Pages

Tuesday, May 31, 2011

கற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை இவ்ளோதான்!


கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமத்தில் நடந்த விஷயம் இது.உறவினர் பெண் ஒருவரை அவரது கணவர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கோயில் பூசாரி ஒருவர் இரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.அந்த பெண் சப்தமிட்டு தப்பித்து விட்டார்.

                                                             
நல்ல வேளை அந்த பெண் கல்லாகபோக  யாரும் சாபமிடவில்லை.காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள்.அதற்குப்பிறகு நடந்த சம்பவம்தான் பெண்ணின் சமூக தகுதி நிலையை நமக்கு உணர்த்தும் ஒன்று.ஆமாம் இந்தியா இது போன்ற கிராமங்களில்தான் வாழ்கிறது.
 

                                                             
கிராமத்தில் பெரியவர்கள் ,முக்கியஸ்தர்கள் எல்லாம் கூடி பஞ்சாயத்து பேசினார்கள்.சினிமாக்களில் வரும் பஞ்சாயத்து போலத்தான்! பூசாரிக்கு 42,000  ரூபாய் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.ச்சே இவ்வளுவுதானாசரி என்ன இருந்தாலும் கோவில் பூசாரி இல்லையா?

                                                               
போகட்டும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் தனது தொழிலை சமீப காலமாக விட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.ஆனால் மேற்கண்ட விஷயம் கட்டப்பஞ்சாயத்து அல்ல.கிராமங்களில் மரபாக இருந்து வரும் ஒன்று தான்.நீதிமன்றத்தின் மிகப்பழைய வடிவம் இந்த பஞ்சாயத்துக்கள்.
 

                                                             
கிராமங்களில் இரண்டு பேருக்கு அல்லது இரண்டு குடும்பத்துக்கு பிரச்சினை என்றால் அதற்கென்று உள்ள பெரியவரிடம் புகார் கொடுப்பார்.அவர் குறிப்பிட்ட நாளில் பஞ்சாயத்தை கூட்டுவார்.பக்கத்து கிராமங்களில் இருந்து கூட பெரிய மனிதர்கள் அழைக்கப்படுவார்கள்.

                                                              
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்பார்கள்.ஒருவர் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது என்று அடிக்கடி யாராவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.ஆனாலும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.ஒரு வழியாக இரண்டு தரப்பும் உணர்ச்சியை கொட்டியிருப்பார்கள்.
 

                                                             
தீர்ப்புக்கு இருதரப்பும் கட்டுப்படுவதாக உறுதியளிக்க வேண்டும்.சற்று நேரத்திற்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.அதன் பிறகு கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டு முக்கியஸ்தர்கள் கொஞ்சம் தூரமாக போய் விவாதிப்பார்கள்.ஊர் மக்கள் ஆவலோடு காத்திருப்பார்கள்.பின்னர் தீர்ப்பு வெளியாகும்.தீர்ப்பை விமசித்துக்கொண்டே ஆட்கள் கலைந்து செல்வார்கள்.

                                                              
கிராமங்களில் வழங்கும் இந்த தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் கஷ்டம்.ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடவும்,ஒத்துழைப்பு இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.ஆனால் இன்றும் இப்படியெல்லாம் சாத்தியம் என்பதுதான் புரியவில்லை.

18 comments:

  1. என்ன கொடுமை சார் இது??
    வெட்டிப் போடணும் இவங்கள

    ReplyDelete
  2. @ என்னக் கொடுமை இது ? இன்னுமா பஞ்சாயத்துக்கள் தொடருகின்றன. சாமியார் என்றாலே கற்பழிப்பது தான் தொழிலோ எனத் தோன்றுமளவிற்கு செயல்படுவது ஏனோ? போதிய தண்டனைகள் கொடுக்கப்படாமல் விடுவதால் தான் .. நிச்சயம் இது ஒரு சாதரண சம்பவமாகப் படவில்லை ... அந்த சாமியாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தாலாவது - இந்த பஞ்சாயத்து மேன்மையானதாகப் பட்டிருக்கும். அதுவும் இல்லை !

    ReplyDelete
  3. @ சண்முகவேல் - தளத்தின் மாற்றியமைத்தல் வடிவம் நன்றாக உள்ளது, மிக்க நன்றிகள்

    ReplyDelete
  4. அட இவ்வளவுதானா தண்டனை? எனக்கு நடிகர் விவேக்கின் மைனர் குஞ்சு காமெடிதான் நினைவுக்கு வருகிறது....

    ReplyDelete
  5. @மைந்தன் சிவா said...

    என்ன கொடுமை சார் இது??
    வெட்டிப் போடணும் இவங்கள

    யார சிவா,நன்றி

    ReplyDelete
  6. இக்பால் செல்வன் said...

    நன்றி இக்பால் செல்வன்,இன்னமும் பஞ்சாயத்துக்கள் தொடரவே செய்கின்றன.

    ReplyDelete
  7. @இக்பால் செல்வன் said...

    @ சண்முகவேல் - தளத்தின் மாற்றியமைத்தல் வடிவம் நன்றாக உள்ளது, மிக்க நன்றிகள்

    நீங்கள் சொன்னதாலேயே இவ்வளவு விரைவில் மாற்றிவிட்டேன் .நன்றி

    ReplyDelete
  8. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    அட இவ்வளவுதானா தண்டனை? எனக்கு நடிகர் விவேக்கின் மைனர் குஞ்சு காமெடிதான் நினைவுக்கு வருகிறது....

    நன்றி ரஜீவா,அந்த ஜோக்க கொஞ்சம் நினைவுபடுத்தியிருக்கக்கூடாதா?

    ReplyDelete
  9. நாட்டாம ....தீர்ப்ப மாத்தி சொல்லு .......

    ReplyDelete
  10. சகோ, உண்மையில் வருத்தம் தரும் செய்தி. பணம் பத்தும் செய்யும் என்பது போல,
    ஒரு தொகைப் பணத்தோடு இங்கே பஞ்சாயத்தின் மூலம் ஏழைகளின் வாழ்வு தான் சீரழிக்கப்படுகிறது.

    இந்த நிலை மாற வேண்டும்.

    ReplyDelete
  11. கனி...மொழியே.. நீ இன்னும் என்ன செய்ய போகிறாய்? http://avargal-unmaigal.blogspot.com/2011/06/blog-post.html படித்து பாருங்கள். கற்பழிப்புக்கு என்ன தண்டனை தருகிறார் இந்த பெண் என்று

    ReplyDelete
  12. நேற்று நடந்த சம்பவம் - பங்களாதேஷ் பெண்மணி தன்னைக் கற்பழிக்க வந்தவனின் பிறப்புறுப்பை அறுத்தே விட்டாள். sollacholla.blogspot.com

    ReplyDelete
  13. @koodal bala said...
    நாட்டாம ....தீர்ப்ப மாத்தி சொல்லு .......

    கரெக்ட் தான் சார் நன்றி.

    ReplyDelete
  14. @நிரூபன் said...

    உண்மைதான் சகோ .நன்றி

    ReplyDelete
  15. @Avargal Unmaigal said...

    இதோ வருகிறேன்.நன்றி.

    ReplyDelete
  16. @சொல்லச் சொல்ல said...
    நேற்று நடந்த சம்பவம் - பங்களாதேஷ் பெண்மணி தன்னைக் கற்பழிக்க வந்தவனின் பிறப்புறுப்பை அறுத்தே விட்டாள். sollacholla.blogspot.com

    சூப்பர்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  17. படிக்கவே வருத்தமாக இருக்கிறது. நம் கிராமங்களின் பொருளாதார சூழல் இதை அனுமதிக்கிறதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  18. மத ரீதியான ஒரு விவாதத்திற்குரிய இன்றைய அடியேனின் பதிவை பார்வை இட அழைக்கிறேன்

    ReplyDelete