Pages

Tuesday, December 20, 2011

எலுமிச்சைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?


புத்தாண்டு இன்னும் சில பதிவுகளுக்குள் வந்துவிடும்.முக்கியமானவர்களை சந்திக்க போக வேண்டுமானால் வெறும் கையோடு போக முடியாது.நமக்கு எப்போதும் எலுமிச்சைதான் வசதி.கல்யாணம்,கோயில் என்று பயணம் கிளம்புகிறார்கள். சக்கரத்தின் அடியில் எலுமிச்சை வைக்கிறார்கள்.அருள்வாக்கு இல்லாத பகுதிகள் குறைவு.பெரும்பாலும் எலுமிச்சம்பழத்தை மந்தரித்து தருகிறார்கள்.
                                எலுமிச்சைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அப்படி என்ன இருக்கிறது அந்த சிறிய பழத்தில்? இத்தனைக்கும் புளிப்பு.சுவைக்கு காரணம் அதில் உள்ள அமிலம்.அஸ்கார்பிக் அமிலம் என்று சொல்வார்கள்.உயிர்ச்சத்து(vitamin) சி குறிப்பிட்த்தக்க அளவு இருக்கிறது.வாசனைப்பொருளாக உணவில் சேர்க்கும் பொருளாக மதிப்பு பெற்று விளங்குகிறது.
                                 இந்தியாவின் பெருவாரியான மக்களுக்கும் நுண் ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு பிரச்சினை.அதிலும் சி வைட்டமின் உடலில் சேர்வது மிக குறைவு.இச்சத்து அதிகம் உள்ள சிட்ரஸ் வகை பழங்களில் ஏழைகள் அதிகம் நுகர வாய்ப்புள்ளது எலுமிச்சை மட்டுமே! மற்றவை எல்லா கிராமங்களிலும் கிடைக்கும் பழங்கள் அல்ல!
                                  குளிர்பானம் என்றால் கூட ஏழைகளுக்கு எலுமிச்சைதான் தேர்வு.மற்றவை விலை அதிகம்.வெயிலுக்கு வீட்டில் உடனடியாக தயாரிக்க முடியும் குளிர்பானமும் இதுதான்.எலுமிச்சை சாதம் எளிய தயாரிப்பு.ஊறுகாய் பலருக்கு பிடித்தமான பொருள்.இப்படி குறைந்த விலையில் முழு ஆரோக்கியம் எலுமிச்சை ஒன்றால்தான் சாத்தியம். 
                                  நாம் வெயில் காலத்தில்தான் எலுமிச்சையை நாடுவோம்.குளிர்ச்சி என்பதால் நல்லது என்பது நம் எண்ணம்.ஆனால் குளிர்காலத்தில் பயன்படுத்துவது அதைவிடவும் நல்லது.இப்பருவத்தில் தோல்நோய்கள் அதிகம்.தோலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அதிக அளவு சி வைட்டமின் பரிந்துரைக்கப்படுகிறது.தவிர இப்போது ஒரு லெமன் ஜூஸ் குடித்தால் பழத்தின் முழுப்பயன் கிடைக்க வாய்ப்புண்டு.
                                  வெயில் காலத்தில் கடைகளில் குடிக்கும் எலுமிச்சை பானத்திலும்,சாதம் போன்றவற்றிலும் வெறும் வாசனை மட்டுமே இருக்கும்.விலை காரணமாகவும் அதிக நுகர்வு காரணமாகவும் கடை வைத்திருப்பவர்கள் அப்ப்டித்தான்! குளிர் காலத்தில் நிஜமாகவே லெமன் இருக்க வாய்ப்புண்டு.பலனும் அதிகமாக இருக்கும்.எனக்கு ஜலதோஷம் வந்து விடும் என்பவர்கள் தவிர்த்துவிடலாம்.
                                 உண்மையில் எலுமிச்சை ஜலதோஷத்தை தடுக்கவே செய்யும்.போதுமான அளவு சி வைட்டமின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மூலமாக இந்நோய்களை விரட்டும்.எனவே குளிர் காலத்திற்கும் ஏற்ற முக்கியமான கனி எலுமிச்சை.ஏதோ ஒரு வித்த்தில் உணவில் சேர்க்கலாம்.
                                  எலுமிச்சம்பழத்தை தலைக்கு தேய்த்து குளிஎன்று கிண்டலாக சொல்வார்கள்.பித்துப் பிடித்தவன் என்று கலாய்ப்பதற்காக நண்பர்கள் சொல்வது.தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு போய் சுத்தமாக ஆகி விடும்.ஆனால் உண்மையில் பித்துப் பிடித்தவன் போல இருப்பவனை உற்சாகமாக்கு சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
                                    இப்பழத்தில் உள்ள வைட்டமின் இரும்புச் சத்து கிரகிக்க உதவுகிறது.போதுமான அளவு இரும்புச்சத்து சோர்வின்றி செயல்பட அவசியமான தேவை.மலச்சிக்கல்,சில வயிற்றுக்கோளாறுகளுக்கும் அருமருந்து.ஏழைகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்ற கனி இது.உள்ளே  விஷயம் இல்லாமலா இந்தளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும்?

