Pages

Wednesday, December 14, 2011

ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா?


பாலியல் தொல்லை என்றாலே பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களுக்கு இல்லையா?குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டபோதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்த்து.திருத்தவேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையிலிருந்து பெண்களைப்பாதுகாக்க சட்டம் வரவிருக்கிறது.
                              ஆரம்ப நாட்களில் எழுதி அதிக வாசகர்களை ஈர்த்த இடுகை அது.ஒரு பதிவை ஆயிரங்களில் வாசகர்கள் படிப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும்.பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்குஇல்லையா? என்ற பதிவு.நண்பர் ஒருவரின் அனுபவத்தை மிகவும் கவனமாக பரிசீலித்து வெளியிட்டேன்.அவருடைய பேட்டியும் தந்திருக்கிறேன்.யாரும் பேசாத பொருள் என்பதால் கவனம் பெற்றது.
                               பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராக பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2010 மசோதா வரவிருக்கிறது.இம்மசோதாவில் ஆண்களுக்கு நேரும் தொந்தரவுகளையும் சேர்ப்பது அவசியமா? பாராளுமன்ற குழு அப்படித்தான் சொல்லிவிட்ட்து.ஆண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளையும் கணக்கெடுத்து ஆய்வு செய்யவும் சொல்கிறார்கள்.
                                ஆணும் பெண்ணும் சம்ம் தானே? சேர்க்கத்தான் வேண்டும் என்ற கருத்தே இருக்கிறது.பெண்களுக்கு நேரும் தொல்லைகளுக்கும் ஆண்களுக்கு நேரும் தொல்லைகளுக்கும் என்ன வித்தியாசம்?ஆண்களுக்கு நிகழ்வது அபூர்வமானது.தவிர அப்படி ஒரு பெண் தொல்லையை தந்தாலும் அது மிகவும் நுட்பமாக இருக்கும்.முந்தைய இடுகைகளில் இருந்து கீழ்கண்ட விஷயங்களை கவனித்தால் தெரியும்.

 பெண் என்னதான் செய்வாள் ?
  • நண்பர்களை பிரித்து தனிமைப்படுத்துவது.
  • செல்வாக்கை குறைக்க முயற்சி செய்வது.
  • அதிகாரிகளிடம் பொய்யான காரணங்களை சொல்லி முறையிடுவது.
  • மற்ற பெண்களையும் தனக்கு ஆதரவாக மாற்றுவது.
  • பணியில் ஒத்துழைக்க மறுப்பது
  • நண்பர்களை விட்டே பின்தொடர்வது.
  • தொடர்ந்து இமேஜை கெடுக்கும் விதத்தில் அவதூறு பரப்புவது.
  • செயலையும்,நோக்கங்களையும் முடக்க நினைப்பது.
                                 இப்படி இருந்தால் ஆண்களுக்கு பாலியல் தொல்லை என்று சேர்ப்பது கஷ்டம். ஆண் ஒருவனால் தனக்கு பாலியல் தொல்லை இருக்கிறது என்று நிரூபிக்க முடிந்தால் பெரிய விஷயம்.ஆண்களைப்போல பெண் வெளிப்படையாக தொல்லை தருவது வாய்ப்பில்லாத ஒன்று.மற்ற ஆண்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.சமூகத்தின் உதவி கிடைப்பதும் கஷ்டம்.பெரிய்ய்ய இவன்?! என்பார்கள்.ரொம்ப்ப்ப்ப நல்லவரு என்று கிண்டலடிக்கவும் கூடும்.
                                பேருந்தில் ஒரு பெண் தன்னை இடித்துவிட்டான் என்றால் அதிக அளவில் ஆண்களே அடிக்க வருவார்கள்.ஆனால் ஒரு பெண் மீது ஆண் புகார் கூறினால் மற்ற பெண்களே விரும்ப மாட்டார்கள்.தனிமைப்படுத்தப் பட வாய்ப்புகள் அதிகம்.ஆனாலும் ஆண்களுக்கும் பொருந்துமாறு சட்டம் இருப்பதே சரியானது.நல்லவர்கள் யாரேனும் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளவும் வழியிருக்கும்.
                                ஏதேனும் ஒருவகையில் தொல்லைக்கு ஆளாகாத பெண் இருந்தால் அது அபூர்வம்.ஆணுக்கு பெண்ணால் தொல்லை நேர்ந்தால் அது அதிசயம்.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.ஒருவரே இருந்தாலும் பாதிக்கப்பட்டால் அவருக்கு நிவாரணம் இருக்க வேண்டும்.அவர் ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன?

32 comments:

  1. @நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    ம் ...

    நன்றி

    ReplyDelete
  2. அரிது..அரிது என்று சொல்லிவிட்டு
    ஆண்களின் மனுக்களை தள்ளிவைக்கக்கூடாது..
    அதற்கான ஆவன செய்யவேண்டும்.

    சரியாகச் சொன்னீர்கள் நண்பரே, பாலியல் தொல்லையால்
    பாதிக்கப்படும் ஆண்கள் மிகமிகக் குறைவே. ஆயினும்
    அளவைப் பார்க்காது, யாவருக்கும் ஒரே சட்டம் என்ற வகையில்
    இயற்றுவது நன்மை.

    ReplyDelete
  3. பாஸ்... யார் சொன்னது ஆண்களுக்கு பாலியல் தொல்லைகள் இல்லை என்று.... நிறைய இருக்கு பாஸ். இப்படிப்பட்ட கதைகளை என் பிரஞ்சு நண்பர்கள் சொல்லி நிறைய கேட்டு உள்ளேன்..... :(

    ReplyDelete
  4. ஆனால் ஒன்று பாஸ் பெண் சொல்லும் போது செவி மடுக்கும் இந்த உலகம் ஆண் சொல்லும்போது கேலிச்சிரிப்புதான் சிரிக்கும் இதனாலேயே பல ஆண்கள் வெளியே சொல்வது இல்லை

    ReplyDelete
  5. பட்டியலில் இருக்கும் விஷயங்களை நீங்களே சொல்லியிருப்பது போல பாலியல் தொல்லையில் சேர்க்க முடியாதுதான். ஆனால் நிச்சயம் பட்டியலில் உள்ள செயல்கள் பெரும்பாலான அலுவலகங்களில் நடப்பதுதான். ஆண்களுக்குப் பெண்களால் பாலியல் தொல்லை இருந்தாள் ஆண் அதை ஒரு புகாராகச் சொல்வான் என்று நினைக்கிறீர்களா....! :))

    ReplyDelete
  6. @மகேந்திரன் said...

    அரிது..அரிது என்று சொல்லிவிட்டு
    ஆண்களின் மனுக்களை தள்ளிவைக்கக்கூடாது..
    அதற்கான ஆவன செய்யவேண்டும்.

    சரியாகச் சொன்னீர்கள் நண்பரே, பாலியல் தொல்லையால்
    பாதிக்கப்படும் ஆண்கள் மிகமிகக் குறைவே. ஆயினும்
    அளவைப் பார்க்காது, யாவருக்கும் ஒரே சட்டம் என்ற வகையில்
    இயற்றுவது நன்மை.

    நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  7. @துஷ்யந்தன் said...

    பாஸ்... யார் சொன்னது ஆண்களுக்கு பாலியல் தொல்லைகள் இல்லை என்று.... நிறைய இருக்கு பாஸ். இப்படிப்பட்ட கதைகளை என் பிரஞ்சு நண்பர்கள் சொல்லி நிறைய கேட்டு உள்ளேன்..... :(

    நிறைய என்பதில்தான் வித்தியாசம்,நன்றி

    ReplyDelete
  8. @துஷ்யந்தன் said...

