Pages

Tuesday, November 8, 2011

இவங்களெல்லாம் திருந்தவேமாட்டாங்களா?


பல நேரங்களில் ஒவ்வொருவரும் உச்சரித்திருப்போம்.’’ இவங்களெல்லாம் திருந்தவேமாட்டாங்களா?அரசியல்வாதிகளை பார்த்து,சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களை பார்த்து,குடிப்பவர்களை,புகை பிடிப்பவர்களை,லஞ்சம் வாங்குபவர்களை பார்த்து என்று பட்டியல் நீளும்.எத்தனை பேர் விமர்சித்தாலும்,சமூகம் குறுக்கே நின்றாலும் அவர்களது செயலை தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
                               திருடனை கைது செய்கிறார்கள்,தண்டனை கொடுக்கிறார்கள்.வெளியே வந்து மீண்டும் திருட ஆரம்பிக்கிறான்.லஞ்சம் வாங்கி ஒருவரை கைது செய்கிறார்கள்.இருக்கும் மற்றவர்கள் யாரும் வாங்காமல் இருப்பதில்லை.கள்ளச்சாராயம் விற்பவனை போலீஸ் பிடித்துப்போகும்.வெளியில் வந்தபின் மீண்டும் அதே தொழிலை செய்வார்கள்.மீண்டும் கைது.
                              அவர் திருந்திவிட்டார்.இனி புகை பிடிக்கமாட்டார் என்று பேசிக் கொள்வார்கள்.ஆனால் திடீரென்று ஆரம்பித்து விடுவார். பணி புரியும் இட்த்தில் எப்போதும் பெண்களுடன் அரட்டை அடித்து கொண்டிருப்பார் ஒருவர்.சில காலம் புகை பிடிப்பதும்,சில காலம் விட்டுவிடுவதுமாக இவருடன் பணி புரியும் நண்பர் ஒருவர் கவனித்துச் சொன்னதுஇவர் பெண்களுடன் பேசும்போது புகை பிடிப்பதில்லை,அவர்களுடன் சண்டை வந்தால் மீண்டும் ஆரம்பித்து விடுகிறார்
                                என்னை மிகவும் கவர்ந்த்து.பெண்களிடம் சண்டை போட்டு பேசாமலிருக்கும்போது புகை பிடிக்கிறார்.இணக்கமான சூழல் நிலவும்போது அப்படி இல்லை.மற்றவர்களுக்கும் அப்படித்தானா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தாலும் இது மனசு சம்பந்தப் பட்டிருக்கிறது.மனதில் ஏற்படும் மாற்றங்கள் பழக்க வழக்கங்களில் எதிரொலிக்கத்தான் செய்யும்.
                                 சரி இவர்களை திருத்தவே முடியாதா? மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறோம் என்று மையம் இருக்கிறது.எல்லா மது அடிமைகளையும் மீட்டுவிட முடியாது.அவர்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முடியும்.தொடர்ந்து ஆலோசனையும் சிகிச்சையும் இருக்கும்.நம்பிச் சென்ற பலர் மீண்டு வெளியே வந்திருக்கிறார்கள்.
                                 எத்தனை பேர் சொன்னாலும் கேட்பதில்லை என்கிறோம்.அறிவுரையை யாரும் விரும்புவதில்லை என்பதோடு அவர்களுடைய தவறான நம்பிக்கைகளும் காரணம்.சினிமாவில் குத்துப்பாட்டும்,நாலு சண்டைக்காட்சியும் கட்டாயம் தேவை என்ற நம்பிக்கை இருந்த்து.ஆனால் எல்லா படமும் வெற்றி பெற்றதாக சொல்ல முடியாது.ஒரு கட்ட்த்தில் கவர்ச்சிக்கென்று தனியாக நடிகைகள் இருந்தார்கள்.
                                 இதை சேர்த்தால்தான் என் பதிவை படிக்கிறார்கள்,திருடி போட்டால்தான் நமது தளம் படிக்கப்படுகிறது என்று நம்புகிறார்கள்.அது தவறான நம்பிக்கையாக இருக்கலாம்.ஆனாலும் அவர்கள் நம்புகிறார்கள்.தண்டனை தந்தாலும் திரும்ப செய்யாமல் இருக்க மாட்டார்கள்.சிறைக்கு சென்று வந்தாலும் அதையே செய்வது போலத்தான்!
                                  இவங்களெல்லாம் திருந்தவே மாட்டாங்களா? என்று நீங்கள் யாரைப்பற்றியாவது கூறும்போது கொஞ்சம் கவனியுங்கள்.அவர்களை ஆதரிக்க எப்போதும் ஆட்களும் இருப்பார்கள்.ஊரில் பத்துபேர் இருந்தாலும் அத்தனை பேரும் அதை தவறென்று சொல்வதில்லை.லஞ்சம் வாங்குபவனுக்கு,திருடுபவனுக்கு இது என்ன பெரிய விஷயம் என்று சொல்லும் கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது.தவிர சில பழக்கங்களுக்கு மனிதன் அடிமையாகிவிடுகிறான்.

33 comments:

  1. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

    கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


    **** ஆதாமின்டே மகன் அபு *****


    .

    ReplyDelete
  2. தங்கள் கருத்து உண்மை தான்

    ReplyDelete
  3. @VANJOOR said...

    இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

    கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. தம் அடிக்கிற பையனை அப்பன் சத்தம் போட்டால் மறைவாக போய் அடிப்பானே தவிர விட்டுவிட மாட்டான்,

    ReplyDelete
  5. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்களே!

    ReplyDelete
  6. @சென்னை பித்தன் said...

    உண்மைதான்.

    நன்றி அய்யா!

    ReplyDelete
  7. @koodal bala said...

    உண்மை ....உண்மை ...

    நன்றி...நன்றி...

    ReplyDelete
  8. @M.R said...

    தங்கள் கருத்து உண்மை தான்

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. @Online Works For All said...

    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. @RAVICHANDRAN said...

    தம் அடிக்கிற பையனை அப்பன் சத்தம் போட்டால் மறைவாக போய் அடிப்பானே தவிர விட்டுவிட மாட்டான்,

    உண்மைதான் நன்றி

    ReplyDelete
  11. ஆம் சரியாக சொன்னீர்கள். தவறுசெய்பவன் மட்டுமல்ல செய்யத்தூண்டுபவனும் ஜால்ராபோடுபவனும்கூட தவறுசெய்கிறார்கள்.

    ReplyDelete
  12. உண்மையை சொன்னீர்கள் பாஸ்..... அதிலும் நமக்கு சரியாக படுவது இன்னொருவருக்கு தப்பாக படுகிறது... இன்னொருவருக்கு சரியாக படுவது நமக்கு தப்பாக படுகிறதே......... இதுதான் வாழ்க்கை.

    ReplyDelete
  13. உண்மைதான் ஐயா இவர்களை மாற்றுவது அவர்கள் மனநிலையாலே முடியும் செயல்!!

    ReplyDelete
  14. @RAVICHANDRAN said...

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்களே!

    கரெக்டா புடிச்சிட்டீங்க நன்றி

    ReplyDelete
  15. @அம்பலத்தார் said...

    ஆம் சரியாக சொன்னீர்கள். தவறுசெய்பவன் மட்டுமல்ல செய்யத்தூண்டுபவனும் ஜால்ராபோடுபவனும்கூட தவறுசெய்கிறார்கள்.

    ஆமாம் அய்யா,நன்றி

    ReplyDelete
  16. @துஷ்யந்தன் said...

    உண்மையை சொன்னீர்கள் பாஸ்..... அதிலும் நமக்கு சரியாக படுவது இன்னொருவருக்கு தப்பாக படுகிறது... இன்னொருவருக்கு சரியாக படுவது நமக்கு தப்பாக படுகிறதே......... இதுதான் வாழ்க்கை.

    ஆமாம்,அவரவர்கள் வாழ்ந்துவந்த விதமும் கற்றுக்கொண்டவைகளும் காரணம்,நன்றி

    ReplyDelete
  17. @தனிமரம் said...

    உண்மைதான் ஐயா இவர்களை மாற்றுவது அவர்கள் மனநிலையாலே முடியும் செயல்!!

    ஆமாம் சிவா! நன்றி

    ReplyDelete
  18. பல விசயங்கள் மனம் சார்ந்ததே... சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  19. ஒரு செயலை ஒருவன் விடாமல் செய்வதற்க்கு அவனது உடலும், மனமும் அந்த செயலில் முழுமையாக அடிமையாகி விட்டது என்பதே உண்மை.
    மற்றவர்களுக்கு அவன் செயல் தவறாக தெரிந்தாலும் அவனுக்கு அப்படி தெரியாது... பழகிவிட்டது...

    ReplyDelete
  20. அருமையான அலசல்...

    ReplyDelete
  21. திருந்தாதவர்களைப் பற்றி ரொம்பவே வருந்தி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
  22. வணக்கம் அண்ணே,

    ஒரே கல்லில ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங்க.

    ஹே....ஹே......


    தாம் இதே வழியில் நிற்போம்,
    திருந்தவே மாட்டோம் என தவறு செய்வோரையும், அவர்களை ஆதரிப்போரையும் சாடி ஒரு விளக்கம் கொடுத்திருப்பதோடு,
    கீழே காப்பி பேஸ்ட் பற்றியும் ஒரு மறைமுகச் சாடல்,
    ரசித்தேன் அண்ணா!

    ReplyDelete
  23. தண்டனை கடுமையாக இருந்தால் ஒருவேளை திருந்த வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்....

    ReplyDelete
  24. மிக அருமையான கருத்தொன்றைச் சொல்லியிருக்கீங்க அண்ணா! இந்த உலகில் இதுதான் சரி, இதுதான் பிழை என்று எதுவுமே இல்லை!

    ReplyDelete
  25. மாற்றம் ஒன்றே மாறாதது.. தொடர்ந்து கவனியுங்கள்..

    நன்றி...

    ReplyDelete
  26. 100% உணமையான கருத்து

    ReplyDelete
  27. ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் பொதிந்துள்ளது..

    ReplyDelete
  28. கருத்துரையிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  29. ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் பொதிந்துள்ளது..

    yes! correct.

    ReplyDelete
  30. தேவை மிகப் பெரிய சமூக மாற்றம்... என் நண்பர் ஆதி எனக்கு ஓய்வில்லாமல் வேலை கொடுத்தால், எனக்கு பிடித்த வேலை கொடுத்தால் தண்ணியே அடிக்க மாட்டேன் என்று புலம்புவார்... யாரோ ஒருவர் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் நாமே அந்த வேலைகளை எடுத்துக் கொண்டால் எந்த குறையும் இருக்காது என்பது என் எண்ணம்... ஓய்வு நேரங்களில் எதையாவது செய்து கொண்டிருந்தால் எந்த வஸ்துக்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் அடிமையாக மாட்டோம்...

    ReplyDelete
  31. தவறு செய்வதற்கு
    ஒவ்வொருத்தரும் தங்கள் பக்கம்
    ஒரு நியாயத்தை வைத்திருப்பார்கள்.
    அதை நம்மை ஏற்றுக்கொள்ளவும்
    திணிப்பார்கள்...
    என்ன செய்ய இவர்கள் எல்லாம்
    திருந்தவே மாட்டார்கள்....

    ReplyDelete