Pages

Wednesday, March 9, 2011

நெருக்கமில்லாத தம்பதிகள்;அதிரும் மணவாழ்க்கை-நான்கு


முந்தைய  பதிவுகளை படிக்காதவர்கள் படித்துவிடவும்

 
தாம்பத்ய ஆர்வம் குறைந்த நிலையில் இருப்பது,திறன் இருந்தும் மன,உடல்,சமூக காரணங்களால் அடங்கியிருப்பது பற்றி முந்தைய பதிவுகளில் சில உதாரணங்களை பார்த்தோம்.தனது மனைவி அல்லது கணவனிடம் மட்டுமே இந்த நிலை இருக்கும்.ஒருவருக்கொருவர் தூண்டப்பட மாட்டார்கள்.சிலர் வெறுப்படைந்தும் இருக்கலாம்.

                                 காரணங்கள் என்று பார்த்தால் உறவு நிலை சிக்கல்களே முதலிட்த்தை வகிக்கிறது.கணவனும்,மனைவியும் உணர்வுரீதியாக நேசமின்றி இருப்பதே ஆகப் பெரிய பிரச்சினை.இருவருக்கும் போதுமான அளவு அன்பு இல்லாமல் இருத்தல்,தகவல் தொடர்பில் இடைவெளி,குடும்பத்தில் மோதல்கள் போன்றவை இந்நிலைக்கு பொதுவாக சொல்லப்படும் காரணங்கள்.

                                 குடும்பத்துக்கென நேரம் ஒதுக்காமல் இருப்பதும் இவற்றில் முக்கியமானது.இன்றைய அவசர யுகத்தில் வேலை காரணமாக இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவோ,பகிர்ந்து கொள்ளவோ நேரம் கிடைக்காத சூழல் அதிகரித்து வருகிறது.நிச்சயமாக இவை தாம்பத்யத்தில் ஆர்வத்தை குறைக்கும் என்று உறுதியாக சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

                                 எத்தகைய சூழலிலும் குடும்பத்தை மறந்து பணம் மட்டுமே பிரதானமாக கருதி வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.முயற்சி இருந்தால் கடுமையான பணிகளுக்கிடையிலும் மனைவியையும்,குழந்தைகளையும் கவனிப்பதன் அவசியத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

                                  இவை தவிர தூக்கமின்மை,சில மருந்துகள்,சோர்வு,சில பாலியல் குறைபாடுகள்,ஏற்கனவே பார்த்த்துபோல குழந்தையாக இருக்கும்போது வன்புணர்ச்சி,கற்பழிப்பு போன்றவையும் காரணங்களாக இருக்கலாம்.மேலும் உடல்,மன நோய்களும்,ஹார்மோன் சுரப்பதில் உள்ள கோளாறுகளும் அடக்கம்.

                                 பாலியல் குறித்த பிரச்சினைகளை மூடி மறைத்து வாழ்வதுதான் நம் சமூகத்தின் பொதுப்புத்தி.வாழ்க்கையை பாதித்தாலும் உரிய தீர்வுகளை நாடுவதில்லை என்பது என்னுடைய அனுபவம்.இத்தகைய பிரச்சினைகளுக்கு மருத்துவம் நல்ல தீர்வுகளை வைத்திருக்கிறது.தக்க ஆலோசனைகள் மூலம் இவற்றை சரி செய்ய முடியும்.

                                 பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அருகில் அமர்ந்திருந்தவரை நின்று கொண்டிருந்தவர் கேட்டார்.நீங்க அம்மா புருஷன் தானே”?.இவருக்கு மகிழ்ச்சியாகிவிட்ட்து.ஆமாம் நீங்கள் வந்திருக்கிறீர்களா?.இரண்டு தடவை வந்திருக்கிறேன்.

                                 அவர்கள் பேச்சிலிருந்து என் அருகில் அமர்ந்திருந்தவர் சாமியாடி குறி சொல்லும் ஒருவருடைய கணவர் என்பதும்,எப்போது,என்னென்ன எடுத்துவரவேண்டும் என்பதான உரையாடல்களும் அவர்களுக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த்து.

                                  குறி சொல்பவரின் கணவர் இடையே குறிப்பிட்ட்து.கல்யாணமாயி ரெண்டு வருஷத்துல குழந்தையில்ல!அப்புறம் அவ மேல அம்மா உட்கார்ந்துட்டா!ரெண்டு பேருக்கும் நடுவுல ஒண்ணுமில்ல(தாம்பத்ய உறவு இல்லை).சாமியாடுவது மனப்பிரச்சினை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.எனக்கு நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தாம்பத்யத்தில் ஆர்வமில்லாத நிலை நினைவுக்கு வந்தது.

                                சிகிச்சை முறைகள் ,தடுத்துக்கொள்ளும் வழிவகைகள் அடுத்த பதிவில்!

                                 

5 comments:

  1. நடத்துங்க...நடத்துங்க..

    ReplyDelete
  2. @வேடந்தாங்கல் - கருன் said...

    நடத்துங்க...நடத்துங்க..

    உங்க அளவுக்கு இல்ல சார்.நன்றி

    ReplyDelete
  3. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    good points.. every couples should know these

    ஆமா தம்பி,உனக்கு நன்றி

    ReplyDelete