித்து தனிமைப்படுத்துவது.
  • செல்வாக்கை குறைக்க முயற்சி செய்வது.
  • அதிகாரிகளிடம் பொய்யான காரணங்களை சொல்லி முறையிடுவது.
  • மற்ற பெண்களையும் தனக்கு ஆதரவாக மாற்றுவது.
  • பணியில் ஒத்துழைக்க மறுப்பது
  • நண்பர்களை விட்டே பின்தொடர்வது.
  • தொடர்ந்து இமேஜை கெடுக்கும் விதத்தில் அவதூறு பரப்புவது.
  • செயலையும்,நோக்கங்களையும் முடக்க நினைப்பது.
பொதுவாக ஆணுக்கு நடப்பதெல்லாம் அபூர்வமாக நடப்பதுதான் .விபத்துபோல.ஆனால் பெண்ணுக்கு நடக்கும் தொல்லைகள் வாழ்க்கை முறையாக உள்ளது.ஆணுக்கு நஷ்டஈடு கொடுக்கலாம்.ஆனால் ஆண்களால் நேரும் பெண்களின் தொல்லைகளுக்கு சட்டமும்,இயக்கமும் தேவை.இது பாலியல் தொல்லைகள் என்றில்லாமல் அனைத்து பிரச்சினைகளுக்கும் பொருந்தும்.

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இப்படியெல்லாமா நடக்குது!!!

    ReplyDelete
  3. //பெண்களுக்கு கிடைக்கும் சமூக ஆதரவு ஆண்களுக்கு கிடைக்காது.//

    உண்​மை... ஆதரவு இல்லாவிட்டாலும் பரவாயில்​லை... 498ஏ மற்றும் பாலியல் பலாத்காரம் மற்றும குடும்ப வன்மு​றை ​போன்ற சட்டங்கள் சில ​​கெடுமதி ​பெண்களுக்கு சாதகமாக உள்ளன...

    நல்ல விழிப்புணர்வான பதிவு வாழ்த்துக்கள்

    அன்புடன்,
    498ஏ சட்டத்தால் பாதிக்கப்பட்டவன்

    ReplyDelete