40 comments:

  1. எலுமிச்சையின் சிறப்பு பற்றி அழகாகச் சொன்னீர்கள்.
    த.ம.2

    ReplyDelete
  2. அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் அண்ணே,
    நல்லா இருக்கிறீங்களா?
    எலுமிச்சையின் சிறப்பு, எலுமிச்சையினால் கிடைக்கும் பயன்களை, அதன் மருத்துவ குணத்தினை விளக்கி அருமையான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க!
    நன்றி அண்ணே.

    ReplyDelete
  4. @சென்னை பித்தன் said...

    எலுமிச்சையின் சிறப்பு பற்றி அழகாகச் சொன்னீர்கள்.

    நன்றி அய்யா!

    ReplyDelete
  5. @நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    நன்றி சார்!

    ReplyDelete
  6. @நிரூபன் said...

    வணக்கம் அண்ணே,
    நல்லா இருக்கிறீங்களா?
    எலுமிச்சையின் சிறப்பு, எலுமிச்சையினால் கிடைக்கும் பயன்களை, அதன் மருத்துவ குணத்தினை விளக்கி அருமையான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க!
    நன்றி அண்ணே.

    நன்றி நிரூ!

    ReplyDelete
  7. எலுமிச்சை எனக்கு பிடித்தமான ஒன்று:)

    ReplyDelete
  8. @mazhai.net said...

    எலுமிச்சை எனக்கு பிடித்தமான ஒன்று:)

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  9. குளிர் காலங்களிலும் சேர்க்கலாம் என்பது சரியாகவே படுகிறது.

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  11. எலுமிச்சையின் பலன்களும்
    அதன் பயன்களும் மிக அருமையாக
    சொல்லியமைக்கு நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
  12. பாஸ் எலும்பிச்சம் பழத்தில் இவ்ளோ மேட்டர் இருக்கா??
    ரெம்ப ஆச்சரியமான தகவல்கள் பாஸ்.
    நான் பிரான்ஸ் வந்ததில் இருந்து உதை பயன் படுத்தவே இல்லை... :(
    உங்கள் பதிவை படித்ததில் இருந்து அதை இனி பயன் படுத்தனும் போலவே இருக்கு.......
    இனி கடைக்குப்போனால் வேண்டணும் :)

    ReplyDelete
  13. @RAVICHANDRAN said...

    குளிர் காலங்களிலும் சேர்க்கலாம் என்பது சரியாகவே படுகிறது.

    ஆமாம் சார்,நன்றி

    ReplyDelete
  14. @RAVICHANDRAN said...

    பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

    தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  15. அருமருந்தாய்த் திகழும் எலுமிச்சைப் படத்தைப் பார்க்கும் போதே எழுகிறது இச்சை!

    ReplyDelete
  16. @மகேந்திரன் said...

    எலுமிச்சையின் பலன்களும்
    அதன் பயன்களும் மிக அருமையாக
    சொல்லியமைக்கு நன்றிகள் பல நண்பரே.

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. @துஷ்யந்தன் said...

    பாஸ் எலும்பிச்சம் பழத்தில் இவ்ளோ மேட்டர் இருக்கா??
    ரெம்ப ஆச்சரியமான தகவல்கள் பாஸ்.
    நான் பிரான்ஸ் வந்ததில் இருந்து உதை பயன் படுத்தவே இல்லை... :(
    உங்கள் பதிவை படித்ததில் இருந்து அதை இனி பயன் படுத்தனும் போலவே இருக்கு.......
    இனி கடைக்குப்போனால் வேண்டணும் :)

    நிச்சயம் பயன்படுத்துங்கள் பாஸ் நல்லதே!நன்றி

    ReplyDelete
  18. @ஸ்ரீராம். said...

    அருமருந்தாய்த் திகழும் எலுமிச்சைப் படத்தைப் பார்க்கும் போதே எழுகிறது இச்சை

    ஆமாம் அய்யா! நீங்கள் சொல்கிறமாதிரி அருமருந்துதான் நன்றி

    ReplyDelete
  19. எலுமிஞ்ஞையில் அமிலம் இருப்பதை படித்திருக்கிறேன்... இவ்வளவு பயன்கள் இருக்கின்றனவா? பயனுள்ள பதிவு

    ReplyDelete
  20. எலுமிச்சையில் இவ்வளவு அம்சங்களா.. விளக்கி கூறியதற்கு நன்றி...

