Pages

Wednesday, November 23, 2011

வாயுத்தொல்லை,அலர்ஜிக்கு பெருங்காயம்.


பெருங்காயம் வாசனைப்பொருளாக சேர்க்கப்படுவதாக பலர் கருதுகிறார்கள்.ஆயுர்வேத மருத்துவத்தில் வாத நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவதுண்டு.நமது பாரம்பர்ய உணவில் சேர்க்கப்படும் பொருட்களுக்கு குறிப்பிட்ட காரணத்தை சொல்வது கடினம்.பெரும்பாலானவை மருத்துவ குணம் கொண்டவை.தவிர்க்க கூடாதவை.
                             அன்று மதியம் இரண்டு மணியை தாண்டிவிட்ட்து.நல்ல பசி.நானும்,பால்யகால நண்பனும் கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.நெடுஞ்சாலையில் ஒரு தாபா ஓட்டலை பார்த்தவுடன் சாப்பிட்டுவிட்டு போகலாமென முடிவு செய்து உள்ளே நுழைந்துவிட்டோம்.உள்ளே போய் உட்கார்ந்தவுடன் நான் பீர் குடிக்கப் போகிறேன் என்றான் நண்பன்.அவன் முடிவு செய்தால் செய்த்துதான்.
                             கூலிங் பீர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அன்று முழுக்க மின் தடையால் பிரச்சினை.நண்பனின் முகம் மாறினாலும் ஆசை மட்டும் போகவில்லை.எரிச்சலுடன் சரி கொடுங்கள் என்று சொல்லிவிட்டான்.குடிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் முகத்தை தடவிக் கொண்டிருந்தான்.எழுந்து போய் கண்ணாடியில் பார்த்துவிட்டு வந்தான்.
                             அப்போதுதான் கவனித்தேன்.முகத்தில் அங்கங்கே லேசாக கொப்புளங்கள் போல வீங்க ஆரம்பித்திருந்த்து.எனக்கு கூலிங் இல்லாமல் பீர் குடித்தால் ஒத்துக்கொள்ளாது என்றான்.எனக்கு பயம் ஏற்பட்டுவிட்ட்து.அவனோ அதிகம் அலட்டிக்கொள்ள வில்லை.ஏற்கனவே அவனுக்கு அனுபவம் இருந்திருக்கிறது.சப்ளையரை அழைத்து பெருங்காயம் இருக்கிறதா?என்று கேட்டான்.
                              சப்ளை செய்பவர் பெருங்காயத்தை தூள் செய்து எடுத்துவந்து கொடுத்தார்.குழம்பில் லேசாக தூவி சாப்பிட ஆரம்பித்தான்.நான் சாப்பிடுவதை விட்டுவிட்டு அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.முகத்தில் இருந்த கொப்புளங்கள் கொஞ்சம்கொஞ்சமாக மறையத்தொடங்கிவிட்ட்து.சாப்பிட்டு முடிப்பதற்குள் முகம் இயல்பான நிலைக்கு வந்துவிட்ட்து.
                                                                    வாயுத்தொல்லை,வயிற்றுப்பொருமல் போன்ற தொல்லைகளுக்கு பெருங்காயத்தை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.கிராமங்களில் வாழைப்பழத்தில் சிறிது பெருங்காயத்தை வைத்து உண்பார்கள்.தோல் அலர்ஜிக்கு பயன்படுத்தப்படுவதை அன்றுதான் நேரில் பார்த்தேன்.
                              பெருங்காயம் மிளகுத்தூள் போன்றவற்றில் சேர்ப்பார்கள்.அப்புறம் ஊறுகாய்களில் முக்கிய பொருளாக இருக்கிறது.சீக்கிரம் கெட்டுப்போகாது என்று சொல்வார்கள்.நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல் புரியும் தன்மை இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.
                                மரபு சார்ந்து நம்முடைய உணவுப் பொருளில் சேர்க்கப்படுபவற்றை இந்த காரணத்திற்காக என்று வரையறுப்பது கஷ்டம்.பெரும்பாலானவை மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன.முன்னோர்கள் தங்களது ஆரோக்கியத்தை உணவுப்பொருட்களில் கொண்டிருந்தார்கள்.
                                 இந்திய மருத்துவ முறைகளுக்கு அப்பாற்பட்டும் கூட பாட்டி வைத்தியம் பரவலாக பலன் தருவதாக இருப்பதை அறிய முடிகிறது.வரும் காலங்களில் ஒவ்வொன்றுக்குமான அறிவியல் காரணங்களை மேலை நாடுகளில் ஆராய்ச்சி செய்து நமக்கு வழங்குவார்கள்.அவர்களே காப்புரிமை பெற்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது.

22 comments:

  1. மேலை நாட்டினர் காப்புரிமை பெற்றவுடன், பெருங்காயத்தின் விலையும் பல மடங்கு அதிகரித்துவிடும்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. //அவர்களே காப்புரிமை பெற்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது.//
    நடக்க வாய்ப்புகள் அதிகம்தான்.
    பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  3. @Sankar Gurusamy said...

    மேலை நாட்டினர் காப்புரிமை பெற்றவுடன், பெருங்காயத்தின் விலையும் பல மடங்கு அதிகரித்துவிடும்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    கருத்துரைக்கு நன்றி சங்கர்.

    ReplyDelete
  4. @சென்னை பித்தன் said...

    //அவர்களே காப்புரிமை பெற்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது.//
    நடக்க வாய்ப்புகள் அதிகம்தான்.
    பயனுள்ள பகிர்வு.

    நன்றி அய்யா!

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு...

    நாமக்கு தான் தாரால மனமாச்சே...
    கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

    வேப்பிலையும், மஞ்சலும் விளையாத நாட்டுக்காரன் காப்புரிமை பெற்றுவிடுகிறான்...

    ReplyDelete
  6. @ராஜா MVS said...

    பயனுள்ள பதிவு...

    நாமக்கு தான் தாரால மனமாச்சே...
    கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

    வேப்பிலையும், மஞ்சலும் விளையாத நாட்டுக்காரன் காப்புரிமை பெற்றுவிடுகிறான்...

    சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! நன்றி

    ReplyDelete
  7. உண்மைதான் நண்பரே! பெருங்காயம் வாயுத்தொல்லைக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.அலர்ஜி விஷயம் புதியது.

    ReplyDelete
  8. இந்தியாவில் எவ்வளவோ இருக்கிறது.ஆராய்ச்சிதான் இல்லை.நல்ல பதிவு.

    ReplyDelete
  9. என்னய்யா செய்ய..
    விதை போட்டவன் ஒருத்தன்
    அறுவடை செய்பவன் வேறொருத்தன்..
    இதுதானே இங்கே நடக்குது...
    பெருங்காயம் எவ்வளவு பெரிய மருத்துவகுணம் அடங்கிய
    பொருள் என்பதை நாம் அறிவதற்குள் அதன் தோற்றம் நமக்கு தெரியாமல் போய்விடும்போல...
    அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  10. @RAVICHANDRAN said...

    உண்மைதான் நண்பரே! பெருங்காயம் வாயுத்தொல்லைக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.அலர்ஜி விஷயம் புதியது.

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. @RAVICHANDRAN said...

    இந்தியாவில் எவ்வளவோ இருக்கிறது.ஆராய்ச்சிதான் இல்லை.நல்ல பதிவு.

    உண்மைதான் ஆராய்ச்சி வளர்ந்தால்தான் அறிவியல்ரீதியாக மருத்துவகுணம் கண்டறியப்பட்டு ஏற்றுக்கொள்ள முடியும்,நன்றி

    ReplyDelete
  12. @மகேந்திரன் said...

    என்னய்யா செய்ய..
    விதை போட்டவன் ஒருத்தன்
    அறுவடை செய்பவன் வேறொருத்தன்..
    இதுதானே இங்கே நடக்குது...
    பெருங்காயம் எவ்வளவு பெரிய மருத்துவகுணம் அடங்கிய
    பொருள் என்பதை நாம் அறிவதற்குள் அதன் தோற்றம் நமக்கு தெரியாமல் போய்விடும்போல...
    அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ஆம் நண்பரே நன்றி

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு.. உடல் அலர்ஜிக்கு பெருங்காயம் சாப்பிடுவது இன்று தான் கேள்விபட்டுயிருக்கேன்.. வெளிநாட்டினர் காப்புரிமை பெற்றவுடன், பெருங்காயத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிடும்..:-((

    ReplyDelete
  14. வணக்கம் அண்ணே,
    நல்லா இருக்கிறீங்களா?

    அருமையான பதிவினைச் சம்பவ விளக்கதோடு தந்திருக்கிறீங்க.

    பெருங்காயத்திலும் இப்படியோர் மருத்துவ - மகத்துவா குணமா என இன்று தான் அறிந்து கொண்டேன்!


    மிக்க நன்றி அண்ணா.

    ReplyDelete
  15. அலர்ஜிக்கு பெருங்காயம் உபயோகிக்கலாம் என்பது புதிய தகவல். நன்றி

    ReplyDelete
  16. அலர்ஜிக்கு என்பது பாலா சொன்னது போல் புதிய தகவல் தான்..பயனுள்ள பதிவு எனச் சொல்வதோடு விட்டு விடாமல் பயன்படுத்தவும் தொடரனும்..

    ReplyDelete
  17. அப்பல்லாம் உணவே மருந்தா தான் சாப்பிட்டு வந்தாங்க இப்பத்தான் தலைகீழா மாறிடுச்சு.
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. அல‌ர்ஜிக்கும் ம‌ருந்தாகுமென்ப‌து புதிய‌ த‌க‌வ‌ல்தான். ந‌ண்ப‌ரின் அனுப‌வ‌ அறிவு ந‌ல்ல‌ முன்னுதார‌ண‌ம். எந்த‌ இடையூறும் வ‌ழி தெரிந்திருந்தால் எளிதில் க‌ட‌ந்துவிட‌ முடிகிற‌தே!

    ReplyDelete
  19. நல்ல குறிப்புகள் சார்...

    ReplyDelete
  20. நம் காயம் உருப்பட பெருங்காயம்
    இவ்வளவு வேலை செய்கிறதா ?
    நேரில் கண்ட அனுபவப் பதிவு
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete