Pages

Wednesday, December 7, 2011

மாத்திரைகளும் மனிதர்களும்


பலசரக்கு கடைகளில்,காய்கறி கடைகளில் நிற்கும் மக்கள் கூட்ட்த்தை விட அலை மோதுகிறார்கள்.சமீப காலமாக மருந்துக்கடைகள் நிரம்பி வழிகின்றன.முன்பெல்லாம் மருத்துவமனை,மருத்துவர் அருகில் இருந்தால்தான் ஃபார்மஸி விற்பனை இருக்கும் என்று நம்பினார்கள்.இப்போது அப்படியில்லை.
                              தானாகவே மாத்திரை பெயர் சொல்லி வாங்குபவர்களும்,தொந்தரவை சொல்லி வாங்கிக் கொள்பவர்களும் அதிகரித்து விட்டார்கள்.இது தொடர்பாக எனது முந்தைய பதிவுகள்  மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார் மற்றும் உடல்நலம்-உயிரைக்குடிக்கும் பழக்கங்கள். அலோபதி கடைகள் என்றில்லாமல் சித்தா,ஆயுர்வேத மருந்துகளும் சக்கைப்போடு போடுகின்றன.
                              எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.உறவினர் ஒருவருக்கு சரியாக தூக்கம் வருவதில்லை என்று மருத்துவரிடம் போனார்.அவரும் மாத்திரைகள் கொடுத்தார்.அப்புறம் மருத்துவரிடம் போகாமலே கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார்.ஒரு கட்ட்த்தில் மாத்திரை இல்லாவிட்டால் தூக்கமில்லை என்ற நிலை வந்து விட்ட்து.
                               வீட்டில் இருப்பவர்கள் மிகத் தாமதமாகவே இதை அறிந்திருக்கிறார்கள்.மீண்டும் மருத்துவரிடம் அழைத்துப்போய் விஷயத்தைச்சொன்னால் பழைய மருந்து சீட்டு அல்லது மாத்திரை அட்டை ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.பரிந்துரை சீட்டு கிடைக்காவிட்டாலும் மாத்திரை அட்டையை கொண்டுபோய் காட்டினார்கள்.
                                மாத்திரையை பார்த்தவுடன் மருத்துவருக்கு புன்னகை.அது தூக்கத்தை வரவழைக்கும் மாத்திரை அல்ல! ஆனால் வலி நிவாரணி.உடலில் ஏதோ வலி இருப்பதாக சொன்னதால் இது தூக்கத்திற்கு என்று காட்டி அப்போதைக்கு கொடுத்துவிட்டார்.வலி நிவாரணியை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது.சிறுநீரகம் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்.
                               இப்படி இன்று நிறைய பேர் இருக்கலாம் என்று தோன்றுகிறது.தூக்கத்திற்கு என்றில்லாமல் உடல்வலி,வயிற்றில் அமிலம் சுரத்தல் என்று மாத்திரை போட்டால்தான் ஆகிறது என்று ஆகிவிட முடியும்.மாத்திரைகளுக்கு அடிமையான நிலைதான் இது.சில உடல் நலக்குறைவுகளுக்கு தொடர்ந்து மாத்திரை உட்கொள்பவர்கள் மனதளவில் இப்படி ஆகிவிடுவதுண்டு.
                                இம்மாதிரியான நிகழ்வுகளில் மாத்திரைகள்தான் மீண்டும் பரிந்துரைப்பார்கள்.படிக்காத ஆளாக இருந்தால் வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள்.விஷயம் தெரிந்த படித்தவராக இருந்தால் அதற்கும் மாத்திரை இருக்கிறது.சிலரை ஏமாற்ற முடியாது.அவர்களுக்கு ஆலோசனைதான் தீர்வு.
                                மருந்துக்கடைகளில் அலைமோதும் கூட்ட்த்தில் மேலே சொன்னவாறு இருக்கவும் வாய்ப்புள்ளது.நம் குடும்பத்திலோ,தெரிந்தவர்களோ யாரேனும் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்.ஒரே மாத்திரையை மீண்டும் மீண்டும் நாமாகவே வாங்கிப் பயன்படுத்துவது பிரச்சினையை வளர்க்கும்.

32 comments:

  1. மருந்துக் கடையில் கேட்டோ,அல்லது தானாகவோ மருந்து வாங்கும் பழக்கம் மாற வேண்டும். இந்தப் பழக்கம் தமிழ் நாட்டில்தான் அதிகம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. குறிப்பாக் இந்த ஜெலுசிலுக்கும் டைஜீனுக்கும் அடிக்ட் ஆனவர்கள் இருக்கிறார்களே....ரொம்ப அதிகம்!

    ReplyDelete
  3. ஒவ்வொரு மெடிக்கல் ஓனரும் டாக்டரை போல அல்லவா மருந்து தருகிறார்கள்.ப்ரிஸ்க்ரிப்சன் இல்லாமல் தர கூடாது என்று சட்டம் போட வேண்டும்...

    ReplyDelete
  4. @சென்னை பித்தன் said...

