Pages

Sunday, November 20, 2011

பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.


                             பொதுமக்கள் பெரும்பாலானவர்களும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் பேருந்துகள் தொடர்பானது.சுத்தம் இல்லாத பேருந்துகள்,ஓட்டை உடைசல்,மழை வந்தால் உள்ளே கொட்டும்.தூசு அலர்ஜி உள்ள நோயாளிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.அப்புறம் விலை ஏறினாலும் ஏறாவிட்டாலும் எப்போதும் தீராத பிரச்சினை சில்லறை பிரச்சினை.
                             ஒரு ரூபாய்,50 பைசாவெல்லாம் நட்த்துனர்களுக்கு பணமே கிடையாது.யாராவது கேட்டுவிட்டால் அற்பமான புழுவைப்போல பார்ப்பார்கள்.ஆனால் ஒரு ரூபாய் குறைவாக கொடுத்தால் பேருந்தை விட்டு இறக்கி விட்டு விடுவார்கள்.நட்த்துனர்கள் மனப்பாடம் செய்துவிட்ட வார்த்தை’’ மீதி சில்லறை அப்புறம் தருகிறேன்”.சரியான சில்லறை வைத்துக்கொள்ளுங்கள்,என்னிடம் சில்லறை இல்லை!
                             50 பைசா சில்லறை தராத காரணத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு.அடி வாங்கிய,சண்டையை சந்தித்த நட்த்துனர்களும் உண்டு.ஆனால் எல்லோருக்கும் வழக்கு தொடுக்கவும்,சண்டை பிடிக்கவும் நேரம் இருப்பதில்லை.நாம் இதை சில்லியாக எடுத்துக்கொண்டு நகர்ந்துவிடுகிறோம்.
                              நானும் நண்பரும் வெளியூர் பயணத்திற்காக பேருந்து நிலையத்தில் இருந்தோம்.புத்தகம் வாங்கச்சென்று திரும்பினால் நண்பர் வயதான் ஒருவருக்கு பணம் தருவதை பார்த்தேன்.பாட்டி பணம் வாங்கிக் கொண்டு கும்பிடுவிட்டு சென்றார்.பார்த்தால் பிச்சை எடுப்பவர் போல தெரியவில்லை.விசாரித்த பிறகு தெரியவந்த விஷயம்.
                               பாட்டிக்குநான்கு ரூபாய் சில்லறை தரவேண்டும். கண்டக்டர்,சில்லறை இல்லை பேருந்துநிலையத்தில் தருகிறேன் என்று சொல்லிவிட்டார்.பேருந்து நின்ற பிறகு இறங்கிப் பார்த்தால் கண்டக்டர் ஆளையே காணோம்.நகரப்பேருந்து பிடித்து கிராமத்துக்குப் போக வேண்டும்.இரண்டு ரூபாய் குறைவாக இருக்கிறது.காத்திருந்து பார்த்துவிட்டு யாரையாவது கேட்கலாம் என்று கேட்டு விட்டார்.
                                எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.திருப்பத்தூர் சென்றுவிட்டு கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.நூறு ரூபாய்க்கு மீதி சில்லறை பஸ் ஸ்டாண்டில் தருகிறேன் என்று சொல்லிவிட்டார் கண்டக்டர்.இறங்கிப்பார்த்தால் மனிதர் கிடைக்கவில்லை.இறங்கியவுடன் சாப்பிடப் போய்விட்டு அரைமணி கழித்து வந்தார்.கடைசி பஸ்ஸை தவற விட்டுவிட்டேன்.
                                நாங்கள் மட்டும் சில்லறைக்கு எங்கே போவோம் என்று கேட்கிறார்கள்.பயணம் செய்யும் அத்தனை பயணிகளும் எப்போதும் சரியான சில்லறையுடன் செல்ல வேண்டுமா? சாத்தியமான ஒன்றா? புதியதாக ஒரு ஊருக்குப் போகும்போது எவ்வளவு கட்டணம் என்று கேட்டுவிட்டு சில்லறை மாற்றி ஏற முடியுமா? சில இடங்களுக்கு ஒரு மணி,அரைமணி நேர இடைவெளியில்தான் பஸ் இருக்கும்.அவசரத்தில் கடைக்கு ஓடி சில்லறை வாங்கிக் கொண்டிருப்பது கஷ்டம்.
                                கண்டக்டர் தனி நபர் அல்ல.அரசு நிறுவனத்தில் பணியாற்றுபவர்.அரசு வங்கியில் இருந்து பெற்று இவர்களுக்கு சிலநூறு ரூபாய்களுக்கான சில்லறையை வழங்க முடியும்.பேருந்து நிலையத்தில் உள்ள கிளை அலுவலகம் மூலமாகவே வழங்கலாம்.தவிர அரசுப் பேருந்து என்பது அதிக மக்கள் பயன்படுத்தும் விஷயம்.மாதம்தோறும் நுகர்வோர்,அதிகாரிகள் கூட்டங்களை நட்த்தினால் எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்.

