Pages

Friday, November 25, 2011

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்


                                நாம் வளமாகவும் நலமாகவும் இருக்க எண்ணுகிறோம்.பணம் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்கிறோம்.உடலையும் மனதையும் புதுப்பித்துக்கொள்ள தூங்குகிறோம்.பணம் சம்பாதிப்பது,சாப்பிடுவது,தூங்குவது இதையெல்லாம் தாண்டி பொழுதுபோக்கு என்று இருக்கவே செய்கிறது.
                                ஓய்வும் கிடைக்கத்தான் செய்கிறது.சில நேரங்களில் நேரம் சலிப்படையச் செய்கிறது.போர் அடிக்கிறது என்று சொல்வோம்.அப்போது ஒவ்வொருவரும் சில செயல்களை செய்கிறார்கள்.சிலருக்கு புத்தகம்,சிலருக்கு இசை,தொலைக்காட்சி,சினிமா,நண்பர்கள்,இணையம் என்று பலவாறாக உண்டு.

                                பொழுதுபோக்கு என்று இவற்றை சொல்கிறோம்.ஆனால் உற்று கவனித்தால் மொத்த வாழ்க்கையும் பொழுதை போக்குவதுதான் என்று தோன்றுகிறது.போகட்டும்.இந்த பொழுது போக்குகள் ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு  மாதிரி எப்படி உருவாகின்றன? அவரவர் வாழ்ந்து வந்த சூழல் இதை பெருமளவு தீர்மானிக்கிறது.
                                 வாழ்வில் பொழுதுபோக்குகள் செலுத்தும் ஆதிக்கம் மிக அதிகம்.ஒருவரை சிறப்பாக செயல்பட்த் தூண்டுவதிலும்,நல்ல உறவுகளை வளர்ப்பதிலும் இவை பெருமளவு பங்கு வகிக்கின்றன.நல்ல இசை கேட்பதை பொழுதுபோக்காக கொண்டவர் அமைதியான மனநிலையை பெறுகிறார்.நல்ல மனநிலை உற்சாகமாகவும்,சிறப்பாகவும் செயல்புரியத் தூண்டுகிறது.
                                 புத்தகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம் இருக்கிறதா என்ன? வாசிப்புப் பழக்கம் என்பது வரம்.மனிதனை சீர்படுத்துவதிலும்,ஆளுமையை உருவாக்குவதிலும்,நல்ல உணர்வுகளை மேம்படுத்துவதிலும் புத்தகத்திற்கு நிகர் வேறெதுவுமில்லை.இன்றைய வாசிப்பு புத்தகம்,தாண்டி இணையத்தில் விரிந்து நிற்கிறது.
                                   சினிமா,தொலைக்காட்சி போன்றவையே இன்றைய அதிகமான மக்களின் பொழுதுபோக்கு.சீரியல்கள் நல்ல உணர்வுகளை வளர்ப்பதாக நான் நம்பவில்லை.நல்ல சினிமாவும்,மோசமான சினிமாவும் இருக்கின்றன.தொலைக்காட்சியில் நகைச்சுவை,செய்திகள் என்று பலவாறாக கிடைக்கிறது.
                                  இன்னும் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்ல்லாம். ஒவ்வொரு பொழுதுபோக்கும் ஏதோவொரு வித்த்தில் நம் அன்றாட செயல்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.நல்ல பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்வதில் நமது வெற்றியும் மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது.எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரம் அன்றாட செயல்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
                                  நல்ல பொழுதுபோக்கு கொண்ட குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.சந்தேகம் எதுவும் வேண்டாம்.குழந்தைகளுக்கு பாடப் புத்த்கங்களைத் தாண்டி வாசிப்பு பழக்கத்தை உருவாக்கலாம்.நாம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு அவர்களிடம் அந்த பழக்கத்தை வளர்க்க முடியாது.
                                

25 comments:

  1. நண்பர்களோடு வெளியில் சுற்றும் சுகமே தனி ! ஆனால் வெளிநாடு வாழ்க்கையில் அது எல்லாம் இல்லவே இல்லை எனலாம் .... !

    ReplyDelete
  2. ஒருவரை சிறப்பாக செயல்பட்த் தூண்டுவதிலும்,நல்ல உறவுகளை வளர்ப்பதிலும் இவை பெருமளவு பங்கு வகிக்கின்றன

    நல்ல பொழுதுபோக்கு கொண்ட குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்

    அருமையான ஆக்கம் வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. சார் தினமும் வெவ்வேறான தலைப்புகள் அதற்க்கான தெளிவான அறிவுரைகள்... சூப்பர் சார்... உங்களுடைய பதிவுகள் தினமும் தவறாமல் படிக்கும் பத்திர்க்கை போல பழக்கம் வந்துவிட்டது... நன்றி.. TM -

    ReplyDelete
  4. ஆம் நல்ல பொழுதுபோக்குகள் மனிதனை நிறைவுடையவனாக்கும்

    ReplyDelete
  5. நிச்சயமாக ஒரு மனிதனுக்கு பொழுதுபோக்கு மிக அவசியமாகிறது

    ReplyDelete
  6. நல்ல புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது மிக நல்லது...

    ReplyDelete
  7. அன்புநிறை நண்பரே,
    இன்றைய காலகட்டத்தில் தேவையான அறிவுரை..
    தொலைக்காட்சிக்குள் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறோம்
    நம் சந்ததிகளையும் அங்கே தொலைத்துக்கொண்டிருக்கிறோம்..

    குறைந்தபட்சம் விழாக்களிலும் சம்பவங்களிலும் புத்தகங்களை பரிசாக கொடுப்பதை வழக்கமாக கொள்வோம்..
    அவர்களுக்கு மனதுக்கு பிடித்த கலைகளை செய்யச் சொல்லி ஊக்குவிப்போம்..

    தங்களின் பேராண்மைமிக்க விழிப்புணர்வுப் பதிவுகளுக்கு
    சிரம்தாழ்ந்த நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
  8. @துரைடேனியல் said...

    Puthagankal than en choice. Arumai.

    என்னுடைய சாய்ஸும் அதுவே! நன்றி சார்.

    ReplyDelete
  9. @இக்பால் செல்வன் said...

    நண்பர்களோடு வெளியில் சுற்றும் சுகமே தனி ! ஆனால் வெளிநாடு வாழ்க்கையில் அது எல்லாம் இல்லவே இல்லை எனலாம் .... !

    சகோ! வருக வருக!வெளிநாட்டு வாழ்க்கையில் இல்லைதான்.புத்தகங்கள்தான் வழி!நன்றி

    ReplyDelete
  10. நல்ல பொழுதுபோக்கு நிச்சயம் தேவையே!நன்று.

    ReplyDelete
  11. @இராஜராஜேஸ்வரி said...

    ஒருவரை சிறப்பாக செயல்பட்த் தூண்டுவதிலும்,நல்ல உறவுகளை வளர்ப்பதிலும் இவை பெருமளவு பங்கு வகிக்கின்றன

    நல்ல பொழுதுபோக்கு கொண்ட குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்

    அருமையான ஆக்கம் வாழ்த்துகள்..

    தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. @சசிகுமார் said...

    சார் தினமும் வெவ்வேறான தலைப்புகள் அதற்க்கான தெளிவான அறிவுரைகள்... சூப்பர் சார்... உங்களுடைய பதிவுகள் தினமும் தவறாமல் படிக்கும் பத்திர்க்கை போல பழக்கம் வந்துவிட்டது... நன்றி.. TM -

    தொடர் வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  13. @அம்பலத்தார் said...

    ஆம் நல்ல பொழுதுபோக்குகள் மனிதனை நிறைவுடையவனாக்கும்

    ஆமாம் அய்யா!சினிமா என்ற பொழுதுபோக்குதான் தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றியது.நன்றி

    ReplyDelete
  14. @மதுரன் said...

    நிச்சயமாக ஒரு மனிதனுக்கு பொழுதுபோக்கு மிக அவசியமாகிறது

    ஆமாம் சார்,நன்றி

    ReplyDelete
  15. @திண்டுக்கல் தனபாலன் said...

    அருமையான பதிவு...நன்றி!

    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  16. @ராஜா MVS said...

    நல்ல புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது மிக நல்லது...

    ஆமாம் ராஜா நன்றி

    ReplyDelete
  17. @மகேந்திரன் said...

    குறைந்தபட்சம் விழாக்களிலும் சம்பவங்களிலும் புத்தகங்களை பரிசாக கொடுப்பதை வழக்கமாக கொள்வோம்..
    அவர்களுக்கு மனதுக்கு பிடித்த கலைகளை செய்யச் சொல்லி ஊக்குவிப்போம்..

    தங்கள் கருத்து நன்று.நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. @சென்னை பித்தன் said...

    நல்ல பொழுதுபோக்கு நிச்சயம் தேவையே!நன்று.

    நன்றி அய்யா!

    ReplyDelete
  19. அழகிய படங்களுடன் கூடிய கருத்துள்ள பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. பொழுதுபோக்கு என பெற்றோர் செய்வதையே பெரும்பாலும் குழந்தைகள் பழகுகிறார்கள்

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  21. படிப்பதும் கவிதை எழுதுவதும்
    ஆகிய இரண்டுமே இணைய வழி
    என்ற நிலையே என் பொழுது
    போக்கு!

    த ம ஓ 8


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு மிகவும் தேவையானது. ஒரு விசயம் அடுத்ததை தேட வைக்கும். இது போன்ற தேடல்கள்தான் அவர்களை நல்ல மனிதர்களாக்கும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete