Pages

Friday, March 25, 2011

உங்களுக்கு நேரும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது எப்படி?


                                                                                          வாழ்வில் பிரச்சினைகள் ஓர் அங்கம்.உள்ளங்களில்,உறவுகளில்,பணியிடங்களில்,குடும்பத்தில் என்று உள்ளத்தை தைக்கும் சிக்கல்கள் நமக்கு இயல்பானவை.இயற்கை மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறனை வழங்கியிருப்பது போலவே மனதிற்கும் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியிருக்கிறது.நோய் எதிர்ப்பு திறனை தாண்டி நோய்கள் உண்டாவது போலவே உங்கள் சிந்திக்கும் திறனை தாண்டி தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உருவாகின்றன. 
 

                                                                                                நமது மதிப்பீடுகள் தந்த நம்பிக்கைகள் வழியாக நாம் எப்போதும் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டே இருக்கிறோம்.நமது ஆற்றலால் முடியாமல் சில நமது உள்ளத்தை பாதித்து நம்மால் எதிர்கொள்ளமுடியாதபோது வழக்கமாக செய்யும் செயல்கள் என்ன?
மரபு சார்ந்த வழிகளில் .................
நமது வாழ்க்கைமுறைக்கு உட்பட்டு மரபு சார்ந்து சில வழிகளை மேற்கொள்கிறோம்.அவை.
  • கோவிலுக்கு செல்கிறோம் :கடவுளிடத்தில் கோரிக்கை வைக்கிறோம்.பிரச்சினைகள் தீர்ந்தால் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறோம்
  • மத குருமார்களை சந்திக்கிறோம்:நமது சிரமங்களை கூறி ஆலோசனை கேட்கிறோம்.
  • ஜோதிடர்களை சந்திக்கிறோம்:எதுவும் கூறாமலேயே நல்ல நேரத்தை கேட்கிறோம்.சிலர் வெளிப்படையாக பேசுகிறார்கள்.குரு மாறினால் ,சனிப்பெயர்ச்சி அடுத்து அல்லது திசை மாறியவுடன் உங்கள் தொல்லைகள் தீரும் என்கிறார். நம்பிக்கையுடன் திரும்புகிறீர்கள்.
  • நல்ல நண்பர்கள் ,உறவினர்கள் உங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம்.
  • டாஸ்மாக்கை தேடிப்போகிறோம்.
  • எதுவும் செய்யாமல் மனநலம் பாதிக்கும் அளவுக்கு சிக்கலாக்குகிறோம்.
தற்கொலையை தேர்ந்தெடுப்பது,மற்றவர்களை துன்புறுத்துவது என்ற அளவில் ஆளுமைகளுக்கு தகுந்தவாறு பிரச்சினைகளை அணுகி வந்திருக்கிறோம்.

நவீன வழிமுறைகள் என்ன?
                                                         சமீபத்தில் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை திரையரங்கத்தில் பார்த்தேன்.உங்கள் பிரச்சினைகளுக்கு குறுந்தகவல் மூலம் தீர்வு தரப்படும் என்று தெரிவித்தது.அந்நிறுவன சந்தாதாரர் ராகுலை எல்லோரும் தேடுகிறார்கள்,விரும்புகிறார்கள்.SMS COUNSELLING சிலருக்கு தீர்வை தரலாம்.பொதுவாக counselling எனப்படுவது நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது.

                                                                                   சில இடங்களில் மன நல ஆலோசனை.உளவியலில் பயிற்சி பெற்ற ஒருவரிடம் நிகழ்வுகளையும்,உங்கள் உணர்வுகளையும் தெரிவித்தால் அவர் பிரச்சினை தீர்க்க வாய்ப்புகளை வழங்குவார்.நீங்கள் சரியான முடிவை தேர்ந்தெடுக்கலாம்.யாரிடமும் சொல்ல முடியாத தனிநபர் பிரச்சினைகளுக்கு இவை நல்ல தீர்வு.அயல் நாடுகளில் பிரபலமடைந்த போதிலும் நம்மிடையே இன்னும் போதுமான வாய்ப்புகள் இல்லை.உங்களுக்கு யாரேனும் தெரிந்தால் பயன்படுத்தலாம்.இல்லையெனில் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.

சுயமாகவே தீர்வை அணுகும் முயற்சி .......
அமைதியாக தனிமையில் அமர்ந்து உங்கள் பிரச்சினைகளை தாளில் எழுதுங்கள்.அது உங்களிடம் தோற்றுவித்த உணர்வுகளை குறிப்பிடுங்கள்.சிந்தியுங்கள்.பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி கண்டுபிடிக்கவும்.உதாரணமாக தூக்கமின்மை என்றால் அதைப்பற்றி இணையத்தில்,புத்தகத்தில் தேடி சேகரிக்கவும்.

                                           புதிய தகவல்களை கொண்டு என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதை எழுதவும்.தீர்வுக்குள்ள சாதகமான,பாதகமான விசயங்களையும் எழுதுங்கள்.அதிக நன்மையுள்ள தீர்வை தேர்ந்தெடுக்கவும்.வழக்கமாக,பிரச்சினைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் நம்மை சிந்திக்கவிடாது.இன்னொருவருடன்(ஆலோசகர்,நண்பர்,உறவினர்,குருமார்கள்)
பேசி தீர்ப்பதே சிறந்தது என்றபோதிலும் முயற்சி செய்யுங்கள்.உரிய தீர்வுகளை கண்டடைந்தால் நாளை வாழ்வு நலமாகும்.

20 comments:

  1. நம்பகமான யாருடனும் மனம் விட்டு பேசும் போது பிரச்சனைகள் தீரும்.. சில நாடுகளில் கலந்தாய்வு தன்னார்வக் குழுக்கள் பல செயல்படுகின்றன.. கால் செண்டர்களும் உண்டு.. நல்லதொரு பதிவு .. நன்றிகள் !

    ReplyDelete
  2. அமைதியாக தனிமையில் அமர்ந்து உங்கள் பிரச்சினைகளை தாளில் எழுதுங்கள்.அது உங்களிடம் தோற்றுவித்த உணர்வுகளை குறிப்பிடுங்கள்.சிந்தியுங்கள்.பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி கண்டுபிடிக்கவும்.உதாரணமாக தூக்கமின்மை என்றால் அதைப்பற்றி இணையத்தில்,புத்தகத்தில் தேடி சேகரிக்கவும்.

    அண்ணே இது சூப்பர் ஐடியா அண்ணே!! முன்னொருகாலத்தில் நானும் இத செஞ்சு பார்த்தேன்! நல்ல பலன் தந்திச்சு!!

    ReplyDelete
  3. பயனுள்ள ஆலோசனைகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  4. விவாதம் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்..
    பயனுள்ள ஆலோசனைகள் தந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. Also we use SWOT(strenth, weakness, oppurtunity, threat) analysis for problem solving.

    ReplyDelete
  6. நம் மனமே பிரச்சனை...! நம் மனமே அதன் தீர்வு :-)

    ReplyDelete
  7. வணக்கம் பாஸ்....
    வாழ்க்கைக்கு அவசியமான தகவல்...
    தொடருங்கள் உங்கள் பணியை
    தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

    ReplyDelete
  8. ஒரு சிக்கல் வரும்போது சென்ற முறை எப்படி சரி செய்தோம் என்பதையும் நினைவூட்டிக் கொள்ள வேண்டும். எழுதிகூட வைத்துக்கொள்ளலாம். பல முறை மறந்துவிட்டு தவித்திருக்கிறேன். நல்ல பதிவு.

    ReplyDelete
  9. @இக்பால் செல்வன் said...

    நம்பகமான யாருடனும் மனம் விட்டு பேசும் போது பிரச்சனைகள் தீரும்.. சில நாடுகளில் கலந்தாய்வு தன்னார்வக் குழுக்கள் பல செயல்படுகின்றன.. கால் செண்டர்களும் உண்டு.. நல்லதொரு பதிவு .. நன்றிகள் !

    ஆம்.இக்பால் செல்வன் தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  10. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    அமைதியாக தனிமையில் அமர்ந்து உங்கள் பிரச்சினைகளை தாளில் எழுதுங்கள்.அது உங்களிடம் தோற்றுவித்த உணர்வுகளை குறிப்பிடுங்கள்.சிந்தியுங்கள்.பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி கண்டுபிடிக்கவும்.உதாரணமாக தூக்கமின்மை என்றால் அதைப்பற்றி இணையத்தில்,புத்தகத்தில் தேடி சேகரிக்கவும்.

    அண்ணே இது சூப்பர் ஐடியா அண்ணே!! முன்னொருகாலத்தில் நானும் இத செஞ்சு பார்த்தேன்! நல்ல பலன் தந்திச்சு!!

    பரவால்லயே அனுபவமே இருக்கா? நன்றி தம்பி

    ReplyDelete
  11. @DrPKandaswamyPhD said...

    பயனுள்ள ஆலோசனைகள். பாராட்டுகள்.

    நன்றி சார்

    ReplyDelete
  12. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    விவாதம் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்..
    பயனுள்ள ஆலோசனைகள் தந்தமைக்கு நன்றிகள்

    நன்றி,வாத்யாரே

    ReplyDelete
  13. Namy said...

    Good article.,

    Also we use SWOT(strenth, weakness, oppurtunity, threat) analysis for problem solving.

    YES,THANK YOU

    ReplyDelete
  14. சிங்கக்குட்டி said...

    நம் மனமே பிரச்சனை...! நம் மனமே அதன் தீர்வு :-)

    ஆம்.நன்றி

    ReplyDelete
  15. @மைந்தன் சிவா said...

    வணக்கம் பாஸ்....
    வாழ்க்கைக்கு அவசியமான தகவல்...
    தொடருங்கள் உங்கள் பணியை
    தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

    நன்றி சிவா

    ReplyDelete
  16. @சாகம்பரி said...

    ஒரு சிக்கல் வரும்போது சென்ற முறை எப்படி சரி செய்தோம் என்பதையும் நினைவூட்டிக் கொள்ள வேண்டும். எழுதிகூட வைத்துக்கொள்ளலாம். பல முறை மறந்துவிட்டு தவித்திருக்கிறேன். நல்ல பதிவு.

    நன்றி சகோதரி

    ReplyDelete
  17. @சி.பி.செந்தில்குமார் said...

    attack to nalla naeram sadhiish? haa ha ha

    ச்சே...ச்சே இல்ல சார்.நன்றி

    ReplyDelete
  18. A good useful suggestion.Continue please. Let somebody will benifit. Is a kind of help.

    sathia.

    ReplyDelete