Pages

Saturday, October 1, 2011

தமிழில் பதிவர்கள் அதிகரிக்க காரணம் தமிழ்மணமா?

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் சில விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது.வாழ்த்து சொல்லி வழி அனுப்புவோம்.தமிழில் புதிது புதிதாக நிறைய பதிவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.இதைப் பற்றி பதிவுலக நண்பர் ஒருவர் சாட்டில் சொன்னது, காரணம் தமிழ்மணம்தான் என்பது அவருடைய வாதமாக இருந்த்து.இது பற்றி பதிவர்கள் கருத்து சொல்ல்லாம்.அவரது கருத்து கீழே!
                                                                   மற்ற திரட்டிகளில் பிரபலமானால்தான் வாசகர்களைப் பெற முடியும்.தமிழ்மணத்தில் இணைத்துவிட்டாலே ஓரளவு வாசகர்கள் வருவார்கள்.பதிவர்களுக்கு ஒரு பதிவு எழுதினோம்,நான்கு பேராவது படித்தார்கள் என்ற நிலையே தொடர்ந்து எழுதும் எண்ணத்தை உருவாக்கும்.தொடர்ந்து பதிவுலகில் இருப்பதும்,அவரைப்பார்த்து நண்பர்கள் உள்ளே வருவதும்தான் அதிக பதிவர்களுக்கு காரணம்.
                              இந்த ரேங்க் சிஸ்டம் ஒருவரது தகுதியை சொல்லிவிடாது என்பதே நிஜம்.அதிகம் எழுதினால் கொஞ்சம் கூடும் அவ்வளவே.அப்படி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்,அதை பிளாக்கில் வைப்போம் என்று வைத்திருக்கிறேன்.இதனாலேயே சிலர் எழுதவில்லை என்று சொல்கிறார்கள்.இருபது இட்த்துக்குள் வந்தால்தான் மதிப்பார்கள் என்பது உண்மையல்ல!
                                ஜனநாயகம் என்று வந்து விட்டாலே அத்தனை பிரச்சினைகளும் வந்து விடுகிறது.அரசியலை சொல்கிறேன்.அவரவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் போலீஸ்,விசாரணை இதெல்லாம் தேவைப்படாது என்பது நிஜம்.திரட்டிகள் பத்திரிகை ஆசிரியர் போல செயல்பட வேண்டுமா,வேண்டாமா என்பது நாம் நடந்து கொள்ளும் வித்த்தில் இருக்கிறது.எடிட் செய்யும் வேலையை திரட்டிகளுக்கு கொடுப்பது நல்லதாக தெரியவில்லை.
                              பதிவர்களுக்கு வெண்மை நிறத்தின் மேல் அப்படி என்ன மோகம் என்று தெரியவில்லை.மாறுகிற அத்தனை பேரும் உஜாலாவுக்கு(கொஞ்சம் பழைய உதாரணம்தான்) மாறிக்கொண்டிருக்கிறார்கள்.டெம்ப்ளேட்கள் வெள்ளையாகிக் கொண்டிருக்கின்றன.நான் ஆரம்பத்தில் பச்சை நிறம் (ராமராஜனை போற்றுவதற்காக ஹிஹி) வைத்திருந்தேன்.அப்புறம் வெகுகாலம் வாட்டர்மார்க் இருந்த்து.மாற்றலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
                               இக்பால் செல்வன் ஒரு நாள் கமெண்டில் சொல்லிவிட்டார்.இந்த டெம்ப்ளேட்டுக்கு மாறினேன்.என்ன ஆச்சர்யம் என் தளத்தின் time on site அதிகரித்த்தை அனுபவத்தில் பார்க்க முடிந்த்து.அதுசரி அப்புறம் எதுக்கு இத்தனை வகை டெம்ப்ளேட்கள்.எப்போதும் வெண்மை விரும்பத்தக்கதாக இருக்கிறது.வெள்ளை நிறத்தைப் பார்த்துதான் அரசியல்வாதிகளிடம் ஏமாந்து விடுகிறார்களா?

62 comments:

  1. இனிய இரவு வணக்கம் அண்ணா,

    நல்லதோர் பதிவு,

    தமிழ்ப் பதிவர்களின் வளர்ச்சியில் தமிழ்மணத்தின் பங்கிற்கு தனிப் பெருமைகள் உண்டு,

    எம் ஒவ்வொருவரின் பதிவுகளும் பல வாசக உள்ளங்களைச் சென்று சேருவதற்கும், பல புதிய வாசகர்களிடம் சென்று சேருவதற்கும் தமிழ்மணம் தான் காரணமாக இருக்கின்றது.

    ஏனைய திரட்டிகளும் சிறப்பான பங்களிப்புக்களையே வழங்குகின்றன.

    ட்ம்பிளேட் தொடர்பில் எனக்கு நம்பிக்கை இல்லை அண்ணா.

    ReplyDelete
  2. தமிழ் மணத்தின் சில விஷயங்கள் புரியவே இல்லை. ஒரு வாரத்தில் 100 கமெண்ட் போட்டும் அது 12தான் கணக்கு காட்டுது .
    அதுப்போலவே பிலாகுக்கு தரும் தர வரிசை ..கமெண்டுகளின் அடிப்படையா.., ஓட்டுகளின் அடிப்படையா..? பதிவு எண்ணிக்கையின் அடிப்படையான்னும் புரிவதில்லை :-)


    டெம்ப்பிளேட்டின் கலர் கண்ணுக்கு கூசாமல் இருப்பதே நல்லது என்பது என் அபிப்பிராயம் :-)

    ReplyDelete
  3. புதிய பதிவர்களின் வருகைக்கு தமிழ் மணம் காரணமாக உள்ளதா என்றால் என்கருத்து இல்லை.. எனக்கெல்லாம் பதிவெழுத தொடக்கி சில மாதங்கள் வரை தமிழ் மணம் என்றாலே என்னவென்று தெரியாது...

    மற்றையது வெள்ளைக்கு என்றுமே ஒரு தனி இடம் தான் :-)

    ReplyDelete
  4. அதிக பதிவர்களின் வருகைக்கு தமிழ்மணம் மட்டும்தான் காரணமில்லை. தமிழ்மணமும் ஒரு காரண்ம்.

    ReplyDelete
  5. வெண்மைக்கு பின்னும் ஆப்பிருக்கோ!

    தமிழ்மணமும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

    ReplyDelete
  6. தமிழ் மணம் ஒரு முக்கிய காரணிதான் நண்பா

    ReplyDelete
  7. தமிழ்மணமும் ஒரு காரணம்....அதே நேரத்தில் இந்த ரேங்க் விஷயத்தால் பதிவர்களிடம் முரண்(!) அதிகமாகி இருப்பதையும் காண வேண்டி இருக்கிறது நண்பா!

    ReplyDelete
  8. அமாம் நேன்ன்கள் சொல்லும் காரணமும் ஒரு காரணாமாக இருக்கலாம்..

    ReplyDelete
  9. வணக்கம்! தாங்கள் சொன்ன கருத்து உண்மைதான்.முதன் முதலில் ”தமிழ் மணம்” கண்டவுடன் அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டதோடு,நாமும் இதுபோல் எப்போது எழுதுவோம் என்ற உணர்வுதான் வெளிப்பட்டது.மேலும் தமிழில் எழுதலாம் வாருங்கள் என்று அழைத்ததும்,வழி முறைகளைச் சொன்னதும் தமிழ் மணம்தான்.வாழ்க தமிழ் மணம்!

    ReplyDelete
  10. நான் பதிவு எழுத வந்து ஒரு வருடம் கழித்தே திரட்டி என்று ஒன்று உள்ளது என்பதே தெரியும்... முதலில் இன்ட்லி, பிறகு தமிழ்மணம் என்று இணைந்தேன்... என்னை போல் சுயமாக எந்த உதவியும் இல்லாமல் எழுத வருபவர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை...
    ஏற்கனவே உங்கள் பழைய பதிவில் குறிப்பிட்டதே, இறந்த பிறகும் வாழ வேண்டும் என்ற ஆசை[தெரிந்தோ தெரியாமலோ] நாலு பேரிடம் தன பெயர் நிலைக்க வேண்டும் என்ற கவலை வலைபதிவை அரங்கேறுகிறது...
    என் ஒரே சந்தேகம் என்ன என்றால் ஒரு வேளை நான் இறந்து விட்டால் என் வலைப்பூவை படிக்க வருபவர்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள் என்பதே?

    ReplyDelete
  11. உண்மைதான். தமிழ் பதிவர்களின் வளர்ச்சியில் தமிழ்மணமும் செல்வாக்கு செலுத்துகிறது

    ReplyDelete
  12. நூற்றுக்கு நூறு உண்மை! தமிழ்மணம் இல்லையென்றால் ஆரம்பத்தில் எனது கால்நடை மருத்துவர் பக்கம் வெளியில் தெரிந்திருக்காது! ஆனால் அதிக அளவில் எனது தளத்திற்கு தமிழ் வேலி மற்றும் தமிழ் மணத்திலிருந்துதான் வருகிறார்கள்!!

    ReplyDelete
  13. எனது பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை.

    ReplyDelete
  14. //டெம்ப்ளேட்கள் வெள்ளையாகிக் கொண்டிருக்கின்றன.//
    ஒரு வருஷத்துக்கு முன்னாடி தத்துபித்துவம் ப்ளாக்ல என்ன டெம்ப்ளேட் கலர் வைக்கலாம்னு யோசனை கேட்ட போது அனைவரின் டிப்ஸும் வெள்ளை கலர் டெம்ப்ளேட் தான். ஆனா அப்போதைக்கு எனக்கு வலையனுபவம் இல்லாததால் மாற்ற தோணவில்லை. மொபைலில் இருந்து பார்க்கும் போது (பழைய டெம்ளேட் கலரில்) கலரிட்ட எழுத்துக்கள் கண்ணை பறித்து வெறுப்பை ஏற்படுத்தின. அப்போது தான் அதன் அவசியம் உணர்ந்து வைத்தேன். இது போல் தான் எல்லாரும் உஜாலாவுக்கு மாறிட்டாங்கன்னு நெனைக்கிறேன்..... :-)

    மிச்ச கருத்துக்கள் நேரமிருக்கும் போது வந்து பதிவிடுகிறேன்

    ReplyDelete
  15. அண்ணே! நீங்க சொல்றது முற்றிலும் உண்மை! தமிழ்மணம் தனித்துவமானது!

    ReplyDelete
  16. @நிரூபன் said...

    இனிய இரவு வணக்கம் அண்ணா,

    நல்லதோர் பதிவு,

    தமிழ்ப் பதிவர்களின் வளர்ச்சியில் தமிழ்மணத்தின் பங்கிற்கு தனிப் பெருமைகள் உண்டு,

    எம் ஒவ்வொருவரின் பதிவுகளும் பல வாசக உள்ளங்களைச் சென்று சேருவதற்கும், பல புதிய வாசகர்களிடம் சென்று சேருவதற்கும் தமிழ்மணம் தான் காரணமாக இருக்கின்றது.

    ஏனைய திரட்டிகளும் சிறப்பான பங்களிப்புக்களையே வழங்குகின்றன.

    ட்ம்பிளேட் தொடர்பில் எனக்கு நம்பிக்கை இல்லை அண்ணா.

    நன்றி சகோ! டெம்ப்ளேட் விஷயம் என் அனுபவம்.நன்றி.

    ReplyDelete
  17. @ஜெய்லானி said...

    தமிழ் மணத்தின் சில விஷயங்கள் புரியவே இல்லை. ஒரு வாரத்தில் 100 கமெண்ட் போட்டும் அது 12தான் கணக்கு காட்டுது .
    அதுப்போலவே பிலாகுக்கு தரும் தர வரிசை ..கமெண்டுகளின் அடிப்படையா.., ஓட்டுகளின் அடிப்படையா..? பதிவு எண்ணிக்கையின் அடிப்படையான்னும் புரிவதில்லை :-)


    டெம்ப்பிளேட்டின் கலர் கண்ணுக்கு கூசாமல் இருப்பதே நல்லது என்பது என் அபிப்பிராயம் :-)

    தரவரிசை என்பது ஹிட்ஸ்,ஓட்டு,கமென்ட் மூன்றையும் அடிப்படையாக வைத்திருக்கிறார்கள்.நன்றி.

    ReplyDelete
  18. @கந்தசாமி. said...

    புதிய பதிவர்களின் வருகைக்கு தமிழ் மணம் காரணமாக உள்ளதா என்றால் என்கருத்து இல்லை.. எனக்கெல்லாம் பதிவெழுத தொடக்கி சில மாதங்கள் வரை தமிழ் மணம் என்றாலே என்னவென்று தெரியாது...

    மற்றையது வெள்ளைக்கு என்றுமே ஒரு தனி இடம் தான் :-)

    நானும் தமிழ்மணத்தில் லேட்டாகத்தான் இணைத்தேன்.ஆனால் பதிவு போட்டு இரண்டு மணி நேரத்தில் தமிழ்மணம் மூலம்தான் அதிகம் வருவதை நீங்கள் பார்க்க முடியும்,நன்றி.

    ReplyDelete
  19. @அம்பலத்தார் said...

    அதிக பதிவர்களின் வருகைக்கு தமிழ்மணம் மட்டும்தான் காரணமில்லை. தமிழ்மணமும் ஒரு காரண்ம்.

    மற்ற திரட்டிகளில் பிரபலமாக வேண்டும்.குறிப்பிட்ட அளவு ஓட்டு வாங்கவேண்டும்.நன்றி.

    ReplyDelete
  20. @சத்ரியன் said...

    வெண்மைக்கு பின்னும் ஆப்பிருக்கோ!

    தமிழ்மணமும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

    நன்றி.சத்ரியன்.

    ReplyDelete
  21. @மாய உலகம் said...

    தமிழ் மணம் ஒரு முக்கிய காரணிதான் நண்பா
    நன்றி நண்பா!

    ReplyDelete
  22. இந்த அரசியல்(தமிழ்மணம்) எனக்குப் பிடிக்கவில்லை!

    ReplyDelete
  23. @விக்கியுலகம் said...

    தமிழ்மணமும் ஒரு காரணம்....அதே நேரத்தில் இந்த ரேங்க் விஷயத்தால் பதிவர்களிடம் முரண்(!) அதிகமாகி இருப்பதையும் காண வேண்டி இருக்கிறது நண்பா!

    ஆமாம் நண்பா!போட்டிக்குப் பதில் பொறாமை அதிகமாகி விட்டது.நன்றி.

    ReplyDelete
  24. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    அமாம் நேன்ன்கள் சொல்லும் காரணமும் ஒரு காரணாமாக இருக்கலாம்..

    புரியலையே வாத்யாரே! நன்றி

    ReplyDelete
  25. @தி.தமிழ் இளங்கோ said...

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

    ReplyDelete
  26. @suryajeeva said...

    search மூலம் தேடும்போது தெரிந்து கொள்வார்கள்.நன்றி.

    ReplyDelete
  27. @மதுரன் said...

    உண்மைதான். தமிழ் பதிவர்களின் வளர்ச்சியில் தமிழ்மணமும் செல்வாக்கு செலுத்துகிறது
    thanks mathuran.

    ReplyDelete
  28. @Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc; said...

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  29. @இராஜராஜேஸ்வரி said...

    எனது பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை

    தமிழ்மணத்திடம் கேட்டிருக்கலாமே! நன்றி.

    ReplyDelete
  30. @ஆமினா said...

    ஆமாம்,டெம்ப்ளேட் விஷயம் உண்மைதான்.நன்றி.

    ReplyDelete
  31. @Powder Star - Dr. ஐடியாமணி said...

    அண்ணே! நீங்க சொல்றது முற்றிலும் உண்மை! தமிழ்மணம் தனித்துவமானது!

    thanks brother.

    ReplyDelete
  32. @Yoga.s.FR said...

    இந்த அரசியல்(தமிழ்மணம்) எனக்குப் பிடிக்கவில்லை!

    சரியாக புரியவில்லை.நன்றி.

    ReplyDelete
  33. நல்ல பதிவு.
    எந்தெந்த திரட்டிகளில் இணைக்கலாம்? தமிழ் மனத்தில் ஒவ்வொரு பதிவும் இணைக்க வேண்டுமா? பதிவுலகம் பற்றிய விபரங்களை யாராவது தொடர் பதிவாக எழுதினால் நன்றாக இருக்கும் அல்லது தனி புத்தகமாக போடலாம். அல்லது ஒரு சந்திப்பு ஏற்படுத்தி யாராவது விளக்கம் கொடுக்கலாம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. தமிழ்மணம் வழங்கும்..

    விருதுகள்
    இந்தவார நட்சத்திரம்
    அதிக வாக்குபெற்ற இடுகைக
    மறுமொழிகள்

    என ஒவ்வொன்றும் தமிழ் வலைப்பதிவர்கள் தொடர்ந்து இயங்கவும், புதிய பதிவர்கள் வரவும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை..

    ReplyDelete
  35. கண்டிப்பாக தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம்தான்...நண்பா...

    ReplyDelete
  36. ஆரம்ப காலத்தில் பதிவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தமிழ்மணம்தான் ஆரம்பக் காரணம். தற்போது தமிழ்மணமும் ஒருகாரணம். வருகை என்று பார்த்தால் தமிழ்மணத்தைவிட இண்ட்லி வழியாக வருபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது என்பதே நடைமுறை உண்மை.

    ReplyDelete
  37. இன்ட்லி, தமிழ்10ல் இணைத்துவிட்டேன் நண்பரே...

    ReplyDelete
  38. @புதுகை.அப்துல்லா said...

    ஆரம்ப காலத்தில் பதிவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தமிழ்மணம்தான் ஆரம்பக் காரணம். தற்போது தமிழ்மணமும் ஒருகாரணம். வருகை என்று பார்த்தால் தமிழ்மணத்தைவிட இண்ட்லி வழியாக வருபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது என்பதே நடைமுறை உண்மை.

    எனக்கும் இதுவரை இன்ட்லியில் இருந்துதான் அதிக வருகை.ஆனால் பிரபலமாக வேண்டும்.நன்றி.

    ReplyDelete
  39. நீங்கள் சொல்வது நியாயமான கருத்துக்கள்தான். ஆனால் தமிழ்மணம் பதிவர்களிடம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அபரிமிதமானது. ஓட்டுக்கள், ஹிட்சை வைத்து செய்யப்படும் ரேங்கிங் மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்....!

    ReplyDelete
  40. @Rathnavel said...

    நல்ல பதிவு.
    எந்தெந்த திரட்டிகளில் இணைக்கலாம்? தமிழ் மனத்தில் ஒவ்வொரு பதிவும் இணைக்க வேண்டுமா? பதிவுலகம் பற்றிய விபரங்களை யாராவது தொடர் பதிவாக எழுதினால் நன்றாக இருக்கும் அல்லது தனி புத்தகமாக போடலாம். அல்லது ஒரு சந்திப்பு ஏற்படுத்தி யாராவது விளக்கம் கொடுக்கலாம்.
    வாழ்த்துக்கள்.

    உண்மைதான் அய்யா! விரைவில் உங்களுடைய குறையை தீர்ப்பார்கள்.நன்றி.

    ReplyDelete
  41. @முனைவர்.இரா.குணசீலன் said...

    தமிழ்மணம் வழங்கும்..

    ஆமாம் அய்யா! நன்றி.

    ReplyDelete
  42. @ராஜா MVS said...

