Pages

Sunday, March 6, 2011

நெருக்கமில்லாத தம்பதிகள்;அதிரும் மணவாழ்க்கை.-மூன்று


          முந்தைய இரு பதிவை படிக்காதவர்கள் படித்துவிடவும்.



                                  உடல் திறன் இருந்தும் பாலுறவில் ஆர்வமில்லாத நிலையில் மருத்துவரை நாடுபவர்கள் யாரென்பது உங்களுக்கும் தெரிந்த விஷயம் என்று குறிப்பிட்டேன்.எளிதில் நாம் பார்த்திருக்க கூடிய,அனுமானிக்க கூடிய ஒன்று. பொருந்தாத மனம் உடைய இருவரின் திருமணம்.

                                  தான் பணிபுரியும் இட்த்திலேயே சக பணியாளர் ஒருவருடன் அவனுக்கு காதல்.பையனுக்கு கொஞ்சம் வசதிக்குறைவு.காதலிக்கும் பெண்ணுக்கும் அப்படியே.! காதலை வீட்டில் சொல்ல முடிவு எடுத்த நேரத்தில் அப்பாவிடமிருந்து உடனே கிளம்பி வருமாறு தொலைபேசி தகவல்.

                                   அவனுக்கு மிக வசதியான இட்த்திலிருந்து வரன் வந்திருக்கிறது.அந்த குடும்பத்தையும்,பெண்ணையும் அவனுக்கு தெரியும். பெண் கருப்பு.பார்க்க அழகாகவும் இருக்க மாட்டார்.ஆத்திரத்துடன் மறுப்பு தெரிவித்தான்.அப்பாவுக்கு கோபம் அதிகமாகிவிட்ட்து.உன்னை படிக்க வைத்த கடன் இரண்டு லட்சம் இருக்கிறது.தெரியுமா?

                                    கடன் இருப்பது இதுநாள் வரை அவனுக்கு தெரியாது.சித்தப்பா வந்தார்,மாமா வந்தார்.உறவுகள் அவனை வளைத்துக் கொண்டார்கள்.அம்மா அழ ஆரம்பிக்க குழம்ப ஆரம்பித்தான்.அழகு முக்கியமில்லை,குணம்தான் முக்கியம் என்றார்கள்.அவன் ஒப்புக் கொண்டுவிட்டான்.

                                   திருமணமான ஒரு வாரத்தில் பெண் பிறந்த வீட்டை அடைந்தார்.அவனுக்கு ஆண்மையில்லை”.ஊர் முழுக்க பரப்பியாயிற்று.மொத்த குடும்பத்துக்கும் அவமானம் கேலிப்பேச்சாக சுழன்று கொண்டிருந்த்து.அவனை மருத்துவரிடம் இழுத்துக் கொண்டு ஓடினார்கள்.அவன் ஆண்மையுள்ளவன் என்று மருத்துவர் சான்றிதழ் அளித்தார்.

                                   மணமாகி குடும்பம் நட்த்தவில்லை என்பதும் உண்மைதான்.தாம்பத்யத்திற்கு மனம் ஒத்துழைக்கவில்லை.பாலியல் ரீதியாக அப்பெண் அவனை கவரவில்லை.காரணம் பெண்ணின் அழகு மட்டுமல்ல! அவன் விரும்பிய பெண்ணோடு வாழ முடியவில்லை என்பதுதான்.

                                   மனசு ஒட்டாத திருமணங்கள் இந்தியாவின் சாபக்கேடு! உறவு விட்டுப் போக்க் கூடாதென்றும்,சாதி மத பேதங்களாலும்,பொருளாதார அளவுகோளை வைத்தும் இரண்டு பேரை நீங்கள் இனி குடும்பம் நட்த்த வேண்டும் என்று திணிக்கப்படும் திருமணங்கள் இங்கே அதிகம்.இவை தாம்பத்யத்தில் குறைபாடுகளை தருவது மட்டுமல்லாமல் கள்ளக் காதல் போன்ற சீர்கேடுகளுக்கு வழி ஏற்படுத்தி விடுகின்றன.

                                 பாலியல் ஆர்வம் ஒடுங்கியுள்ள நிலை(inhibited sexual desire) ஏற்படுவதற்கான மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.சிலவற்றை நம்மால் தடுக்கவும் முடியும்.சிகிச்சை தேவைப்படும் காரணியும் உண்டு.அவை அடுத்த பதிவில்..






8 comments:

  1. உறவு விட்டுப் போக்க் கூடாதென்றும்,சாதி மத பேதங்களாலும்,பொருளாதார அளவுகோளை வைத்தும் இரண்டு பேரை நீங்கள் இனி குடும்பம் நட்த்த வேண்டும் என்று திணிக்கப்படும் திருமணங்கள் இங்கே அதிகம்.இவை தாம்பத்யத்தில் குறைபாடுகளை தருவது மட்டுமல்லாமல் கள்ளக் காதல் போன்ற சீர்கேடுகளுக்கு வழி ஏற்படுத்தி விடுகின்றன.

    அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய அருமையா கருத்துக்கள்! நன்றி அண்ணே!!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரகாஷ்

    ReplyDelete
  3. சிந்தித்துப் பார்க்கவேண்டிய கருத்துக்கள்!
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. தம்பி ரஜீவா,உனக்கு நன்றி

    ReplyDelete
  5. உங்களுக்கு நன்றி கருன்

    ReplyDelete