Pages

Wednesday, August 31, 2011

கொத்தமல்லி உயிரைக் காப்பாற்றும்.


                                இரவு பன்னிரண்டு மணி இருக்கும்.அத்தை வீட்டில் இருக்கிறேன்(தந்தைக்கு மூத்தவர்).வயிற்றை புரட்டியது போல உணர்வு.பேதியாகி விட்ட்து.கொஞ்ச நேரத்தில் வாந்தி.சிறுவயதில் எங்கெங்கோ விற்பதை வாங்கித்தின்பதுதான்.அடிக்கடி பாத்ரூம் போவது தவிர்க்கமுடியாமல் ஆகிவிட்ட்து.

                               தூக்கத்தில் இருந்து அத்தை எழுந்துவிட்டார்.சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.கையில் ஒரு தம்ளரை கொடுத்து குடிக்கச்சொன்னார்.கொத்தமல்லி வாசனை தூக்கலாக இருந்த்து.பிறகு அவரே விளக்கினார்.அந்த பானத்தில் கொஞ்சம் சுக்கும்,பனை வெல்லமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

                               மிக இனிப்பான பானம் அது.அதிக அளவில் தனியா(காய்ந்த கொத்தமல்லி விதைகள்) சேர்க்கப்பட்டிருந்த்து.வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினை சரியாகப் போய்விடும் என்றார்.அரை மணி நேரத்தில் எல்லாமும் சரியாகப்போய் விட்ட்து.வயிற்றுப்போக்கு என்பது சில நேரங்களில் அபாயமான விஷயம்.நீரிழப்பு ஏற்பட்டு விட்டால் உயிர்கூட போய்விடும்.

                                காலையில் மீண்டும் இன்னொரு முறை அதே பானத்தை கொடுத்தார்.அப்புறம் நல்ல பசி.சோர்வோ,இரவின் பாதிப்போ இல்லை.முழுமையாக குணமாகி விட்டிருந்த்து.இதையெல்லாம் பாட்டி வைத்தியம் என்கிறார்கள்.இப்போது அவ்வளவு மதிப்பும் கிடையாது.உடனடியாக மருத்துவமனையை எட்ட முடியாத நள்ளிரவில்,இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க தெரிந்து வைத்திருந்தார்கள்.

                                   நாளிதழ்களில் படித்த செய்தி ஒன்று ஆச்சர்யத்தை தந்த்து.எனக்கு ஏற்பட்ட் ஃபுட் பாய்சனை கொத்தமல்லி விதை குணப்படுத்தும் என்பதை போர்ச்சுக்கல் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.தனியா எண்ணெய்யை கொண்டு செய்த பரிசோதனையில் இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள்.

                                   ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாமல் வளரும் கிருமிகளை(பாக்டீரியாக்கள்) அழிப்பதும் தெரிய வந்திருக்கிறது.உலக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் இது.மாத்திரைகள் சாப்பிடுவீங்களா? உஷார் என்ற பதிவில் இதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.பாக்டீரியாவுக்கு எதிராக இப்போது இருப்பது ஆண்டிபயாடிக்தான்.இதுவும் வேலை செய்யாவிட்டால் சிக்கல்.ஆனால் தனியா எண்ணெய் உதவும் என்கிறது ஆராய்ச்சி.

                                  பாரம்பரிய உணவு முறையில் ஆரோக்கியத்துக்கான அத்தனை அம்சங்களும் இருந்த்து.உதாரணமாக மிளகாய்ப்பொடி தயாரித்தால் தனியா உள்பட ஏராளமான பொருட்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கும்.இப்போது நாம் நிறைய இழந்து விட்டோம்.ஆனால் நாம் இழந்து விட்ட்தை வெளிநாட்டினர் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நமக்கே வேறு வடிவில் அதை தரப்போகிறார்கள்.

                                பலருக்கும் தெரிந்த பாட்டி வைத்தியங்களை பகிர்ந்து கொண்டால் எதிர்காலத்துக்கு உதவும்.நம்மால் முடியாவிட்டால் வெளிநாட்டினரை ஆராய்ச்சி செய்ய கேட்டுக்கொள்ளலாம்.நம்மிடம் இருந்தும் இல்லாமல் இருக்கிறோம்.முயற்சி செய்தால் இந்தியா பல நல்ல விஷயங்களை உலகிற்கு அளிக்கும் என்று தோன்றுகிறது.

30 comments:

  1. அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கொத்தமல்லியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? ஆச்சரியமா இருக்கே!பதிவின் இறுதியில் நீங்க சொல்லியிருக்கிறதும் உண்மையிலும் உண்மை!

    ReplyDelete
  4. கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்....

    ReplyDelete
  5. உண்மை தான் நண்பா... நமது பாரம்பரியத்தின் அருமை மலிவு விலையில் இருக்கும் பொழுதே நமக்கு தெரியாது...அதுவே வெளிநாடு சென்று வரும் பொழுது அது ஒரு அரிய கண்டு பிடிப்பாகவும் விலை அதிகம் கொடுத்து வாங்கும்படியும் அமைந்துவிடும்...பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  6. இந்தியாவில் எவ்வளவோ இருக்கிறது.ஆராய்ச்சிதான் இல்லை.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  7. @ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...

    வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

    வணக்கம்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  8. @ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...

    கொத்தமல்லியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? ஆச்சரியமா இருக்கே!பதிவின் இறுதியில் நீங்க சொல்லியிருக்கிறதும் உண்மையிலும் உண்மை!

    நிறைய யூஸ் பண்ணுங்க சார் நன்றி

    ReplyDelete
  9. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. விநாயகர் சதுர்த்தி விழாவா? வேதனையா?

    www.generationneeds.blogspot.com

    ReplyDelete
  11. நல்ல தகவல்கள்..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  12. நமது முன்னோர்கள் நீண்ட ஆராய்ச்சியின் பயனாக கண்டறிந்தவைகளை இன்று படித்தவர்கள் பலர் ஏளனம் செய்கின்றனர் ...இதைப் பார்த்து அவர்கள் உண்மையை உணரவேண்டும் ..

    ReplyDelete
  13. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  14. உங்களுக்கும், உங்களின் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் பாஸ்.

    ReplyDelete
  15. கொத்தமல்லியின் மகத்துவத்தினை அருமையாக விளக்கிப் பகிர்ந்திருக்கிறீங்க.

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  16. கூட்டுக்குடும்பங்கள் சிதர ஆரம்பித்த பிறகு பெண்களுக்கு இதுபோன்ற வீட்டு வைத்தியமுறைகள் கற்று கொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது..

    நல்ல பகிர்வு.. வாழ்த்துகள் நண்பரே..

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  17. பலருக்கும் தெரிந்த பாட்டி வைத்தியங்களை பகிர்ந்து கொண்டால் எதிர்காலத்துக்கு உதவும்.

    உண்மைதான்.

    உணவே மருந்து!!
    தேவையான பதிவு.

    ReplyDelete
  18. @மாய உலகம் said...

    கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்...

    நன்றி நண்பா!

    ReplyDelete
  19. @மாய உலகம் said...

    உண்மை தான் நண்பா... நமது பாரம்பரியத்தின் அருமை மலிவு விலையில் இருக்கும் பொழுதே நமக்கு தெரியாது...அதுவே வெளிநாடு சென்று வரும் பொழுது அது ஒரு அரிய கண்டு பிடிப்பாகவும் விலை அதிகம் கொடுத்து வாங்கும்படியும் அமைந்துவிடும்...பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பா

    நம்மிடம் போதுமான ஆய்வுகளும் இல்லை.நன்றி நண்பா!

    ReplyDelete
  20. @ராஜன் said...

    good post
    thanks sir

    ReplyDelete
  21. @RAVICHANDRAN said...

    இந்தியாவில் எவ்வளவோ இருக்கிறது.ஆராய்ச்சிதான் இல்லை.நல்ல பகிர்வு.

    thanks sir

    ReplyDelete
  22. @Chitra said...

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  23. @ராஜன் said...

    விநாயகர் சதுர்த்தி விழாவா? வேதனையா?

    www.generationneeds.blogspot.com
    படித்தேன்.குறைகள் நீக்கப்பட வேண்டியது.விழா கொண்டாடப்பட வேண்டியது.

    ReplyDelete
  24. @Sankar Gurusamy said...

    நல்ல தகவல்கள்..

    பகிர்வுக்கு நன்றி..

    நன்றி சங்கர்.

    ReplyDelete
  25. @koodal bala said...

    நமது முன்னோர்கள் நீண்ட ஆராய்ச்சியின் பயனாக கண்டறிந்தவைகளை இன்று படித்தவர்கள் பலர் ஏளனம் செய்கின்றனர் ...இதைப் பார்த்து அவர்கள் உண்மையை உணரவேண்டும் ..
    ஆமாம் சார்.நன்றி.

    ReplyDelete
  26. @koodal bala said...

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !
    thanks sir

    ReplyDelete
  27. @நிரூபன் said...

    கொத்தமல்லியின் மகத்துவத்தினை அருமையாக விளக்கிப் பகிர்ந்திருக்கிறீங்க.

    நன்றி பாஸ்.

    thanks sir

    ReplyDelete
  28. @நிரூபன் said...

    உங்களுக்கும், உங்களின் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் பாஸ்.
    வாழ்த்துக்கு நன்றி நிரூபன்.

    ReplyDelete
  29. @ராஜா MVS said...

    கூட்டுக்குடும்பங்கள் சிதர ஆரம்பித்த பிறகு பெண்களுக்கு இதுபோன்ற வீட்டு வைத்தியமுறைகள் கற்று கொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது..

    நல்ல பகிர்வு.. வாழ்த்துகள் நண்பரே..

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்..


    நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே! நன்றி.

    ReplyDelete