Pages

Wednesday, August 17, 2011

பொருள் வாங்க கடைக்குப் போறீங்களா?


                                     புத்தம் புதிய செல்போன் ஒன்றை வாங்கினார் ஓர் இளைஞர்.பில் இல்லாமல் வாங்கினால் 500 ரூபாய் குறைவு என்றவுடன் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.சில தின்ங்களிலேயே கடைக்கு வர வேண்டிய நிலை.டிஸ்ப்ளே வரவில்லை.சரி செய்து தருவதாக கூறி கடையில் வாங்கி வைத்துக்கொண்டார்கள்.இளைஞர் நடந்து சலித்தாரே தவிர செல்போன் சரி செய்து தரவில்லை.ஆதங்கத்தில் சத்தம் போட்ட்தற்கு கடை முதலாளி சொன்னார்,உன்னை யாரென்றே எனக்கு தெரியாது.என் கடையில் நீ வாங்கவில்லை,என்னிடம் செல்போனும் தரவில்லை

                                    செல்போனின் மதிப்பு சில ஆயிரங்கள்.ஒரு வழியாக நகரின் முக்கிய மனிதர்களை வைத்து பேசி,மதிப்பு குறைந்த வேறொரு செல்போனை தந்தார்கள்.இது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம்.இப்போது பரவலாக செல்போன்களை பில் இல்லாமல் விற்பதில்லை என்று சொல்கிறார்கள்.ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பொருள் வாங்குவோர் கூட சில நூறுகளுக்காக இம்மாதிரி முறையற்ற செயல்களுக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

                                    எந்தவொரு பொருளுக்கும் ரசீது மட்டுமே ஆதாரம்.மோசடிகளும்,முறையற்ற வணிக நடைமுறைகளும் பெருகி விட்ட இன்றைய சூழலில் இது நல்ல பழக்கமல்ல.பில் இல்லாமல் பொருள் வாங்குவது என்பது திருட்டுப்பொருளுக்கு உள்ள மதிப்புதான்.வாங்கிய பொருளில் பிரச்சினை என்றால் உங்களால் அதை உரிமை கொண்டாட முடியாது.
                                     வாரண்டி,கியாரண்டி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.பழுதை நீக்கித்தருவது,முழுமையாக மாற்றித்தருவதை இது குறிக்கிறது.சேதம் அதிகமாக இருந்தால் நீங்கள் வாங்கிய கடையில் கேட்பதற்கு ஆதாரம் தேவை.பொருளுடன் தரப்படும் அனைத்து ரசீதுகளையும் உரிய காலம் வரை பாதுகாக்கவேண்டும்.வேறு வழியில்லாவிட்டால் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும்.

                                      பணம் கொடுத்து நாம் வாங்கும் பொருளுக்கு அல்லது சேவைக்கு குறை இருந்தால் நீதிமன்றத்தை அணுக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.பேருந்தில் 50 பைசா சில்லறை தராத வழக்கில் நஷ்ட ஈடு பெற்றவர்கள் உண்டு.வங்கி,ரயில்,அரசு நிறுவன்ங்கள் எதுவானாலும் வழக்கு தொடரலாம்.ஆனால் சேவையை இலவசமாக அல்லாமல் பணம் கொடுத்து பெற்றிருக்க வேண்டும்.

                                     சுத்தமில்லாத தியேட்டரால் மன உளைச்சல் அடைந்த்தாக வழக்கு தொடர்ந்தவர்கள் உண்டு.இதற்காக வழக்கறிஞர் தேவையில்லை.நாமே வாதாடலாம்.இப்போது நடக்கும் மோசடிகளுக்கும்,வழக்கு பதிவாவதற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது.விழிப்புணர்வு இல்லாத நிலை ஒரு காரணமென்றால் இன்னொன்று இதற்காக யார் அலைவது என்பது.

                                                                                  விழிப்புணர்வுப் பணிகளை மத்திய மாநில அரசுகளும் ஓரளவு செய்து கொண்டிருக்கின்றன.பள்ளி,கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.நுகர்வோர் அமைப்புகளும் இப்பணியில் ஈடுபடுகின்றன.பாதிக்கப்பட்ட்வர்கள் இக்குழுக்களை அணுகலாம்.யார் அலைவது என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் உதவுவார்கள்.

                                 ஒவ்வொரு மாவட்ட்த்திலும் வட்ட வழங்கல் அலுவலர்,(ரேஷன் கார்டுக்கு போவீங்களே),மாவட்ட வழங்கல் அலுவலர்(District supply officer at collectrate)  ஆகியோரிடம் இந்த குழுக்கள் பற்றிய முகவரி இருக்கிறது.அவர்களிடம் அணுகியும் கிடைக்காதவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

12 comments:

  1. சில்லரைக்கு பதிலாக சாக்லேட் கொடுத்த கடைக்காரர் மீது கேஸ் பொட்டு ஜெயித்தும் இருந்த ஒருவரைப்பற்றி ஒரு நாளிதழில் படித்தேன்... உடனுக்குடன் கிடைக்கும் பலனுக்கே மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர்....பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. @மாய உலகம் said...

    சில்லரைக்கு பதிலாக சாக்லேட் கொடுத்த கடைக்காரர் மீது கேஸ் பொட்டு ஜெயித்தும் இருந்த ஒருவரைப்பற்றி ஒரு நாளிதழில் படித்தேன்... உடனுக்குடன் கிடைக்கும் பலனுக்கே மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர்....பகிர்வுக்கு நன்றி நண்பரே
    உங்களுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. விழிப்புணர்வு தரும் பதிவு.

    தேவைப்பட்டால் நிச்சயம் உங்களதி தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  4. எந்தவொரு பொருளுக்கும் ரசீது மட்டுமே ஆதாரம்./

    பயனுள்ள பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  5. தேவையான விழிப்புணர்வு பதிவு...

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  6. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி..

    ReplyDelete
  7. @சத்ரியன் said...

    விழிப்புணர்வு தரும் பதிவு.

    தேவைப்பட்டால் நிச்சயம் உங்களதி தொடர்பு கொள்கிறேன்.

    thanks sathriyan

    ReplyDelete
  8. @இராஜராஜேஸ்வரி said...

    எந்தவொரு பொருளுக்கும் ரசீது மட்டுமே ஆதாரம்./

    பயனுள்ள பகிர்வு. நன்றி.

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  9. @Priya said...

    நல்ல பதிவு.
    நன்றி,
    கண்ணன்

    தங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  10. @Sankar Gurusamy said...

    தேவையான விழிப்புணர்வு பதிவு...

    பகிர்வுக்கு நன்றி..
    நன்றி சங்கர்.

    ReplyDelete
  11. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி..

    thanks sir

    ReplyDelete
  12. நுகர்வோர் பாதிக்கப்படாது, எப்படித் தம் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது பற்றிய அருமையான ஓர் பதிவினைத் தந்திருக்கீறீங்க.

    ReplyDelete