Sunday, October 23, 2011

தீபாவளிக்கு இனிப்பு சாப்பிடுவீங்களா?                                                                     அலர்ஜி முதல் ஆண்மைக்குறைவு வரை இனிப்புகள் நோயைக் கொண்டுவரலாம் என்பதே நிஜம்.  தீபாவளிக்கு பட்டாசுக்கு அடுத்து இனிப்புகள்தான் நினைவுக்கு வரும்.பட்டாசுகளின் விலையேற்றத்தால் இப்போது வெடிச்சத்தம் குறைவாகத்தான் இருக்கிறது.நகரத்தில் அல்ல! கிராமத்தில் சொல்கிறேன்.

நகரத்தில் மட்டுமே அதிகம் முக்கியத்துவம் பெற்ற இனிப்புகள் இப்போது கிராமத்திலும் அதிகம் இடம் பெற்றிருக்கிறது.விதம்விதமான இனிப்புகள்.கிராமத்து ஆட்களுக்கு அதன் பெயரைக் கூட அவ்வளவாக தெரியாது.தீபாவளி சீட்டுகள்தான் இதை கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நகையுடன்,பட்டாசு பெட்டியும்,இனிப்பும் காரமும் சேர்த்துக் கொடுப்பதுதான் தீபாவளி சீட்டு.கிராமங்களில் இந்த கலாச்சாரம் பரவி விட்டது.

இனிப்பு விசயத்துக்கு வருவோம்.முதலாவதாக அதில் சேர்க்கப்படும் நிறமிகள் .முதல் வரியில் உள்ள தொந்தரவுகளை உருவாக்குவதில் இதற்கு முக்கிய பங்குண்டு.நாம் உண்ணும் உணவுப்பொருட்களில் காணப்படும் அத்தனை கலர்களை உருவாக்குவதும் வேதிப்பொருட்கள்.மாத்திரை ,மருந்துகளிளும்தான்.இவை அனுமதிக்கப்பட்ட தரமானவையாய் இருந்தால் பிரச்சினை எதுவுமில்லை.பல இடங்களில் அப்படி இருப்பதில்லை என்பதே நிஜம்.

மக்களின் மனோபாவம் விலை குறைவென்றால் அங்கே கூட்டம் கூடிவிடுகிறது.தரமும் அதற்கு தக்கபடிதான் இருக்கும்.இன்னொன்று நெய் என்பதை பெயருக்கு சேர்த்திருப்பார்கள்.இல்லாவிட்டால் அப்படி வாசனைக்கு இருக்கும்.மற்ற சேர்க்கைகளில் வயிற்று உபாதைகள் நிச்சயம்.


ஒரு கடையில் பார்த்தேன்.இனிப்புகள் அதிக விற்பனை ஆகும் என்பதால் கண்ணாடிப் பெட்டிகளுக்கு மேலே அடுக்கி வைத்திருக்கிறார்கள்.சில இடங்களில் அரைகுறையாக பாலிதீன் கவர்கள் மூடப்பட்டுள்ளன.காற்றில் வீதியில் இருக்கும் அழுக்குகள் பெரும்பாலும் அதில் விழுகிறது.பேருந்து செல்லும்போது ஏற்படும் புழுதியும் அதில் சேர்ந்து கொள்கிறது.ஆனாலும் வாங்குபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்புறம் மருத்துவமனைகளுக்கும் அலைகிறார்கள்.

அரசாங்கம் கவனமாக செயல்பட்டால் இவையெல்லாம் தவிர்க்கக் கூடியவை.தீபாவளிக்கு வீட்டில் செய்யும் சிறப்பு இனிப்பு ஒன்று உண்டு.கௌரி விரதத்தில் படைப்பார்கள்.கொஞ்சம் அதிகமாக வேலை வாங்கும்.அரிசிமாவு இடித்து,பாகு எடுத்து எண்ணெய்யில் பொரிக்கும் அதிரசம்.வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்து நிறைந்த பலகாரம்.கடையில் விற்கும் இனிப்புகளை விடவும் இதெல்லாம் பரவாயில்லை.
-

27 comments:

shanmugavel said...

வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

இப்பல்லாம் வீட்டில் யார் இனிப்பு செய்கிறார்கள்?சென்னையில் இருக்கவே இருக்கு கிராண்ட்,சூரியா ,அர்ச்சனா
என்று எத்தனையோ?ஸ்வீட் சாப்பிடாம ஒரு தீபாவளியா?நடக்கிறது நடக்கட்டும்!
தீபாவளி வாழ்த்துகள்.

suryajeeva said...

இதை சாப்பிட்டு உடலில் கொழுப்பு ஏறுவது தான் மிச்சம்... அளவோடு இருந்தால் எதுவும் நன்மையே... எது அளவு என்பதில் சிக்கல் இருப்பதும் உண்மையே

ராஜா MVS said...

என் இனிய தீபாவளி வாழ்த்துகள்... நண்பரே...

இராஜராஜேஸ்வரி said...

வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்து நிறைந்த பலகாரம்.கடையில் விற்கும் இனிப்புகளை விடவும் இதெல்லாம் பரவாயில்லை./

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

இப்பல்லாம் வீட்டில் யார் இனிப்பு செய்கிறார்கள்?சென்னையில் இருக்கவே இருக்கு கிராண்ட்,சூரியா ,அர்ச்சனா
என்று எத்தனையோ?ஸ்வீட் சாப்பிடாம ஒரு தீபாவளியா?நடக்கிறது நடக்கட்டும்!
தீபாவளி வாழ்த்துகள்.

உங்களுக்கு பிரச்சினை இல்லை அய்யா! சிறு நகரத்தில் உள்ளவர்களுக்கே பிரச்சினை.நன்றி

shanmugavel said...

@suryajeeva said...

இதை சாப்பிட்டு உடலில் கொழுப்பு ஏறுவது தான் மிச்சம்... அளவோடு இருந்தால் எதுவும் நன்மையே... எது அளவு என்பதில் சிக்கல் இருப்பதும் உண்மையே

அளவோடு என்பதுடன் தரமானதாக இருக்கவேண்டும்.நன்றி

கோகுல் said...

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுன்னு சொல்வாங்க!
ஆனா இப்பல்லாம் அளவோட இருந்தாலே நஞ்சாகிறது!

அதுவும் சில இனிப்புகளில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் மிகவும் தீங்கானவை.
சில இனிப்புகளில் அலுமினியம் பேப்பர் போல ஒட்டியிருப்பார்கள் இதுவும் தான் ஆபத்தானது!
தீபாவளி முடிஞ்சு கொஞ்ச நாள் எல்லா மருத்துவமனைகளும் மருந்து கடைகளும் நிரம்பி வழியும் என நினைக்கிறேன்!
வீட்டில் எந்த தீங்கு செய்யாத கைப்பக்குவதொடு பரிவையும் கலந்து செய்யும் இனிப்பை பகிர்ந்துண்டு தீபாவளியை இனிப்பாக்குவோம்!

RAVICHANDRAN said...

சாலையோர கடைகளில் வாங்காமல் பாதுகாப்பாக உள்ள நல்ல கடைகளில் வாங்குவதே நல்லது.இதில் விலை பார்க்கக் கூடாது

RAVICHANDRAN said...

விழிப்புணர்வு அவசியம்.

shanmugavel said...

@ராஜா MVS said...

என் இனிய தீபாவளி வாழ்த்துகள்... நண்பரே...

நன்றி நண்பரே!

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்து நிறைந்த பலகாரம்.கடையில் விற்கும் இனிப்புகளை விடவும் இதெல்லாம் பரவாயில்லை./

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி

shanmugavel said...

@கோகுல் said...

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுன்னு சொல்வாங்க!
ஆனா இப்பல்லாம் அளவோட இருந்தாலே நஞ்சாகிறது!

அதுவும் சில இனிப்புகளில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் மிகவும் தீங்கானவை.
சில இனிப்புகளில் அலுமினியம் பேப்பர் போல ஒட்டியிருப்பார்கள் இதுவும் தான் ஆபத்தானது!
தீபாவளி முடிஞ்சு கொஞ்ச நாள் எல்லா மருத்துவமனைகளும் மருந்து கடைகளும் நிரம்பி வழியும் என நினைக்கிறேன்!
வீட்டில் எந்த தீங்கு செய்யாத கைப்பக்குவதொடு பரிவையும் கலந்து செய்யும் இனிப்பை பகிர்ந்துண்டு தீபாவளியை இனிப்பாக்குவோம்!

நல்ல கருத்துக்கள் கோகுல்,நன்றி

shanmugavel said...

@RAVICHANDRAN said...

சாலையோர கடைகளில் வாங்காமல் பாதுகாப்பாக உள்ள நல்ல கடைகளில் வாங்குவதே நல்லது.இதில் விலை பார்க்கக் கூடாது

உண்மைதான் நண்பரே! நன்றி

சாகம்பரி said...

தீபாவளி இனிப்புகள் வீட்டிலேயே செய்வதுதான். வீட்டில் செய்யும் வகைகளே அஜீரணத்தை கொண்டு வரும். இத்துடன் தீபாவளி லேகியமும் உண்பது நல்லது. அளவோடு இருந்தால் தீபாவளி இனிப்புகள் மகிழ்ச்சியை கொண்டுவரும். தீபாவளி வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

கொஞ்சமா சாப்பிட்டாலும்,
செய்ய முடிந்த அளவுக்கு வீட்டிலேயே
செய்து சாப்பிடுவது உடலுக்கு நலம்.
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே.

ஓசூர் ராஜன் said...

useful post

Sankar Gurusamy said...

இப்போது விலையைப்பார்த்தும் தரத்தை உறுதி செய்ய முடியவில்லை. எல்லாம் விதி..

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி..


http://anubhudhi.blogspot.com/

சத்ரியன் said...

இனிப்பு பிரியர்களுக்கு கசப்பு பதிவு அண்ணே.

அடியேன் இனிப்புக்கு எதிரி. ஆனாலும், எப்பவாவது லைட்டா டச் உண்டு.

தீபாவளி என்றால் எங்கள் அம்மாவின் கை பக்குவத்தில் அதிரசம் (எங்க ஊர்ல பணியாரம்-னு சொல்வோம்) தான். அது மட்டுந்தான்!

கடை இன்னிப்புகளுக்கு பை பை.

சசிகுமார் said...

என்ன சார் இப்படி பயமுறுத்தி விட்டுடீங்க...

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

காலத்திற்கு ஏற்ற பதிவு நண்பரே. இதைப் பற்றி நானும் என் பதிவில் [http://kaialavuman.blogspot.com/2011/10/blog-post_20.html#en] எழுதியுள்ளேன். நேரமிருந்தால் படிககவும்.

குடந்தை அன்புமணி said...

கடைகளில் வாங்கினால் காசுக்கு கட்டுபடியாகாதுண்ணே... அதோடு நீங்க சொன்ன அத்தனையும் அனுபவிக்கணும்.. தங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>தீபாவளிக்கு இனிப்பு சாப்பிடுவீங்களா?

ஓ சி ல கிடைச்சா...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள்.,

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......

ஸ்ரீராம். said...

இனிப்பு சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன? என்னதான் இருந்தாலும் வீட்டில் செய்து சாப்பிடுவதுதான் நல்லது.

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

நிரூபன் said...

காலத்திற்கேற்ற காத்திரமான பதிவு,

தெருவோரக் கடைகளில் விற்கபப்டும் இனிப்புக்களின் விளைவு பற்றி அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.