    ஆனால் ஒன்று பாஸ் பெண் சொல்லும் போது செவி மடுக்கும் இந்த உலகம் ஆண் சொல்லும்போது கேலிச்சிரிப்புதான் சிரிக்கும் இதனாலேயே பல ஆண்கள் வெளியே சொல்வது இல்லை

    ஆமாம்,மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.நன்றி

    ReplyDelete
  9. சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.ஆண்களுக்கும் தீர்வு தேவைதான்.

    ReplyDelete
  10. பொய்யாக குற்றம் சொன்னது தெரிந்தால் அதற்கும் தண்டனை தரவேண்டும்.நன்றி

    ReplyDelete
  11. ச்சே, எங்க ஊர்ல யாரும் அப்படி தொந்தரவு தர மாட்டேங்கறங்களே. அவ்வ்வ்

    ReplyDelete
  12. @ஸ்ரீராம். said...

    பட்டியலில் இருக்கும் விஷயங்களை நீங்களே சொல்லியிருப்பது போல பாலியல் தொல்லையில் சேர்க்க முடியாதுதான். ஆனால் நிச்சயம் பட்டியலில் உள்ள செயல்கள் பெரும்பாலான அலுவலகங்களில் நடப்பதுதான். ஆண்களுக்குப் பெண்களால் பாலியல் தொல்லை இருந்தாள் ஆண் அதை ஒரு புகாராகச் சொல்வான் என்று நினைக்கிறீர்களா....! :))

    ஆதரவு கிடைக்காது என்பதால் புகார் தர விரும்புவதில்லை.சில நேரங்களில் புகார்தரவும் ம்முன்வரலாம்.நன்றி

    ReplyDelete
  13. @RAVICHANDRAN said...

    சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.ஆண்களுக்கும் தீர்வு தேவைதான்.

    பாரளுமன்ற குழுவும் அப்படித்தான் சொல்கிறார்கள்.நன்றி

    ReplyDelete
  14. @RAVICHANDRAN said...

    பொய்யாக குற்றம் சொன்னது தெரிந்தால் அதற்கும் தண்டனை தரவேண்டும்.நன்றி

    ஆமாம் பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்,நன்றி

    ReplyDelete
  15. @சி.பி.செந்தில்குமார் said...

    ச்சே, எங்க ஊர்ல யாரும் அப்படி தொந்தரவு தர மாட்டேங்கறங்களே. அவ்வ்வ்

    நன்றி

    ReplyDelete
  16. நீங்கள் சொல்வதும் உண்மைதான்
    ஆனால் ஆண்களுக்குத் தொல்லை என்பது அரிதாக நடப்பது
    அதனால் எடுபடுவதில்லை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. வித்தியாசமான அலசல்! அருமை சார்!

    ReplyDelete
  18. இப்படியே எல்லா இடத்திலும் ஆண்களை பகடை காய்களாக பயன்படுத்துகின்றனர் பெண்கள். நல்ல கருத்துக்கள் அடங்கிய பதிவு...

    ReplyDelete
  19. ஆண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நிரூபிப்பது முடியாத காரியம் என்பதால் இது தேவை இல்லை என்பது என் கருத்து..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    TM-7

    ReplyDelete
  20. //ஏதேனும் ஒருவகையில் தொல்லைக்கு ஆளாகாத பெண் இருந்தால் அது அபூர்வம்.ஆணுக்கு பெண்ணால் தொல்லை நேர்ந்தால் அது அதிசயம்.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.ஒருவரே இருந்தாலும் பாதிக்கப்பட்டால் அவருக்கு நிவாரணம் இருக்க வேண்டும்.அவர் ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன?//


    அருமையான பதிவு. நல்ல அலசல். வாழ்த்துக்கள் சகோ.

    தமிழ்மணம் வாக்கு 8.

