Pages

Thursday, December 8, 2011

காதலும் காமமும்


காதல்,இளமை உணர்ச்சிகள் என்பவை நாம் அவ்வளவாக கவனம் செலுத்தாத விஷயங்கள்.இருண்ட பக்கமாகவே இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. இளமை ஒரு முக்கியமான காலகட்டம்.வாழ்வின் அடித்தளமாக,திசைமாற்றும் புயலாக,வேகம்,மூர்க்கம் என்று விதவிதமாக விரியும் பொழுது.ஆனால் யாரும் பொருட்படுத்துவதில்லை.சங்கடமான விஷயங்களை சிந்திக்க மறுக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
                             தன்னுடைய மகன்களோ,மகள்களோ அப்படி இல்லை என்று மனம் தப்பித்துக்கொள்ள விரும்புகிறதா? பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காதல் போட்டியில் கொலை செய்கிறார்கள்.காதலை ஏற்றுக்கொள்ளாத மாணவியை கார் ஏற்றி கொல்கிறார்கள்.ஒன்பதாம் வகுப்பு மாணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறார்.
                              ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.காரணம் என்னவென்று அவரது பெற்றோர்களுக்கு தெரியாது.என் தற்கொலைக்கு நானே காரணம் என்று கடிதம் மட்டும் இருக்கிறது.இறுதிவரை என்ன காரணம் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.கேலி,கிண்டல் செய்தால் கூட உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
                              உலகமே நம்மை மதித்து போற்றவேண்டுமென்று அதிகமாக நினைக்கும் வயது.தான் அழகில்லை,வசதியில்லை என்று மன அழுத்த்த்தில் இருக்கும்போது கேலி செய்தால் செத்துப்போக முடிவெடுத்து விடுகிறார்கள்.நாட்டின் மக்கள் தொகையில் அதிகம் உள்ள இளைஞர்கள் மனக்குழப்பத்தில் தவிக்கிறார்கள். அரசாங்கமோ,பெரிய மனிதர்களோ கவலைப்படவேயில்லை.இதெல்லாம் ஹார்மோன் பிரச்சினை.சிந்திக்க ஒன்றுமில்லை என்று கருதக்கூடும்.
                                                                     அவர்களைத்திட்டுகிறோம்,சபிக்கிறோம்.சீரழிவதாக குற்றம் சாட்டுகிறோம்.சரியாக வளர்க்கப்படவில்லை என்று சொல்கிறோம்.நண்பர்கள் கெடுத்துவிட்டார்கள் என்று நம்புகிறோம்.அவர்கள் சரியில்லை.அவ்வளவுதான்.நம் வேலை முடிந்துவிட்ட்து.அவர்களுக்கு கடுமையாக தண்டனை தரவேண்டும்.
                             நாளிதழ்களில் வரும் செய்திகள் குறைவென்று எனக்குத் தோன்றுகிறது.பல வக்கிரங்கள் மூடி மறைக்கப்பட்டுவிடுகின்றன.தற்கொலைகள் குடும்ப மானம் கருதி திசை திருப்பி நோயால் ஏற்பட்ட மரணமாகின்றன.போதைக்கு அடிமையாவது,இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபடுவதென்று வெளித்தெரியாத விஷயங்களே அதிகம்.
                                 ஒரு இளைஞன் அல்லது இளம்பெண் உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது? அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கிறோமா? எனக்கு ஆத்திரமாக இருக்கிறது,தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது,கொல்ல வேண்டும் என்று எண்ணம் வருகிறது,துக்கமாக இருக்கிறது என்று அவர்கள் யாரிடம் சொல்வார்கள்.
                                  காதல்,காம்ம் உள்ளிட்ட பிரச்சினைகளை பெற்றோரிடம் கூறி ஆலோசனை பெறமுடியுமா? நண்பர்களிடம் சொன்னால் உரிய வழிகாட்டும் திறன் படைத்தவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறதா? இதற்காக ஒரு வழி காண முடியாதா? உலகத்தை கவனித்தால் வழி இல்லாமல் இல்லை.
                                   சீனாவில் கல்லூரிகளில் காதலும் காம்மும் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை சொல்லி ஆலோசனை பெற முடியும்.துக்கம்,ஆத்திரம்,கோபம் போன்ற உணர்ச்சிகளை நம்பிக்கையுள்ள ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து வெளியேவர முடியும்.இப்போதாவது சிந்திக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.

30 comments:

  1. அருமையான, எல்லோரும் சிந்திக்கும் படியான பதிவு. 16 - 25 வயதை சரியாக புரிந்து கொண்டவன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்வான். பகிர்விற்கு நன்றி நண்பரே!
    இதையும் படிக்கலாமே :
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete
  2. த.ம.2
    நிச்சயம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  3. @திண்டுக்கல் தனபாலன் said...

    அருமையான, எல்லோரும் சிந்திக்கும் படியான பதிவு. 16 - 25 வயதை சரியாக புரிந்து கொண்டவன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்வான். பகிர்விற்கு நன்றி நண்பரே!
    இதையும் படிக்கலாமே :

    படிச்சுட்டா போச்சு! நன்றி சார்.

    ReplyDelete
  4. @சென்னை பித்தன் said...

    த.ம.2
    நிச்சயம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

    நன்றி அய்யா!

    ReplyDelete
  5. @நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    ம் ...

    நன்றி சார்!

    ReplyDelete
  6. @கோவை எம் தங்கவேல் said...

    உண்மை...

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  7. உண்மை அனைவரும் சிந்திக்கவேண்டிய பகிர்வு

    நன்றி

    ReplyDelete
  8. காதலுக்கும் காமத்துக்கும் இருக்கும் சிறு நூல் இடைவெளியை தவறுதலாக புரிந்துகொண்டே
    நம் வாழ்நாட்களும் ஓடுகின்றான். படிக்கும் பருவத்திலிருந்தே இதற்கான தெளிவான விளக்கம்
    கொடுக்க வேண்டும் என்பது சரியான கருத்து. மற்ற உணர்சிகளை பேசுகையில் தீவிரமாக
    பேசும் நாம் காமம் என்று வந்தவுடன் சற்று அடக்கி வாசிக்க ஆரம்பிக்கிறோம்.
    கல்வியில் இணைத்தல் அவசியம்.

    ReplyDelete
  9. கட்டாயம் சிந்திக்கவேண்டிய விடயம். நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  10. இங்கு மேல்நாடுகளில் பல இளம்வயதினரும் தாங்கள் மற்றவர்களால் மதிக்கப்படவில்லையென எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். உயர்வகுப்பில் எனது மகளுடன் கல்விகற்கும் ஒரு மாணவியின் காதலன் தனது பிறந்தநாளிற்கு நண்பர்கள் யாரும் வரவில்லை என்ற மனவருத்தத்தில் காதலிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு புகையிரத்திதின் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இளவயதினரை பெற்றோரும் நண்பர்களும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும்

    ReplyDelete
  11. வணக்கம் அண்ணா,
    நல்லா இருக்கீங்களா?

    இக் கால இளைஞர்களுக்கும், டீன் ஏஜ் வயதினருக்கும், கல்லூரி மாண்வர்களுக்கும் ஏற்ற பதிவு.

    எம் நாட்டில் பாலியல் தொடர்பான புரிதல்கள் இன்மையே இந் நிலமைக்கான காரணம்! நீங்கள் சொல்வது போல காதல் - காமம் - பருவ மாற்றங்களால் ஏற்படும் விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு நாம் போதிய விளக்கம் அளிக்கத் தவறி விடுகின்றோம்! இந் நிலமை மாற வேண்டும்!
    அப்போது தான் காதல், காமம் தொடர்பான சரியான புரிதல்கள் தோன்றுவதோடு சமூகத்தில் நிகழும் விரும்பத்தகாத விடயங்களும் திருத்தப்படும்!

    ReplyDelete
  12. @RAVICHANDRAN said...

    உண்மை அனைவரும் சிந்திக்கவேண்டிய பகிர்வு

    நன்றி

    நன்றி சார்

    ReplyDelete
  13. @மகேந்திரன் said...

    காதலுக்கும் காமத்துக்கும் இருக்கும் சிறு நூல் இடைவெளியை தவறுதலாக புரிந்துகொண்டே
    நம் வாழ்நாட்களும் ஓடுகின்றான். படிக்கும் பருவத்திலிருந்தே இதற்கான தெளிவான விளக்கம்
    கொடுக்க வேண்டும் என்பது சரியான கருத்து. மற்ற உணர்சிகளை பேசுகையில் தீவிரமாக
    பேசும் நாம் காமம் என்று வந்தவுடன் சற்று அடக்கி வாசிக்க ஆரம்பிக்கிறோம்.
    கல்வியில் இணைத்தல் அவசியம்.

    ஆமாம் மகேந்திரன் நன்றி

    ReplyDelete
  14. @அம்பலத்தார் said...

    கட்டாயம் சிந்திக்கவேண்டிய விடயம். நல்லதொரு பதிவு.

    நன்றி சார்

    ReplyDelete
  15. @அம்பலத்தார் said...

    இங்கு மேல்நாடுகளில் பல இளம்வயதினரும் தாங்கள் மற்றவர்களால் மதிக்கப்படவில்லையென எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். உயர்வகுப்பில் எனது மகளுடன் கல்விகற்கும் ஒரு மாணவியின் காதலன் தனது பிறந்தநாளிற்கு நண்பர்கள் யாரும் வரவில்லை என்ற மனவருத்தத்தில் காதலிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு புகையிரத்திதின் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இளவயதினரை பெற்றோரும் நண்பர்களும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும்

    ஆமாம்,இது உலகம் முழுக்க பொதுவாக இருக்கும் விஷயம்.அரசு சிந்தித்தால் தீர்வு உண்டு.நன்றி

    ReplyDelete
  16. @நிரூபன் said...

    வணக்கம் அண்ணா,
    நல்லா இருக்கீங்களா?

    இக் கால இளைஞர்களுக்கும், டீன் ஏஜ் வயதினருக்கும், கல்லூரி மாண்வர்களுக்கும் ஏற்ற பதிவு.

    எம் நாட்டில் பாலியல் தொடர்பான புரிதல்கள் இன்மையே இந் நிலமைக்கான காரணம்! நீங்கள் சொல்வது போல காதல் - காமம் - பருவ மாற்றங்களால் ஏற்படும் விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு நாம் போதிய விளக்கம் அளிக்கத் தவறி விடுகின்றோம்! இந் நிலமை மாற வேண்டும்!
    அப்போது தான் காதல், காமம் தொடர்பான சரியான புரிதல்கள் தோன்றுவதோடு சமூகத்தில் நிகழும் விரும்பத்தகாத விடயங்களும் திருத்தப்படும்!

    சரியாக புரிந்துகொண்டீர்கள் சகோ! நன்றி

    ReplyDelete
  17. நாம் நம் சமூகப் பழக்க வழக்கங்களில் சமீப காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக இழந்திருக்கும் ஒரு விஷயம் கூட்டுக் குடும்ப முறை. இதுவும் பல பள்ளிகளில் சமீபத்தில் நடைமுறையில் இல்லாத மாரல் சைன்ஸ் என்ற வகுப்புகளும் இதற்கான பெரிய காரணிகளில் இரண்டு!

    ReplyDelete
  18. நம்மூர் ஆசிரியர்களை நம்பி இது போல் ஆலோசனை சரி தானா? நான் அனைத்து ஆசிரியர்களையும் சொல்ல வில்லை.. ஆனால் இந்த ஆசிரியர்களில் பலர் களை செடிகள் தானே

    ReplyDelete
  19. சரியான் புரிந்துனர்தலும் வழிகாட்டுதலும் இல்லாததால் நிகழும் இது போன்ற நிகழ்வுகளை நிச்சயம் அவர்களை சுற்றியுள்ள நம்பிக்கையுள்ள தெளிந்த ஒருவருடன் பகிர்வதன் மூலம் தவிர்க்க முடியும்.

    ReplyDelete
  20. இன்றைய சூழ்லை உத்தேசித்து ஆழமாக யோசித்து
    எழுதப்பட்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. எந்த உறவாக இருந்தாலும் நண்பர்கள் போல அமையும் நட்பு என்ற உறவாக அமைத்துக் கொண்டால் இளம் வயதினரோடு எளிதில் பழக முடியும்.பெற்றோர்களும் உடன்பிறந்தவர்களும் நண்பர்களாக பழக படிக்கவேண்டும். அப்போது இந்த பிரச்சினையை கையாள முடியும் என்பது என்னுடைய கருத்து சகோ. அருமையான பதிவு. அற்புதமான சிந்தனை.

    தமிழ்மணம் வாக்கு 9.

    ReplyDelete
  22. @ஸ்ரீராம். said...

    நாம் நம் சமூகப் பழக்க வழக்கங்களில் சமீப காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக இழந்திருக்கும் ஒரு விஷயம் கூட்டுக் குடும்ப முறை. இதுவும் பல பள்ளிகளில் சமீபத்தில் நடைமுறையில் இல்லாத மாரல் சைன்ஸ் என்ற வகுப்புகளும் இதற்கான பெரிய காரணிகளில் இரண்டு!