    இன்ட்லி, தமிழ்10ல் இணைத்துவிட்டேன் நண்பரே..

    குறிப்பிட்ட திரட்டி பற்றிய விஷயம் என்பதால் இணைக்கவில்லை.அது சரி தமிழ்மணத்தில் மட்டுமே நண்பர்களும் இணைக்கலாம்.நன்றி.

    ReplyDelete
  43. @ராஜா MVS said...

    கண்டிப்பாக தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம்தான்...நண்பா...

    நன்றி நண்பா!

    ReplyDelete
  44. @பன்னிக்குட்டி ராம்சாமி said...

    நீங்கள் சொல்வது நியாயமான கருத்துக்கள்தான். ஆனால் தமிழ்மணம் பதிவர்களிடம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அபரிமிதமானது. ஓட்டுக்கள், ஹிட்சை வைத்து செய்யப்படும் ரேங்கிங் மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்....!

    ஆமாம்.அதையும் சொல்லியிருக்கிறேனே! போட்டியை ஏற்படுத்த நினைத்தார்களோ என்னவோ பொறாமையை வளர்க்கிற மாதிரி ஆகி விட்டது.ரேங்க் பற்றி யாரும் பெரிதாக நினைக்கத்தேவையில்லை என்பது என் கருத்து.நன்றி.

    ReplyDelete
  45. shanmugavel said...

    @Yoga.s.FR said...

    இந்த அரசியல்(தமிழ்மணம்) எனக்குப் பிடிக்கவில்லை!

    சரியாக புரியவில்லை.நன்றி.///பன்னிக்குட்டி ராமசாமி கமெண்ட் பார்க்கவும்!

    ReplyDelete
  46. நாங்கள் முதலில் தமிழிஷ் (இன்டலி) மற்றும் தமிழ் 10 இரண்டிலும் இருந்தோம். சில பிரச்னைகள் வந்ததால் தமிழ் 10 நாங்களே எடுத்தோம். இப்போது இன்டலி தானே வருவதில்லை! தமிழ்மணத்தில் இணைப்பது, ஓட்டுப் பட்டிப் பெறுவது எப்போதுமே எங்களுக்கு வராது!!! ஸோ 'எங்களு'க்கு நோ வோட்டு! டெம்ப்ளேட் மாற்றத்தால் அதிக வாசகர்கள் ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
  47. நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே.. புதிதாக பிளாக் தொடங்கும் நிறைய பேருக்கு தமிழ்மணம் என்றால் என்ன அதில் ஏன் நம்முடைய பதிவுகளை இணைக்க வேண்டும் என்றே தெரிவதில்லை... ஆகவே புதிய பதிவர்கள் உருவாக தமிழ்மணம் மட்டுமல்ல எந்த திரட்டியும் காரணமாக இருக்க வாய்ப்பு குறைவு என்றே எனக்கு தோன்றுகிறது...இது என்னுடைய சொந்த கருத்து மட்டும் தான்...

    ReplyDelete
  48. இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் தமிழ்மணத்தின் ரேங்க் வெளியிடுவது அவ்வளவு அவசியமுமில்லை... இதில் இடம்பிடிக்கவே பல காப்பி பேஸ்ட் நிகழ்கிறது...

    ReplyDelete
  49. வேகமாக திறக்கும்..வாசகர்கள் படிப்பதற்கு கண்கள் கூசாமல் இருக்கும் போன்ற காரணங்களால் தான் அனைவரும் உஜாலாவுக்கு சாரி வெள்ளைக்கு மாறிடுறாங்க...

    ReplyDelete
  50. நல்ல பதிவு தான்

    தமிழ்மனத்துல பதிவுகளை இனைச்சாலும் அது இனையமாட்டேங்குது

    submit to tamilmanam என்றே வருகிறது.

    ReplyDelete
  51. @Yoga.s.FR said...

    shanmugavel said...

    @Yoga.s.FR said...

    இந்த அரசியல்(தமிழ்மணம்) எனக்குப் பிடிக்கவில்லை!