    ReplyDelete
  21. //சக்கரத்தின் அடியில் எலுமிச்சை வைக்கிறார்கள்.//

    இது எதுக்காகன்னு சொல்லவே இல்லையே...

    ReplyDelete
  22. பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  23. எலுமிச்சையின் பயன்பாடுகளைக் குறித்த பகர்வு அனைவருக்கும் மிக பயனுள்ளது.

    சளி பிடித்திருந்தால் ‘ஆரஞ்சுப்பழம்’ சாப்பிடச் சொல்வார்கள், மருத்துவர்கள். அதிலும் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதே காரணம்.

    ReplyDelete
  24. எலுமிச்சைப் பற்றிய விளக்கம்
    மிகவும் பயனுள்ளது
    நன்று நன்றி!

    த ம ஓ 9

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. எலுமிச்சை பற்றி சிறப்பான தகவல்கள்.. எந்த பழத்தையும் சுவைத்து எச்சிலுடன் அரைத்து சாப்பிட்டால்தான் பலன் அதிகம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  26. எல்லாம் சரி! உங்களைப் பார்க்க எப்போது எலுமிச்சம் பழத்துடன் வரவேண்டும்? அதை சொல்லலையே !

    ReplyDelete
  27. @சாய் பிரசாத் said...

    எலுமிஞ்ஞையில் அமிலம் இருப்பதை படித்திருக்கிறேன்... இவ்வளவு பயன்கள் இருக்கின்றனவா? பயனுள்ள பதிவு

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  28. @சசிகுமார் said...

    எலுமிச்சையில் இவ்வளவு அம்சங்களா.. விளக்கி கூறியதற்கு நன்றி...

    நன்றி சார்

    ReplyDelete
  29. @சசிகுமார் said...

    //சக்கரத்தின் அடியில் எலுமிச்சை வைக்கிறார்கள்.//

    இது எதுக்காகன்னு சொல்லவே இல்லையே...

    ஹிஹி தெரிஞ்சாதானே சொல்றதுக்கு! நன்றி சார்

    ReplyDelete
  30. @நிலாமகள் said...

    பயனுள்ள தகவல்கள்

    நன்றி

    ReplyDelete
  31. @சத்ரியன் said...

    எலுமிச்சையின் பயன்பாடுகளைக் குறித்த பகர்வு அனைவருக்கும் மிக பயனுள்ளது.

    சளி பிடித்திருந்தால் ‘ஆரஞ்சுப்பழம்’ சாப்பிடச் சொல்வார்கள், மருத்துவர்கள். அதிலும் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதே காரணம்.

    ஆமாம் சத்ரியன்,ஏழைகளுக்கு ஆரஞ்சு எட்டாக்கனி.நன்றி

    ReplyDelete
  32. @புலவர் சா இராமாநுசம் said...

    எலுமிச்சைப் பற்றிய விளக்கம்
    மிகவும் பயனுள்ளது
    நன்று நன்றி!

    நன்றி அய்யா!

    ReplyDelete
  33. @Sankar Gurusamy said...

    எலுமிச்சை பற்றி சிறப்பான தகவல்கள்.. எந்த பழத்தையும் சுவைத்து எச்சிலுடன் அரைத்து சாப்பிட்டால்தான் பலன் அதிகம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    எலுமிச்சையை எப்படி சேர்த்தாலும் பலன் உண்டு சார்,நன்றி

    ReplyDelete
  34. @ஓசூர் ராஜன் said...

    எல்லாம் சரி! உங்களைப் பார்க்க எப்போது எலுமிச்சம் பழத்துடன் வரவேண்டும்? அதை சொல்லலையே !

    அதுக்கென்ன எப்போ வேணும்னாலும் வாங்க சார்! நன்றி

    ReplyDelete
  35. In Lemon Citric Acid is present; not Ascorbic Acid

    V. Ramakrishnan

    ReplyDelete
  36. @V RAMAKRISNA SHARMA said...

    In Lemon Citric Acid is present; not Ascorbic Acid

    ஆமாம் சிட்ரிக் அமிலம்தான்.ஆனால் அஸ்கார்பிக் அமிலம் என்பது விட்டமின் சி.நன்றி

    ReplyDelete
  37. ஆகா நம்ம எலுமிச்சையில் இத்தனை சிறப்புக்கள் இருக்கிறதா?

    ReplyDelete
  38. நாகேஸ் தில்லானா மோகனாம்பாள் படத்திலை எலுமிச்சம் பழத்தை எப்பொழுதும் கைவசம் கொண்டுதிரிந்த சமாச்சாரத்தை மறந்துவிட்டியளோ?

    ReplyDelete
  39. நல்ல தகவல்...

    பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

    ReplyDelete
  40. அருமை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete