Pages

Tuesday, October 18, 2011

நிரூபனின் இன்னொரு பக்கம்.

                              பதிவை வெளியிட்டாரோ இல்லையோ மளமளவென்று ஓட்டு விழுகிறது.கருத்துரைகளும் அப்படியே!தொடர்ந்து மகுடம் பெற்று வியக்க வைத்தவர்.பேஸ்புக்கில் அதிக அளவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.எப்படி இவருக்கு மட்டும் முடிகிறது? அவர் நிறைய பேருக்கு ஓட்டு போடுகிறார்.அதனாலா? ஆனால் அது மட்டும் உண்மையல்ல
                            குழு அமைத்து ஓட்டு போடுவது பற்றிய அவரது பதிவுதான் நான் முதன்முதலில் படித்த பதிவு.இப்போது அவர் மீதே அந்த குற்றச்சாட்டு விழுந்த்து வேடிக்கையான விஷயம்.பிரௌசிங் செண்டரில் இருந்து படித்த்தால் கருத்துரை இடவில்லை.பின் தொடரவும் இல்லை.                                 ஆரம்பத்தில் காத்திரமாக பல பதிவுகளையும் எழுதியவர்.அதிகம் வெளித்தெரியவில்லை.


                              நல்ல இடுகைகளுக்கும் பாலியல் சம்பந்தமாக தலைப்புகள் வந்து பிய்த்துக்கொண்டு போனது.தொடர்ந்து தினமும் பதிவிடும்போது அனைத்தும் சிறப்பாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது.சில நேரங்களில் விளையாட்டாகவும் இயங்கினார்.இக்பால்செல்வன்,நிரூபன்,நீங்களுமா? என்று கருத்துரையிட்ட்து நினைவுக்கு வருகிறது.
                                 என்னை தன்னுடைய தளத்தில் அறிமுகப்படுத்துகிறேன் என்றபோது அவசியம் என்பதாக எனக்கு தோன்றவில்லை.250 பதிவுக்கு மேல் ஆகிவிட்ட்து.இண்ட்லி,தமிழ்மணம்,தமிழ்வெளி,தமிழ்10 என்று திரட்டிகளில் பல பதிவுகள் அதிக ஹிட்ஸும் வாங்கி விட்ட்து.என் நம்பிக்கை தவறு என்பது பிறகு தெரிந்த்து.தூங்கி எழுந்து பார்த்தபோது நிரூபன் தளத்தில் பார்த்து வந்தேன் என்று கமெண்ட் விழுந்திருந்த்து.நாற்று மூலம் எனக்கு வாசகர்களும் கிடைத்தார்கள்.இணையவெளி மிகப்பெரியது,அளவிட முடியாதது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

                                 பதிவுலகில் பல பதிவர்களுடனும் நெருக்கமான உறவுகளை பேணி வருபவர் நிரூபன்.தொழில்நுட்பம் குறித்து பலருக்கும் உதவுபவர்.நேற்று பதிவுலகில் இருந்து விலகிக்கொள்வதாக எழுதியிருந்த்தை படிக்க சங்கடமாக இருந்த்து.ஆனால் அவரால் அப்படியெல்லாம் முடியாது என்பது எனக்குத் தெரியும்.இயல்பாகவே நிரூபனிடம் தகுதிகள் இருக்கின்றன.நிரூபன்,நீங்களுமா? என்ற கேள்வியில் அவரது தகுதியும் மறைந்திருக்கிறது.அவரால் எழுதாமலிருக்க முடியாது.
                                 அன்பு என்ற சொல் சில நேரங்களில் நடிப்பாக,பொய்யாக திரிந்து ஏமாற்றத்தை தரும் விஷயமாக இருக்கிறது.இக்பால் செல்வன் இப்போதைக்கு எழுத முடியாது என்று விளக்கம் கொடுத்து நிறுத்திக் கொண்டார்.பதிவுக்காக உழைத்து தேடிதேடி பதிவெழுதியவர்.பதிவுலகில் இப்படி எழுதுபவர்கள் மிகச்சிலர்.வெகு நாட்கள் இக்பால் செல்வன் ஒரு பதிவெழுதியபோது நிரூபன் கருத்துரை இட்டார்.சகோ! உங்களுக்கு மெயில் அனுப்பினேனே நீங்கள் பதில் தரவில்லை”.

