Pages

Sunday, December 4, 2011

தாயத்து கட்டினால் துன்பம் தீருமா?


                               மந்திரம் சொன்ன தாயத்து என்று சொல்வார்கள்.செப்புத்தகட்டை சுற்றி கையிலோ,அரைஞாண் கயிற்றிலோ கட்டியிருப்பார்கள்.சிலரிடம் பார்த்திருக்கிறேனே தவிர நானோ,எங்கள் குடும்பத்திலோ கட்டி பார்த்திருக்கவில்லை.பெரும்பாலும் இடுப்பில் இருக்கும் என்பதால் கவனிக்க வாய்ப்பில்லை.
                               மச்சான் ஒருவனுக்கு போலீஸ் வேலை கிடைத்த்து.ரத்த சம்பந்தமான உறவினர் அல்ல! கிராமங்களில் மாமன்,மச்சான் என்று வேறு சமூகமாக இருந்தாலும் அப்படி உறவு முறை சொல்லி அழைப்பது வழக்கம்.பயிற்சிக்கு போன பிறகு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று என்னிடம் சொன்னான்.நான் யோசிக்காமல் அவனுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

                               தன் பையனுக்கு கஷ்டம் என்ற வார்த்தை ஒரு தாயிடம் ஏற்படுத்திய உணர்வுகளை அப்போதுதான் நேரில் பார்க்கிறேன்.கண்ணில் நீர் கசிய ஆரம்பித்துவிட்ட்து.அடுத்த நாள் மாலை என்னை தேடிக்கொண்டு வந்துவிட்டார்.அவனுக்கு ஒரு லட்டர் போட வேண்டும்’’ என்றார்.விடியற்காலை எழுந்துபோய் இதை செய்துகொண்டு வந்தேன்.”.அவர் கையில் ஒரு தாயத்து.இதை அவனுக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
                                எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரை விமர்சிக்க விரும்பவில்லை.எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.இந்த காலத்துப் பசங்களுக்கு இதெல்லாம் புரியாது என்றார்.சரி நான் அனுப்பிவிடுகிறேன் என்றேன்.” ”ஒரு வாரத்திற்கு அசைவம் சாப்பிடக்கூடாது, கோயிலில் போய் பூசை செய்து அப்புறம் கட்டவேண்டும்.மறக்காமல் எழுதி அனுப்பவேண்டும்

                                 பணத்தையும் தாயத்தையும் கொடுத்துவிட்டு போய்விட்டார்.எனக்கு என்னென்னவோ யோசனை.அவருக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது யாராக இருக்கும்? அவருடைய அம்மா அல்லது குடும்பம்,சமூகம்.வழிவழியாக வந்து கொண்டிருக்கிறது.எதிராக பேசினால் நம்மை மோசமாக கூட விமர்சிப்பார்கள்.நான் அதை கூரியர் தபாலில் அனுப்பிவிட்டேன்.
                                   போலீஸ்கார மச்சான் என்னிடம்’’ அவங்கதான் ஏதோ சொல்றாங்கன்னா நீ என்னடா?’’ .ஆனால் நான் என்ன செய்யமுடியும்.அவனது தாய் அப்போதுதான் நிம்மதி அடைவார்.அவரது ஆறுதல்தான் பெரிய விஷயம்.இப்போது துக்கம்,விழாக்கள் போன்றவற்றில் பல சடங்குகள் இருக்கின்றன்.மெத்தப்படித்தவர்கள்,அதிகாரிகள் எல்லாம் சடங்குகளை செய்கிறார்கள்.பிடிக்கிறதோ,இல்லையோ பெற்றோருக்காக,சமூகத்திற்காக செய்து கொண்டிருக்கிறார்கள்.

                                  தாயத்து போன்ற விஷயங்களெல்லாம் நம்பிக்கைதான்.மூட நம்பிக்கை என்று வைத்துக் கொள்வோம்.கட்டிய பிறகு எதிர்பார்த்த விளைவுகள் நடப்பதும் சாத்தியம்தான்.இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா? என்ற பதிவிலும் ஓரளவு சொல்லியிருக்கிறேன்.
                                  இன்று பேருந்தில் வரும்போது பார்த்தேன்.பலர் கைக்குழந்தையுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.தாயத்து கட்டுவதற்காக நிற்கிறார்களாம்.குழந்தைகளுக்கு அதிகமாக கட்டுவதாக சொன்னார்கள்.குழந்தைகள் தங்களுடைய பிரச்சினைகளை விளக்கி சொல்லமுடியாது.சத்துக்குறைபாடோ,தலைவலியோ,உடல்வலியோ சோர்வாக இருக்கும்.தாயத்து கட்டவேண்டும் என்று யாராவது வழி காட்டுகிறார்கள்.
                                  போலீஸ்காரன் விஷயத்தை விட்டுவிட்டேன்.விடுமுறையில் வந்திருந்தான்.என்னைப்பார்த்து வெகுநேரம் பேசிவிட்டு போனான்.இப்போது பழகிப்போய்விட்ட்தாம்.அவனுடைய அம்மா மாலை என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்தார்.ஏதோ இனிப்பு,இப்போது சரியாக  நினைவில்லை.எனக்கு கொடுத்துவிட்டு சொன்னார்.’’அவனுக்கு பிடிக்கும் என்று செய்தேன்,அந்த தாயத்தை அவன் கழுத்தில் கட்டியிருக்கிறான்,நான் பார்த்தேன் என்றார்.அவர் சந்தோஷமாக இருந்தார்.

26 comments:

  1. அருமையா சொல்லி போறீங்க பாஸ்... சூப்பர்

    ReplyDelete
  2. .இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா? <<<<<<<<<<<<<<<<

    ரெம்ப ரசித்தேன்.... அங்கே மருந்து நம்பிக்கைதான் பாஸ்.

    ReplyDelete
  3. @துஷ்யந்தன் said...

    அருமையா சொல்லி போறீங்க பாஸ்... சூப்பர்

    நன்றி பாஸ்

    ReplyDelete
  4. @துஷ்யந்தன் said...

    .இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா? <<<<<<<<<<<<<<<<

    ரெம்ப ரசித்தேன்.... அங்கே மருந்து நம்பிக்கைதான் பாஸ்.

    ஆமாம் துஷ்யந்தன் நன்றி

    ReplyDelete
  5. //இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா? <<<<<<<<<<<<<<<<//

    இனி சரியாகப் போகும் என்ற நம்பிக்கையே பாதி குணப்படுத்திவிடும் சரியாக சொன்னீங்க..இது படித்த படிக்காத என்று பராபட்சமின்றி எல்லாரும் நம்புவதே..காரணம் அந்த சூழல் நம்பச் செய்கிறது..என்னையும் சேர்த்தே சொல்கிறேன்..

    ReplyDelete
  6. இது ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமே... அந்த நம்பிக்கைக்கு பலனும் பல நேரங்களில் இருக்கிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  7. நம்பிக்கை பாதி மருந்துதான் மீதி
    இதில் சற்றும் ஐயமில்லை!
    இது நான் அனுபவப் பூர்வமாகக் கண்ட உண்மை!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. தாயத்து முக்கியம் இல்லையென்றாலும் அதன் மீதுள்ள நம்பிக்கையால் நல்லது நடந்தால் நல்லது தானே...


    வாசிக்க:
    நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

    ReplyDelete
  9. நம்பிக்கையே அவர்களை பாதி குணமாக்கி விடுகிறது...

    ReplyDelete
  10. படிச்சவங்க பகுத்தறிவு பேசறோம்.
    பாமரர்கள்?

    நம்பிக்கை தானே அண்ணே வாழ்க்கை.

    ReplyDelete
  11. வணக்கம் அண்ணே,
    மனித மனங்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தான் இன்றைய காலத்தில் உள்ளோரால் மூட நம்பிக்கைகள் விரும்பியும், விரும்பாமலும் பின்னப்பற்றப்படுகின்றன என்பதனை அருமையான உதாரண விளக்கத்துடன் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  12. @தமிழரசி said...

    //இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா? <<<<<<<<<<<<<<<<//

    இனி சரியாகப் போகும் என்ற நம்பிக்கையே பாதி குணப்படுத்திவிடும் சரியாக சொன்னீங்க..இது படித்த படிக்காத என்று பராபட்சமின்றி எல்லாரும் நம்புவதே..காரணம் அந்த சூழல் நம்பச் செய்கிறது..என்னையும் சேர்த்தே சொல்கிறேன்..

    உண்மைதான்.அப்போதைக்கு எப்படியாவது கஷ்டத்திலிருந்து வெளிவந்தால் போதும் என்றே நினைக்க முடியும்.நன்றி.

    ReplyDelete
  13. @Sankar Gurusamy said...

    இது ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமே... அந்த நம்பிக்கைக்கு பலனும் பல நேரங்களில் இருக்கிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ஆமாம்,நம்பிக்கையே மாபெரும் சக்தி.

    ReplyDelete
  14. @புலவர் சா இராமாநுசம் said...

    நம்பிக்கை பாதி மருந்துதான் மீதி
    இதில் சற்றும் ஐயமில்லை!
    இது நான் அனுபவப் பூர்வமாகக் கண்ட உண்மை!

    ஆமாம் அய்யா! நன்றி.

    ReplyDelete
  15. @ராஜா MVS said...

    அலசல் அருமை...

    ஆமாம் சார்,நன்றி.

    ReplyDelete
  16. ஜெமினி கணேசன் நடித்த மாமன் மகள் என்ற படம் பார்த்திருக்கிறீர்களா? சும்மா எதையோ கட்டிக் கோழை ஜெமினியை வீரனாக்கி விடுவார் அவர் பாட்டி!

    ReplyDelete
  17. @தமிழ்வாசி பிரகாஷ் said...

    தாயத்து முக்கியம் இல்லையென்றாலும் அதன் மீதுள்ள நம்பிக்கையால் நல்லது நடந்தால் நல்லது தானே...

    ஆமாம் சார்,நல்லது நடந்தால் நடந்ததே! நன்றி

    ReplyDelete
  18. @திண்டுக்கல் தனபாலன் said...

    நம்பிக்கையே போதும்.

    ஆமாம் சார் நன்றி

    ReplyDelete
  19. @சசிகுமார் said...

    நம்பிக்கையே அவர்களை பாதி குணமாக்கி விடுகிறது...
    ஆமாம் நிறைய விஷயங்களுக்கு பொருந்தும்.நன்றி

    ReplyDelete
  20. @சத்ரியன் said...

    படிச்சவங்க பகுத்தறிவு பேசறோம்.
    பாமரர்கள்?

    நம்பிக்கை தானே அண்ணே வாழ்க்கை.

    ஆம் சத்ரியன் வழிவழியாக வரும் நம்பிக்கைதான் பாமரர்களின் வழி,நன்றி

    ReplyDelete
  21. @நிரூபன் said...

    வணக்கம் அண்ணே,
    மனித மனங்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தான் இன்றைய காலத்தில் உள்ளோரால் மூட நம்பிக்கைகள் விரும்பியும், விரும்பாமலும் பின்னப்பற்றப்படுகின்றன என்பதனை அருமையான உதாரண விளக்கத்துடன் சொல்லியிருக்கிறீங்க.

    திருப்திப்படுத்த என்று சொல்லமுடியாது.நம்பிக்கை வேலை செய்கிறது.நன்றி

    ReplyDelete
  22. @சென்னை பித்தன் said...

    ஜெமினி கணேசன் நடித்த மாமன் மகள் என்ற படம் பார்த்திருக்கிறீர்களா? சும்மா எதையோ கட்டிக் கோழை ஜெமினியை வீரனாக்கி விடுவார் அவர் பாட்டி!

    பார்த்தேனா என்று சரியாக நினைவில்லை ஆனால் சாத்தியம்தான் நன்றி அய்யா!

    ReplyDelete
  23. Kai-yil periya Kai NAMBIKKAI than Sago. Arumaiyana pathivu. Naan kanda sirantha pathivarkalil Neengalum oruvar Sago. Thodarnthu kalakkunga.

    ReplyDelete