Pages

Sunday, December 11, 2011

தம்பதிகள் தொலைத்த உணர்ச்சி

  கணவனும் மனைவியும் ஒன்றாக வருவார்கள்..ஏராளமான தம்பதிகளை சில ஆண்டுகளாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் பேசுவதை முழுமையாக கேட்டுக்கொண்டிருப்பேன்.உற்று கவனித்தவாறு இருப்பேன்.இரண்டு பேரையும் யாரோ கயிறு கொண்டு கட்டிப் போட்டது போல எனக்கு தோன்றும்.

பெரும்பாலான தம்பதிகள் இந்த எண்ணத்தை என்னிடம் தோற்றுவித்தார்கள்.திருமணம் என்ற நிறுவனம் இன்று ஆட்டம் கண்டு வருகிறது.கூட்டுக் குடும்பம் சிதறி தனிக்குடித்தனமாகி அதுவும் காணாமல் போய்விடுமோ என்ற எண்ணம் முளை விடுகிறது.

இன்றைய தம்பதிகள் பிணைக்கும் எதையோ தொலைத்து விட்டார்களா? அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறினார்கள்.இவர் செய்வது சரியில்லை என்றார்கள்.பதிலுக்கு கணவன் இவளுக்கு என்ன தெரியும் ?உலகம் தெரியாது என்றார்.வீட்டில் குழந்தைகளை கவனித்துக்கொண்டு சமையல் செய்து கொண்டு டி.வி பார்த்துக் கொன்டிருந்தால் எல்லாம் தெரிந்து விடுமா? மனைவி பதிலுக்கு சொன்னார்,"நீங்க கிழிச்சது ஒண்ணுமில்ல! எங்க தங்கச்சி வீட்டுக்காரரு இவர விட சின்னவரு வீடு கட்டிட்டாரு!" 

அவர்கள் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்தவர் பேசுவதை தடுக்க முயற்சித்தார்கள்.அப்போது குரல் உயரும்.அவர் பேசட்டும் கேட்போம் இருங்கள்! பிறகு நீங்கள் பேசலாம்.என்று குறுக்கிட வேண்டியிருக்கும்.தன் வீட்டு உறவுகளை மதிப்பதில்லை என்பது பெரும்பாலானவர்களின் ஆதங்கம்."என் மாமா உடல் நிலை சரியில்லாதபோது போய் பார்க்கலாம் என்றால் வேலை இருக்கிறது'' என்று சொல்லிவிட்டார்.நான் மட்டும் அவருடைய உறவினர்கள் என்றால் கவனிக்கவேண்டுமா? 

அவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள் ஒரே பையனை ஒழுங்கா வளர்க்க முடியல,அவன் ஒழுங்காக படிப்பதில்லை.எனக்கு எங்கே நேரம் இருக்கிறது என்றார் கணவர்." ''நான் என்னமோ அவன படிக்காதன்னு சொன்ன மாதிரி " என்கிறார் பதிலுக்கு மனைவி.தன்னை குறை சொல்லும்போது,குடும்பத்தினர் பற்றி பேசும்போது மனைவிக்கு ஆத்திரம் பொங்கியது.வேதனையாக உணர்வதாக பட்டது.மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கணவனுக்கு கண்ணில் ரத்தம் பாய்ந்தது.

அவர்கள் ஒவ்வொருவரும் தான் சொல்வது மட்டுமே சரியானது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள்.குழந்தைகளுக்காக பார்க்கிறேன் என்று சிலர் சொன்னார்கள்.சில பெண்கள்" நான் அப்போதே என் பெற்றோரிடம் மேலும் படித்து வேலைக்குப் போகவேண்டும் என்று சொன்னேன்.ஆனால் என் பேச்சை கேட்காமல் கட்டி வைத்து விட்டார்கள்" என்றார்கள்.

கணவர்களின் பெரும்பாலான கூற்று இது " வீட்டில் எல்லாமும் வாங்கி போட்டிருக்கிறேன் இல்லாத பொருள் எதுவுமில்லை.வாசிங் மெஷின்,கிரைண்டர்,டி.வி.,வருஷமானால் பட்டுப்புடவை.எதுவும் செய்யாமல் இல்லை. ஆனால் வீட்டில் இல்லாத ஒன்று இருந்தது.எனக்கு அவர்கள் ஒரு உணர்ச்சியை தொலைத்து வருவதாக தோன்றுகிறது.அந்த உணர்ச்சி அன்பு.

41 comments:

  1. நல்ல பதிவு.
    த.ம.1 .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. காமத்தால் உருவான காதல், காமம் தொலைந்த பின் தொலைந்து விடுகிறது...

    ReplyDelete
  3. இன்றைய நிலை பல குடும்பங்களில் உள்ளதைத் தெளிவு
    படுத்திவிட்டீர்
    மேலும் விலைவாசி ஏற்றம்
    பற்றாக்குறை இதை அதிகமாக்கி
    உள்ளது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. @நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    நல்ல பதிவு.
    த.ம.1 .
    வாழ்த்துக்கள்.

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  5. @suryajeeva said...

    காமத்தால் உருவான காதல், காமம் தொலைந்த பின் தொலைந்து விடுகிறது...

    ஆமாம்,பல காதல் கல்யாணத்திற்கு இது மிகவும் பொருந்தும்,நன்றி

    ReplyDelete
  6. @புலவர் சா இராமாநுசம் said...

    இன்றைய நிலை பல குடும்பங்களில் உள்ளதைத் தெளிவு
    படுத்திவிட்டீர்
    மேலும் விலைவாசி ஏற்றம்
    பற்றாக்குறை இதை அதிகமாக்கி
    உள்ளது

    ஆமாம் அய்யா,நன்றி

    ReplyDelete
  7. பதிவை படிக்கும் தம்பதிகள் அன்பைப் பற்றி நிச்சயம் சிந்திப்பார்கள்.பலருக்கு தன்னுடைய நிலையே தெரியாது.

    ReplyDelete
  8. //வீட்டில் எல்லாமும் வாங்கி போட்டிருக்கிறேன்//

    வீடு நிறைந்து இருப்பதைவிட மனம் நிறைந்து இருக்கவேண்டும்.நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. குடும்பத்துக்குன்னு நேரம் ஒதுக்கறதில்லை. இந்த செல்ஃபோன் சனியனுக்குக் கொடுக்கும் முன்னுரிமை கூட மனைவிக்கு இல்லை.

    ஆனால்..... 'வேலை முடிஞ்சு வந்தால் வீட்டுலே தானே (உங்கூடவே) இருக்கேன் ' என்ற பதைல் கணவனிடம் இருந்து.

    உண்மைதான். ஆனால் where is the quality time? உடம்பு மட்டும் வீட்டில் இருந்தால் போதுமா? முழுமனசோடு அஞ்சு நிமிசம் மற்ற எந்த இடையூறும் இல்லாமல் மனைவியுடன் பேசிப் பாருங்கள்.

    ReplyDelete
  10. oops........... தட்டச்சுப்பிழை:(

    பதைல் = பதில்

    ReplyDelete
  11. யோசிக்க வைக்கும் பதிவு பாஸ். :(

    ReplyDelete
  12. இந்த பிரச்சனைக்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமையே முதன்மைக்காரணம் அதைவிட நான் என்ற இறுமாப்பும்..... நான் சொல்வதுதான் சரி என்று இருப்பதும் ஒரு காரணம்.....

    இதுக்கு ஒரே தீர்வு புரிந்துணர்வும் அன்புந்தான்

    ReplyDelete
  13. பொதுவாகவே மனைவிமார்களில் பெரும்பாலானோர்
    கணவர்களிடம் எதிர்பார்ப்பது, கணவன் தன்னிடம் தனியாக
    ஒரு நாளைக்கு குறைந்தபட்ச நேரமாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பது. சூழல்கள் காரணமாகவும், சூழ்நிலைகள் காரணமாகவும், வினைகளின் விளைவுகள் காரணமாகவும் இது குடும்பத்தில் கணவனால் தவிர்க்கப் படுகையில் இது போன்ற பிரச்சனை தலைதூக்கி மற்ற எல்லாவற்றையும் இணைத்து சண்டையாக மாறி பிரிவில் சென்று முடிகிறது...

    இருபாலரும் ஒத்துப்போய் அன்பின் துணைகொண்டு
    உணர்சிகளை கட்டுக்குள் வைத்தால் இல்லறம் சுவைக்கும்.
    அருமையான கட்டுரைக்கு நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
  14. @RAVICHANDRAN said...