36 comments:

  1. தோழர், பேருந்துகளில் வசூலாகும் சில்லறைகள் மறு சுழற்சிக்கு விடப் படுவது கிடையாதாம்.. மூட்டை மூட்டையாய் நாணயங்கள் அனைத்து பேருந்து அலுவலகங்களிலும் கொட்டிக் கிடக்கின்றது என்று ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேருந்து ஊழியர் சங்கம் ஒன்று கூறிக் கொண்டிருந்ததை கேட்டேன்... உண்மையா பொய்யா தெரியவில்லை.. இப்பொழுது என்ன நிலைமை என்றும் தெரியவில்லை.. வங்கிகளிலோ அல்லது கருவூலத்திலோ இந்த சில்லறை நாணயங்களை deposit செய்வதில்லை என்றும் கேள்விப்பட்டேன்..

    ReplyDelete
  2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  3. // நேரம் இருப்பதில்லை.நாம் இதை சில்லியாக எடுத்துக்கொண்டு நகர்ந்துவிடுகிறோம்.//
    இது தான் உண்மை!இதனால் தான் பிரச்சனையே!!

    ReplyDelete
  4. வித்தியாசமானதும், அவசியமானதுமான பார்வை!

    ReplyDelete
  5. @suryajeeva said...

    தோழர், பேருந்துகளில் வசூலாகும் சில்லறைகள் மறு சுழற்சிக்கு விடப் படுவது கிடையாதாம்.. மூட்டை மூட்டையாய் நாணயங்கள் அனைத்து பேருந்து அலுவலகங்களிலும் கொட்டிக் கிடக்கின்றது என்று ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேருந்து ஊழியர் சங்கம் ஒன்று கூறிக் கொண்டிருந்ததை கேட்டேன்... உண்மையா பொய்யா தெரியவில்லை.. இப்பொழுது என்ன நிலைமை என்றும் தெரியவில்லை.. வங்கிகளிலோ அல்லது கருவூலத்திலோ இந்த சில்லறை நாணயங்களை deposit செய்வதில்லை என்றும் கேள்விப்பட்டேன்..

    மறுசுழற்சியில்தான் தரவேண்டும்,சரியாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.நன்றி

    ReplyDelete
  6. பல அனுபவத்தை மீட்டியது போல இருந்துதுங்க...

    சில்லறை இல்லாமல் ஏறினால் ஒரு முழுத் தாள் துண்டு தான்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete
  7. @மைந்தன் சிவா said...

    // நேரம் இருப்பதில்லை.நாம் இதை சில்லியாக எடுத்துக்கொண்டு நகர்ந்துவிடுகிறோம்.//
    இது தான் உண்மை!இதனால் தான் பிரச்சனையே!!

    ஆமாம் சிவா,நன்றி

    ReplyDelete
  8. @Powder Star - Dr. ஐடியாமணி said...

    வித்தியாசமானதும், அவசியமானதுமான பார்வை!

    thanks brother

    ReplyDelete
  9. @♔ம.தி.சுதா♔ said...

    பல அனுபவத்தை மீட்டியது போல இருந்துதுங்க...

    சில்லறை இல்லாமல் ஏறினால் ஒரு முழுத் தாள் துண்டு தான்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா

    நன்றி சகோ!

    ReplyDelete
  10. எனக்கு தெரிந்த கண்டக்டர் சிலர் பிச்சை எடுப்பவரிடம் சில்லறை வாங்கி சமாளிப்பார்கள்.நல்ல பதிவு.

    ReplyDelete
  11. //மாதம்தோறும் நுகர்வோர்,அதிகாரிகள் கூட்டங்களை நட்த்தினால் எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்.//

    பயணிகள் கல்ந்து கொண்டு குறைகளை சொல்ல முடியும் என்பது உண்மை.

    ReplyDelete
  12. @RAVICHANDRAN said...

    எனக்கு தெரிந்த கண்டக்டர் சிலர் பிச்சை எடுப்பவரிடம் சில்லறை வாங்கி சமாளிப்பார்கள்.நல்ல பதிவு.

    நன்றி சார்.

    ReplyDelete
  13. இப்போ அந்தக் கஷ்டம் இல்லைன்னு நினைக்கிறேன்! எல்லாக் கட்டணங்களும் ரவுண்ட் ஆஃப் செய்யப் பட்டு விட்டன. என்ன, கட்டண உயரம்தான் தாங்க முயயவில்லை!

    ReplyDelete
  14. @RAVICHANDRAN said...

    //மாதம்தோறும் நுகர்வோர்,அதிகாரிகள் கூட்டங்களை நட்த்தினால் எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்.//

    பயணிகள் கல்ந்து கொண்டு குறைகளை சொல்ல முடியும் என்பது உண்மை.

    ஆமாம் அய்யா! நன்றி

    ReplyDelete
  15. @ஸ்ரீராம். said...

    இப்போ அந்தக் கஷ்டம் இல்லைன்னு நினைக்கிறேன்! எல்லாக் கட்டணங்களும் ரவுண்ட் ஆஃப் செய்யப் பட்டு விட்டன. என்ன, கட்டண உயரம்தான் தாங்க முயயவில்லை!

    50 பைசாதான் ரவுண்ட் செய்யப்பட்டுள்ளது,ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் என்று சில்லறை தேவைப்படுமே! நன்றி சார்

    ReplyDelete
  16. வெளியே கூட நனைந்திருக்க மாட்டோம். பேருந்திற்குள்தான் மழையே கொட்டும். இதில் பாதிவழியில் தகராறு செய்யும். சில்லறை தகராறு. இதையெல்லாம் இரட்டிப்பான கட்டண உயர்வு சரி செய்யுமா? பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  17. சரியான சில்லரை வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  18. சமூகத்திற்கு தேவையான நல்ல பதிவு

    ReplyDelete
  19. நிர்வாகம் நடத்துனர்களுக்குத் தேவை யான சில்லறை தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  20. நடத்துனர்கள் இதுப் பற்றி அவர்களின் மேல் அதிகாரிகளிடம் பேசியிருந்தால் எப்போதோ ஒரு தீர்வு கிடைத்திருக்கும்...

    ReplyDelete
  21. சில்லறை இல்லையென்று சொல்லி நடத்துனர் ஒரு முறை முறைப்பார் பாருங்கள்.. அந்த கர்ண கொடூரத்தை காண சகிக்காது...
    ஆனாலும் சேரும் சில்லறைகளை மறுசுழற்சியில் விடவேண்டும் என்பது சரியானது...
    அதற்கான வழிமுறையை கண்டறிய வேண்டும்...
    அருமையான பதிவு நண்பரே...

    ReplyDelete
  22. இனிமே சில்லரைப் தகறாறு
    வராது
    அம்மா தான் வந்துட்டாங்களே
    எல்லாமே நோட்டுதான்
    சில்லரைப் தகறாறு தீர்க்கதான்
    கட்டணத்தை உயர்தினாங்க
    வீணா எல்லாம் தப்பா பேசறாங்க!
    த ம ஓ 10

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. பஸ்ஸில் சில்லறை தருவது சில்லறை பிரச்னை இல்லை, பெரிய பிரச்னை

    ReplyDelete
  24. @சாகம்பரி said...

    வெளியே கூட நனைந்திருக்க மாட்டோம். பேருந்திற்குள்தான் மழையே கொட்டும். இதில் பாதிவழியில் தகராறு செய்யும். சில்லறை தகராறு. இதையெல்லாம் இரட்டிப்பான கட்டண உயர்வு சரி செய்யுமா? பகிர்விற்கு நன்றி

    சரி செய்தால் நன்றி சொல்வோமே! நன்றி

    ReplyDelete
  25. @Sankar Gurusamy said...

    சரியான சில்லரை வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    நன்றி சார்

    ReplyDelete
  26. @சசிகுமார் said...

    அருமை...

    நன்றி சார்,ஏழாவது ஓட்டுக்கும்!

    ReplyDelete
  27. @மதுரன் said...

    சமூகத்திற்கு தேவையான நல்ல பதிவு

    நன்றி மதுரன்.

    ReplyDelete
  28. @சென்னை பித்தன் said...

    நிர்வாகம் நடத்துனர்களுக்குத் தேவை யான சில்லறை தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
    நல்ல பகிர்வு.

    ஆமாம் அய்யா! நன்றி

    ReplyDelete
  29. @ராஜா MVS said...

    நடத்துனர்கள் இதுப் பற்றி அவர்களின் மேல் அதிகாரிகளிடம் பேசியிருந்தால் எப்போதோ ஒரு தீர்வு கிடைத்திருக்கும்...

    உண்மைதான் நண்பரே! நன்றி

    ReplyDelete
  30. @மகேந்திரன் said...

    சில்லறை இல்லையென்று சொல்லி நடத்துனர் ஒரு முறை முறைப்பார் பாருங்கள்.. அந்த கர்ண கொடூரத்தை காண சகிக்காது...
    ஆனாலும் சேரும் சில்லறைகளை மறுசுழற்சியில் விடவேண்டும் என்பது சரியானது...
    அதற்கான வழிமுறையை கண்டறிய வேண்டும்...
    அருமையான பதிவு நண்பரே...

    நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  31. @புலவர் சா இராமாநுசம் said...

    இனிமே சில்லரைப் தகறாறு
    வராது
    அம்மா தான் வந்துட்டாங்களே
    எல்லாமே நோட்டுதான்
    சில்லரைப் தகறாறு தீர்க்கதான்
    கட்டணத்தை உயர்தினாங்க
    வீணா எல்லாம் தப்பா பேசறாங்க!

    ஹாஹா நன்றி அய்யா!

    ReplyDelete
  32. @rufina rajkumar said...

    பஸ்ஸில் சில்லறை தருவது சில்லறை பிரச்னை இல்லை, பெரிய பிரச்னை
    ஆமாம்,ஆமாம் நன்றி

    ReplyDelete
  33. மாதம்தோறும் நுகர்வோர்,அதிகாரிகள் கூட்டங்களை நட்த்தினால் எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்./

    அருமையான யோசனை!

    ReplyDelete
  34. வணக்கம் நண்பரே! அருமையான பதிவு! தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete