Pages

Thursday, February 17, 2011

புதிய பதிவர்களின் கவலைகள்

புதியதாக வலைப்பதிவு துவக்கி எழுத வந்துள்ள பல பதிவர்களும் ரொம்ப சங்கடப்படுகிறார்கள் போல தோன்றுகிறது.வாக்குகளும்,கருத்துரைகளும் தமக்கு கிடைக்கவில்லை என்பதும் பிரபலமாக முடியவில்லை என்பதும் அவர்களது முக்கிய கவலை.

தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகள் குப்பைகளை ஒதுக்கி,நல்லவற்றை வாசகர்களுக்கு தருமாறு செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.ஆயிரக்கணக்கான பதிவுகள் உள்ள நிலையில் அதில் சாத்தியமிருப்பதாக தெரியவில்லை.அதிக வாக்குகள் பெற்று வெளியிடப்படும் பதிவுகளில் வேண்டுமானால் குப்பைகளை நிர்வாகம் தலையிட்டு ஒதுக்கலாம்.

ஓட்டு என்றாலே அரசியல் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.புதியதாக வருபவர்கள் இதற்காக மனம் தளர தேவையில்லை.இத்துடன் சுமார் எழுபது இடுகைகள் எழுதிவிட்டேன்.தமிழ்மணத்தில் இரண்டு ஓட்டுகளுக்கு மேல் ஒரு இடுகையும் பெறவில்லை.பெரும்பாலானவை பூஜ்யம்.

மற்ற திரட்டிகளிலும் அதிகமில்லை.நான் அதை ஒரு பொருட்டாக கருதாமல் எழுதி வந்திருக்கிறேன்.நான் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.நேரம் கிடைக்கும்போதுதான் எழுதுகிறேன்.சென்ற வாரம் நாள்தோறும் ஒரு இடுகை எழுத முடிந்த்து.ஏழு பதிவுகள்.கடந்த வாரம் தமிழ்மணம் பதிவுகளில் 15-வது இடம்.

கமெண்டுகள் என்று பார்த்தாலும் சராசரியாக எழுபது பதிவுகளுக்கு மூன்று கூட இல்லை.எப்போதாவது மற்றவர்களுக்கு கருத்துரை இட்டாலும் அவர்கள் பதிலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்த்தில்லை.எனக்கும் அதிகம் இணையத்தில் இருக்க நேரம் இருப்பதில்லை.காலை ஏழரைக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும்.அலுவலகத்தில் எப்போதாவது கம்ப்யூட்டர் உதவியாளர் சாப்பிட போகும்போது யாருக்கும் தெரியாமல் படித்து கமெண்ட் போடுவேன்.

பிரபலமான பதிவர்களை பொருத்தவரை பலரும் சில ஆண்டுகளாக பதிவுலகில் இருப்பவர்கள்.படிப்பவர்கள் அவர்களது பெயரை பார்த்தவுடன் தெரிந்து படிப்பார்கள்.அவர்களுக்கு போட்டியாக உடனே பிரபலமாக நினைப்பது சரியானதல்ல!

புதியவர்களுக்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை.பத்துபேர் படித்தாலும் உங்கள் கருத்துக்கள் தெளிவாக போய்ச்சேரவேண்டும் என்று நினைத்து எழுதுங்கள்.அதிகம் படித்து குறைவாக எழுதுங்கள்.நான் அதைத்தான் பின்பற்றுகிறேன்.தளராமல் முயற்சி செய்யுங்கள்.என்னுடைய வாழ்த்துக்கள்.

20 comments:

  1. முயற்சி திருவினையாக்கும்... வாழ்த்துக்கள். எழுத்து வசப்பட்டுள்ளது நன்றாக நிறைய எழுதவும்.

    ReplyDelete
  2. அண்ணே பிரபல பதிவராக மாறுவது எப்படி என்று பலர் தங்கள் ப்ளாக் களில் எழுதியுள்ளனர் .நேரம் கிடைத்தால் படித்து பார்க்கவும்! நீங்கள் விரைவில் பிரபலமடைய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. //புதியவர்களுக்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை.பத்துபேர் படித்தாலும் உங்கள் கருத்துக்கள் தெளிவாக போய்ச்சேரவேண்டும் என்று நினைத்து எழுதுங்கள்.அதிகம் படித்து குறைவாக எழுதுங்கள்.நான் அதைத்தான் பின்பற்றுகிறேன்.தளராமல் முயற்சி செய்யுங்கள்.என்னுடைய வாழ்த்துக்கள்//

    உண்மை தொடருங்கள்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி,மதுரை சரவணன்

    ReplyDelete
  5. தம்பி ரஜீவா,பிரபலமாயிட்டா போச்சு,உனக்கு நன்றி

    ReplyDelete
  6. உங்களுக்கும் நன்றி,யோகன் பாரிஸ்.வலைப்பதிவுக்கு மட்டுமல்ல!வாழ்க்கைக்கும் அவசியமானதே!

    ReplyDelete
  7. எழுதுவதோடு நம்ம 'கடமை' முடிஞ்சுருதுன்னு நினைக்கறேன்.

    நமக்குத் தொழிலும் எழுத்து, தவமும் எழுத்துன்னு இருந்துட்டால் ஒரு சஞ்சலமும் இல்லை.

    பின்னூட்டமோ ஓட்டுகளோ வரலைன்னு கவலைப்படக்கூடாது.

    நம்ம ஆத்ம திருப்திக்காத் தானே எழுதறோம்.

    தொடர்ந்து எழுதுங்கள் புதிய & பழைய பதிவர்களே.

    ReplyDelete
  8. மிகச்சரி மேடம்,தங்கள் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  9. நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
    http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html

    ReplyDelete
  10. திறமையை ரொம்ப நாள் ஒளிச்சி வைக்க முடியாதுங்க.பிரபலமாகலை என்பதும் ஒரு கவலையா என நினைக்கும் போது வியப்பா தான் இருக்கு.தரமான சுவையான படைப்புகளை தாருங்கள் பலன் கண்டிப்பா கிடைக்கும்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நீங்கள் விரைவில் பிரபலமடைய வாழ்த்துக்கள்!!
    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    ReplyDelete
  12. Nice Concern. As being done now, continue without expecting anything for this. You will become popular...

    All the best for becoming Popular at the earliest. :-)

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  13. மிக்க நன்றி ரஹீம்

    ReplyDelete
  14. மிக்க நன்றி தமிழரசி

    ReplyDelete
  15. கருன்,தங்கள் ஓட்டுக்கும் கமெண்டுக்கும் நன்றி

    ReplyDelete
  16. நன்றி ,ஷர்புதீன் .சரி எதுசரி ?

    ReplyDelete
  17. புதிய பதிவர்களுக்கான உங்களின் அறிவுறை சிறப்பாயிருக்கிறது. இன்னொரு உண்மையும் அவர்களுக்குப் போய் சேரவேண்டும்.

    பல பணிச்சுமைகளுக்கு இடையே படிக்கும் அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதென்பதும் சற்று சிரமாகத் தானே இருக்கும்.

    பதிவை படிக்காமலே, அருமை! சூப்பர்!, தொடர்ந்து எழுதுங்கள்..., போன்ற பின்னூட்டங்களால் எந்த பலனும் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete