Pages

Sunday, October 30, 2011

இணைய மையங்கள் அடல்ட்ஸ் ஒன்லியா?

 இணைய மையங்களை காவல்துறையினர் அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக விரோதிகள் பிரௌசிங் சென்டர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன.நிறைய கட்டுப்பாடுகள்.வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை சரிபார்ப்பதிலிருந்து கேமரா வைப்பது வரை .பலர் முணுமுணுத்துக்  கொண்டிருக்கிறார்கள்.


இணைய மையங்கள் கால் வைக்கவே கூசுகிறது என்று நண்பர் புலம்பினார்.ஒரு வேளை சுத்தமில்லாமல் பேச்சுலர் ரூம் போல இருந்திருக்கும் என்று நினைத்தேன்.(ஒரு நாளைக்கு மூன்று முறை அறையை சுத்தம் செய்து அற்புதமாக சமைக்கும்பிரம்மச்சாரிகளையும்  நான் பார்த்திருக்கிறேன்.) காலையிலேயே புலம்புகிறானே என்று நினைத்துக் கொண்டு என்னே ஏதென்று விசாரித்தேன்.
மாமியார் வீட்டுக்கு போன இடத்தில் ஒரு பிரௌசிங் சென்டருக்கு போயிருக்கிறான்.அவனுடைய எட்டு வயது மகளும் கூடவே !என்னுடைய பதிவை திறந்து படிக்க ஆரம்பிக்க,அவருடைய மகள் ஆபாச இணைய தளங்களின் பெயர்களை வரிசையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.நண்பர் ஆடிப் போய்விட்டார்.


அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தால் சுவர்களில்,கேபினில் எழுதி வைத்திருப்பதை காட்டியிருக்கிறார்.ஆபாச இணையதள ரசிகர்கள் தளம் மறக்காமலிருக்க எழுதி வைத்துக் கொள்வார்கள் என்று தோன்றியது.நானும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.ஆனால் இணைய மையம் வைத்திருக்கும் ஒருவர் இன்னொரு விஷயத்தை சொன்னார்.சில மையங்களின் முதலாளிகளே அப்படி எழுதி வைத்து விடுவதும் உண்டு என்கிறார்.
ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பது எண்ணம்.பேசாமல் அடல்ட்ஸ் ஒன்லி என்று போட்டு விடலாம்.இன்னும் சில மையங்கள் காதலர்களுக்கு உகந்த இடமாகவும் இருந்து கொண்டிருக்கிறது.எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு  குறிப்பிட்ட மையத்திலிருந்து அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் மெயில் போய்விட்டது.காவல்துறையினர் விசாரிக்க வந்தார்கள்.அன்று சர்வர் மோசமாக இருந்ததால் மொத்தமாக மூன்றுபேர் தான் வந்திருந்தார்கள்.எளிதாக ஆளை பிடித்து விட்டார்கள்.அப்போதிருந்து ரகசியமாக கேமரா பொருத்திவிட்டார்.வாடிக்கையாளர்களுக்கு கூட தெரியாது.தனித்தனி கேபின்கள் இல்லாமல் மையங்கள் இருந்தால் இம்மாதிரி பிரச்சினைகள் குறையும்.
இன்று இன்டர்நெட் தேவை அதிகரித்துவிட்ட நிலையில் பெண்கள் ,குழந்தைகள் என்று பலரும் மையங்களை அணுகும் நிலை இருக்கிறது.மையம் நடத்துபவர்கள் இதை உணர்ந்து கால் வைக்க கூசாத இடமாக வைப்பது அவசியம்.

25 comments:

  1. பிரவுசிங் செண்டர் உரிமையாளர்கள் பெண் பெயரில் இருந்து சாட் செய்து வாடிக்கையாளர்களை அதிக நேரம் இருக்க வைப்பது கூட நடந்திருக்கிறது. காசுக்காக எதையும் செய்பவர்கள் இருக்கும் வரை இப்படித்தான். பிரவுசிங் செண்டர்களுக்கான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு கடுமையாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும்.

    ReplyDelete
  2. இனைய தள மையங்களில் பாமிலி பில்ட்டர் மென்பொருள் போடும் படி அரசிடம் இருந்து அறிவுறுத்தல் உள்ளது.. யாரும் கடை பிடிப்பது இல்லை... இத்தனைக்கும் அது இலவச மென்பொருளாகவே கிடைக்கிறது... k9 family filter

    ReplyDelete
  3. இப்போதெல்லாம் ஓரளவுக்கு கண்டிப்பாகத்தான் இருக்கிறார்கள். ஆயினும் இது போன்ற பிரச்சினைகளும் தொடரத்தான் செய்கின்றன.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. இதில் உரிமையாளர்கள் பணத்தை பெரிதாக பார்க்காமல் இளைஞர்களின் நலத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும்...

    பகிர்வுக்கு நன்றி... நண்பா…

    ReplyDelete
  5. மோசமான பிரவுசிங் சென்டர் உரிமையாளர்களால் பிரவுசிங் சென்டர் தொழிலுக்கே அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது ...

    ReplyDelete
  6. @பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பிரவுசிங் செண்டர் உரிமையாளர்கள் பெண் பெயரில் இருந்து சாட் செய்து வாடிக்கையாளர்களை அதிக நேரம் இருக்க வைப்பது கூட நடந்திருக்கிறது. காசுக்காக எதையும் செய்பவர்கள் இருக்கும் வரை இப்படித்தான். பிரவுசிங் செண்டர்களுக்கான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு கடுமையாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும்.

    உண்மைதான் கடுமையான நடவடிக்கைதான் வழி.நன்றி

    ReplyDelete
  7. நல்லதை எடுப்பதும் அல்லாததை விடுவதும் தன்னிடம்தான் உள்ளது. நிறைய சென்டர்கள் ஒழுங்காகத்தான் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. @suryajeeva said...

    இனைய தள மையங்களில் பாமிலி பில்ட்டர் மென்பொருள் போடும் படி அரசிடம் இருந்து அறிவுறுத்தல் உள்ளது.. யாரும் கடை பிடிப்பது இல்லை... இத்தனைக்கும் அது இலவச மென்பொருளாகவே கிடைக்கிறது... k9 family filter

    அதெல்லாம் போட்டா பிஸினஸ் குறைந்துவிடும் என்று நினைக்கிறார்கள்.நன்றி

    ReplyDelete
  9. @சென்னை பித்தன் said...

    இப்போதெல்லாம் ஓரளவுக்கு கண்டிப்பாகத்தான் இருக்கிறார்கள். ஆயினும் இது போன்ற பிரச்சினைகளும் தொடரத்தான் செய்கின்றன.பகிர்வுக்கு நன்றி.

    சில இடங்கள் இப்படித்தான் இருக்கின்றன.சென்னையில் பல இடங்களில் பார்த்தேன்.நன்றி

    ReplyDelete
  10. @ராஜா MVS said...

    இதில் உரிமையாளர்கள் பணத்தை பெரிதாக பார்க்காமல் இளைஞர்களின் நலத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும்...

    பகிர்வுக்கு நன்றி... நண்பா…

    ஆமாம் அய்யா! நன்றி

    ReplyDelete
  11. @koodal bala said...

    மோசமான பிரவுசிங் சென்டர் உரிமையாளர்களால் பிரவுசிங் சென்டர் தொழிலுக்கே அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது ...

    உண்மைதான்,சிலரால் மற்றவர்களுக்கும் கெட்டபெயர்.நன்றி

    ReplyDelete
  12. @ஸ்ரீராம். said...

    நல்லதை எடுப்பதும் அல்லாததை விடுவதும் தன்னிடம்தான் உள்ளது. நிறைய சென்டர்கள் ஒழுங்காகத்தான் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

    ஆமாம்,சில மையங்கள் பேருந்து நிலைய கழிப்பிடம்போல ஏதேதோ எழுதப்பட்டும் இருக்கின்றன.நன்றி

    ReplyDelete
  13. பிரவுசிங் செண்டர்கள் எஸ்.டி.டி பூத் மாதிரி ஒரு காலத்தில் காணாமல் போய்விடும்.வீட்டுக்குவீடு இண்டர்நெட் வந்துவிடும்.

    ReplyDelete
  14. குழந்தைகள் என்றால் வீட்டில்,பள்ளியில் கூட திரும்பதிரும்ப அந்த வார்த்தைகளை (ஆபாச வெப்சைட்களின் பெயரகளை)சொல்வார்கள்.

    ReplyDelete
  15. @RAVICHANDRAN said...

    பிரவுசிங் செண்டர்கள் எஸ்.டி.டி பூத் மாதிரி ஒரு காலத்தில் காணாமல் போய்விடும்.வீட்டுக்குவீடு இண்டர்நெட் வந்துவிடும்.

    வீட்டுக்குவீடு அதிகரிக்கும் என்பது உண்மையே! நன்றி

    ReplyDelete
  16. @RAVICHANDRAN said...

    குழந்தைகள் என்றால் வீட்டில்,பள்ளியில் கூட திரும்பதிரும்ப அந்த வார்த்தைகளை (ஆபாச வெப்சைட்களின் பெயரகளை)சொல்வார்கள்.

    உண்மைதான் நண்பரே! நன்றி

    ReplyDelete
  17. ஆம், இதற்க்கு விதி முறைகள் கடுமை யாக்கப் படவேண்டும்.

    ReplyDelete
  18. இணைய மையங்கள் தனித்தனியாக கேபின் வைக்காமல் பொதுவாக கணிணிகளை வைத்து இருக்கும் இடங்களில் இப்படிப்பட்ட பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என எண்ணுகிறேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  19. சட்டங்கள் கடுமையாக்கபட்டால் திருந்துவாங்க

    ReplyDelete
  20. எல்லாவற்றிலும் நல்லது இருப்பது போலவே தீமையும் இருக்கிறது! நல்லபதிவு

    ReplyDelete
  21. நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க

    கடுமையான விதிமுறைகள் நல்லதுதான்

    த.ம 11

    ReplyDelete
  22. சொன்னதெல்லாம் சரியாவே சொன்னீங்க .

    ReplyDelete
  23. விஞ்ஞான முன்னேற்றம் வேதியல் மாற்றத்தைப்போல நன்மையும் தீமையும் கலந்துதான் கிடைக்கும் நாம்தான் அன்னத்தைபோலே தண்ணீரையும் பாலையும் பிரித்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  24. இப்போதெல்லாம் கொஞ்சம் குற்றங்கள்
    குறைந்திருக்கின்றன என்றே சொல்லலாம்...
    ஆனாலும் சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும்
    அப்போதுதான் குற்றம் என்பதன் பொருள் விளங்கும்...

    ReplyDelete
  25. வணக்கம் அண்ணே,
    நல்லதோர் பதிவு,
    தமது வியாபாரத்திற்காக இளைய சமுதாயத்தின் வாழ்க்கையினைச் சீரழிப்போரினைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள்.

    என் கருத்து: அரசாங்கம் அல்லது சமூக அக்கறையுள்ள அமைப்புக்கள் இந்த பிரவுசிங் செண்டர்களைச் சோதனை செய்தால் தான் இத்தகைய அழிவுகளிலிருந்து தடுக்க முடியும்.

    ReplyDelete