Pages

Monday, September 12, 2011

கண் பட்டுவிடும் என்பது உண்மையா?

                               கண்ணுப்பட போகுதைய்யா சின்னக்கவுண்டரே என்று ஏன் பாட வேண்டும்.கண் பட்டு விடும் என்ற நம்பிக்கை உண்மையா? சுத்திப்போட வேணுமாம்.அப்படி என்னத்தை சுத்திப்போடுவார்கள்? கோயிலில் தலையை சுற்றி தேங்காய் உடைப்பார்கள்.கண் திருஷ்டி கழிந்து விடும் என்பது நம்பிக்கை.

                               குழந்தைகளுக்கு கிராமங்களில் அடிக்கடி சுற்றிப்போடுவது வழக்கம்.பெரும்பாலும் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் இதைச் செய்வார்கள்.மூன்று வீடுகளிலிருந்து கூரையில் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து வருவார்கள்.(இப்போது புல்லால் ஆன கூரைகள் எங்கே இருக்கிறது?).அப்புறம் மிளகாய்,உப்பு எல்லாமும் சேர்த்து திருஷ்டி கழிக்கவேண்டியவரின் தலையை சுற்றுவார்கள்.அடுப்பில் போட்டால் வெடித்துச்சிதறும்.கண் திருஷ்டி கழிந்து விட்ட்து.இதற்கு அர்த்தம் தெரியவில்லை.

                                இதென்ன மூட நம்பிக்கை என்று தோன்றும்.இன்றும் புதுவீடு கட்டினால் பூசணிக்காய்க்கு படம் வரைந்து வீட்டு முன்னால் தொங்க விட்டுவிடுகிறார்கள்.குழந்தைகளை குழிப்பாட்டிய உடன் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பார்கள்.பெரும்பாலும் கண்ணுக்கு வைக்கப்படும் மை இது.புது மண தம்பதிகளுக்கு இப்படி சுற்றிப்போடும் வழக்கம் உண்டு.

                                முன்னோர்கள் ஏற்படுத்திய பலவும் அர்த்தமுள்ளவை.கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மத்த்தில் இதுபற்றி பல விஷயங்களை சொல்லியிருப்பார்.கண் பட்டுவிடும் என்ற நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது பொறாமைதான்.மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் உணர்வு அது.பார்ப்பதற்கு மிக அழகானதும்,புது வீடு போன்ற வளமையை காட்டும் விஷயங்களும் மற்றவர்களின் பொறாமையை தூண்டக்கூடியது.

                                 குழந்தைகளை விட அழகை எங்கே காண முடியும்? பார்ப்பவர்களுக்கு அழகு பொறாமையைத் தூண்டும் என்பதால் கருப்பு மையை கன்னத்தில் வைத்து விடுகிறார்கள்.அந்த மை முழு அழகையும் மறைத்துவிடும் என்பதால்தான்.புது வீட்டுக்கு முன்பு திருஷ்டி படம் வைப்பதும் அப்படியே!புது வீடு மற்றவர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பும் வாய்ப்பு உண்டு.
                                 இத்தகைய வயிற்றெரிச்சலால் என்ன பாதிப்பு வந்து விடப்போகிறது? பாதிப்பு வரும் என்பதால்தான் இந்த ஏற்பாடுகளை செய்கிறார்கள்.சுற்றி உள்ள மற்றவர்களுக்கு ஏற்படும் இந்த உணர்வு அவர்களை நேசிக்க விடாமல் செய்கிறது.சமயத்தில் சிறு உதவி கூட கிடைக்காது.இன்னொருவரை செய்ய விடாமலும் தூண்டும்.

                                 உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இத்தகைய பொறாமை வளர்ந்துவிட்டால் அவர்களுடைய ஒத்துழைப்பை இழக்கநேரும்.தனிமைப் படுத்தப்படுவதற்கு வாய்ப்புண்டு.சிலர் சரியாக பேசக்கூட மாட்டார்கள்.இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு நோய்களுக்கும் ஆளாகலாம்.உறவுகளின் இயல்பு நிலை உடையும்.இதையெல்லாம் தவிர்க்கலாம் என்ற எண்ணம்தான் இந்த நம்பிக்கைகளுக்கு அடிப்படை.

44 comments:

  1. ஒருவரிடமிருந்து வரும் எண்ண அலைகள் மற்றவரின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படுத்துகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையே இந்த கண் திருஷ்டி. Psyco-physics.

    ReplyDelete
  2. பதிவில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் இது போன்ற எண்ண அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது. எலுமிச்சை பழமும் முக்கியமாக பயன்படுத்தபடுகிறது.

    ReplyDelete
  3. @ஒருவரிடமிருந்து வரும் எண்ண அலைகள் மற்றவரின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படுத்துகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையே இந்த கண் திருஷ்டி. Psyco-physics.

    உண்மைதான்.நன்றி

    ReplyDelete
  4. @சாகம்பரி said...

    பதிவில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் இது போன்ற எண்ண அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது. எலுமிச்சை பழமும் முக்கியமாக பயன்படுத்தபடுகிறது.

    ஆமாம்,எலுமிச்சம்பழத்தை விட்டுவிட்டேன்,நன்றி

    ReplyDelete
  5. சாகம்பரி said...
    ஒருவரிடமிருந்து வரும் எண்ண அலைகள் மற்றவரின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படுத்துகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையே இந்த கண் திருஷ்டி. Psyco-physics.//

    இது உண்மை... நான் சொல்ல வந்ததை சகோ சொல்லிவிட்டார்கள்

    ReplyDelete
  6. வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ!

    அருமையான பதிவு சார்! இப்படியான அறிவியல் + சமூகவியல் விளக்கங்களை தரும் பதிவுகளை நான் உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறேன்!

    இந்தப் பதிவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சார்!

    ReplyDelete
  7. சார், உங்களிடம் ஒரு கேள்வி! எனக்காக ஒரு பதிவு போடுவீர்களா?

    அதாவது ஒரு மனிதனது உள்ளத்தில் எழும் ஒரு உணர்வானது ( அது, அழுகையோ, சிரிப்போ, பாலியல் வேட்கையோ, பொறாமையோ, குதூகலமோ? எதுவாக இருந்தாலும் ) அடக்கப்படும் போது, அது என்ன விளைவுகளைத் தரும்?

    அதாவது ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில், நாம் ஒரு உணர்வை அடக்கும் போது என்ன நடக்கும்?

    இதுபற்றி ஒரு பதிவு போடுங்க சார்! ஒண்ணும் அவசரமில்லை!

    ஆல்ரெடி நீங்க போட்டிருந்தா, லிங்க் குடுங்க சார்!

    ReplyDelete
  8. அழகா சொல்லி இருக்கீங்க நன்றி நண்பா!

    ReplyDelete
  9. வரிகளை அலைன்மெண்ட் செய்து அதுக்கு பிறகு வெளியிடுங்க.

    ReplyDelete
  10. திருஷ்டி என்பது பல சமயங்களில் உண்மையாகவே இருந்துள்ளது. அனுபவம் பல விசயங்களை கற்றுக் கொடுத்துள்ளது.

    ReplyDelete
  11. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  12. புது வீட்டுக்கு திருஷ்டி பூசணி வைப்பது தான் இடிக்கிறது, என்ன தான் பெரிய திருஷ்டி பொம்மை வைத்தாலும் அழகா தான் இருக்கு என்று தான் மனம் நினைக்கிறது.. பொறாமை படுபவர்கள் எப்படி நினைப்பார்கள் என்று தெரியவில்லை..

    ReplyDelete
  13. திருஷ்டி என்பது தீய எண்ணங்களின் அலைகளால் ஏற்படும் பாதிப்புகள்தான்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  14. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சும்மாவா சொல்லி வச்சுருப்பாங்க?

    கண் திருஷ்டி உண்மைதான்னு என் அனுபவம் சொல்லுது.

    ஒருத்தர்கண்ணுபோல ஒருத்தர் கண்ணு இருக்காதாம்!

    என் நெருங்கிய சொந்தம்போல இருக்கும் அக்கா ஒருத்தர் எதையாவது பார்த்து ரொம்ப நல்லா இருக்கும்மான்னு சொல்லிட்டால் எண்ணி ஒரே மாசத்தில் அந்தப் பொருளுக்குத் தலைவலி!!!!

    ReplyDelete
  15. வணக்கம் பாஸ்,
    நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் திருஷ்டி கழிப்பு பற்றிய அருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  16. சுத்தி போடுவதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்றே நான் சொல்வேன்

    ReplyDelete
  17. விளக்க பதிவு..

    அருமையான விளக்கம்..

    பார்த்து திருஷ்டி பட்டுடப் போகுது சகோ.

    ReplyDelete
  18. நல்ல விளக்கமாக கூறியுள்ளீர்கள்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  19. இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்குப் பின்னால் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.சில அர்த்தம் இல்லாமலும் இருக்கும்.நல்ல பதிவு.

    ReplyDelete
  20. உளவியல் விளக்கங்கள் அருமை.

    ReplyDelete
  21. மற்றுமொரு பயனுள்ள உளவியல் பதிவு.

    (கிராமத்தில் திருஷ்டி பொட்டு, காய்ந்த வசம்பு கிழங்கின் ஒரு முனையை காமாட்சி விளக்கு தீயில் சுட்டு, சிறு கல்லின் மேல் (கல்-வீட்டில் வைத்திருப்பர்) தாய்ப்பால் சிறிது விட்டு, கிழங்கின் சுட்ட முனையை தேய்த்து - கன்னத்திலும், நெற்றியிலும் வைப்பர்.)

    ReplyDelete
  22. @மாய உலகம் said...

    சாகம்பரி said...
    ஒருவரிடமிருந்து வரும் எண்ண அலைகள் மற்றவரின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படுத்துகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையே இந்த கண் திருஷ்டி. Psyco-physics.//

    இது உண்மை... நான் சொல்ல வந்ததை சகோ சொல்லிவிட்டார்கள்

    நன்றி நண்பா!

    ReplyDelete
  23. @ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

    வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ!

    அருமையான பதிவு சார்! இப்படியான அறிவியல் + சமூகவியல் விளக்கங்களை தரும் பதிவுகளை நான் உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறேன்!

    இந்தப் பதிவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சார்!

    வணக்கம் சார் நன்றி சார்

    ReplyDelete
  24. சார், உங்களிடம் ஒரு கேள்வி! எனக்காக ஒரு பதிவு போடுவீர்களா?

    அதாவது ஒரு மனிதனது உள்ளத்தில் எழும் ஒரு உணர்வானது ( அது, அழுகையோ, சிரிப்போ, பாலியல் வேட்கையோ, பொறாமையோ, குதூகலமோ? எதுவாக இருந்தாலும் ) அடக்கப்படும் போது, அது என்ன விளைவுகளைத் தரும்?

    அதாவது ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில், நாம் ஒரு உணர்வை அடக்கும் போது என்ன நடக்கும்?

    இதுபற்றி ஒரு பதிவு போடுங்க சார்! ஒண்ணும் அவசரமில்லை!

    ஆல்ரெடி நீங்க போட்டிருந்தா, லிங்க் குடுங்க சார்!

    ஒரு பதிவு தந்துடலாம் விடுங்க சார்!

    ReplyDelete
  25. @JOTHIG ஜோதிஜி said...

    வரிகளை அலைன்மெண்ட் செய்து அதுக்கு பிறகு வெளியிடுங்க.

    நன்றி ஜோதிஜி,பதிவு போட்டால் போதும் என்று ஆகி விடுகிறது.இனி சரி செய்து விடலாம்.

    ReplyDelete
  26. @விக்கியுலகம் said...

    அழகா சொல்லி இருக்கீங்க நன்றி நண்பா!

    நன்றி நண்பா!

    ReplyDelete
  27. @JOTHIG ஜோதிஜி said...

    திருஷ்டி என்பது பல சமயங்களில் உண்மையாகவே இருந்துள்ளது. அனுபவம் பல விசயங்களை கற்றுக் கொடுத்துள்ளது.

    ஆமாம் ஜோதிஜி நன்றி

    ReplyDelete
  28. @மாய உலகம் said...

    இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    நன்றி நண்பா! வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  29. @suryajeeva said...

    புது வீட்டுக்கு திருஷ்டி பூசணி வைப்பது தான் இடிக்கிறது, என்ன தான் பெரிய திருஷ்டி பொம்மை வைத்தாலும் அழகா தான் இருக்கு என்று தான் மனம் நினைக்கிறது.. பொறாமை படுபவர்கள் எப்படி நினைப்பார்கள் என்று தெரியவில்லை..

    கொஞ்சமாவது கவனத்தை திசை திருப்பும் என்பதுதான்,நன்றி சார்

    ReplyDelete
  30. ம்ம்ம்...நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இந்த விடயத்தையே பக்கப பிஸ்னஸ் பண்ணவும் பல குழுக்கள் வந்துவிட்டன.

    ReplyDelete
  31. நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொன்றுக்கும் கண்டிப்பாக அர்த்தம் உண்டு.,
    சிலவற்றுக்கு அர்த்தம்(காரணம்) கண்டுபிடிக்க முடியவில்லை, சிலவற்றால் 'தான்' பாதிகப்படுவதால் அவைகளை எல்லாம் தனது புத்திசாளிதனத்தால் மூடநம்பிக்கை என்று மூட்டைக்கட்டி விட்டான்..

    சிலவற்றை இந்த காலத்தில் கடைபிடிக்க முடியாது.. காலம் மாறிவிட்டது.. மாற்றம் தேவைதான்..

    பகிர்வுக்கு வாழ்த்துகள்.. நண்பரே..

    ReplyDelete
  32. அன்புடன் நண்பருக்கு வணக்கம்
    கண் பார்வைக்கு ஒரு சக்தி உண்டு ரஷ்யாவில் ஒரு பெண் குழந்தை தனது கண் பார்வையால் முள்கரண்டி,,, கரண்டிகளை வளைத்தது என செய்தி!!!
    மஹா பாரதத்தில் காந்தாரி தனது கணவன் பார்வை இல்லாதவன் என்பதால் தானும் கண்ணை கட்டி வாழ்ந்தாள் ஒரே ஒருமுறை துரியோதன ஐ
    குழந்தை கோலத்தில் பார்க்க வேண்டும் வரசொல் என கூறி தனது கண்கட்டை அவிழ்த்தாள்... அதுகாலம் அடக்கி வைத்ததால் அவள பார்வை க்கு ஒரு அபாரமான சக்தி இருந்தது ...துரியோதனனின் உடம்பு வஜ்ரா தேகமாக ஆனது.... இடை மட்டும் ஆகவில்லை . ஏன் என்றால் தாய் முன்புகுழந்தை கோலத்தில் வர நாணப்பட்டு இடுப்பில் துண்டுடன் வந்தான் .. இதுவே பீமன் துரியோதன சண்டை இன் போது தொடையல் அடிக்க கண்ணன் குறிப்பு காட்டினான் வீழ்ந்தான் துரியோதணன்.. ஆக அடக்கி வைக்கபட்டா ஒரு உணர்வு... செயலுக்கு....வெளிக்கொண்டு வரும்போது அதற்க்கு ஒரு வலிமை உண்டு .நீங்கள் இட்ட பதிவுக்கு வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  33. @Sankar Gurusamy said...
    திருஷ்டி என்பது தீய எண்ணங்களின் அலைகளால் ஏற்படும் பாதிப்புகள்தான்.

    பகிர்வுக்கு நன்றி..

    நன்றி.சங்கர் குருசாமி.

    ReplyDelete
  34. @துளசி கோபால் said...
    கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சும்மாவா சொல்லி வச்சுருப்பாங்க?

    கண் திருஷ்டி உண்மைதான்னு என் அனுபவம் சொல்லுது.

    ஒருத்தர்கண்ணுபோல ஒருத்தர் கண்ணு இருக்காதாம்!

    என் நெருங்கிய சொந்தம்போல இருக்கும் அக்கா ஒருத்தர் எதையாவது பார்த்து ரொம்ப நல்லா இருக்கும்மான்னு சொல்லிட்டால் எண்ணி ஒரே மாசத்தில் அந்தப் பொருளுக்குத் தலைவலி!!!!

    பலரும் இப்படிப்பட்ட அனுபவத்தை சொல்லி இருக்கிறார்கள்.நன்றி.

    ReplyDelete
  35. @நிரூபன் said...
    வணக்கம் பாஸ்,
    நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் திருஷ்டி கழிப்பு பற்றிய அருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.

    thanks nirupan.

    ReplyDelete
  36. உண்மையில் கண்ணடி பட்டால் வாழ்வு சின்னபின்னம் ஆகும் என்பது நிஜமே!
    அருமை விளக்கங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்!

    ReplyDelete
  37. @Rajeswaran said...
    சுத்தி போடுவதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்றே நான் சொல்வேன்

    அவர்கள் மனது திருப்தி அடையும் அவ்வளவே! நன்றி

    ReplyDelete
  38. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    விளக்க பதிவு..

    அருமையான விளக்கம்..

    பார்த்து திருஷ்டி பட்டுடப் போகுது சகோ

    thanks karun

    ReplyDelete
  39. @மதுரன் said...
    நல்ல விளக்கமாக கூறியுள்ளீர்கள்
    பகிர்வுக்கு நன்றி

    thanks mathuran,

    ReplyDelete
  40. @முனைவர்.இரா.குணசீலன் said...
    உளவியல் விளக்கங்கள் அருமை.

    மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  41. சத்ரியன் said...
    மற்றுமொரு பயனுள்ள உளவியல் பதிவு.

    (கிராமத்தில் திருஷ்டி பொட்டு, காய்ந்த வசம்பு கிழங்கின் ஒரு முனையை காமாட்சி விளக்கு தீயில் சுட்டு, சிறு கல்லின் மேல் (கல்-வீட்டில் வைத்திருப்பர்) தாய்ப்பால் சிறிது விட்டு, கிழங்கின் சுட்ட முனையை தேய்த்து - கன்னத்திலும், நெற்றியிலும் வைப்பர்.)

    உண்மை சத்ரியன் .சட்டென்று நினைவுக்கு வராததால் குறிப்பிடவில்லை.நன்றி.

    ReplyDelete
  42. கண் பட்டுவிட்டால் குழந்தைக்கு நோய் வரும் என்ற அறியாமையினால் ஏற்பட்ட பயத்தினால்தான் திருஷ்டி சுற்றிப் போடுகிறார்கள். பெரியவர்கள் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்று ஒவ்வொரு மூட நம்பிக்கைக்கும் நாமாகவே ஒரு காரணத்தை கற்பனை செய்தால் மூட நம்பிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

    ReplyDelete