Pages

Monday, September 19, 2011

பொய் பேசுபவர்கள் யார்? யார்?


சிலருக்கு வாயைத் திறந்தால் பொய் சாதாரணமாக வரும்.அவர் அப்போதுதான் எனக்கு அறிமுகம்.என் கணவர் பி.இ படித்திருக்கிறார்,ஆனால் அவருக்கு சொந்தமாக தொழில் நட்த்துவதில்தான் ஆர்வம்.எனக்கு பிடிக்கவில்லை.உங்களுக்கு யாரையாவது சாஃப்ட்வேர் கம்பெனியில் இருப்பவரை தெரியுமா? என்று ஒருவர் கேட்டார்.எனக்கு தெரிந்த தம்பி ஒருவருக்கு போன் செய்து கூறினேன்.அவனும் என்னுடைய இ மெயில் முகவரியை கொடுத்து ரெஸ்யூம் அனுப்பச்சொல்லுங்கள் என்றான்.நான் தகவலைச் சொல்லப்போக “அவருக்கு விருப்பமே இல்லை சார்என்று முடித்துக் கொண்டார்.அடுத்த சில தின்ங்களில் தெரிந்த உண்மை அவருடைய கணவர் படிக்கவேயில்லை!

                               உண்மை எப்படியும் தெரியத்தான் போகிறது என்றாலும் பொய் பேசுவதை விடுவதாக இல்லை.தன் கணவர் படிக்காதவர் என்ற மனக்குறையை பொய் பேசுவதன் மூலம் தணித்துக்கொள்கிறாரா? மேலும் மற்றவர்களுக்கு தன் மீதான மதிப்பு அதிகரிக்கும் என்ற நோக்கமும் இதில் உண்டு.அப்புறம் விஷயம் தெரிந்த பிறகு சிரித்து மழுப்பி சமாளிப்பார்கள்.அப்போதைக்கு அவர்களை மதித்துவிட்டால் போதுமானது.

                               குற்றவாளிகள் தவறு செய்து விட்டு இல்லவே இல்லை என்று பொய் கூறுவது சகஜம்.பெரும்பாலான பொய்களும் தன்னை உயர்த்திக் காட்டவே உபயோகப்படுத்துகிறார்கள்.தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் அதிகம் பொய் பேச வாய்ப்புண்டு.மற்றவர்களிடம் ஏதேனும் உதவி பெற விரும்புபவர்கள் பொய்யை அதிகம் கையாள்கிறார்கள்.தன்னை பெருமையாக நினைத்தால் உடனே கோரும் உதவி கிடைத்துவிடும் என்று நம்பிக்கை.

                                                            பொய்களைச் சொல்லி பிறரை நம்ப வைப்பதன் மூலம் புத்திசாலியாக நினைத்துக் கொள்பவ்ர்கள் உண்டு.ஒரு விஷயத்தைப் பற்றி  அதிகம் தெரிந்த்து போல காட்டிக்கொள்வது ஒரு வகை.இவை எல்லாமும் முன்பே சொன்னது போல மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று செய்யப்படும் முயற்சிகள்தான்.

                             காதலில் பொய்கள் உலவுவது சாதாரணம்.காதலன்/காதலி தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக அவிழ்த்து விடுவார்கள்.ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நட்த்த வேண்டும் என்று தவறாக திரிந்துவிட்ட்தாக சொல்கிறார்கள்.ஆயிரம் முறை போய் சொல்லியாவது திருமணம் நட்த்தி வைக்க வேண்டும் என்று இருக்க வாய்ப்பு அதிகம்.
                       
                       காதலிலும் கல்யாணத்திலும் பொய் சொல்லும் கொடூரம் வேறில்லை.இருவரும் காலம் முழுதும் சேர்ந்து வாழ வேண்டிய நிலையில் பொய் சொன்னவர்கள் மீதான நம்பிக்கை உடைந்து போகிறது.நம்பிக்கை போன பின்னால் அந்த உறவில் எஞ்சியிருப்பது எதுவுமில்லை.பலரும் எப்படியாவது நடந்துவிட்டால் பின்னர் சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்று இந்த மோசடியை செய்கிறார்கள். 

                           சகிப்புத்தன்மை குறைந்து போய்விட்ட்து என்பதை விட நவீன பெண்கள் நேர்மையை எதிர்பார்ப்பது அதிகரித்திருக்கிறது.சாதாரண பொய்கள்கூட குடும்ப நல கோர்ட்டில் கொண்டுபோய் நிறுத்துகிறது.பெரும்பாலும் அது நீர்க்குமிழி.எப்போது வேண்டுமானாலும் உடைந்துபோகும்.குற்ற உணர்வைத் தரும் விஷயமும் கூட!உண்மையை உணர்ந்தவர்கள் பொய் பேசுவதில்லை.

28 comments:

  1. @ராஜன் said...

    unga pathivu poyyilla sir unmai.

    நன்றி அய்யா!

    ReplyDelete
  2. @ராஜன் said...

    nallathukkaaga poy sonna thappaa

    நிச்சயமா தப்பில்ல.வள்ளுவர்கூட சொல்லியிருக்காரே!

    ReplyDelete
  3. பெரும்பாலான பொய்களும் தன்னை உயர்த்திக் காட்டவே உபயோகப்படுத்துகிறார்கள்.///உண்மை தான் ...

    ReplyDelete
  4. பொய் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதிட்டீங்க நண்பரே, அவசியமான இடத்தில் பொய் பேசலாம் தவறில்லை ஆனால் பொய்யே வார்த்தைகளாகி விடக்கூடாது..
    பொய்யர்கள் வாழ்வில் தாழ்த்தப்படுகிரார்கள் என கூறி நிற்கும் உங்கள் பதிவு அருமை.

    ReplyDelete
  5. @கந்தசாமி. said...

    பெரும்பாலான பொய்களும் தன்னை உயர்த்திக் காட்டவே உபயோகப்படுத்துகிறார்கள்.///உண்மை தான் ...

    நன்றி கந்தசாமி

    ReplyDelete
  6. @மகேந்திரன் said...

    பொய் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதிட்டீங்க நண்பரே, அவசியமான இடத்தில் பொய் பேசலாம் தவறில்லை ஆனால் பொய்யே வார்த்தைகளாகி விடக்கூடாது..
    பொய்யர்கள் வாழ்வில் தாழ்த்தப்படுகிரார்கள் என கூறி நிற்கும் உங்கள் பதிவு அருமை.

    பொய்யே வார்த்தைகளாக இருப்பவர்கள்தான் பொய்யர்கள்,நன்றி அய்யா!

    ReplyDelete
  7. உண்மையை உணர்ந்தவர்கள் பொய் பேசுவதில்லை.// உண்மை..

    ReplyDelete
  8. என்னவோ போங்க..

    ReplyDelete
  9. பொய் பேசியே அலுவலகத்தில் பெயர் வாங்குபவர்களும், மற்றவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்களும் இன்று அதிகமாக காணப்படுகின்றனர்.

    பகிர்வுக்கு நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  10. புரைதீர்த்த நன்மைபயக்குமெனின் பொய் சொல்லலாம்னு வள்ளுவர் சொல்லிட்டு போயிட்டாரே.

    ReplyDelete
  11. தம்மை உயர்த்திக்காட்டுவதற்கு பயன்படுத்தும் பொய்கள் பலவேளைகளில் மிகப்பெரிய சிக்கலை கொடுத்துவிடுகிறது

    ReplyDelete
  12. அன்பு நண்பரே
    இன்று உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த
    வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.

    இணைப்பு ..

    http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_20.html

    ReplyDelete
  13. பொய்கள் பற்றிய பல உண்மைகளை கூறியிருக்கின்றீர்கள்

    ReplyDelete
  14. உண்மையை சொல்வதில் உள்ள வசதி, நாம் சொன்ன எதையுமே நினைவில் வைத்துக்கொண்டிருக்கத்தேவை இல்லை.

    ReplyDelete
  15. நாம் ஒவ்வொரு முறை பொய்சொல்லும் போதும் நமக்கு ஒரு பல் விழுவதாக இருந்தால்...


    இன்று யாருக்குமே பல் இருக்காது..
    என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது நண்பரே..

    ReplyDelete
  16. பொய்சொல்லிகள் குறித்த எனது பதிவைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

    http://gunathamizh.blogspot.com/2011/06/blog-post_22.html

    ReplyDelete
  17. சில நேரங்களில் பொய் நம்மை காக்கும் எனில் தவறில்லை தான் :-)

    முன்பு படித்த ஒரு கட்டுரை - அதிகமாக பொய் கூறுபவர்களின் பட்டியலில் முதலில் இருப்பது வழக்கறிஞர்கள்

    பொய்யே சொல்லாதவர்கள்- விஞ்ஞானிகள் :-)

    ReplyDelete
  18. உண்மையை நிலைநாட்ட சில சமயம் பொய்யும் தேவைப்படுதே?

    ReplyDelete
  19. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    உண்மையை உணர்ந்தவர்கள் பொய் பேசுவதில்லை.// உண்மை..

    thanks sir

    ReplyDelete
  20. @suryajeeva said...

    என்னவோ போங்க..

    ஏன் சார் சலிச்சுகிறீங்க! நன்றி.

    ReplyDelete
  21. @Sankar Gurusamy said...

    பொய் பேசியே அலுவலகத்தில் பெயர் வாங்குபவர்களும், மற்றவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்களும் இன்று அதிகமாக காணப்படுகின்றனர்.

    பகிர்வுக்கு நன்றி...

    yes sankar ,thanks

    ReplyDelete
  22. @Lakshmi said...

    புரைதீர்த்த நன்மைபயக்குமெனின் பொய் சொல்லலாம்னு வள்ளுவர் சொல்லிட்டு போயிட்டாரே.
    ஆமாம் வள்ளுவர் வாக்கும் முக்கியமே! தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  23. @மதுரன் said...

    தம்மை உயர்த்திக்காட்டுவதற்கு பயன்படுத்தும் பொய்கள் பலவேளைகளில் மிகப்பெரிய சிக்கலை கொடுத்துவிடுகிறது

    உண்மைதான் மதுரன் நன்றி.

    ReplyDelete
  24. @மகேந்திரன் said...

    அன்பு நண்பரே
    இன்று உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த
    வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.

    இணைப்பு ..

    நன்றி நண்பரே! வாக்களித்து கருத்துரை இட்டேன்.

    ReplyDelete
  25. @Jana said...

    பொய்கள் பற்றிய பல உண்மைகளை கூறியிருக்கின்றீர்கள்

    thanks jana!

    ReplyDelete
  26. வணக்கம் அண்ணாச்சி,

    பொய் பேசி, பிறரை நம்பவைத்து நடிப்போரை அறிந்து கொள்வதற்கான அருமையான இடுகையினைத் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete