Pages

Thursday, November 17, 2011

பெண்களின் தந்திரங்களும் குழந்தையும்

பெண்களின் இப்படிப்பட்ட தந்திரங்களை கவனித்திருக்கிறீர்களா?  அலுவலகத்தில் சண்டையாகி விட்டது.பெண் ஊழியர் ஒருவர் கொஞ்சம் சூடாக சண்டை போட்டு விட்டார்.வார்த்தை தடித்து சரமாரியாக கத்தி விட்டார்.நெருக்கமாக இருந்த தோழிகள் கூட கோபம் கொண்டு விட்டார்கள்.சங்கடமான சூழ்நிலை.மதிய உணவு நேரத்தில் சாப்பிடுவதை விட்டுவிட்டு எங்கோ கிளம்பி போய்விட்டார்.வந்தவர் தனது ஒரு வயது குழந்தையுடன் வந்தார்.அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

குழந்தை என்றால் உலகில் பிறந்த அத்தனை பேருக்கும் கொள்ளை ஆசை.மழலைச் சொல்லிவிட மனிதனை மயக்குவது ஏதுமில்லை.ஒவ்வொருவராக குழந்தையை கொஞ்ச அறைக்குள் நுழைந்தார்கள்.சங்கடங்கள் கரைய ஆரம்பிக்க இணக்கமான சூழ்நிலை மறுபடியும் வந்து விட்டது.தான் சொன்னால் கணவரோ,மாமியாரோ,மற்றவர்களோ கேட்க மாட்டார்கள் என்று அப்பெண் நினைக்கிறார்.குழந்தையிடம் சொல்லி குழந்தையின் விருப்பமாக சொல்ல வைக்கிறார்.எளிதாக வெற்றி கிட்டி விடுகிறது.


காதல் திருமணத்தால் முறைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் உறவுகளும் குழந்தை பிறந்தது தெரிந்தவுடன் பரவசமாகி ஓடுகிறார்கள்.சில  குடும்பங்கள் குழந்தைகளுக்காக பிரியாமல் இருக்கின்றன.குழந்தை நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கிறது.ஏனெனில் குழந்தைகள் உலகம் மகத்தானது.நண்பர் ஒருவரின் பையன் ஏதோ பேச்சுக்கு கோபமாக பேச ஆரம்பித்தான்.பேசிய அனைத்து வார்த்தைகளும் தொலைக்காட்சி தொடரில் ஒருவர் பேசியது.

தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் அதே போல பேசுவதையும் ,நடிப்பதையும் கவனித்துப் பாருங்கள்.இவை நல்லவற்றை கற்றுத்தரும் என்று நான் நம்பவில்லை.தொடர்களில் வரும் பாத்திரங்கள் அமைதியற்ற குணங்களை கொண்டிருக்கின்றன.குழந்தைகளிடம் இத்தகைய குணங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் சொல்கின்றன.இருவரும் சம்பாதிக்க ஓட வேண்டிய நெருக்கடியான சூழலில் குழந்தைகள் நலமே பலியாகிறது.பாட்டியிடம் அல்லது வேலைக்காரர்களிடம் விட்டுவிட்டு போகிறார்கள்.குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான நெருக்கம் குறைகிறது.


அன்பு என்பது தாயிடம் மட்டுமே குழந்தைகள் அதிகளவு உணர்கின்றன.ஒரு தாய் குழந்தையின் முதுகில் அடித்துவிட்டு நகர்ந்தால் தாயை பின்தொடர்கிறது.அழுதுகொண்டு அம்மாவிடமே ஓடும்.அப்பா அடித்தாலும் அம்மாவிடம் ஓடுகிறது.வயது அதிகரித்தால் அப்பாவிடமும் மற்றவர்களிடமும் போய் நிற்கும்.காலையில் அவசரமாக எழுந்து பரபரப்பாக தயாராகி ,அரைகுறையாக விழுங்கி விட்டு புத்தகப் பையுடன் நடக்கும் குழந்தையின் முகத்தில் குழந்தையை பார்க்க முடியவில்லை.

என்னுடைய பாகவதமும் பைபிளும் இடுகையில் இருந்து சில வரிகள்.சிறுவர்களுக்கு தற்போது நல்ல விஷயங்கள்,கதைகள் சொல்ல ஆட்கள் இல்லை என்பது பெரும் சீர்கேடாக நான் பார்க்கிறேன்.குழந்தைகளின் கற்பனையை வளர்க்க கதை சொல்லி பாட்டிகள் தற்போது இல்லை.நகர அவசர வாழ்க்கையும்,கூட்டுக்குடும்ப சிதைவும் நன்னெறி கதைகளை விடுத்து கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலும்,கார்ட்டூன்களிலும் கொண்டு சேர்த்திருக்கிறது.இன்றைய குழந்தைகளின் கற்பனை வறட்சி அவர்களது வளர்ச்சியை சிக்கலாக்கவே செய்யும்.


சக பெண் ஊழியர் ஒருவர் தொலைபேசியில் பேசும்போது சொன்னது," பெரியவனை எங்காவது விடுதியில் சேர்த்துவிடலாம் என்றிருக்கிறேன்.குறும்பை தாங்க முடியவில்லை.சின்னப் பையன் அப்படியில்லை,அமைதி!" அவருக்கு நான் சொன்னது,"சின்னப் பையனை விடுதியில் சேர்த்து விடுங்கள்,பெரியவன் வேண்டாம்.குழந்தை அமைதியாக இருந்தால் அது பொம்மை.குறும்பு செய்தால் அது குழந்தை.

27 comments:

  1. சகோதரி அம்பாளடியாள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தொடர் பதிவு.

    ReplyDelete
  2. இன்ட்லியில் இணைக்க அரைமணி நேரம் ஆகும். நண்பர்கள் காத்திருக்கவும்.

    ReplyDelete
  3. அந்த சிறுவனின் கண்களில் தான் என்ன ஒரு ஏக்கம் !

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. பளிச்சென்று சொல்ல உங்களால்தான் முடியும். நன்றி சகோ.

    ReplyDelete
  5. சுற்றி நடப்பதைக் கூர்ந்து நோக்கிச் சரியான கருத்தினை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  6. //குழந்தை அமைதியாக இருந்தால் அது பொம்மை.குறும்பு செய்தால் அது குழந்தை.//

    அமைதியாக இருக்கும் குழந்தைகள் மன முதிர்ச்சி அடைந்தவர்கள் என்பது என் எண்ணம்.. அவர்களின் பதில் ஆணித்தரமாய் இருக்கும்.. தெரிய வில்லை என்றால் எதுவும் பேசாமல் சென்று விடுவார்கள்...

    mostly matured perfectionist

    ReplyDelete
  7. @rufina rajkumar said...

    அந்த சிறுவனின் கண்களில் தான் என்ன ஒரு ஏக்கம் !

    நன்றி,கூகுளுக்கும் நன்றி

    ReplyDelete
  8. அண்ணே! பெண்கள் உண்மையிலேயே தந்திரசாலிகள் தான்! பல வகையிலும்!

    ReplyDelete
  9. @சாகம்பரி said...

    நல்ல பகிர்வு. பளிச்சென்று சொல்ல உங்களால்தான் முடியும். நன்றி சகோ.

    தங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி

    ReplyDelete
  10. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html



    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  11. @சென்னை பித்தன் said...

    சுற்றி நடப்பதைக் கூர்ந்து நோக்கிச் சரியான கருத்தினை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

    ஆமாம் அய்யா! நன்றி

    ReplyDelete
  12. @suryajeeva said...

    //குழந்தை அமைதியாக இருந்தால் அது பொம்மை.குறும்பு செய்தால் அது குழந்தை.//

    அமைதியாக இருக்கும் குழந்தைகள் மன முதிர்ச்சி அடைந்தவர்கள் என்பது என் எண்ணம்.. அவர்களின் பதில் ஆணித்தரமாய் இருக்கும்.. தெரிய வில்லை என்றால் எதுவும் பேசாமல் சென்று விடுவார்கள்...

    mostly matured perfectionist

    புதுசா இருக்கே சார்,யோசிக்கவேண்டிய விஷயம்தான்,நன்றி

    ReplyDelete
  13. @Powder Star - Dr. ஐடியாமணி said...

    அண்ணே! பெண்கள் உண்மையிலேயே தந்திரசாலிகள் தான்! பல வகையிலும்!

    அந்த அனுபவத்தை இன்னும் ஏன் எழுதவில்லை தம்பி? ஹே..ஹே..

    ReplyDelete
  14. குழந்தை என்றால் பகையும் மறந்துவிடுகிறது.அருமையான பதிவு

    ReplyDelete
  15. //இன்றைய குழந்தைகளின் கற்பனை வறட்சி அவர்களது வளர்ச்சியை சிக்கலாக்கவே செய்யும்.//

    ஆராய்ச்சி செய்ய கற்பனைவளம் முக்கியம்.

    ReplyDelete
  16. என் அழைப்பை ஏற்று உங்கள் சிறந்த கருத்தினை முன்வைத்தமைக்கு
    மிக்க நன்றி ஐயா .முடிந்தால் நீங்களும் பிறரைத் தொடர அழையுங்கள் .
    இன்னும் விரிவான தகவல் அனைவரையும் சென்றடையும் .வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் மென்மேலும் சிறப்புற .

    ReplyDelete
  17. @RAVICHANDRAN said...

    குழந்தை என்றால் பகையும் மறந்துவிடுகிறது.அருமையான பதிவு

    ஆமாம் சார் நன்றி

    ReplyDelete
  18. @RAVICHANDRAN said...

    //இன்றைய குழந்தைகளின் கற்பனை வறட்சி அவர்களது வளர்ச்சியை சிக்கலாக்கவே செய்யும்.//

    ஆராய்ச்சி செய்ய கற்பனைவளம் முக்கியம்.

    சரியாகச் சொன்னீர்கள்,நன்றி

    ReplyDelete
  19. @அம்பாளடியாள் said...

    என் அழைப்பை ஏற்று உங்கள் சிறந்த கருத்தினை முன்வைத்தமைக்கு
    மிக்க நன்றி ஐயா .முடிந்தால் நீங்களும் பிறரைத் தொடர அழையுங்கள் .
    இன்னும் விரிவான தகவல் அனைவரையும் சென்றடையும் .வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் மென்மேலும் சிறப்புற .

    ஆமாம்,விடுபட்டுவிட்டது.மூன்று பேரை அழைத்துவிட்டால் போகிறது.நன்றி

    ReplyDelete
  20. குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுவதில்லை இன்றைய சூழல்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  21. உண்மை தான் இன்றைய தொலைகாட்சிகள் நல்லதை விட தீயதை தான் அதிகம் காட்டுகின்றன...TM 7

    ReplyDelete
  22. பல தகவல்களை மிக அருமையாக பகிர்தமைக்கு மிக்க நன்றி.... நண்பரே...

    ReplyDelete
  23. தொடர்பதிவில்
    அருமையாய் தங்கள் கருத்துகளை விதைத்து
    பதிவை தந்திருக்கிறீர்கள்..
    நன்று நண்பரே..

    ReplyDelete
  24. எத்தனையோ குடும்பங்களில்
    கணவன் மனைவியரிடையே
    ஏற்பட்ட பிரிவு குழந்தை களால்
    ஒன்று சேரும்நிலை நான் அறிவேன்
    தங்கள் பதிவு மிகவும் அருமை!

    த ம ஓ 9

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. அடுத்த உங்கள் பதிவு, குழந்தையாகவே இருக்கலாம் என்ற எண்ணம் வருகிறதே? காரணம் என்ன என்பது குறித்து பதிவுதானே?

    ReplyDelete
  26. @சங்கர் குருசாமி
    @சசிகுமார்
    @ராஜா MVS
    @மகேந்திரன்
    @புலவர் ராமானுஜம்
    @ஓசூர் ராஜன்
    @அமைதிச்சாரல்

    தங்கள் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete