Pages

Friday, August 5, 2011

காஞ்சனா-சரத்குமாரைக் கொண்டாடும் அரவாணிகள்.

தியேட்டர் வழியாக நடந்து சென்று கொண்டிருக்கிறேன்.காஞ்சனா படம் ஓடிக்கொண்டிருக்கிறது.நல்ல கூட்டம்.மூன்று அரவாணிகள் சந்தோஷமாக நடனமாடுகிறார்கள்.போஸ்டரில் உள்ள சரத்குமார் முகத்துக்கு திருஷ்டி கழிக்கிறார்கள்.மூவருக்கும் முகத்தில் ஏக சந்தோஷம்.காஞ்சனா அரவாணிகளை பெருமைப்படுத்திவிட்ட்தாக நினைக்கிறார்கள்.

                                 சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஒருவனை பற்றிய செய்தியை படித்தேன். தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த பின்பு அவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான்.வீட்டை விட்டு ஓடிப்போய் அரவாணியாக மாறி வாழ்ந்திருக்க வேண்டும்.ஆனால் அவனுக்கு அப்படி வாழ விருப்பமில்லை.அவனுக்கு நேர்ந்த உடல் மாற்றம் இயற்கையானது.

                                 நான்கு பேர் மத்தியில் ஒரு அரவாணியாக மதிப்புடன் வாழமுடியுமென்றால் அவன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? கேலி,கிண்டலுக்கும் உள்ளாகி ஒரு செக்ஸ் பொம்மையாக மட்டுமே மதிக்கும் சமூகத்தில் வாழ்வதற்கு கொஞ்சம் துணிவு வேண்டும்.பையனுக்கு அவ்வளவு தைரியமில்லை.

                                  அக்வாராணியும் நிர்வாண அரவாணியும் என்ற தலைப்பில் ஒரு பதிவை முன்பு தந்திருக்கிறேன்.கடைகடையாக பணம் கேட்டுச்செல்வதை கடை கேட்பது என்பார்கள்.தொடர்வண்டிகளிலும் இது சகஜம்.பொது மக்கள் இதை ஒரு பெரும் தொல்லையாகத்தான் கருதுகிறார்கள்.சில இடங்களில் பணம் இல்லை என்றால் மிரட்டுவதும் உண்டு.

                                    அரவாணிகள் கல்லாவில் கை வைத்தால் தொழில் நசிந்து போகும் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்.ஒரு கடையில் தொடர்ந்து நான் பார்க்கும் ஒரு விஷயம்.அரவாணி நேராக கடைக்கு வந்தவுடன் பூஜை அறைக்கு சென்றுஒரு ரூபாயோ,இரண்டு ரூபாயோ பணத்தை வைத்து வணங்குவார்.அப்பணத்தை கொண்டு வந்து கல்லாவில் போடுவார்.பின்னர் கடைக்கார்ர் அரவாணிக்கு பணம் கொடுப்பார்.வியாபாரம் செழிக்கும் என்று நம்பிக்கை.

                                    சினிமா ஒரு மிகப்பெரும் ஊடகம்.அனைத்து மக்களையும் சென்றடையும் கலை.பெரும்பாலான தமிழ் சினிமாக்களிலும் கேலியாகவும்,பாலியல் விளையாட்டு பொருளாகவுமே சித்தரிக்கப்பட்டு வந்தார்கள்.நெகடிவ்வாக சித்தரிக்கப்படுவதுஅரவாணிகளுக்கே தங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தக்கூடியது. சில காலம் முன்பு நர்த்தகி படம் வந்த்து.தெனாவெட்டு படமும்,பாசிட்டிவாக காட்டியது.

                                    இப்போது காஞ்சனா பெரிய அளவில் தங்களை பெருமைப்படுத்தி விட்ட்தாக கருதுகிறார்கள்.அதிலும் சரத்குமார் எம்.எல்.ஏ நடிப்பை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.உண்மையில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.வசூலில் களைகட்டிக்கொண்டிருப்பதாக கேள்வி.ராகவா லாரன்ஸ்க்கும் நல்ல பெயர்.

                                     இந்தியில்  ரீமேக் செய்யப்போவதாக தகவல்.அமீர்கான் அதிகம் விரும்புவதாக படித்தேன்.சல்மானுக்கும் ஆசையாம்.முனி-3 பற்றிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறாராம் ராகவா லாரன்ஸ்.ஒரு ரவுண்டு கட்டுவார் போலிருக்கிறது.வாழ்த்துவோம்.

13 comments:

  1. ம்ம் அவர்களும் மனிதர்கள் தானே ..

    ReplyDelete
  2. aravanikal parri nalla seithi thokuppu... avarkalum nammai pola vaala vendum... vaalththukkal

    ReplyDelete
  3. யாரா இருந்தால் என்ன நல்ல மனம் வாழட்டும்

    ReplyDelete
  4. @கந்தசாமி. said...

    ம்ம் அவர்களும் மனிதர்கள் தானே ..
    ஆம்,கந்தசாமி நன்றி

    ReplyDelete
  5. @மதுரை சரவணன் said...

    aravanikal parri nalla seithi thokuppu... avarkalum nammai pola vaala vendum... vaalththukkal

    நன்றி சரவணன்

    ReplyDelete
  6. @மாய உலகம் said...

    யாரா இருந்தால் என்ன நல்ல மனம் வாழட்டும்

    நன்றீ சார்

    ReplyDelete
  7. நல்லவர்கள் வாழட்டும்,,

    ReplyDelete
  8. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    நல்லவர்கள் வாழட்டும்,,

    thank you sir

    ReplyDelete
  9. மனித மனங்களைச் சரிசமமாக மதிக்க வேண்டும் எனும் பண்பிற்கு அமைவாக, இப்போது அரவாணிகளுக்கும் எம் சமூகத்தில் ஓர் அந்தஸ்துக் கிடைப்பதனை முனி படம் முன்னுதாரணமாகக் காட்டியிருக்கிறது.

    ReplyDelete
  10. அரவாணிகளை மெது மெதுவாக அங்கீகரித்து மதிக்கப் பழகும் எம் சமூகத்தின் நிலையினை உங்கள் பதிவு தாங்கி வந்திருக்கிறது.

    ReplyDelete
  11. அரவாணிகளும் மனிதர்கள்தானே, அவர்களுக்கும் மற்றவர்கள்போல வாழ ஆசை இருக்காதா என்ன?? அதன் வெளிப்பாடுதான் இந்த கொண்டாட்டங்கள்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  12. அவர்களும் மனிதர்கள்தானே!

    ReplyDelete
  13. அரவாணிகளை நாம் ஆதரிக்காவிட்டாலும் அவர்களையும் சக மனிதர்களாக மதிக்கவாது கத்துக்கொள்ள வேண்டும்,
    நல்ல பதிவு பாஸ்

    ReplyDelete