Pages

Saturday, June 25, 2011

சாருவும் தமிழ்ப்பெண்களும்

                                                                                          எதையாவது எழுதிக்கொண்டிருப்பவனுக்கு(!) சமகால நிகழ்வுகள் பற்றிய எண்ணங்கள் தோன்றாமல் இருக்காது.அப்படித்தான் முள்வேலி உறுத்தியபோது “தமிழன் என்ற சொல் குற்ற உணர்வு தரும் சொல்லாகிவிட்ட்துஎன்று எழுதினேன்.அதற்கு தொப்பிதொப்பி போட்ட கமெண்ட் “வேண்டாம்
மீண்டும் எழுவோம் தமிழன் என்றால் உலகே அதிசயிக்கும்

                                   இன்றும் தமிழனை உலகம் அதிசயமாக பார்க்கிறது.சாரு விஷயத்தைத்தான் சொல்கிறேன்.எழுத்தாளர்கள்,அறிவு ஜீவிகள் என்றால் சமூகத்தில் இருக்கும் மதிப்பு தனி.கேரளாவில் எழுத்தாளன் தான் தன் குழந்தையின் கையைப்பிடித்து அட்சரம் எழுதக்கற்றுத்தரவேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்’’ என்கிறார்விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன்.

                                    குடிக்கும் எழுத்தாளர்கள்,புகைக்கும் எழுத்தாளர்கள் பற்றி விமர்சன்ங்கள் வந்திருக்கின்றன.ஆனால் சாருவின் விஷயம் அருவருப்பானது.வயது வித்தியாசமின்றி ஒரு இளம்பெண்ணிடம் நடந்துகொண்டுள்ள செயல் எழுத்துலகில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதே நிஜம்.

                                    இந்த மாதிரி விஷயங்களை பெண்கள் எப்போதும் வெளிப்படுத்த தயங்கியே வந்திருக்கிறார்கள்.உடனே திரும்பும்,அவனுடன் எதற்கு பேசினாய்?,பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருக்கவேண்டியதுதானே?உடனே நீ வீட்டுக்குள் ஓடி கதவை சாத்திக்கொள்வதுதானே? ஆண்கள் என்றால் அப்படித்தான்,கண்டும் காணாமல் போவதுதானே? இப்படியே நீளும்.

                                      சாருவுடன் சாட் செய்த பெண் பேச்சு திசைமாறுவது தெரிந்தும்,ஏதோ பிரபல எழுத்தாளர் என்று நினைத்தால் சாக்கடைத்தனமாக ஏதேதோ வருகிறது என்று தெரிந்தும் தொடர்ந்திருக்கிறார்.இது திட்டமிட்டு செய்த்துதான்.தான் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ஆசாமி இல்லை என்றவுடன் அவர்களை வீழ்த்துவதற்கு ஆதாரங்களை அதிகப்படுத்தவே முயல்வார்கள்.இது பெண்களிடம் இருக்கும் குணங்களில் ஒன்று.ஒரே வித்தியாசம் வழக்கமாக நாலு பேரிடம் சொல்லி மானத்தை வாங்குவார்கள். இங்கு பதிவாக வருகிறது.

                                      ஒரு பெண் வீட்டு மனிதர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்றால் இருபத்துநான்கு மணிநேரமும் காமிரா வைத்து பெற்றோர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று பொருள் அல்ல.அவர் யாருடன் பேசுகிறார்,பழகுகிறார் என்பதை கவனிப்பார்கள்.பிரபல எழுத்தாளருடன் சாட் செய்தால் அவர்கள் பெருமையாகவே நினைத்திருப்பார்கள்.

                                                                                               பாலியல் ரீதியாக பெண்களிடம் வரம்பு மீறுபவர்கள்மீது காவல்துறையில் புகார் செய்தால் இதற்கென்று ஊருக்கு ஒரு காவல்நிலையம்தான் திறக்கவேண்டும்.இன்று படித்த பெண்கள் பலருக்கும் அதற்கென உள்ள சட்டங்கள் கூட தெரியாது.இதை புதியதாக சொல்லவில்லை.என்னுடைய ஆரம்பகால பதிவுகளில் ஒன்றான “பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு பெண்களின் எதிர்வினைகள்’’ என்ற பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

                                     ஆம் நண்பர்களே! பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும்.அதிர்ந்து பேசக்கூடாது.வீட்டில் சமையல் செய்து கொண்டு,குழந்தை பெற்றுக்கொண்டு,கணவன் சாப்பிட்ட மீந்த்தை சாப்பிட்டு,பின் தூங்கி முன் எழுந்து,வாய் திறக்காமல்.................... சரிதான்.எழுந்து நின்று ஜோராக கைத்தட்டுங்கள். இந்தியா வல்லரசாகப்போகிறது.

18 comments:

  1. ஹிஹி சாட்டையடி பதிவு...
    உங்க லாஜிக் பெண்களின் எண்ணம் பற்றியது உண்மைதான்/...

    ReplyDelete
  2. //பாலியல் ரீதியாக பெண்களிடம் வரம்பு மீறுபவர்கள்மீது காவல்துறையில் புகார் செய்தால் இதற்கென்று ஊருக்கு ஒரு காவல்நிலையம்தான் திறக்கவேண்டும்//

    அதான் பெண்கள் வாழ லாயக்கில்லாத நாடுன்னு -நாலாவது இடமாம்-சொல்லிட்டாங்களே

    ReplyDelete
  3. @ தோழரே ! தங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன் ... பெண்ணானவள் சமையல் செய்யவும், குழந்தைப் பெறவும், கணவன் சாப்பிட்ட மிச்சத்தை சாப்பிட்டு , பின் தூங்கி முன் எழுந்து , வாய் திறவாமல் .. ஹிஹி .. இப்படி இருப்பது தான் பெண்ணா ? நிச்சயம் இப்படியான ஆணாதிக்க சிந்தனை களையப்படவேண்டியவையே ....

    ஆனால் தமிழச்சி பிரான்ஸ் என்பவர் இப்படி செய்தது சுயவிளம்பரத்துக்குத் தான் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இதில் சாருவே கூட பங்காளியாக இருக்கலாம்.. இருவருக்கும் நல்ல விளம்பரம் தானே !!!

    ReplyDelete
  4. //இக்பால் செல்வன் said...
    ஆனால் தமிழச்சி பிரான்ஸ் என்பவர் இப்படி செய்தது சுயவிளம்பரத்துக்குத் தான் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இதில் சாருவே கூட பங்காளியாக இருக்கலாம்.. இருவருக்கும் நல்ல விளம்பரம் தானே !!!//

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. .தான் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ஆசாமி இல்லை என்றவுடன் அவர்களை வீழ்த்துவதற்கு ஆதாரங்களை அதிகப்படுத்தவே முயல்வார்கள்.//

    நல்ல கோணம்..

    ReplyDelete
  6. பெண்கள் அம்பலப்படுத்த துணிவா முன்வரணும்..

    அதற்கு உதவிய தமிழச்சிக்கு நன்றி..

    அப்படி அம்பலப்படுத்தினால் character assasination கண்டிப்பாக செய்வார்கள் எதிராளிகள்..

    கவலையே படாதீர்கள்.. அலுத்து போகும்வரை செய்யட்டும்..

    அதுவே மாபெரும் துணிவை தரும்..

    பதிவு நன்று .

    ReplyDelete
  7. //ஆனால் தமிழச்சி பிரான்ஸ் என்பவர் இப்படி செய்தது சுயவிளம்பரத்துக்குத் தான் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
    -இக்பால் செல்வன்//
    இக்பால் செல்வனுடைய கருத்து சரியானது.
    அந்த அம்மணி பிரான்சில் புகழ் பெற்ற ரவுடி என்கிறார்கள்.

    ReplyDelete
  8. @ இக்பால் செல்வன் -
    வித்தியாசமா சிந்திக்கிறாராம், சகிக்கல.

    ReplyDelete
  9. quick fox நண்பரே , ரவுடிக்கான அம்சம் என்ன னு சொல்லுங்க..

    //தமிழச்சி பிரான்ஸ் என்பவர் இப்படி செய்தது சுயவிளம்பரத்துக்குத் தான் என்பதையும் நாம் மறுக்க முடியாது.//

    இப்படி எல்லார்கிட்டேயும் திட்டு வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாவ்து விளம்பரமா இக்பால்..

    எனக்கு தெரிந்து 2 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க.

    நான் உங்க கிட்ட பேர் சொல்றேன் நடவடிக்கை எடுப்பீங்களா?..

    நாம செய்ய மாட்டோம் செய்றவங்களையும் தப்பா பேசுவோம்..

    நாடு எங்க முன்னேற விடும் பெண்களை..?..

    இது போல ஆயிரக்கணக்கில் கதை இருக்கு
    ஆனா பயத்தில் வெளி வருவதில்லை

    தயவுசெய்து உங்களின் தவறான கருத்தால் மேலும் இதை முடக்கி விடாதீர்கள்


    ஆயிரக்கணக்கில் பெண்கள் துணிவா இப்படி அம்பலப்படுத்த தொடங்கினால் மட்டுமே பெண்ணுக்கு பாதுகாப்பு இங்கே..

    ஒரு ஆபாச எழுத்து , படம் போடும் பதிவரையே ஒண்ணும் செய்ய முடியல பதிவர்களால்..

    பெண்களுக்கு செய்திடப்போறாங்க..

    அப்படி செய்ற வினவையும் தமிழச்சியும் மனமாற பாராட்டுகிறேன்..

    இனி நிறைய பெண்கள் துணிவா அம்பலப்படுத்தணும்..இத்தகைய கயவர்களை

    ReplyDelete
  10. இக்பால் செல்வனுடைய கருத்து சரியானது

    ReplyDelete
  11. உங்கள் பதிவினடிப்படையிலும் பார்க்கும் போதும், இச் சம்பவங்களை அடிப்படையாகப் பார்க்கையிலும்,

    பாதிக்கப்பட்ட பெண்ணை விட, ஏனையோய் ஒரு சுய விளம்பரத்திற்காகத் தான் இவ் விடயத்தில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது..

    காத்திரமான பதிவோடு, இறுதிப் பந்தியில் சமூகக் காவலர்களுக்கு நகைச்சுவையோடு கூடிய சாட்டையடியினையும் கொடுத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  12. நண்பரே, தமிழச்சி-பரிஸ் தனக்கு எதிராக யார் கருத்து எழுதினாலும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது அதன் மூலம் மற்றவர்கள் கருத்து எழுதவே அஞ்சும் நிலையை ஏற்படுத்துபவர்.இவை இப்போ அல்ல முன்பே பலரால் தெரிவிக்கபட்டவை.
    பெண்கள் பல இடங்களில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த விடயம் ஒரு விளம்பரத்துக்காக நடத்தபட்டதாகவே தோன்றுகிறது.

    ReplyDelete
  13. @இக்பால் செல்வன் உண்மைய சொன்னா உடனே சுய விளம்பரம் என்று சொல்வதா?

    ReplyDelete
  14. //
    பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும்.அதிர்ந்து பேசக்கூடாது.வீட்டில் சமையல் செய்து கொண்டு,குழந்தை பெற்றுக்கொண்டு,கணவன் சாப்பிட்ட மீந்த்தை சாப்பிட்டு,பின் தூங்கி முன் எழுந்து,வாய் திறக்காமல்.................... சரிதான்.எழுந்து நின்று ஜோராக கைத்தட்டுங்கள். இந்தியா வல்லரசாகப்போகிறது.
    //

    சிரிக்க முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் இதுதான் இன்றைய நிலை.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  15. உச்சத்தின் எச்சங்களா...இல்லை எச்சத்தின் மிச்சங்களா!

    ReplyDelete
  16. thequickfox said...

    நண்பரே, தமிழச்சி-பரிஸ் தனக்கு எதிராக யார் கருத்து எழுதினாலும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது அதன் மூலம் மற்றவர்கள் கருத்து எழுதவே அஞ்சும் நிலையை ஏற்படுத்துபவர்.//

    தவறுதான்.
    நிறைய தமிழர்கள் கெட்ட வார்த்தை பேசுறாங்க..

    நாமும் பதிலுக்கு அப்படி பேசினா தான் பிழைக்க முடியும் என்ற நிலைமை.

    இரண்டு நாளுக்கு முன் முகிலன் ,

    //உங்க புருசன் சம்பாதிக்கிறதே இந்தியாவுல இருந்து வர்ற விஐபிகளுக்கு மாமா வேலை பார்த்துத்தானாமே??//

    என்ன பதில் கொடுப்பீங்க நீங்க.?

    ReplyDelete
  17. This was written by a female blogger Mathar in Buzz..

    // மதார் பட்டாணி - Buzz - Public - Muted
    எல்லா இடத்திலையும் போய் வாந்தி எடுக்கிறது தான் ஒரு நாய்க்கு வேலை.அந்த நாயோட ஜோடி முத்தம் கூட தராதாம் அதனால வர்ற போற எல்லோரையும் கூப்பிடுமாம் .வரலைன்னா கடிச்சி வைக்குமாம்.அந்த நாய்க்கு பிறந்தது யார்க்கு பிறந்ததுன்னு இன்னும் தெரியலையாம்.அப்படி சம்பந்தமே இல்லாம இருக்குமாம்.

    வெளிநாட்டில் இருந்து ஆம்பிளைங்க யாராவது போனா அவங்க வாங்கி தர்ற தண்ணிக்காவே நிறைய பேர் சுத்துவாங்கன்னு அந்த நாய் சொல்லுமாம். அந்த நாய் வர்றப்போ என்ன தரும்னு அதுக்கு மட்டும் தான் தெரியும்.அதான் அந்த நாய்க்கு பிறந்த நாய் சம்பந்தமே இல்லாம இருக்காம்.அந்த நாய் இருக்கிற மாதிரி தான் எல்லோரும் இருப்பாங்கன்னு அந்த நாய்க்கு ஒரு நினைப்பு. பாத்ரூம்ல கேமிரா கூட வைக்க சொல்லும்.அந்த நாய்க்கு பேரு இப்போ வாந்தியாம்.//

    How will you reply?.. Girls are worse than many bad men ..

    So automatically we also have to defend them in their words back..:((

    ReplyDelete