Sunday, August 21, 2011

டொரண்டோ பறக்கிறது அழகர்சாமியின் குதிரை.

சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் டொரண்டோவில் நடக்கிறது.சர்வதேச அளவில் முக்கியமான திரைப்படங்கள் இவ்விழாவில் பங்கேற்க இருக்கின்றன.இத்திரைப்பட விழாவில் பங்கேற்க அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.தென்னிந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே திரைப்படம் இது.

                                பாஸ்கர் சக்தியின் கதை திரைப்படமாக்கப்பட்டிருந்த்து.சுசீந்திரன் இயக்கத்தில் அப்புகுட்டியும் சரண்யா மோகனும் வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.சமீபத்தில் இளையராஜா இசை அமைத்த படமும் கூட! இப்படம் வெண்ணிலா கபடிக்குழு அளவுக்கு இல்லை என்று கருத்து சொல்லப்பட்ட்தும் உண்டு. 

                                உலகத்தின் முக்கியமான சினிமா கலைஞர்கள் அழகர்சாமியின் குதிரையை பார்க்கப் போகிறார்கள்.அப்புக்குட்டி நிச்சயம் அவர்களை கவர்ந்து விடுவார் என்பதே நிஜம்.ஒரு நிஜ குதிரைக்காரனை நேரில் பார்க்கப் போகிறார்கள்.பெரிய நடிகர்கள்,நாலு பைட்,ஒரு கவர்ச்சி டான்ஸ் என்ற தமிழ் சினிமாவின் விதியை மீறிய படம் இது.

                                 பெருவெற்றி பெற்ற படங்கள் இருக்கிறது.அதிகம் சிலாகிக்கப்பட்ட சினிமாக்கள் உண்டு.ஆனால் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்துவம் பெற்ற சினிமா இது.அப்புகுட்டியை மட்டும் வைத்து திரைப்படம் செய்ய அதிக தைரியம் வேண்டும்.எப்போதும் சினிமா என்பது சூதாட்டம்தான்.வெற்றி,தோல்வியை கணிப்பது சாத்தியமே இல்லை.

                                   பட்த்தில் உள்ள மூட நம்பிக்கை,மக்கள் இதையெல்லாம் பார்த்தால் உலகம் என்ன நினைக்கும்? ஒன்றும் நினைக்காது.இந்தியாவைப்பற்றி உலகத்துக்கு தெரியும்.தவிர மூட நம்பிக்கைகள் உலகம் முழுக்க இருக்கும் விஷயம்தான்.ஒவ்வொரு இட்த்திலும் வேறுபடும்.வித்தியாசமான முயற்சிகள்தான் முக்கியம்.

                                   பரபரப்போ,விறுவிறுப்போ உலக சினிமா கலைஞர்களுக்கு காட்ட வேண்டியிருப்பதில்லை.அழகர்சாமியின் குதிரை போன்ற முயற்சிகள் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்படவேண்டிய ஒன்றுதான்.குறைகள் இருப்பது பொதுவானது.அது முக்கியமும் அல்ல.சர்வதேச அளவில் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கவனிக்கப்படும்.

                                    தமிழுக்கு கிடைத்திருக்கும் கௌவரம் இது.உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த கலைஞர்களும் நம்முடைய முயற்சியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு.அப்படி ஒரு அரங்கில் நம்ம ஊர் குதிரை பங்கேற்பது நமக்கு பெருமையான ஒன்று.அழகர்சாமி குதிரை குழுவை வாழ்த்தி அனுப்பி வைப்போம்.
-

19 comments:

Unknown said...

நல்ல விஷயம் தானே !!

மாய உலகம் said...

அழகர்சாமியின் குதிரை வெற்றி வாகை சுடட்டும்

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

நல்ல விஷயம் தானே !!

ஆமாம் சிவா,எஃப்,எம் ல வேலை கெடச்சிடுச்சி போல கலக்கறீங்க! நன்றி

shanmugavel said...

@மாய உலகம் said...

அழகர்சாமியின் குதிரை வெற்றி வாகை சுடட்டும்

நன்றி நண்பரே!

நிரூபன் said...

தமிழ்ச் சினிமாக்கும்,
தமிழுக்கும் பெருமை தரும் விடயத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
அழகர் சாமியின் குதிரை..நிச்சயம் விருதினைப் பெற்றுக் கொள்ளும்,

shanmugavel said...

@நிரூபன் said...

தமிழ்ச் சினிமாக்கும்,
தமிழுக்கும் பெருமை தரும் விடயத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
அழகர் சாமியின் குதிரை..நிச்சயம் விருதினைப் பெற்றுக் கொள்ளும்,

நன்றி நிரூபன்.

Sankar Gurusamy said...

அழகர்சாமியின் குதிரை திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

சக்தி கல்வி மையம் said...

நல்லது தானே?

அம்பலத்தார் said...

வாழ்த்துக்கள்

ராஜா MVS said...

நல்ல ஆரோக்கியமான செய்தி,

வெற்றிபெற வாழ்த்துகள்..

பகிர்வுக்கு நன்றி.. நண்பரே..,

ஓசூர் ராஜன் said...

தமிழ் வாழ்க!

Mathuran said...

நல்ல விசயம்

shanmugavel said...

@Sankar Gurusamy said...

அழகர்சாமியின் குதிரை திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

நன்றி சங்கர்

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்லது தானே?

ஆமாம்,கருன் நன்றி

shanmugavel said...

@அம்பலத்தார் said...

வாழ்த்துக்கள்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி

shanmugavel said...

@ராஜா MVS said...

நல்ல ஆரோக்கியமான செய்தி,

வெற்றிபெற வாழ்த்துகள்..

பகிர்வுக்கு நன்றி.. நண்பரே..,

நன்றி நண்பரே!

shanmugavel said...

@ராஜன் said...

தமிழ் வாழ்க!

நன்றி நண்பரே!

shanmugavel said...

@மதுரன் said...

நல்ல விசயம்

நன்றி மதுரன்.

அ.முத்து பிரகாஷ் said...

மகிழ்வான செய்தி தோழர்...

அழகர்சாமியின் குதிரையின் திக்விஜயம் தொடரட்டும் எல்லைகளை கடந்து..

மதம் பிடித்த அழகர்சாமியின் குதிரை..
http://neo-periyarist.blogspot.com/2011/05/blog-post_15