    ReplyDelete
  21. அரிதாயிருப்பினும்,சில நேரங்களில் ஆண்களும் பாதிக்கத்தான் படுகிறார்கள்.

    ReplyDelete
  22. சட்டம் என்பது பொதுவாக இருக்கவேண்டும்...
    ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல, பல சட்டங்கள் மாநிலத்திற்க்கு மாநிலம் வேறு படுகிறது...
    இப்பொழுது மாநிலத்திற்க்குள்ளேயே ஆண்,பெண் என்று வேறுபட போகிறது...
    என்ன ஒரு ஜனநாயகம்!!!

    ReplyDelete
  23. பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

    ReplyDelete
  24. @புலவர் சா இராமாநுசம் said...

    நீங்கள் சொல்வதும் உண்மைதான்
    ஆனால் ஆண்களுக்குத் தொல்லை என்பது அரிதாக நடப்பது
    அதனால் எடுபடுவதில்லை!

    நிஜம்தான் அய்யா! நன்றி

    ReplyDelete
  25. @திண்டுக்கல் தனபாலன் said...

    வித்தியாசமான அலசல்! அருமை சார்!

    நன்றி சார்.

    ReplyDelete
  26. @சசிகுமார் said...

    இப்படியே எல்லா இடத்திலும் ஆண்களை பகடை காய்களாக பயன்படுத்துகின்றனர் பெண்கள். நல்ல கருத்துக்கள் அடங்கிய பதிவு...

    நன்றி

    ReplyDelete
  27. @Sankar Gurusamy said...

    ஆண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நிரூபிப்பது முடியாத காரியம் என்பதால் இது தேவை இல்லை என்பது என் கருத்து..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    விதிவிலக்காக நிரூபிக்கும் வாய்ப்பும் ஏற்படலாம்.நன்றி

    ReplyDelete
  28. @துரைடேனியல் said...

    //ஏதேனும் ஒருவகையில் தொல்லைக்கு ஆளாகாத பெண் இருந்தால் அது அபூர்வம்.ஆணுக்கு பெண்ணால் தொல்லை நேர்ந்தால் அது அதிசயம்.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.ஒருவரே இருந்தாலும் பாதிக்கப்பட்டால் அவருக்கு நிவாரணம் இருக்க வேண்டும்.அவர் ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன?//


    அருமையான பதிவு. நல்ல அலசல். வாழ்த்துக்கள் சகோ.

    நன்றி சகோ!

    ReplyDelete
  29. @சென்னை பித்தன் said...

    அரிதாயிருப்பினும்,சில நேரங்களில் ஆண்களும் பாதிக்கத்தான் படுகிறார்கள்.

    ஆம் அய்யா! நன்றி

    ReplyDelete
  30. @ராஜா MVS said...

    சட்டம் என்பது பொதுவாக இருக்கவேண்டும்...
    ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல, பல சட்டங்கள் மாநிலத்திற்க்கு மாநிலம் வேறு படுகிறது...
    இப்பொழுது மாநிலத்திற்க்குள்ளேயே ஆண்,பெண் என்று வேறுபட போகிறது...
    என்ன ஒரு ஜனநாயகம்!!!

    இருவரையும் சேர்த்துவிடுவார்கள் என்றே கருதுகிறேன்.நன்றி

    ReplyDelete
  31. @ராஜா MVS said...

    பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

    கருத்துரைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. நல்ல விடயம் பலரைச் சென்று சேர வேண்டுமானல் மீள் பதிவிடுவது தவறில்லை பாஸ்...

    ஆண்களுக்கான தொல்லைகள் வெளித் தெரிவதில்லை. பெண்களின் கையில் அதிகாரம் இருப்பதை விட ஒரு பெண்ணின் தொல்லைகளினை ஆண் வெளியே சொல்வது அவனது கௌரவத்திற்கு இழிவாகி விடும் எனக் கருதுவதாகும் என நினைக்கிறேன்.

    ReplyDelete