Pages

Sunday, June 26, 2011

தூக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா?

என் பாட்டி ஒருவரிடம் உறவுக்கார அண்ணன் ஒருவன் கூறினான்."அந்த பெண்ணுடன் எனக்கு கல்யாணம் ஆவது போல கனவு கண்டேன்". பாட்டியின் மறுமொழி "அது கனவில்லை உன் நெனப்பு " அண்ணா பதில் பேசவில்லை.அதே பாட்டியுடன் ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் சொன்னார்,''சுவர் இடிந்து விழுவதுபோல க்கனவு கண்டேன் என்னவென்று தெரியவில்லை.பாட்டி சொன்னார் "உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலம் இல்லையா? ஏதாவது கெட்ட சம்பவம் நடந்தாலும் நடக்கும்''.

                                                                     இதை நான் வித்தியாசமாக உணர்ந்தேன்.அதன் பின்னர்கனவுகள் பற்றி  ஏராளமான கிராமப்புற நம்பிக்கைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.அழுத்தமான கனவுகள் காணும்போது பெரியவர்களிடம் விவாதிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள்.



                                                               பஞ்சாங்கங்
களில் கனவுகள் பற்றி கூறப்பட்டுள்ளன.கனவுகளுக்கு பலன்கள் சொல்லும் கட்டுரைகளும்,புத்தகங்களும் நிறைய உண்டு.இவையெல்லாம் மரபு சார்ந்தவை.அறிவியல் பூர்வமான அணுகுமுறை அல்ல! இதில் மூத்தவர் சிக்மன்ட் பிராய்ட் .உலகம் போற்றும் ,உலகின் கண்களைத்திறந்த உளவியல் அறிஞர் .ஒருவரது மனதில் உள்ள ஆசைகளும் ,ஏக்கங்களும் கனவுகளாக வரலாம்.துவக்கத்தில் பாட்டி சொன்ன மாதிரி.

                                                               ஆழ மனதில் பதிந்திருப்பவை கனவுகளாக வெளியேறி விடுகின்றன.வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவங்கள் கனவுகளாக சிலருக்கு தொடர்ந்தது வந்துகொண்டிருக்கும்.அவர் மனம் பாதிக்கப்பட்டு இருப்பதன் அறிகுறி இது.வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கனவில் கண்டவர்கள் உண்டு! 



                                                               தையல் மெஷினை வடிவமைத்த சிங்கர் கனவு கண்டே மெஷினை இறுதி செய்தார் என்பதை படித்திருக்கிறேன்.இதுவும் உங்கள் நனவின்றியே இயங்கும் மனதின் வேலைதான்.தூக்கத்திலும் சிந்தித்து கனவாய் வெளிப்பட்டு விடுகிறது.வேறு சில உதாரனங்களும் இருக்கின்றன.தொலைந்துபோனதை கனவில் பார்த்து கண்டெடுத்தவர்கள் உண்டு.

                                                                 கிராமத்து தேநீர் கடையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.பேருந்து விட்டு இறங்கி வந்த பெரியவர் கேட்டார்.இங்கே கிருஷ்ணன் இருக்கிறாரா? அவருக்கு எண்பது வயது இருக்கும்.எந்த கிருஷ்ணன்? இன்ன சமூகத்தை சேர்ந்தவர்.நான்தான் என்று அவர் எழுந்து வந்தார்.பெரியவர் கடவுளே என்று வானத்தை நோக்கி கும்பிட்டார்.பெரியவர் பிறகு சொன்னது அங்கே இருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.



                                                                 கோயில் கட்ட எண்ணியதாகவும் ,இரவு கனவில் தேவதை வந்து ஊர் பெயரை சொல்லி அங்கே சென்று டீக்கடையில் கிருஷ்ணன் என்ற பெயர் சொல்லி கேட்குமாறு கட்டளையிட்டதாக கூறினார்.பக்கத்து மாவட்டத்தை சார்ந்தவர் அவர்.இருவரும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை.சிலர் அந்த பெரியவருக்கு யாராவது சொல்லியிருப்பார்கள் என்றார்கள்.பெரியவரை பார்த்தால் பொய் சொல்கிற ஆளாக தெரியவில்லை என்றார்கள் சில பேர்.

                                                                 எப்படியோ தினமும் இரவுகளில் கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.பெரும்பாலான கனவுகளும் சிம்பாலிக்காகவே வரும் என்கிறார்கள்.நேரடியாக இருக்காது.உதாரணமாக நீங்கள் யாரையாவது காதலிக்க முடிவு செய்தால் உங்கள் கனவில் விஜயோ,அஜீத்தோ டூயட் பாடுவதுபோல கனவு வரலாம்.

11 comments:

  1. நான் கூட தூக்கத்தில கார்த்திகவோட.......................................................
    ஐ மீன் இருக்கிற மாதிரி கனவு கண்டேன் பாஸ் நடக்குமா?

    ReplyDelete
  2. முதல் பத்தி விஷயம் உன்னோடதுதான் சிவா.எதுக்கும் ஓட்டவடகிட்ட ஜாக்கிரதயா இருங்க!டேஞ்சர் புள்ள,நன்றி

    ReplyDelete
  3. ஹிஹி ஓட்டவடை ஒரு வடையும் சுட முடியாது என்கிட்ட..
    நான் ஆல்ரெடி தயாரா தான் இருக்கேன் ஹிஹி

    ReplyDelete
  4. மைந்தன் சிவா said...

    ஹிஹி ஓட்டவடை ஒரு வடையும் சுட முடியாது என்கிட்ட..
    நான் ஆல்ரெடி தயாரா தான் இருக்கேன் ஹிஹி


    அய்யோ சிவா,உனக்கு தெரியாது,ஓட்டவடை மாந்த்ரீகம்,வசியம் பண்ணுற ஆளுங்கள கூட வச்சிருக்காராம்.ஹன்சிகாவ நீயே கழட்டிவிடறமாதிரி செஞ்சது அப்படித்தான்.

    ReplyDelete
  5. அப்புடியா??அட பாவி பயபுள்ள..அவர்கிட்ட அப்போ அவதானமா தான் இருக்கணும்னு சொல்றீங்க..ரைட்டு

    ReplyDelete
  6. கனவுகள் பற்றிய பதிவினைத் தந்திருக்கிறீங்க, கூடவே நீங்கள் சந்தித்த மனிதர்களை, ஊர் விடயங்களில் இடம் பெற்ற சம்பவங்களையும் அனுபவங்களாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..

    மனிதம் மனங்களின் நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடு தான் கனவு என்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள்.

    சிலர் நடக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே அறியும் வண்ணமும் கனவுகள் உதவுவதாக கூறியிருக்கிறார்கள்.

    கனவுகளை நம்புவது, பற்றிய ஆராய்ச்சி ஒரு புறமிருக்க,

    என் அனுபவத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே கனவாக கண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. @மைந்தன் சிவா said...

    அப்புடியா??அட பாவி பயபுள்ள..அவர்கிட்ட அப்போ அவதானமா தான் இருக்கணும்னு சொல்றீங்க..ரைட்டு

    ஆமா சிவா கேர்ஃபுல் நன்றி

    ReplyDelete
  8. @நிரூபன் said...

    கனவுகள் பற்றிய பதிவினைத் தந்திருக்கிறீங்க, கூடவே நீங்கள் சந்தித்த மனிதர்களை, ஊர் விடயங்களில் இடம் பெற்ற சம்பவங்களையும் அனுபவங்களாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..

    மனிதம் மனங்களின் நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடு தான் கனவு என்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள்.

    சிலர் நடக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே அறியும் வண்ணமும் கனவுகள் உதவுவதாக கூறியிருக்கிறார்கள்.

    கனவுகளை நம்புவது, பற்றிய ஆராய்ச்சி ஒரு புறமிருக்க,

    என் அனுபவத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே கனவாக கண்டிருக்கிறேன்.

    நமது அறிவுக்கு எட்டாத எத்தனையோ நிரூபன்,நன்றி

    ReplyDelete
  9. கனவுகள் என்பது பற்றி பல செய்திகளை கொடுத்துள்ளீர்கள். அருமையான பதிவு.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  10. கனவுகள் ஆழ்மனதின் காட்சித் தொடர்புகள். அவை நிஜமான தீர்வையும் தரக்கூடியவை. good post.

    ReplyDelete