Pages

Tuesday, August 9, 2011

மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்?


மருத்துவர்களுக்கு நம்மிடையே எப்போதும் தனி மதிப்பு உண்டு.உயிர் காக்கும் கடவுள் அவர்கள்.பேராசையும் சுயநலமும் பெருகி விட்ட இன்றைய சூழலில் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பணம் சம்பாதிக்க என்னென்ன வித்தைகளை கையாளுகிறார்கள்?  பத்ம பூஷண் விருது பெற்ற  பேராசிரிய புகழ்பெற்றர் பி.எம்.ஹெக்டேவின் பகிர்வை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.மருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன் சாட் செய்து தான் அறிந்து கொண்ட்தை தருகிறார்.

1.       பரிசோதனைகளில் 40-60 சதவீத கமிஷன்.
                                    உடல்நிலை சரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும் மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்கு சென்றுவிடும்.இதில் அவசியமானதும் உண்டு,சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாத டெஸ்டுகளும் இருக்கும்.

2.       பரிந்துரை செய்வதில் 30-40 சதவீதம்.
                               சில நேரங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.உதாரணமாக தைராய்டு தொடர்பான நோயென்றால் அதற்கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்து சேர்ந்துவிடும்.

3.       மருத்துவமனை கட்டணத்தில் 30-40 சதவீதம்.

                                      மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும் கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.

4.       நெஞ்சுவலி என்று போனால்,

                                      சாதாரண வலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது.நான்கு நாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.

மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத ,விஷயம் தெரியாத பத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.குறைந்த சம்பள்த்திற்கு பணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது, சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,விளம்பரம் கொடுத்து காஸ்மெடிக் சர்ஜரி செய்வது,பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்றவை மற்ற வழிகள்.

                                 மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது. சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இப்போது படித்து முடித்து வந்தவுடன் நிறைய கடன்வாங்கி நர்சிங்ஹோம் கட்டி விடுகிறார்கள்.கடனை அடைக்க அப்பாவிகள் கிடைத்து விடுகிறார்கள்.ஊழலில் எத்தனையோ வகை இருக்கிறது .அதில் இது ஒரு வகை.

                                  இருபது ரூபாய்க்கு,முப்பது ரூபாய்க்கு கிராமங்களில் சென்று மருத்துவம் செய்யும் எளிய மருத்துவர்களும் இருக்கிறார்கள்.நல்ல டாக்டர்கள் கிடைத்துவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி!

20 comments:

  1. சமூக சிந்தனை பகிர்வு.... நன்றி.

    ReplyDelete
  2. மருத்துவம் இப்போ பணக்காரர்களுக்கு தான் மருத்துவம் பார்க்கிறது...

    ReplyDelete
  3. @தமிழ்வாசி - Prakash said...

    சமூக சிந்தனை பகிர்வு.... நன்றி.

    தங்கள் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  4. @தமிழ்வாசி - Prakash said...

    மருத்துவம் இப்போ பணக்காரர்களுக்கு தான் மருத்துவம் பார்க்கிறது...

    பணக்காரர்களும் தேவையில்லாமல் இழந்துதான் ஆக வேண்டும்.நன்றி

    ReplyDelete
  5. இப்பிடியெல்லாமா செய்யிறாங்க..
    என்ன செய்வது இந்த காலத்தில் உயிர்காக்கும் மருத்துவம்கூட பணம் சேர்க்கும் வியாபாரமாகிவிட்டது

    பிரபல இலங்கைப் பதிவருக்கும் நரேந்திரமோடிக்கும் தொடர்பு; திடுக்கிடும் ஆதாரம்

    ReplyDelete
  6. நம் மக்கள் கடவுளுக்கு அதுத்தபடியாக கைகூப்பி வணங்குவது மருத்துவர்களை தான்,
    மருத்துவர்கள் நம் மக்களையும் சற்று சிந்திக்கவேண்டும், பணம் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை.

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே..,

    ReplyDelete
  7. இந்த நிலை மாற அரசு மருத்துவமனையை மேம்படுத்தி அதில் நேர்மையும் நேர்ந்துவிட்டால் நன்மை பெற வாய்ப்புள்ளது...ஆனால் ம்ம்ம்ம்

    ReplyDelete
  8. மருத்துவ உலகின் யதார்த்த நிலையை
    மிகச் சரியாக சொல்லிப் போகும்
    அருமையான பதிவு
    விழிப்புணர்வு மக்களுக்கும் வரவேண்டும்
    மருத்துவர்களுக்கும் கொஞ்சம் அர்ப்பணிப்பு
    உணர்வு வளர வேண்டும்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. @மதுரன் said...

    இப்பிடியெல்லாமா செய்யிறாங்க..
    என்ன செய்வது இந்த காலத்தில் உயிர்காக்கும் மருத்துவம்கூட பணம் சேர்க்கும் வியாபாரமாகிவிட்டது

    நன்றி மதுரன்

    ReplyDelete
  10. @மாய உலகம் said...

    இந்த நிலை மாற அரசு மருத்துவமனையை மேம்படுத்தி அதில் நேர்மையும் நேர்ந்துவிட்டால் நன்மை பெற வாய்ப்புள்ளது...ஆனால் ம்ம்ம்ம்

    நன்றி சார்

    ReplyDelete
  11. @Ramani said...

    மருத்துவ உலகின் யதார்த்த நிலையை
    மிகச் சரியாக சொல்லிப் போகும்
    அருமையான பதிவு
    விழிப்புணர்வு மக்களுக்கும் வரவேண்டும்
    மருத்துவர்களுக்கும் கொஞ்சம் அர்ப்பணிப்பு
    உணர்வு வளர வேண்டும்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ஆம் அய்யா,நன்றி

    ReplyDelete
  12. நல்ல மருத்துவர் அமைவதுகூட இப்போது ஒரு வரம் போல ஆகிவிட்டது..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  13. @Sankar Gurusamy said...
    நல்ல மருத்துவர் அமைவதுகூட இப்போது ஒரு வரம் போல ஆகிவிட்டது..

    பகிர்வுக்கு நன்றி..

    thanks sankar

    ReplyDelete
  14. @ராஜா MVS said...
    நம் மக்கள் கடவுளுக்கு அதுத்தபடியாக கைகூப்பி வணங்குவது மருத்துவர்களை தான்,
    மருத்துவர்கள் நம் மக்களையும் சற்று சிந்திக்கவேண்டும், பணம் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை.

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே..,

    thanks sir

    ReplyDelete
  15. மக்களை எப்படியெல்லாம் இந்த மருத்துவர்கள் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதனை விளக்கமாகத் தந்திருக்கிறீங்க. இனிமேல் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பதற்கு ஏற்ற வகையில் விரிவான விளக்கங்களை விழிப்புணர்வாகத் தந்த உங்களுக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  16. மருத்துவ துறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள போஸ்ட் மோர்டேம் என்ற விகடன் பிரசுர புத்தகத்தை படிக்கவும்.. ஒரு மருத்துவர் எழுதியது..

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. நான் எல்லாத்தையும் நேர்ல கண்கூடாக தினமும் பாக்குறவன்(working and worked as Nursing Incharge in various hospitals in India and abroad)....சிலருக்கு சொன்னாலும் கேக்குறதில்ல...நம்ம ஜனங்களுக்கு என்னான்னா டாக்டர் சொல்றத செஞ்சிடனும்....எவ்வளோ செலவானாலும் பரவாயில்ல...தேவையில்லாமலேயே ஆணி புடுங்குற டாக்டருங்க நிறைய பேரு இருக்காங்க

    ReplyDelete
  19. http://mokkaiswami.blogspot.com/2011/08/1.html

    ReplyDelete
  20. அருமையான பதிவு.....
    நானும் மருத்துவர்களின் சுரண்டலை பற்றி பதிவிட நினைத்து எழுதியுள்ளேன்.. ஆனா உங்க பதிவு படிக்க படிக்க சுவாரசியமா இருக்கு...
    சில நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள் ஆனால் பணம் படைத்த மருத்துவர்களால் அவர்கள் மறைக்கப்படுகிறார்கள்

    ReplyDelete