                                  தனக்கு வந்து ஓட்டும் கமெண்டும் போட வேண்டும் என்பதற்காக அனுப்பிய மின்ன்ஞ்சல் அல்ல அது! பிரதி பலன் எதிர்பாராத அன்பு.இன்றைய பதிவர்கள் பலருக்கும் நிரூபனின் உணர்வுகள் தெரியும்.நிரூபனின் வெற்றி ரகசியம் இதுதான்.

40 comments:

  1. என்னையும் அவர் எனது ஆரம்ப காலங்களில் இருந்தே ஊக்கப்படுத்தி வருகிறார்.

    நிரூபன் எழுதாமல் இருப்பது பதிவுலகிற்கு,நமக்கு இழப்புதான்!
    அவர் என்னையும் ஒரு பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    என்னால் நம்பவே முடியவில்லை அதற்க்கு பிறகு நாற்று தளத்தில் இருந்து எனது தளத்திற்கு வந்த page views கள் கிட்டத்தட்ட முன்னூறு!

    நிச்சயம் அவரது உணர்வுகள் அனைவருக்கும் புரியும்!
    நிச்சயம் அவரால் எழுதாமல் இருக்க முடியாது!(கூடாது)

    ReplyDelete
  2. நிரூவை என் தம்பி என அழைப்பதில் ரொம்பவே பெருமைபடுகிறேன்

    அவரின் வெற்றிக்கு பின்னால் வெறும் ஹிட்ஸ் மட்டும் அல்ல அன்பும் அடங்கியிருப்பதை பழகிய சில நாட்கள், சில தருணங்கள், சில நிமிடங்களில் தெரிந்துக்கொண்டேன்.

    என்னை கவர்ந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்

    ReplyDelete
  3. நிரூபன் பதிவுலகில் தன்னலம் கருதாத கர்மவீரன் நான் கூட உங்கள் தளம் வர அவரின் அறிமுகம் தான் காரணம் ஐயா.
    சில கடமைகள் வரும் போது கொஞ்சம் வெளியேறுவது தவிர்க்க முடியாது அதை நாம் தடுக்கவும் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து ஐயா குறையிருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நிரூபன்.....! அவர் தொடர்ந்து எழுத வேண்டும், எழுதுவார்.....!

    ReplyDelete
  5. நான் கூட நிரூபன் தல அறிமுகம் பார்த்துதான் உங்கள் தளம் வந்தேன். எழுதுவதை நிறுத்த முடியாது. அவருமே கூட எல்லாவற்றையும் நிறுத்தி விடப் போவதாகச் சொலவில்லையே...டிசம்பருக்குப் பின் குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் அதிக கவனம் கொண்டு எழுதப் போவதாகதானே சொல்லியிருக்கிறார்...

    ReplyDelete
  6. நிரூபன் பாஸ்சின் முடிவு கவலை தந்தாலும் அவரது அடுத்த கட்ட வாழ்க்கைக்குள் நுழைய இருப்பதால் வாழ்த்தி வழியனுபுவோமாக..இது பற்றி நேற்று நானும் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தேன்

    ReplyDelete
  7. நிரூபன் தனது பதிவின் மூலமாக பதிவர்களைக் கவர்ந்ததை விட அன்பின் மூலமாக அதிகம் கவர்ந்தவர் .அவர் பங்களிப்பு பதிவுலகுக்கு மிகவும் தேவை ....

    ReplyDelete
  8. பல்சுவை பதிவுகள் தான் எழுதப் போவதில்லை என்று அறிவித்துள்ளார், அவர் ஈழ வயல் தொடர்ந்து எழுதுவேன் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்று அறிவித்துள்ளார்

    ReplyDelete
  9. எனக்கும் உதவி இருக்கிறார்...வாழ்த்துக்கள் நிரூபன்!

    ReplyDelete
  10. இந்த செய்தி மனதிற்கு சங்கடமாக உள்ளது .நிருபனின் உதவும்
    குணத்தை நானும் அறிந்துள்ளேன் .எனக்கும் அவர் உதவிகள்
    செய்துள்ளார் .இந்த வலைத்தள உறவுகளில் அவர் மிகவும்
    துணிச்சலான எழுத்தாளர் .நிருபனின் வாழ்வில் இந்த எழுத்துப்
    பயணமும் சிரமம் இன்றித் தொடர அவருக்கு இறை ஆசி கிட்ட
    வேண்டும் .வாழ்த்துக்களுடன் உங்கள் பகிர்வுக்கு எனது நன்றிகள்
    ஐயா ............

    ReplyDelete
  11. நண்பன் நிரூபன் அவர்கள் பதிவுலகத்தை வெறித்தனமாக நேசித்தவர்... அவ்வளவு சீக்கிரம் அவரால் செல்ல இயலாது... அவர் தூங்கினாலும் பதிவர்கள் தான் ஞாபகத்திற்கு வருவார்கள் என்பது நிச்சயம்... அவரது தளத்தில் என்னையும் அறிமுகபடுத்தியிருக்கிறார்.. எனக்கு தொழில்நுட்ப விசயத்தில் உதவியிருக்கிறார்... அவர் எங்கும் சென்று விடமாட்டார் பதிவுலகத்தை விட்டு.. நேரம் கிடைக்கும்பொழுது பதிவுலக வாயிலாக நம்மைக்காணுவார் என்பது நிச்சயம்... நிரூபன் எந்த செயல் எடுத்தாலும் அதில் வெற்றி காணும் திறமை அவருக்கு இருக்கிறது... வெற்றிபெற வாழ்த்துக்கள் அன்பரே!.. ஓய்வு நேரத்தில் பதிவுலக பக்கம் எட்டிப்பார்த்து எங்களுடன் பரஸ்பரம் கொள்ளுங்கள்... பகிர்வுக்கு நன்றி நண்பா....

    ReplyDelete
  12. அண்ணே வணக்கம் அண்ணே,
    நலமா?

    அபையோர்களே நலமா?

    ReplyDelete
  13. நிரூபனின் இன்னொரு பக்கம்.//

    அண்ணே அது எந்தப் பக்கம் அண்ணே..

    ஹே..ஹே...

    மத்தப் பக்கம் பத்தியா பேசுறீங்க.
    உடம் பெல்லாம் மெய் சிலிர்க்குது.
    இந்த அன்பிற்கு என்ன கைம்மாறு செய்வேனோ எனத் தெரியாத காரணத்தினால் கண்களில் நீர் துளிகள் சிந்த தொடங்குகிறது.

    ReplyDelete
  14. பதிவை வெளியிட்டாரோ இல்லையோ மளமளவென்று ஓட்டு விழுகிறது.கருத்துரைகளும் அப்படியே!தொடர்ந்து மகுடம் பெற்று வியக்க வைத்தவர்.பேஸ்புக்கில் அதிக அளவில் பகிர்ந்து கொள்கிறார்கள்//

    ஹே...ஹே..
    அதுவா,
    இதில தொழில் ரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லை.
    ஹி....ஹி...
    எனக்குப் பிடித்த என்னைக் கவர்ந்த அன்பு உறவுகளின் பதிவுகளைத் தேடித் தேடிப் படிப்பேன்.
    அப்புறமா என் பதிவுகளில் நான் பின்னூட்டம் போடாத நபர்களை விட, என் பதிவுகளைத் தேடி வாசித்து பதிவர்களாக அல்லாது வாசக்ர்களாக இருக்கும் அன்பு உள்ளங்களின் பேராதரவும் அன்பும், ஊக்கமும் தான் இந்த வெற்றிக்களுக்கான காரணங்கள் அண்ணா.

    அந்த வகையில் வாசகர்களாக மாத்திரம் இருந்து ஆறேழு பேர் ஓட்டுக்கள் போட்டு, கருத்துரைகளையும் வழங்குகின்றார்கள். இந் நபர்கள் பதிவெழுதுவதில்லை எனும் காரணத்தினால் அவர்களின் பெயரினை மாத்திரம் சொல்கிறேன்.

    அன்பிற்குரிய ரா. செழியன் அண்ணா,
    ரொபின் அண்ணா, ஸ்ரீ ஈஸி,
    யோகா ஐயா முதலியோரின் அன்பும், ஆதரவும் பதிவுலகிற்கு அப்பாற்பட்டது என நினைக்கிறேன்.

    அவர்களும் இந்த வெற்றிகளின் பின்னணியில் இருந்திருக்கிறார்கள்.

    பேஸ்புக்கில் என் நண்பர்கள் சேர் பண்ணுவார்கள்.
    அதனால் தான் அப்படி.

    ReplyDelete
  15. குழு அமைத்து ஓட்டு போடுவது பற்றிய அவரது பதிவுதான் நான் முதன்முதலில் படித்த பதிவு.இப்போது அவர் மீதே அந்த குற்றச்சாட்டு விழுந்த்து வேடிக்கையான விஷயம்//

    சுத்தி வளைச்சு எங்கேயோ அல்லது யாரையோ தாக்குறீங்க போலிருக்கே...
    ஹி....ஹி...

    ReplyDelete
  16. பிரௌசிங் செண்டரில் இருந்து படித்த்தால் கருத்துரை இடவில்லை.பின் தொடரவும் இல்லை. ஆரம்பத்தில் காத்திரமாக பல பதிவுகளையும் எழுதியவர்.அதிகம் வெளித்தெரியவில்லை//


    காத்திரமா எழுதினால் காத்தோடையே காணாமற் போயிடுவார் என்று சொன்னாங்க..
    அதான் இப்படி ஒரு விபரீத தலைப்பு வைக்கும் முயற்சியைக் கையிலெடுத்தேன்.

    ReplyDelete
  17. நல்ல இடுகைகளுக்கும் பாலியல் சம்பந்தமாக தலைப்புகள் வந்து பிய்த்துக்கொண்டு போனது.தொடர்ந்து தினமும் பதிவிடும்போது அனைத்தும் சிறப்பாகவே இருக்கும் என்று சொல்ல முடியாத//

    ஹே...ஹே....

    இப்போதெல்லாம் அன்பு அக்காச்சிகள், நல்ல பெரியோர்களின் வேண்டுகோளிற்கமைவாக அந்த மாதிரித் தலைப்புக்களை மறந்து ரொம்ப நாளாச்சு.
    ஞாபகப்படுத்தாதீங்க;-)))

    ReplyDelete
  18. இக்பால்செல்வன்,நிரூபன்,நீங்களுமா? என்று கருத்துரையிட்ட்து நினைவுக்கு வருகிறது.
    //

    அந்த ஜெயலலிதாப் பதிவு தானே..

    அதைக் கூட ஞாபகம் வைத்திருக்கிறீங்களே..

    ReplyDelete
  19. அண்ணே, உங்களின் இந்த மதிப்பிடல் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
    கூடவே மெய் சிலிர்க்கிறது.

    முடிந்த வரை வாரம் இரண்டு பதிவாச்சும் போட்டு உங்கள் அனைவரோடும் இணைந்திருக்க முயற்சி செய்கிறேன்.ம்

    ReplyDelete
  20. என்னையும் அவர் எனது ஆரம்ப காலங்களில் இருந்தே ஊக்கப்படுத்தி வருகிறார்.

    நிரூபன் எழுதாமல் இருப்பது பதிவுலகிற்கு,நமக்கு இழப்புதான்!
    அவர் என்னையும் ஒரு பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    என்னால் நம்பவே முடியவில்லை அதற்க்கு பிறகு நாற்று தளத்தில் இருந்து எனது தளத்திற்கு வந்த page views கள் கிட்டத்தட்ட முன்னூறு!

    நிச்சயம் அவரது உணர்வுகள் அனைவருக்கும் புரியும்!
    நிச்சயம் அவரால் எழுதாமல் இருக்க முடியாது!(கூடாது)//

    என்னய்யா இழப்பு... நான் உங்களில் ஒருவன் தானே!
    என் பணியினைச் செய்ய என் அன்புச் சகோதர்கள் நீங்கள் இருக்கும் போது என்ன இழப்பு வேண்டிக் கிடக்கிறது;-))

    முடிந்த வரை எல்லோருடனும் இணைந்திருக்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  21. ஆமினா said...
    நிரூவை என் தம்பி என அழைப்பதில் ரொம்பவே பெருமைபடுகிறேன்

    அவரின் வெற்றிக்கு பின்னால் வெறும் ஹிட்ஸ் மட்டும் அல்ல அன்பும் அடங்கியிருப்பதை பழகிய சில நாட்கள், சில தருணங்கள், சில நிமிடங்களில் தெரிந்துக்கொண்டேன்.

    என்னை கவர்ந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்
    //


    அக்காச்சி!
    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
    என் தவறுகளை மன்னித்து, சுட்டிக் காட்ட வேண்டிய இடத்தில் சுட்டிக் காட்டி,
    தலையில் குட்டுப் போட்டும் வழி நடத்திய உங்கள் அன்பும் என்னை மெய் சிலிர்க்கச் செய்கிறது.
    நன்றி அக்கா.

    ReplyDelete
  22. தனிமரம் said...
    நிரூபன் பதிவுலகில் தன்னலம் கருதாத கர்மவீரன் நான் கூட உங்கள் தளம் வர அவரின் அறிமுகம் தான் காரணம் ஐயா.
    சில கடமைகள் வரும் போது கொஞ்சம் வெளியேறுவது தவிர்க்க முடியாது அதை நாம் தடுக்கவும் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து ஐயா குறையிருப்பின் மன்னிக்கவும்.
    //

    அண்ணே கர்மம் என்றால் வினை, ஆணவம்...
    இப்படியெல்லாம் அர்த்தமாம், மெய்யாலுமே...
    நான் அப்படியா?
    இல்லையே. அது கரும வீரனா? கர்ம வீரனா?

    உங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  23. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    வாழ்த்துக்கள் நிரூபன்.....! அவர் தொடர்ந்து எழுத வேண்டும், எழுதுவார்.....//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  24. ஸ்ரீராம். said...
    நான் கூட நிரூபன் தல அறிமுகம் பார்த்துதான் உங்கள் தளம் வந்தேன். எழுதுவதை நிறுத்த முடியாது. அவருமே கூட எல்லாவற்றையும் நிறுத்தி விடப் போவதாகச் சொலவில்லையே...டிசம்பருக்குப் பின் குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் அதிக கவனம் கொண்டு எழுதப் போவதாகதானே சொல்லியிருக்கிறார்...//

    அப்படிப் போடுங்க அருவாளை!
    அது தானே ஸ்ரீ அண்ணே.

    ReplyDelete
  25. K.s.s.Rajh said...
    நிரூபன் பாஸ்சின் முடிவு கவலை தந்தாலும் அவரது அடுத்த கட்ட வாழ்க்கைக்குள் நுழைய இருப்பதால் வாழ்த்தி வழியனுபுவோமாக..இது பற்றி நேற்று நானும் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தேன்//

    யாரைய்யா இங்கே அடுத்த கட்ட வாழ்க்கை பற்றிப் புரளி கிளப்பியது;-))

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  26. koodal bala said...
    நிரூபன் தனது பதிவின் மூலமாக பதிவர்களைக் கவர்ந்ததை விட அன்பின் மூலமாக அதிகம் கவர்ந்தவர் .அவர் பங்களிப்பு பதிவுலகுக்கு மிகவும் தேவை ...//

    நன்றி அண்ணே.

    ReplyDelete
  27. suryajeeva said...
    பல்சுவை பதிவுகள் தான் எழுதப் போவதில்லை என்று அறிவித்துள்ளார், அவர் ஈழ வயல் தொடர்ந்து எழுதுவேன் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்று அறிவித்துள்ளார//

    ஆமாம் பாஸ்..

    நன்றி.

    ReplyDelete
  28. விக்கியுலகம் said...
    எனக்கும் உதவி இருக்கிறார்...வாழ்த்துக்கள் நிரூபன்!
    //

    நன்றி அண்ணே.

    ReplyDelete
  29. அம்பாளடியாள் said...
    இந்த செய்தி மனதிற்கு சங்கடமாக உள்ளது .நிருபனின் உதவும்
    குணத்தை நானும் அறிந்துள்ளேன் .எனக்கும் அவர் உதவிகள்
    செய்துள்ளார் .இந்த வலைத்தள உறவுகளில் அவர் மிகவும்
    துணிச்சலான எழுத்தாளர் .நிருபனின் வாழ்வில் இந்த எழுத்துப்
    பயணமும் சிரமம் இன்றித் தொடர அவருக்கு இறை ஆசி கிட்ட
    வேண்டும் .வாழ்த்துக்களுடன் உங்கள் பகிர்வுக்கு எனது நன்றிகள்
    ஐயா ..........//

    நன்றி அக்கா..

    ReplyDelete
  30. @
    மாய உலகம் said...//

    உங்கள் அனைவரினதும் அன்பும், ஆதரவும் என்னை மெய் சிலிர்க்க வைக்க்கிறது.

    நன்றி மாயா பாஸ்..
    சந்தர்ப்பம் கிடைக்கும் போது சந்திப்போம்.

    ReplyDelete
  31. இப் பதிவினை எழுதிய சண்முகவேல் அண்ணாச்சிக்கும், தங்கள் கருத்துக்கள் மூலம் என் உள்ளத்தினை நெகிழச் செய்த அனைத்துச் சொந்தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  32. பழகுவதில் நல்ல நண்பன் நிரூ...

    நட்புடன்,
    http://tamilvaasi.blogspot.com/

    ReplyDelete
  33. எனக்கும் சில சமயங்களில் சகோ உதவியுள்ளார்.

    ReplyDelete
  34. சகோதரா பதிவுலகம் ஒரு கள்ளுக் கொட்டில் மாதிரி...

    இலகுவில் அவரால் விலத்த முடியாது எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்

    ReplyDelete
  35. நிரூபன் தானாக முன் வந்து அனைவருக்கும் உதவுபவர்.. அவர் மேலும் வளர்வார். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. அண்ணே! என்னது நிரூபன் போகப் போகிறாரா? அது நடக்குமா? நான் விடமாட்டேன்!

    ஹி ஹி ஹி மதி சுதா சொன்ன மாதிரி நிரூ ஒரு கள்ளுக் கொட்டில் தான்!

    ஹி ஹி நிரூ ஒரு டாஸ்மார்க் கடையும் கூட!

    ReplyDelete
  37. சிறப்பான ஒரு மனிதரைப் பற்றிய ஒரு சிறப்பான பார்வை.

    ReplyDelete
  38. //அவரின் வெற்றிக்கு பின்னால் வெறும் ஹிட்ஸ் மட்டும் அல்ல அன்பும் அடங்கியிருப்பதை //

    இந்த கருத்து நூற்றுக்கு நூறு உண்மை .

    ReplyDelete
  39. நிரூபன் சாருக்கு நன்றிகள், முடிவினை மீள் பரிசீலனை செய்தமைக்காக.

    ReplyDelete
  40. உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தனித்தனியே பதில் தர முடியவில்லை.அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete