Pages

Tuesday, June 28, 2011

சில நேரங்களில் பெண்கள் எரிந்து விழுவது ஏன்?

சில நாட்களில் அவ்வளவு திருப்தியாக நாம் உணர்வதில்லை.மனசு ஒரு மாதிரியாக இருக்கிறது.ஆனால் சொல்லத்தெரிவதில்லை.எதிலும் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.வெற்றியென்றால் சந்தோஷப்படுவதும்,தோல்வி என்றால் சங்கடமாவதும் இயல்பாக உள்ள ஒன்று.ஆனால் காரணமே இல்லாமல் மனநிலையில் மாறுபாடு ஏற்பட்டுவிடுகிறது.

                                இது ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பொதுவாக இருக்கும் விஷயம்தான்.ஆண்களைப்பற்றி பெண்கள் திடீரென்று இவருக்கு என்ன ஆச்சு என்று குறைபட்டுக்கொள்வது அதிகமில்லை.ஆண்களுக்கு மட்டும் எவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்தாலும் இது புரிவதேயில்லை.அடிக்கடி இப்படி ஆயிடறா!என்பார்கள்.

                                 குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மன நிலையில் மாற்றம் உருவாகிறது என்பது உலகம் ஒப்புக்கொண்ட ஒன்று.குழந்தைகள்,ஆண்,பெண் அனைவருக்கும் இது பொது.பயாலஜிகல் ரிதம் என்று சொல்வார்கள்.சந்திர சுழற்சிக்கு ஏற்ப அமாவாசை,பவுர்ணமி நாட்களில் கடலில் மாறுபாடு உண்டாவது நமக்கு தெரியும்.இரவில் தூக்கம்,பகலில் விழிப்பு என்பதும் இப்படித்தான்.

                                 நம்முடைய மனநிலை எப்போதும் நம்முடைய கையில் இல்லை.பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்புள்ள சில நாட்கள் உடலிலும்,மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது.மன நிலையில்,பசி உள்ளிட்ட உடல் செயல்களில்,நடந்துகொள்ளும் வித்த்தில் விரும்பத்தகாத மாற்றம் இருப்பது தவிர்க்கமுடியாது.இது அறிவியல் ஒப்புக்கொண்ட இயற்கையான விஷயம்.

                                  சந்திரனை தொடர்புபடுத்தி இதைக்கூறுவார்கள்.சோதிட்த்தில் மனதுக்கும்,உடலுக்கும் உரிய கிரகம் சந்திரன்.வளர்பிறை,தேய்பிறை என்று இருப்பதுபோல மனிதர்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் மாறுபாடும் இருக்கும் என்பதுண்டு.மாத விடாய் சுழற்சி என்பது சந்திரனை போல பெரும்பாலானவர்களுக்கு 28 நாட்கள் இருக்கும்.சிலருக்கு முறையற்று இருப்பதும்,சிலருக்கு 30 நாட்களும் இருக்கும்.

                                  வளர்பிறை,தேய்பிறை கணக்கீடு போல மாதவிலக்கிற்கு முன்பு,பின்பு என்று மனநிலையை அளவிடுவதும் இருக்கிறது.கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ள (மாத விலக்கு நாளிலிருந்து 14,15 ஆகிய நாட்கள்) நாட்கள் வரையுள்ள மனநிலைக்கும்,அதற்கு பின்பு உள்ளதற்கும் வித்தியாசம் காண முடியும் என்கிறார்கள்.16 வது நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் இருக்கலாம்.

                                   பெண்களைப்போல இல்லாவிட்டாலும் ஆண்களுக்கும் இந்த மாறுபாடு உண்டு.ஆனால் அது வெளியே தெரிவதில்லை.அன்றாடம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை குறித்து வைத்து வந்தால் இதை கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.நான் முயற்சி செய்து பார்த்த்தில்லை.நல்ல மனநிலை நாட்களை கண்டுபிடித்துவிட்டால் அதற்கேற்ப நம்முடைய நிகழ்ச்சிகளை திட்டமிட்டுக்கொள்ளலாம்.

                                    ஆணோ,பெண்ணோ மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானது என்று புரிந்துகொண்டால்,ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக உதவுவதும்,இம்மாதிரியான சமயங்களில் பொறுத்துப்போவதும் சாத்தியமாகிவிடும்.குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும்,அமைதிக்கும் இது அவசியமானது.

14 comments:

  1. maarrangkalukku ivvalavu kaaranangkal irukkirathaa.. santhiraastram anru kobam varum enbathai naane paarththirukkiren.. valththukkal

    ReplyDelete
  2. பாஸ், பெண்கள் மனதில் ஏற்படும் கோபங்களுக்கான விளக்கத்தினையும்,
    குடும்பத்தில் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுகையில்
    அதனைப் புரிந்துணர்வின் மூலம் தான் தீர்க்க முடியும் என்பதையும் பகிர்ந்திருக்கிறீங்க.

    நோட் பண்ணி வைக்கிறேன், கலியாணம் ஆகினாப் பிறகு நமக்கும் தேவைப்படுமில்லே.

    ReplyDelete
  3. பெரும்பாலும் சந்திராஷ்டம வேளைகளில் இப்படி ஆவது உண்டு.

    பகிர்வுக்கு நன்றி

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  4. இப்படியும் காரணங்கள் இருக்கா? நல்ல பதிவு.

    ReplyDelete
  5. //ஆணோ,பெண்ணோ மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானது என்று புரிந்துகொண்டால்,ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக உதவுவதும்,இம்மாதிரியான சமயங்களில் பொறுத்துப்போவதும் சாத்தியமாகிவிடும்.குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும்,அமைதிக்கும் இது அவசியமானது.//

    சரியான வார்த்தைகள்.
    -

    ReplyDelete
  6. மதுரை சரவணன் said...

    maarrangkalukku ivvalavu kaaranangkal irukkirathaa.. santhiraastram anru kobam varum enbathai naane paarththirukkiren.. valththukkal


    நன்றி சரவணன்.

    ReplyDelete
  7. @நிரூபன் said...

    பாஸ், பெண்கள் மனதில் ஏற்படும் கோபங்களுக்கான விளக்கத்தினையும்,
    குடும்பத்தில் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுகையில்
    அதனைப் புரிந்துணர்வின் மூலம் தான் தீர்க்க முடியும் என்பதையும் பகிர்ந்திருக்கிறீங்க.

    நோட் பண்ணி வைக்கிறேன், கலியாணம் ஆகினாப் பிறகு நமக்கும் தேவைப்படுமில்லே.

    நோட் பண்ணி வைங்க சகோ ,வாழ்த்துக்கள்.நன்றி

    ReplyDelete
  8. @Sankar Gurusamy said...

    பெரும்பாலும் சந்திராஷ்டம வேளைகளில் இப்படி ஆவது உண்டு.

    பகிர்வுக்கு நன்றி

    நன்றி சங்கர்.

    ReplyDelete
  9. @A.K.RASAN said...

    இப்படியும் காரணங்கள் இருக்கா? நல்ல பதிவு.

    thanks rasan.

    ReplyDelete
  10. @A.K.RASAN said...

    //ஆணோ,பெண்ணோ மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானது என்று புரிந்துகொண்டால்,ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக உதவுவதும்,இம்மாதிரியான சமயங்களில் பொறுத்துப்போவதும் சாத்தியமாகிவிடும்.குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும்,அமைதிக்கும் இது அவசியமானது.//

    சரியான வார்த்தைகள்.
    -நன்றி சார்

    ReplyDelete
  11. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    ரைட்டு..

    thanks karun

    ReplyDelete
  12. எல்லாம் ஈஸ்ட்ரோஜன், ஆண்ட்ரோஜன் மாற்றகள்தான். வயதாகும்போது இந்த மாற்றங்கள் பெரிய அளவில் தெரியவரும்.

    ReplyDelete