Pages

Monday, February 13, 2012

மெரினாவுக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போங்க சார்!



                                பொங்கலுக்குப் பிறகு திரைப்படம் பார்க்கும் சூழ்நிலை.விருப்பமில்லாமல் அதுவும் இரவுக்காட்சி.பனிரெண்டு மணிக்கு முடியும்.படம் பார்த்து திரும்பும்போது சந்தோஷமாக உணர்ந்தேன்.காரணம் மெரினாவின் நகைச்சுவை மட்டுமல்ல! சென்னையில் மாணவன் கொலை செய்த விவகாரத்தில் பலரும் சினிமாவை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.அதில் உண்மை இருக்கிறது என்பது வேறு விஷயம்.தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயமும் கூட! கொலை செய்வதை பெருமையாக காட்டும் சினிமா,குடித்துக்கொண்டே நாட்டுக்கு நல்லது சொல்லும் நாயகர்கள் இன்னும் இன்னும்.....

                                 மெரினாவில் சுண்டல் விற்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்யாண குணங்களை சொல்கிறது மெரினா.கண்டெடுத்த நகையை உரியவர்களிடம் அடையாளம் கேட்டு ஒப்படைக்கும் சிறுவன்.இவனைத்தானே இன்றைய குழந்தைகள் பின்பற்ற வேண்டும்.அடுத்தவன் பணத்தை எப்போது சுருட்டலாம் என்று குழந்தைகளின் முன்னால் திட்டமிடும் சூழலில் இதெல்லாம் கற்பிக்கப்படவேண்டிய விஷயம்.மருத்துவ உதவிக்கு பணம் பெற்று வழங்குவது,தாத்தாவின் உடலை வாங்க போராடுவது,நண்பனுக்காக ஏங்குவது என்று தமிழ் சினிமா சிறுவர்களுக்கு கற்பிக்கும் நல்ல விஷயங்கள் அதிகம்.பிச்சை எடுக்க வேண்டாம் நான் காப்பாற்றுகிறேன் என்று பாண்டி சொல்கிறான்.

                                   முதியவர்களை தெருவில் விடும் பிள்ளைகள் அதிகரிக்கும் சூழலில் தாத்தா,பாட்டி மீது பேரக்குழந்தைகளுக்காவது பாசம் தோன்றும்.படம் முழுக்க அன்பும்,உதவும் குணமும் நெகிழ்ச்சியுமாக நகர்கிறது.நகைச்சுவையாகவும்தான்.பரிசு வழங்க தன்னை அழைக்க வேண்டுமென விரும்பும் தாத்தா.அந்த சூழலின் இயல்பான உளவியல்.சிறுவர்களுடன் தனக்குள்ள உறவில் நிச்சயம் அப்படியான எதிர்பார்ப்பு தோன்றவே செய்யும்.உயிருக்குயிரான தமிழ் சினிமா காதலை தாண்டி நிஜமான காதலை!? காட்டுகிறது படம்.நகைச்சுவைக்காக என்றாலும் பல காதல்கள் இப்படியும் ஆகிவிடுவதுண்டு.

                                 பாடல்கள் அவ்வளவாக எடுபடாமல் போனது பலத்தை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.ஆனால் ஆக்காட்டி ஆறுமுகம் பாடும் பழைய பாடல்கள் இந்தக்குறையை போக்குவதாக இருக்கிறது.பாண்டியை துவக்கத்தில் உதைக்கும் காட்சியும்,கல்லால் அடிக்கப்பட்டு ரத்தம் சிந்தும் காட்சியும் நெருடலை ஏற்படுத்துகிறது.தமிழ்சினிமா என்றால் ஏதாவது சண்டைக்காட்சி இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல!ஆனால் விளைவுகள் வருந்தும் காட்சியை தோற்றுவிக்கிறது.வழக்கமான தமிழ்சினிமா போல இல்லாமல் நல்ல முயற்சி.இன்றைய சமூகத்திற்கு எத்தகைய குணங்கள் தேவை என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார்.இதற்காகவே பாண்டிராஜை தாராளமாக பாராட்டலாம்.

19 comments:

  1. இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்..

    ReplyDelete
  2. @சென்னை பித்தன் said...

    இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்..

    கருத்துரைக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  3. சென்சார் போர்டில உள்ள பழைய ஆட்களை எல்லாம் எடுத்துட்டு புது ஆட்களை போட்டா ஒரு வேளை தமிழ் சினிமா ஆரோக்கியமா இருக்குமுன்னு நினைக்கிறேன் .


    பட விமர்சனம் பாசிடிவா எழுதி இருக்கீங்க :-))

    ReplyDelete
  4. படம் பாஸிடிவாதானே இருக்கு! சென்சார் போர்டின் பணி இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என்பது உண்மையே! நன்றி சார்.

    ReplyDelete
  5. படத்திற்கான தங்களின் மதிப்புரை பார்த்து
    படத்தை உடனே பார்த்திடனும் போல இருக்குது...
    சமூக அக்கறை ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.
    பொருளாதார ரீதியாக எடுக்கவே கூடாது என்று நாம்
    சொல்ல முடியாது...
    பணம் போட்டு பணமும் எடுங்கள்...
    நல்ல பல செய்திகளையும் சொல்லிடுங்கள் ஊடகங்களே...

    ReplyDelete
  6. வணக்கம் அண்ணா,
    நல்லதோர் விமர்சன அலசல்


    படம் பார்க்கனும் எனும் ஆவலை உங்கள் விமர்சனம் தருகிறது.

    விமர்சனத்தில் இணைத்திருக்கும் போட்டோக்களை கூகிளில் மெரீனா என்று தேடி எடுத்து இணைத்திருந்தால் கிளியராக இருக்கும் அல்லவா?

    ReplyDelete
  7. அண்ணன் சொன்னா மீற முடியுமா? அவசியம் பார்க்கிறேன்!

    ReplyDelete
  8. வேறு ஏதோ பதிவிலா, பத்திரிக்கையிலா .. சரியாக நினைவில்லை. படம் பற்றி நெகடிவ்வாக விமர்சனம் படித்த ஞாபகம். உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  9. இன்னொரு விஷயம்....படங்களில் நெகட்டிவ் விஷயங்களை அந்தக் காலத்தில் வில்லன்கள் என்று அழைக்கப் படும் நெகட்டிவ் கேரக்டர் ஆர்டிச்ட்டுகள் செய்து வந்தார்கள். பார்ப்பவர் மனதில் அந்த கேரக்டர் மேல் ஏற்படும் வெறுப்பு அந்தச் செயலும் தவறு என்று மனதில் பதியும். இப்போது மக்களால் பெரிதும் கொண்டாடப் படும் நாயக நடிகர்களே சில நெகட்டிவ் ரோல், அல்லது காட்சிகளில் நடிக்கும்போது அந்தக் காட்சி பார்க்கும் இளைய தலைமுறையினர் மனதில் இந்தக் காலத்தில் இது இயல்பு என்ற எண்ணத்தில் பதிந்து விடுகிறது. பலசமயம் நல்ல விஷயங்கள் சொல்லப் படும்போது கூட காமெடியாகக் காட்டப்பட்ட விடுகிறது.

    ReplyDelete
  10. படம் இன்னும் பார்க்கவில்லை..பார்த்துவிடுகிறேன்..நல்ல படங்கள் நல்ல வரவேற்பை பெற வேண்டும்..தங்கள் விமர்சனம் அருமை..நன்றி.

    சைக்கோ திரை விமர்சனம்

    ReplyDelete
  11. படம் ஓடுமா? திரு பாண்டிராஜ் திறமையான இயக்குநர்.. நன்றாக இருக்கும் பல படங்கள் வியாபார ரீதியில் தோல்வியில் முடிந்திருப்பதால் இந்த கேள்வி..

    தங்கள் விமர்சனம் அருமை.

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  12. உங்களின் விமர்சனம் பார்க்கும் போது கண்டிப்பாக பார்க்கனும் போல இருக்கு முயல்கின்றேன் வார இறுதியில் பார்க்க.

    ReplyDelete
  13. உங்களின் விமர்சனம் பார்க்கும் போது கண்டிப்பாக பார்க்கனும் போல இருக்கு முயல்கின்றேன் வார இறுதியில் பார்க்க.

    ReplyDelete
  14. இன்னும் பார்க்கல சார் கண்டிப்பா பார்க்கணும்னு நினைத்து கொண்டு இருக்கேன்....

    ReplyDelete
  15. //பொங்கலுக்குப் பிறகு திரைப்படம் பார்க்கும் சூழ்நிலை.விருப்பமில்லாமல் அதுவும் இரவுக்காட்சி.பனிரெண்டு மணிக்கு முடியும்.படம் பார்த்து திரும்பும்போது சந்தோஷமாக உணர்ந்தேன்.//

    nice....

    ReplyDelete
  16. பசங்க படம் திருப்தியாய் இருந்ததால் இந்தப் படத்திலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.பார்க்கலாம்.உங்கள் விமர்சனமும் ஆவலைத் தூண்டுகிறது.நன்றி !

    ReplyDelete
  17. உண்மைதான் நண்பரே. இந்த மாதிரி படங்களுக்கு வரவேற்பு இருந்தால்தான், வன்முறை கலாச்சாரம் தமிழ் சினிமாவில் இருந்து ஒழியும்.

    ReplyDelete
  18. ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள்.


    http://azhkadalkalangiyam.blogspot.com/2012_02_16_archive.html

    ReplyDelete
  19. வழக்கமான தமிழ்சினிமா போல இல்லாமல் நல்ல முயற்சி.

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete