Pages

Thursday, May 26, 2011

உங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா? தெரிந்து கொள்வது எப்படி?

உள்ளம்.கிட்ட்த்தட்ட உங்கள் வாழ்க்கை அதுதான்.மனம் நலமுடன் இருந்தால் மட்டுமே வாழ்வும் இனிதாக இருக்கும்.இது பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது.பலருக்கும் உள்ளம் பிரச்சினையாக இருப்பது வெளியில் தெரிவதில்லை.மனம் என்றவுடன் அதன் சீர்கேடு மன நோய்தான் என்று  நினைப்பது தவறு.

                                ஒருவருடைய எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது.தான் வளர்ந்து வந்த சூழல்,பழகிய உறவுகள்,கற்றுக்கொண்ட விஷயத்துக்கேற்ப எண்ணங்கள் உருவாகின்றன.வெற்றியையும்,தோல்வியையும் தீர்மானித்து உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்வது இவைதான்.


                                                                      சிலர் எப்போதும் எதைப்பற்றியாவது புலம்பிக்கொண்டிருப்பார்கள்.இவர்கள் மனம் ஆரோக்கியமாக இருப்பதாக பொருள் அல்ல.ஒருவர் தன்னைப்பற்றி நல்லவிதமாக உணர்ந்தால் அவர் மனம் நலமாக இருப்பதாக கொள்ளலாம்.நன்றாக சிந்தித்து வெற்றிகரமான செயல்களை செய்யக்கூடியவராகவும் இருப்பார்.புலம்புபவர் பைத்தியம் என்று அர்த்தமல்ல!அவருக்கு ஆலோசனை தேவை.

                               தன்னை சார்ந்த அனைவருடனும் நல்ல உறவுகளை பேணுவது நலமான மனதிற்கு இன்னொரு அடையாளம்.இனிய உறவுகளில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.பொறாமை,கோபம் போன்ற உணர்ச்சிகளை கையாளத்தெரியாதவர்கள் உறவுகளை இழந்து விடுகிறார்கள்.

                                 ஆரோக்கியமான மனதுள்ள ஒருவர் மாற்றங்களுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்கிறார்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்க! என்பது இதுதான்.ஆனால் புரிந்து கொண்டு மாற்றிக்கொள்ளவேண்டும்.வேறு வழியில்லாமல் தன்னை மாற்றிக்கொண்டால் அது மனதில் தங்கி பிரச்சினையை ஏற்படுத்தும்.

                                 வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள்,கஷ்டங்கள் இயல்பானவை.தவிர்க்க முடியாதவை.இழப்புகள்,தோல்விகள் அனைவருக்கும் பொதுவானது.நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை.ஆனால் நலமான உள்ளத்தை பெற்றிருக்கும் ஒருவர் அதை வெற்றிகரமாக சமாளிக்கிறார்.முடியாதவர் மனச்சோர்வுக்கு ஆளாகி,தூக்கமிழந்து துன்பங்களில் வீழ்கிறார்.

                                  தன்னம்பிக்கையுடன் ஒருவர் தன்னைப்பற்றி நல்ல விதமாக நினைத்தால் அவர் நல்ல மன நலம் பெற்றவர் என்று சொல்ல்லாம்.தன்னம்பிக்கை உள்ளவர் எல்லவற்றிலும் வெற்றியடைகிறார்.தோல்விகளும்,கடந்தகால கசப்பான அனுபவங்களுமே ஒருவரது தன்னம்பிக்கை இழக்க காரணமாக அமைந்து விடுவதுண்டு.ஆரோக்கியமான உள்ளம் படைத்தவர் மாட்டிக்கொள்வதில்லை.

                                  ஒருவருடைய கஷ்டங்களில்தான் அவரது உண்மையான மன நலத்தை அறிய முடியும்.அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொருத்து அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.பெரும்பாலான நேரங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பது,படுத்தவுடன் தூங்கிவிடுவது போன்றவை மனம் ஆரோக்கியமாக இருப்பதன் அடையாளம்.மற்றவர்களுக்கு ஆலோசனையோ,சிகிச்சையோ தேவைப்படும்.

20 comments:

  1. எதையும் சமாளிக்கலாம் என்ற எண்ணம்தான் ஆரோக்கிய மனதின் அறிகுறி. என்னுடைய மந்திர வார்த்தை " எது நடந்தாலும் என் தலை என் கழுத்திற்கு மேல்தான் நிற்கும் யாரும் அதை சீவிவிடப்போவதில்லை. let me face it."

    ReplyDelete
  2. உள்ளம்.கிட்ட்த்தட்ட உங்கள் வாழ்க்கை அதுதான்.மனம் நலமுடன் இருந்தால் மட்டுமே வாழ்வும் இனிதாக இருக்கும்.

    முற்றிலும் உண்மை அண்ணே! உடல் எவ்வளவு ஆரோக்யமா இருந்தாலும் உள்ள ஆரோக்கியம் மிக முக்கியம்!

    ReplyDelete
  3. தன்னை சார்ந்த அனைவருடனும் நல்ல உறவுகளை பேணுவது நலமான மனதிற்கு இன்னொரு அடையாளம்.இனிய உறவுகளில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.பொறாமை,கோபம் போன்ற உணர்ச்சிகளை கையாளத்தெரியாதவர்கள் உறவுகளை இழந்து விடுகிறார்கள்.