    மருந்துக் கடையில் கேட்டோ,அல்லது தானாகவோ மருந்து வாங்கும் பழக்கம் மாற வேண்டும். இந்தப் பழக்கம் தமிழ் நாட்டில்தான் அதிகம் என நினைக்கிறேன்.

    ஆமாம் அய்யா,நன்றி

    ReplyDelete
  5. @ஸ்ரீராம். said...

    குறிப்பாக் இந்த ஜெலுசிலுக்கும் டைஜீனுக்கும் அடிக்ட் ஆனவர்கள் இருக்கிறார்களே....ரொம்ப அதிகம்!

    உண்மை,இவை மருத்துவர் பரிந்துரையை விட நேரடியாக வாங்குவது மிக அதிகம் என்கிறார்கள்.நன்றி

    ReplyDelete
  6. @கோவை நேரம் said...

    ஒவ்வொரு மெடிக்கல் ஓனரும் டாக்டரை போல அல்லவா மருந்து தருகிறார்கள்.ப்ரிஸ்க்ரிப்சன் இல்லாமல் தர கூடாது என்று சட்டம் போட வேண்டும்...

    கட்டுப்படுத்தவும் ஒரு சட்டம் வர இருக்கிறது,நன்றி

    ReplyDelete
  7. மருத்துவரையும், மாத்திரையும் தவிர்ப்பது நல்லது, முடியாத பட்சத்தில் மட்டுமே மருத்துவரை அனுகலாம்...

    நல்ல பகிர்வு...

    ReplyDelete
  8. தூக்கமாத்திரைக்கு அடிமையாக இருப்பவ்ர்கள்,வலி மாத்திரைக்கு அடிமையாக இருப்பவர்கள் அதிகம் என்கிறார்கள்.

    ReplyDelete
  9. //வலி நிவாரணியை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது.சிறுநீரகம் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்.//

    பயனுள்ள பகிர்வு.நன்றி

    ReplyDelete
  10. கண்டபடி அண்டி பயோட்டிக்கை வாங்கி எங்கள் மக்கள் தேவையற்ற பாவனைக்கு பயன்படுத்தியதால் தானெ ரெற்ரா சைக்லின் போன்ற மாத்திரைகள் சந்தையை விட்டே துரத்தப்பட்டு விட்டது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

    நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

    சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

    ReplyDelete
  11. இன்னும் இப்படி நிறையப் பேர் இருக்கிறார்கள்...
    நோவால்ஜின், அனால்ஜின் அப்படின்னு ஏகப்பட்ட ஜின்கள்
    பெட்டிக்கடைகளில் கிடைக்கிறது. தலைவலி உடல்வலி எதுவாயிருந்தாலும்
    இந்த மாத்திரைகள் தான்.
    மருத்துவரிடம் போய் பாருங்கள் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள்...இந்த
    மாத்திரை போட்டால் தான் கேட்கும் என்பார்கள்..

    இன்று நீங்கள் சொன்னதுபோல, மாத்திரைகளின் பெயர் சொல்லி தானாக வாங்கும்
    பழக்கம் படித்தவர்கள் மத்தியிலும் வளர்ந்துள்ளது.
    உடல் நலம் என்பது நாம் பயிற்சி எடுக்கும் நிலமல்ல...
    எதுவாயிருந்தாலும் மருத்துவரைத்தான் அணுகவேண்டும் என்ற
    எண்ணம் உணரவேண்டும்..

    அருமையான விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  12. பாஸ் நல்ல பயன் உள்ள பதிவே.... ஆமா பாஸ் உங்க வயசு என்ன??? ஹீ ஹீ சும்மாதான் :)

    ReplyDelete
  13. எல்லாக் கால‌த்துக்கும் எல்லாத் த‌ர‌ப்பு ம‌க்க‌ளுக்கும் செல்லுப‌டியாகும் ப‌திவு!

    ReplyDelete
  14. டாக்டர் கிட்ட போயி டோக்கன் வாங்கி தலைவலிக்குதுன்னு சொல்லி ஒரு ஊசிய போட்டு அவரு தர்ற மாத்திரைகளை வாங்கிட்டு அவரு கேட்கிற பீஸையும் கொடுத்துட்டு வர எப்படியும் அரை நாள் செலவாகும். அதுக்கு போற போக்குல ஒரு மாத்திரையை வாங்கி போட்டுகிட்டா காசு, நேரம் எல்லாமே மிச்சம் தானே... இதான் இன்றைய மக்களின் மனநிலை...


    வாசிக்க:
    சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி

    ReplyDelete
  15. @துரைடேனியல் said...

    Arumai Sago. Nalla vizhippunarvu pathivu.

    நன்றி

    ReplyDelete
  16. @♔ம.தி.சுதா♔ said...

    கண்டபடி அண்டி பயோட்டிக்கை வாங்கி எங்கள் மக்கள் தேவையற்ற பாவனைக்கு பயன்படுத்தியதால் தானெ ரெற்ரா சைக்லின் போன்ற மாத்திரைகள் சந்தையை விட்டே துரத்தப்பட்டு விட்டது...

    இது உலகம் முழுக்க இருக்கும் இன்றைய பிரச்சினைதான் நன்றி

    ReplyDelete
  17. @மகேந்திரன் said...

    இன்னும் இப்படி நிறையப் பேர் இருக்கிறார்கள்...
    நோவால்ஜின், அனால்ஜின் அப்படின்னு ஏகப்பட்ட ஜின்கள்
    பெட்டிக்கடைகளில் கிடைக்கிறது. தலைவலி உடல்வலி எதுவாயிருந்தாலும்
    இந்த மாத்திரைகள் தான்.
    மருத்துவரிடம் போய் பாருங்கள் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள்...இந்த
    மாத்திரை போட்டால் தான் கேட்கும் என்பார்கள்..

    உண்மைதான் இது தமிழ்நாடு முழுக்க உள்ள பிரச்சினை நன்றி

    ReplyDelete
  18. @துஷ்யந்தன் said...

    பாஸ் நல்ல பயன் உள்ள பதிவே.... ஆமா பாஸ் உங்க வயசு என்ன??? ஹீ ஹீ சும்மாதான் :)

    அநியாயத்துக்கு வயச எல்லாமா கேட்கறது? ஹிஹி நன்றி பாஸ்

    ReplyDelete
  19. @நிலாமகள் said...

    எல்லாக் கால‌த்துக்கும் எல்லாத் த‌ர‌ப்பு ம‌க்க‌ளுக்கும் செல்லுப‌டியாகும் ப‌திவு!

    நன்றி

    ReplyDelete
  20. #தமிழ்வாசி பிரகாஷ் said...

    டாக்டர் கிட்ட போயி டோக்கன் வாங்கி தலைவலிக்குதுன்னு சொல்லி ஒரு ஊசிய போட்டு அவரு தர்ற மாத்திரைகளை வாங்கிட்டு அவரு கேட்கிற பீஸையும் கொடுத்துட்டு வர எப்படியும் அரை நாள் செலவாகும். அதுக்கு போற போக்குல ஒரு மாத்திரையை வாங்கி போட்டுகிட்டா காசு, நேரம் எல்லாமே மிச்சம் தானே... இதான் இன்றைய மக்களின் மனநிலை...

    ஆமாம் இந்த மனநிலை ஆபத்தானது என்பதே நிஜம்,நன்றி

    ReplyDelete
  21. @சசிகுமார் said...

    thanks for sharing

    நன்றி

    ReplyDelete
  22. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  23. நாள்தோறும் இன்று நடக்கிறது
    இத் தவறுகள்!
    மருந்து கடைக்காரர்களே
    அதற்குகுக் காரணம்!
    நல்ல பதிவு!




    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. வலி நிவாரணியை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது உயிரையினை அது எடுக்கும்.. எனபதனை சில நாட்களுக்கு முன்பு தான் உணர்ந்தோம்.. மருந்துக் கடையில் தானாகவோ மருந்து வாங்கும் பழக்கம் மாற வேண்டும்.

    ReplyDelete
  25. இந்த விளக்கம் நீண்ட நாள் வியாதிகளான சுகர், பிபிக்கு பொருந்தாதுன்னு நினைக்கிறேன். இவற்றில் ஏதாவது வித்தியாசமாக உணர்ந்தால் மட்டுமே மருத்துவர் அறிவுரை தேவை இருக்கும். மற்றபடி இருக்கும் வியாதிகளுக்கு மருத்துவரை கலந்தாலோசிப்பதே சிறப்பு..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  26. சரியா சொன்னீங்க .
    பயனுள்ள தகவல் .
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  27. மருந்து மாத்திரைகளை தொலைக் காட்சிகளில் சாதாரணமாக விளம்பரப் படுத்தி விற்கிறார்கள்... இதை என்ன சொல்வது?

    ReplyDelete
  28. சோத்துக்கு சரிசமமா உப்பு போட்டு திங்கிற்வ்ய்ங்க நாங்க -ன்னு ஒநு படத்துல வடிவேலு சொல்லுவார்.

    அதுபோல,

    சாப்பாட்டுக்கு சரி நிகராக மாத்திரைகளை சாப்பிட பழகிவிட்டார்கள் மக்கள்.

    நல்லதொரு விழிப்புணர்வு பதிவுங்க. நன்றி.

    ReplyDelete
  29. http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  30. வணக்கம் அண்ணா,

    நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    சிறிய உபாதைகளுக்கும் மருந்து மாத்திரைகளை உட் கொள்ள நினைக்கும் மக்கள் மாத்திரைகளைப் பற்றிய சரியான அறிவின்றி மாத்திரைகளை எடுக்கின்றார்கள். உண்மையில் மருத்துவ ஆலோசனையும், தாம் மாத்திரையினை உட் கொள்ள வேண்டியது சரியா என்றும் உணர்ந்து செயற்பட்டால் தான் இம் மாதிரி அலை மோதும் மக்க்ள் கூட்டத்தினைத் தடுக்க முடியும்.

    ReplyDelete