Pages

Tuesday, January 3, 2012

ஆரோக்கியத்திற்கு தயிர் நல்லது.


                              இரவு நேரங்களில் தயிர் சாப்பிடவேண்டாம் என்று சொல்வார்கள்.உறங்கும் நேரத்தில் கொழுப்பு உணவு செரிமானமாவது எளிதாக இருக்காது.ஆனால் சர்க்கரை சேர்த்து(லெஸ்ஸி) மாலை வேளையில் சாப்பிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அசைவ உணவுகளுடன் தயிர் சேர்க்க வேண்டாம் என்று சொல்வதும் உண்டு.இதுவும் ஜீரணம் தொடர்பாக இருக்க வேண்டும்.
                              பசுவின் தயிரை கொண்டாடுவது உண்டு.ஆரோக்கியமானது என்றும் சுறுசுறுப்பைத்தரும் என்றும் படித்த நினைவு.ஆனால் எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மந்தம்.அதிக கொழுப்பை  உடையது.சில வீடுகளில் குழந்தைகளுக்கு தர மாட்டார்கள்.இன்று விற்பனையில் கிடைக்கும் பால் ஒரே வகைப்பட்ட்தாக சொல்ல முடியாது.இது மாட்டுப்பால்,எருமைப்பால் என்றெல்லாம் கேட்டு வாங்குவது கஷ்டம்.எருமையை எமன் வாகனம் என்பார்கள்.ஆனால் கிராமங்களில் பல குடும்பங்களில் வறுமைக்கு எமன்.
                               அதிக பால் தரும் பசுக்களை சீமைப்பசு என்று சொல்வார்கள்.ஆனால் விவசாயிகளுக்கு பசுமாடு என்பது உழவு,பால் இரண்டுக்கும் பயன்படுத்தும் வகை.அதிகபட்சம் ஒரு லிட்ட்ர் பால் கிடைத்தால் பெரிய விஷயம்.பால் பயன்படுத்தியது போக தயிராக்குவார்கள். மோரை சேர்ப்பார்கள்.சில நேரங்களில் மோரை பூனை குடித்து விடும்.ஆறு மணிக்குள் பார்த்தால் பிரச்சினை இல்லை.
                                 விளக்கு வைத்துவிட்டால் பக்கத்துவீட்டில் தரமாட்டார்கள்.வேறு வழியில்லாமல் எலுமிச்சம்பழத்தை சேர்ப்பார்கள்.அதுவும் இல்லாவிட்டால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை உருண்டையாக பாலில் போட்டு விடுவார்கள்.காலையில் தயிராகி இருக்கும்.எருமைத் தயிர் என்றால் கெட்டியாக இருக்கும்.பசுவின் தயிர் பாத்திரத்தை ஆட்டினாலே உடையும்.
                                 தயிர் சேர்க்கும் குடும்பங்களில் மலச்சிக்கல் என்றால் என்னவென்றே தெரியாது.இந்த சிக்கல் இல்லாவிட்டாலே ஆரோக்கியத்திற்கு எந்தக்குறையும் இல்லை.சிறுவயதில் மாடு கன்று ஈன்றுவிட்டால் போதும்.தினமும் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டேன்.கொஞ்சம் சாம்பாரை தயிருடன் சேர்ப்பது எனக்கு பிடித்தமானது.அது ஒரு தனி சுவை.எனக்கு உயிர் என்பார்களே அப்படி!
                                 மதிய உணவுக்கு தயிர் சாதம் சாப்பிடலாம்.அதிக எடையை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு வயிறை பெரிதாக்குவதை தவிர்க்கலாம்.இப்போதைய பால் மிதமான கொழுப்புடன் தான் கிடைக்கிறது.அதிக கொழுப்பு சேர்ந்துவிடும் என்ற எண்ணம் தேவையில்லை.
                                 உயிர்ச்சத்துக்கள் ஏ,ரிபோபிளேவின் (பி தொகுதி) ஆகியவை தயிரில் அதிகம்.கால்சியம் உள்ளிட்ட தாதுக்களும் இருக்கிறது.தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகை அகற்றும் பணியை தயிர் செய்யும்.பொடுகு போய்விட்டாலே முடி உதிர்வதும் குறையும்.முக அழகுக்கு தயிர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
                                 ஆண்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியாவில் ஏற்படும் நோய்களுக்கு பரிந்துரைப்பார்கள்.நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் இம்மருந்துகள் கொன்று விடுகின்றன.ஆண்டிபயாடிக் சிகிச்சைக்குப் பிறகு தயிர் சாப்பிட சொல்வதுண்டு.செரிமானத்திற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை மீண்டும் சேர்க்கிறது.குடல் தொற்றுக்களை போக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவு உதவி செய்யும்.

32 comments:

  1. .தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவு உதவி செய்யும்.

    ஆரோக்கியப்பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. தயிர் சாதம் சாப்பிட்டால்தான் சாப்பாடே முழுமையடையும்.உங்கள் பதிவு அந்த முழுமையைத் தருகிறது!

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. @இராஜராஜேஸ்வரி said...

    .தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவு உதவி செய்யும்.

    ஆரோக்கியப்பகிர்வுக்கு நன்றி..

    தங்கள் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  5. @சென்னை பித்தன் said...

    தயிர் சாதம் சாப்பிட்டால்தான் சாப்பாடே முழுமையடையும்.உங்கள் பதிவு அந்த முழுமையைத் தருகிறது!

    நன்றி அய்யா!

    ReplyDelete
  6. @S.Goutham said...

    தகவலுக்கு நன்றி

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  7. எனக்கு லெஸ்ஸி பிடிக்கும் அடிக்கடி சாப்பிடுவேன்

    ReplyDelete
  8. எனக்கும் சிறு பிள்ளையிலிருந்தே தயிர் சாப்பிட்டு
    பழகிவிட்டதால் இப்போதும் தவிர்க்க இயலவில்லை
    தங்கள் பதிவு கொஞ்சம் தெம்பு தருகிறது
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. @கோகுல் said...

    எனக்கு லெஸ்ஸி பிடிக்கும் அடிக்கடி சாப்பிடுவேன்

    சாப்பிடுங்க கோகுல் நல்லதே! நன்றி

    ReplyDelete
  10. @Ramani said...

    எனக்கும் சிறு பிள்ளையிலிருந்தே தயிர் சாப்பிட்டு
    பழகிவிட்டதால் இப்போதும் தவிர்க்க இயலவில்லை
    தங்கள் பதிவு கொஞ்சம் தெம்பு தருகிறது
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    நன்றி அய்யா!

    ReplyDelete
  11. தினமும் தயிர் சாப்பிட்டு எனக்கும் பழக்கம்.நல்ல பதிவு.

    ReplyDelete
  12. தயிரில் இவ்வளவு விஷயம் இருக்கா என்று மலைப்பாகத்தான் இருக்குது நண்பரே.
    தகவல்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  13. தகவலுக்கு தேங்க்ஸ் பாஸ் ( எனக்கு பால்&தயிர் பிடிக்காதே :()

    ReplyDelete
  14. @RAVICHANDRAN said...

    தினமும் தயிர் சாப்பிட்டு எனக்கும் பழக்கம்.நல்ல பதிவு.

    நன்றி சார்.

    ReplyDelete
  15. @மகேந்திரன் said...

    தயிரில் இவ்வளவு விஷயம் இருக்கா என்று மலைப்பாகத்தான் இருக்குது நண்பரே.
    தகவல்களுக்கு நன்றிகள் பல.

    நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  16. @துஷ்யந்தன் said...

    தகவலுக்கு தேங்க்ஸ் பாஸ் ( எனக்கு பால்&தயிர் பிடிக்காதே

    ஏன் சார்? நல்லதுதானே? நன்றி

    ReplyDelete
  17. வணக்கம் அண்ணா,
    தயிரின் நன்மை, தீமைகளைப் பற்றிச் சொல்லுகின்ற அருமையான பதிவு,

    பெண்களின் வெள்ளைபடுதல் பிரச்சினைக்கும், குடற் புண்களுக்கும் தயிர் தீர்வாகும் என்றும் சொல்லுகிறார்கள்.

    நன்றி அண்னா.

    ReplyDelete
  18. தயிரின் பலன்கள் பற்றி வித விதமாக சொல்லி இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    TM 7

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  19. சார் வழக்கம் போல இதுவும் சிறந்த பதிவு....

    ReplyDelete
  20. Thayir pidikkaatha aatgal undaa?
    Arumaiyana Pathivu.

    TM 9.

    ReplyDelete
  21. . நல்ல தகவலுக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா.. மிக நீண்ட நாட்களின் பின்னர். புதுவருட வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
    நம்மைப்போல உடல் உஸ்ணத்தை தணிக்க ஓடுபவருக்கு எல்லாம் தயிர்தானே ரிலாக்ஸ் :)
    இனி அடிக்கடி வழமைபோல சந்திப்போம் நண்பரே..

    ReplyDelete
  23. THAYIR , MORRE,
    ITHIL ETHU NALLATHU ? MORRE THAAN SIRANTHATHU ENDRU SOLLUVAARKAL . UNMAIYA ?

    ReplyDelete
  24. @ABUBAKKAR K M said...

    THAYIR , MORRE,
    ITHIL ETHU NALLATHU ? MORRE THAAN SIRANTHATHU ENDRU SOLLUVAARKAL . UNMAIYA ?

    ஆமாம்,கொழுப்பு இருப்பதால் தயிரை தவிர்க்க விரும்புவோருக்கு மோர் மிகச் சிறந்தது.யாவருக்கும் ஏற்றது.நன்றி .

    ReplyDelete
  25. @நிரூபன் said...

    வணக்கம் அண்ணா,
    தயிரின் நன்மை, தீமைகளைப் பற்றிச் சொல்லுகின்ற அருமையான பதிவு,

    பெண்களின் வெள்ளைபடுதல் பிரச்சினைக்கும், குடற் புண்களுக்கும் தயிர் தீர்வாகும் என்றும் சொல்லுகிறார்கள்.

    நன்றி அண்னா.

    நன்றி நிரூபன்.

    ReplyDelete
  26. @Sankar Gurusamy said...

    தயிரின் பலன்கள் பற்றி வித விதமாக சொல்லி இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    நன்றி சங்கர்.

    ReplyDelete
  27. @சசிகுமார் said...

    சார் வழக்கம் போல இதுவும் சிறந்த பதிவு....

    நன்றி சார்!

    ReplyDelete
  28. @துரைடேனியல் said...

    Thayir pidikkaatha aatgal undaa?
    Arumaiyana Pathivu.

    நன்றி சகோ!

    ReplyDelete
  29. @புலவர் சா இராமாநுசம் said...

    . நல்ல தகவலுக்கு நன்றி!

    நன்றி அய்யா!

    ReplyDelete
  30. @Jana said...

    வணக்கம் ஐயா.. மிக நீண்ட நாட்களின் பின்னர். புதுவருட வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
    நம்மைப்போல உடல் உஸ்ணத்தை தணிக்க ஓடுபவருக்கு எல்லாம் தயிர்தானே ரிலாக்ஸ் :)
    இனி அடிக்கடி வழமைபோல சந்திப்போம் நண்பரே..

    வருக! ஜனா நன்றி

    ReplyDelete
  31. வட மாநிலங்களில் பிள்ளைகள் தேர்வு எழுதப் போகும்மு்ன் ஒரு ஸ்பூன் தயிர் சாப்பிட கொடுப்பார்கள்.சுப காரியங்களில் ஈடுபடும்போதும்,சுப காரியங்களுக்கு செல்லும்போதும் தயிர் சாப்பிடுவது சுப சகுணமாகக் கருதுகிறார்கள்.

    ReplyDelete
  32. thangal vilakkathirkku mikavum nandri,Thiru. shanmugavel.

    ReplyDelete