    சரியாக புரியவில்லை.நன்றி.///பன்னிக்குட்டி ராமசாமி கமெண்ட் பார்க்கவும்!

    அவருக்கு பதில் தந்ததையும் படிக்கவும்.இந்த அரசியலால் நானும் அதிகம் பாதிக்கப்பட்டேன் என்பது மிகச்சிலருக்கு தெரியும்.நன்றி.

    ReplyDelete
  52. ஸ்ரீராம். said...

    நாங்கள் முதலில் தமிழிஷ் (இன்டலி) மற்றும் தமிழ் 10 இரண்டிலும் இருந்தோம். சில பிரச்னைகள் வந்ததால் தமிழ் 10 நாங்களே எடுத்தோம். இப்போது இன்டலி தானே வருவதில்லை! தமிழ்மணத்தில் இணைப்பது, ஓட்டுப் பட்டிப் பெறுவது எப்போதுமே எங்களுக்கு வராது!!! ஸோ 'எங்களு'க்கு நோ வோட்டு! டெம்ப்ளேட் மாற்றத்தால் அதிக வாசகர்கள் ஆச்சர்யம்தான்.

    interesting.thanks sir

    ReplyDelete
  53. ////கந்தசாமி. said...
    புதிய பதிவர்களின் வருகைக்கு தமிழ் மணம் காரணமாக உள்ளதா என்றால் என்கருத்து இல்லை.. எனக்கெல்லாம் பதிவெழுத தொடக்கி சில மாதங்கள் வரை தமிழ் மணம் என்றாலே என்னவென்று தெரியாது...
    /////

    இக்கருத்தில் நானும் ஒத்துப் போகிறேன்... பதிவெழுத வந்து 3 மாத்தின் பின்னர் தான் நான் வாக்குப்பட்டையை இணைத்தேன் தெரியுமா? (முழுத் திரட்டிகளதும்)

    ReplyDelete
  54. @சசிகுமார் said...

    நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே.. புதிதாக பிளாக் தொடங்கும் நிறைய பேருக்கு தமிழ்மணம் என்றால் என்ன அதில் ஏன் நம்முடைய பதிவுகளை இணைக்க வேண்டும் என்றே தெரிவதில்லை... ஆகவே புதிய பதிவர்கள் உருவாக தமிழ்மணம் மட்டுமல்ல எந்த திரட்டியும் காரணமாக இருக்க வாய்ப்பு குறைவு என்றே எனக்கு தோன்றுகிறது...இது என்னுடைய சொந்த கருத்து மட்டும் தான்...

    பதிவெழுத ஒருவர் வருவது எப்படி? நான் தமிழ் 10 மூலமாக வந்தேன்.திரட்டி மூலமாகவோ,நண்பர்கள் மூலமாகவோதானே ஒருவர் உள்ளே நுழைய முடியும்.இல்லாவிட்டால் பத்திரிக்கை செய்தி.யாரையாவது பார்த்துத் தானே நாமும் இதை செய்யலாம் என்று தோன்றும்.சாப்ட்வேர் கம்பெனி பிளாக் இருக்கிறது.நான் சொல்வது பதிவர்கள் அதிகரிக்க என்பது.ஒருவர் பதிவுலகில் நீடித்திருக்க தமிழ்மணம் முக்கிய காரணம்.ஏற்கனவே சொல்லிவிட்டேன்.மற்ற திரட்டிகளில் பிரபலமாக வேண்டும்.தமிழ்மணத்தில் ஒரே பக்கத்தில் பிரபலமானவை,பரிந்துரை,புதியதாக வந்தவை எல்லாம் கிடைத்து விடுகிறது.நன்றி.தவிர உங்கள் விஷயம் வேறு.தொழில் நுட்ப பதிவுகளுக்கு எல்லா இடத்திலிருந்தும் வாசகர்கள் வருவார்கள்.மேலே பலர் சொல்லியிருப்பதை பாருங்கள்.என்னுடைய கருத்தை பலர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.நன்றி.

    ReplyDelete
  55. தமிழ்மணமும் ஒரு காரணம் என்பதே என் கருத்து. ஏனென்றால் பதிவை பார்த்துத பதிவெழுத வருபவர்களே அதிகம் தமிழ் மணத்தைப் பார்த்து எழுத வருவது குறைவு என நினைக்கிறேன்.

    ஆனால் இருக்கும் திரட்டிகளுக்குள் தமிழ்மணத்தின் பங்கு மிக மிக அதிகமானது..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

    ReplyDelete
  56. @சசிகுமார் said...

    இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் தமிழ்மணத்தின் ரேங்க் வெளியிடுவது அவ்வளவு அவசியமுமில்லை... இதில் இடம்பிடிக்கவே பல காப்பி பேஸ்ட் நிகழ்கிறது...

    ஆமாம்.இக்கருத்து எனக்கும் உடன்பாடே!

    ReplyDelete
  57. @சசிகுமார் said...

    வேகமாக திறக்கும்..வாசகர்கள் படிப்பதற்கு கண்கள் கூசாமல் இருக்கும் போன்ற காரணங்களால் தான் அனைவரும் உஜாலாவுக்கு சாரி வெள்ளைக்கு மாறிடுறாங்க...

    ஆமாம்.கண்கள் கூசாமல் இருப்பது time on site அதிகரிக்கக் காரணம்தானே!

    ReplyDelete
  58. @வைரை சதிஷ் said...

    நல்ல பதிவு தான்

    தமிழ்மனத்துல பதிவுகளை இனைச்சாலும் அது இனையமாட்டேங்குது

    submit to tamilmanam என்றே வருகிறது.

    குறையை சீர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.நன்றி.

    ReplyDelete
  59. @♔ம.தி.சுதா♔ said...

    ////கந்தசாமி. said...
    புதிய பதிவர்களின் வருகைக்கு தமிழ் மணம் காரணமாக உள்ளதா என்றால் என்கருத்து இல்லை.. எனக்கெல்லாம் பதிவெழுத தொடக்கி சில மாதங்கள் வரை தமிழ் மணம் என்றாலே என்னவென்று தெரியாது...
    /////

    இக்கருத்தில் நானும் ஒத்துப் போகிறேன்... பதிவெழுத வந்து 3 மாத்தின் பின்னர் தான் நான் வாக்குப்பட்டையை இணைத்தேன் தெரியுமா? (முழுத் திரட்டிகளதும்)

    நானும் தாமதமாகவே இணைத்தேன்.ஆனால் தொடர்ந்தது பதிவெழுத வைத்ததில் தமிழ்மணத்திற்கு முக்கிய பங்குண்டு.என்னைப் பார்த்து இரண்டு பேர் பதிவுலகம் வந்தார்கள்.நன்றி.

    ReplyDelete
  60. @♔ம.தி.சுதா♔ said...

    தமிழ்மணமும் ஒரு காரணம் என்பதே என் கருத்து. ஏனென்றால் பதிவை பார்த்துத பதிவெழுத வருபவர்களே அதிகம் தமிழ் மணத்தைப் பார்த்து எழுத வருவது குறைவு என நினைக்கிறேன்.

    ஆனால் இருக்கும் திரட்டிகளுக்குள் தமிழ்மணத்தின் பங்கு மிக மிக அதிகமானது..

    ஆமாம் .தமிழ்மணம் இல்லாவிட்டால் பல பதிவர்கள் சில இடுகைகளிலேயே கடையை மூடி விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  61. எனக்கும் கூட இந்த திரட்டிகள் பற்றி சரியா எதுமே புரியல்லே. ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க திரட்டி எல்லாம் இணைங்கன்னு எப்படின்னும் சொன்னாங்க. நானும் இணைச்சிருக்கேன். அதனால என்ன யூஸ் எல்லாம் ஒன்னும் புரியல்லே.

    ReplyDelete
  62. enakkum thamilmanamththilirunthuthaan athiga vaasagargal.

    ReplyDelete