    பதிவை படிக்கும் தம்பதிகள் அன்பைப் பற்றி நிச்சயம் சிந்திப்பார்கள்.பலருக்கு தன்னுடைய நிலையே தெரியாது.

    உண்மை சார்,நன்றி

    ReplyDelete
  15. @RAVICHANDRAN said...

    //வீட்டில் எல்லாமும் வாங்கி போட்டிருக்கிறேன்//

    வீடு நிறைந்து இருப்பதைவிட மனம் நிறைந்து இருக்கவேண்டும்.நன்றி நண்பரே!

    நிஜம் நண்பரே! நன்றி

    ReplyDelete
  16. @துளசி கோபால் said...

    குடும்பத்துக்குன்னு நேரம் ஒதுக்கறதில்லை. இந்த செல்ஃபோன் சனியனுக்குக் கொடுக்கும் முன்னுரிமை கூட மனைவிக்கு இல்லை.

    ஆனால்..... 'வேலை முடிஞ்சு வந்தால் வீட்டுலே தானே (உங்கூடவே) இருக்கேன் ' என்ற பதைல் கணவனிடம் இருந்து.

    உண்மைதான். ஆனால் where is the quality time? உடம்பு மட்டும் வீட்டில் இருந்தால் போதுமா? முழுமனசோடு அஞ்சு நிமிசம் மற்ற எந்த இடையூறும் இல்லாமல் மனைவியுடன் பேசிப் பாருங்கள்.

    உண்மையே! செல்போனுக்கு ஒதுக்கும் நேரம்கூட இல்லை என்பது கஷ்டம்.நன்றி

    ReplyDelete
  17. @துஷ்யந்தன் said...

    யோசிக்க வைக்கும் பதிவு பாஸ். :(

    நன்றி பாஸ்/

    ReplyDelete
  18. @துஷ்யந்தன் said...

    இந்த பிரச்சனைக்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமையே முதன்மைக்காரணம் அதைவிட நான் என்ற இறுமாப்பும்..... நான் சொல்வதுதான் சரி என்று இருப்பதும் ஒரு காரணம்.....

    இதுக்கு ஒரே தீர்வு புரிந்துணர்வும் அன்புந்தான்

    ஆமாம்,நான் சொல்லவந்ததும் அதுதான்.நன்றி சார்

    ReplyDelete
  19. @மகேந்திரன் said...

    பொதுவாகவே மனைவிமார்களில் பெரும்பாலானோர்
    கணவர்களிடம் எதிர்பார்ப்பது, கணவன் தன்னிடம் தனியாக
    ஒரு நாளைக்கு குறைந்தபட்ச நேரமாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பது. சூழல்கள் காரணமாகவும், சூழ்நிலைகள் காரணமாகவும், வினைகளின் விளைவுகள் காரணமாகவும் இது குடும்பத்தில் கணவனால் தவிர்க்கப் படுகையில் இது போன்ற பிரச்சனை தலைதூக்கி மற்ற எல்லாவற்றையும் இணைத்து சண்டையாக மாறி பிரிவில் சென்று முடிகிறது...

    இருபாலரும் ஒத்துப்போய் அன்பின் துணைகொண்டு
    உணர்சிகளை கட்டுக்குள் வைத்தால் இல்லறம் சுவைக்கும்.
    அருமையான கட்டுரைக்கு நன்றிகள் பல நண்பரே.

    ஆம் நண்பரே!தங்கள் சிறந்த கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  20. ஏன் இப்படி? சிந்திக்க வேண்டிய கேள்வி?

    ReplyDelete
  21. குடும்பங்களில் இப்படியான நிலை ஏற்படுவதற்கு தொலைந்து வரும் அன்பும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமை, புரிந்துனர்வின்மை போன்றனவே காரணம்

    ReplyDelete
  22. இன்று பலர் இந்த அன்பைத் தொலைத்துவிட்டு கோர்ட் படிகளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  23. இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:
    நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

    http://www.change.org/petitions/central-government-of-india

    நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.

    ReplyDelete
  24. உண்மை தான். பெரும்பாலான குடும்பங்களில் இன்றைய நிலை இப்படி பட்டதாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  25. அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. அவர் என்னை சந்தோசமாக வைத்துக்கொள்ள வில்லை என்றும், அவளால் ஒரு நாள் கூட நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்றும், புலம்புபவர்கள் வாழ்க்கையை தொலைத்தவர்களே...

    குடும்பத்திடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை...
    ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்ள நினைப்பதுக்கு பெயர் குடும்பம் அல்ல...

    நாம் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கவேண்டும். மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும், சந்தோசமான தருனத்தை உருவாக்கி கொடுக்கவேண்டும், அத்தருனத்தில் நாமும் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும் இதுவே உங்களுக்கு சிறப்பான குடும்பத்தை உருவாக்கி கொடுக்கும்...

    ReplyDelete
  27. நல்ல அலசல்... நண்பரே...

    அவசியமான பகிர்வும்கூட...

    ReplyDelete
  28. @DrPKandaswamyPhD said...

    ஏன் இப்படி? சிந்திக்க வேண்டிய கேள்வி?

    ஆமாம் குறைந்தபட்ச சிந்தனையை தூண்டுவதே என்னுடைய நோக்கம்,நன்றி

    ReplyDelete
  29. @மதுரன் said...

    குடும்பங்களில் இப்படியான நிலை ஏற்படுவதற்கு தொலைந்து வரும் அன்பும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமை, புரிந்துனர்வின்மை போன்றனவே காரணம்

    இதுவும் காரணம்தான் மதுரன் நன்றி

    ReplyDelete
  30. @Sankar Gurusamy said...

    இன்று பலர் இந்த அன்பைத் தொலைத்துவிட்டு கோர்ட் படிகளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    உண்மை சங்கர் நன்றி

    ReplyDelete
  31. @சத்ரியன் said...

    உண்மை தான். பெரும்பாலான குடும்பங்களில் இன்றைய நிலை இப்படி பட்டதாகத்தான் இருக்கிறது.

    நன்றி சத்ரியன்.

    ReplyDelete
  32. @திண்டுக்கல் தனபாலன் said...

    அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. @ராஜா MVS said...

    அவர் என்னை சந்தோசமாக வைத்துக்கொள்ள வில்லை என்றும், அவளால் ஒரு நாள் கூட நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்றும், புலம்புபவர்கள் வாழ்க்கையை தொலைத்தவர்களே...

    ஆமாம் சார் தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி

    ReplyDelete
  34. @துரைடேனியல் said...

    Arumai Sago.

    நன்றி சகோ!

    ReplyDelete
  35. அவர்கள் ஒவ்வொருவரும் தான் சொல்வது மட்டுமே சரியானது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள்.குழந்தைகளுக்காக பார்க்கிறேன் என்று சிலர் சொன்னார்கள்.சில பெண்கள்" நான் அப்போதே என் பெற்றோரிடம் மேலும் படித்து வேலைக்குப் போகவேண்டும் என்று சொன்னேன்.ஆனால் என் பேச்சை கேட்காமல் கட்டி வைத்து விட்டார்கள்" என்றார்கள்.
    >>
    இப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் ஒலிக்கும் வாசகம் இதுவே. குடும்பத்தில் எல்லாருமே வாழ்கிறோம். ஆனால், சந்தோஷங்களை தொலைத்துவிட்டு...

    ReplyDelete
  36. தம்பதிகள் தங்களுக்குள்ளேயே தேடி கண்டு பிடிக்க வேண்டிய விஷயம் அது! Good post.

    ReplyDelete
  37. ஆடம்பர நகர வாழ்க்கையில் எல்லா பொருட்களையும் வாங்கி குவித்து விட்டு தம்பதியினரும் பொருட்களாகி போனதே கொடுமை ... பகிர்வுக்கு நன்றி ...

    ReplyDelete
  38. விழிப்புணர்வூட்டும் பதிவுகள் நிறைய தர்றீங்க. ரொம்ப உபயோகமான வலைதளம்.
    வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :)

    கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_22.html

    ReplyDelete
  39. Simple method
    Weekly once Husband have to join with wife hand and talk about the weekly messages, problems, jokes that will help to close each other.In begining it is hard but if this goes a month couples may get more interest to talk ETC

    ReplyDelete
  40. திருமணம் என்ற நிறுவனம் இன்று ஆட்டம் கண்டு வருகிறது.கூட்டுக் குடும்பம் சிதறி தனிக்குடித்தனமாகி அதுவும் காணாமல் போய்விடுமோ என்ற எண்ணம் முளை விடுகிறது.

    உண்மையான வார்த்தை
    நன்றி

    ReplyDelete