    மாரல் சைன்ஸ் வகுப்பு அவசியம் என்றே நானும் கருதுகிறேன்.ஏன் காணாமல்போனது என்று தெரியவில்லை.நன்றி

    ReplyDelete
  23. உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனம் பலரிடம் இல்லை...
    நீ ஏன் இப்படி இருக்க? என்றும்... நாம் ஏன் அவன் போல் இல்லை? என்றும்...
    சங்கப்படுகிறார்கள்...

    சில நேரங்களில் நமது வண்ணத்தை மற்றவர் மேல் பூச முயற்ச்சிக்கிறோம்...
    அல்லது மற்றவர் வண்ணத்தை நமது மேல் பூசிக்கொள்ள ஆசை படுகிறோம்...
    இவை இரண்டுமே ஆபத்தானது...

    நமக்கென்று ஒரு வண்ணம் உண்டு, அதை கண்டுபிடித்து மெருகேற்றுவதே சிறந்த வாழ்வை அளிக்கும்...

    ReplyDelete
  24. @suryajeeva said...

    நம்மூர் ஆசிரியர்களை நம்பி இது போல் ஆலோசனை சரி தானா? நான் அனைத்து ஆசிரியர்களையும் சொல்ல வில்லை.. ஆனால் இந்த ஆசிரியர்களில் பலர் களை செடிகள் தானே

    ஆசிரியர்கள் ஆலோசனை தரமாட்டார்கள்.உளவியலில் பயிற்சி பெற்றவர்களை நியமிப்பார்கள்.நன்றி

    ReplyDelete
  25. @கோகுல் said...

    சரியான் புரிந்துனர்தலும் வழிகாட்டுதலும் இல்லாததால் நிகழும் இது போன்ற நிகழ்வுகளை நிச்சயம் அவர்களை சுற்றியுள்ள நம்பிக்கையுள்ள தெளிந்த ஒருவருடன் பகிர்வதன் மூலம் தவிர்க்க முடியும்.

    உண்மைதான் கோகுல் நன்றி

    ReplyDelete
  26. @Ramani said...

    இன்றைய சூழ்லை உத்தேசித்து ஆழமாக யோசித்து
    எழுதப்பட்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    நன்றி சார்

    ReplyDelete
  27. @துரைடேனியல் said...

    எந்த உறவாக இருந்தாலும் நண்பர்கள் போல அமையும் நட்பு என்ற உறவாக அமைத்துக் கொண்டால் இளம் வயதினரோடு எளிதில் பழக முடியும்.பெற்றோர்களும் உடன்பிறந்தவர்களும் நண்பர்களாக பழக படிக்கவேண்டும். அப்போது இந்த பிரச்சினையை கையாள முடியும் என்பது என்னுடைய கருத்து சகோ. அருமையான பதிவு. அற்புதமான சிந்தனை.

    பெற்றோர்கள்,நண்பர்கள் உதவும் வாய்ப்பு குறைவு.நன்றி

    ReplyDelete
  28. @ராஜா MVS said...

    உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனம் பலரிடம் இல்லை...
    நீ ஏன் இப்படி இருக்க? என்றும்... நாம் ஏன் அவன் போல் இல்லை? என்றும்...
    சங்கப்படுகிறார்கள்...

    சில நேரங்களில் நமது வண்ணத்தை மற்றவர் மேல் பூச முயற்ச்சிக்கிறோம்...
    அல்லது மற்றவர் வண்ணத்தை நமது மேல் பூசிக்கொள்ள ஆசை படுகிறோம்...
    இவை இரண்டுமே ஆபத்தானது...

    நமக்கென்று ஒரு வண்ணம் உண்டு, அதை கண்டுபிடித்து மெருகேற்றுவதே சிறந்த வாழ்வை அளிக்கும்...

    சிந்திக்க வைக்கிறது,நன்றி சார்.

    ReplyDelete
  29. வணக்கம் பாஸ்...
    பாஸ் உண்மையில் ரெம்ப அவசியமான விடயத்தை.. அலசி இருக்கீங்க.... நிச்சயமாக இப்போ நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு மூல காரணம் பாலியல் அறிவு இன்மையே... பாடசாலைகளில் பாலியலையும் ஒரு பாடமாக்க வேண்டும்.... அப்போதுதான் எல்லோருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்...
    ச்சும்மா இதெல்லாம் பேசப்படாது பேசப்படாது என்று சொல்லி ஒதுக்க ஒதுக்கத்தான் இதனால் இவ்ளோ பிரச்சனை வருது... ரியலி குட் பதிவு.

    ReplyDelete