    அருமையாக கருத்துக்கள் அவ்வளவும் உண்மை அண்ணே! அண்ணே உங்களுக்கு கவலை வந்தா என்ன பண்ணுவீங்க? மனசால பீல் பண்ணுவீங்களா? அல்லது அறிவால சிந்திச்சு நார்மல் ஆவீங்களா?

    ReplyDelete
  4. ஓட்டவடை கேக்குறாரு கேள்வி பாருங்க...

    ReplyDelete
  5. ஆக்சுவலி உங்க பதிவுகள் அனைத்துக்கும் ஒரே கமெண்டு தான்,,,
    அருமை..பிரயோசனமானது ஆனால் பார்த்தால் ஸ்டாண்டர்ட் கமென்ட் மாதிரி போயிடும்...

    ReplyDelete
  6. ஒருவருடைய எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது//
    அருமையாக கருத்து..

    ReplyDelete
  7. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    அருமையாக கருத்துக்கள் அவ்வளவும் உண்மை அண்ணே! அண்ணே உங்களுக்கு கவலை வந்தா என்ன பண்ணுவீங்க? மனசால பீல் பண்ணுவீங்களா? அல்லது அறிவால சிந்திச்சு நார்மல் ஆவீங்களா?

    மனசால ஃபீல் ஆகி பிறகு சிந்திச்சி நார்மல் ஆவேன் தம்பி.எவ்வளவு சீக்கிரம் வெளியே வர்ரமோ அந்தளவு மனசு நல்லா இருக்குன்னு அர்த்தம்.நன்றி தம்பி

    ReplyDelete
  8. இதில் மிக முக்கியமானது, ஒருவர் எதிர்காலத்தில் கஷ்டத்தில் எப்படி இருப்பார் என்பதைவிட கடந்த காலத்தில் எப்படி இருந்தார் என்பதைப் பற்றிதான் அதிக கவனம் தேவை. ஏனெனில் எதிர்கால நிகழ்வு பெரும்பாலும் இது சார்ந்தே இருக்கிறது.

    அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி..


    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  9. ஒருவருடைய எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

    இதுவே சகலத்திற்கும் முத்தாரம்..
    வழமைபோலவே தேவையானது, பிரயோசமானது, சிறப்பானது

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு

    ReplyDelete
  11. @சாகம்பரி said...

    எதையும் சமாளிக்கலாம் என்ற எண்ணம்தான் ஆரோக்கிய மனதின் அறிகுறி. என்னுடைய மந்திர வார்த்தை " எது நடந்தாலும் என் தலை என் கழுத்திற்கு மேல்தான் நிற்கும் யாரும் அதை சீவிவிடப்போவதில்லை. let me face it

    நல்ல அணுகுமுறை நன்றி சகோதரி

    ReplyDelete
  12. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    உள்ளம்.கிட்ட்த்தட்ட உங்கள் வாழ்க்கை அதுதான்.மனம் நலமுடன் இருந்தால் மட்டுமே வாழ்வும் இனிதாக இருக்கும்.

    முற்றிலும் உண்மை அண்ணே! உடல் எவ்வளவு ஆரோக்யமா இருந்தாலும் உள்ள ஆரோக்கியம் மிக முக்கிய

    உடலில் ஏற்படும் பாதிப்பு உள்ளத்திலும் உள்ளத்தின் பிரச்சினை உடலிலும் எதிரொலிக்கும் தம்பி நன்றி

    ReplyDelete
  13. @மைந்தன் சிவா said...

    ஓட்டவடை கேக்குறாரு கேள்வி பாருங்க.

    பதில் சொல்லிட்டேனே சிவா நன்றி

    ReplyDelete
  14. @மைந்தன் சிவா said...

    ஆக்சுவலி உங்க பதிவுகள் அனைத்துக்கும் ஒரே கமெண்டு தான்,,,
    அருமை..பிரயோசனமானது ஆனால் பார்த்தால் ஸ்டாண்டர்ட் கமென்ட் மாதிரி போயிடும்...

    நன்றி சிவா

    ReplyDelete
  15. @இராஜராஜேஸ்வரி said...

    ஒருவருடைய எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது//
    அருமையாக கருத்து..

    நன்றி சகோதரி

    ReplyDelete
  16. @Sankar Gurusamy said...

    இதில் மிக முக்கியமானது, ஒருவர் எதிர்காலத்தில் கஷ்டத்தில் எப்படி இருப்பார் என்பதைவிட கடந்த காலத்தில் எப்படி இருந்தார் என்பதைப் பற்றிதான் அதிக கவனம் தேவை. ஏனெனில் எதிர்கால நிகழ்வு பெரும்பாலும் இது சார்ந்தே இருக்கிறது.

    அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி..

    ஆம்.சங்கர் நன்றி

    ReplyDelete
  17. @Jana said...

    ஒருவருடைய எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

    இதுவே சகலத்திற்கும் முத்தாரம்..
    வழமைபோலவே தேவையானது, பிரயோசமானது, சிறப்பானது

    நன்றி ஜனா

    ReplyDelete
  18. @Mahan.Thamesh said...

    நல்ல பகிர்வு

    தங்கள் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  19. @ஷர்புதீன் said...

    i agreed mainthan siva

    thanks sir

    ReplyDelete