Pages

Thursday, January 12, 2012

சோர்வாக இருக்கிறதா?


                               சில நேரங்களில் சோர்வாக இருக்கிறது.இரவு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் கூட சோர்வு ஏற்படும்.கடுமையான உடல் உழைப்பு,அலைச்சலுக்கு பின்பு சோர்வு வர வாய்ப்பிருக்கிறது.உடல் நலக்குறைபாடுகளில் இப்படி இருக்கலாம்.ஆனால் தொடர்ந்து உடல் சோர்வு,மூச்சு வாங்குதல்,தோல் வெளுத்து காணப்படுதல் போன்றவை இருந்தால் ரத்த சோகையாக இருக்கலாம்.இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இப்பிரச்சினைக்கு ஆளாகி சிரமப் படுகிறார்கள்.பிரசவம் தொடர்பான சிக்கல்களுக்கு ரத்த சோகை முக்கிய காரணமாக இருக்கிறது.
                                சுவாசித்தல் பணியில் பங்கேற்பது ஹீமோகுளோபின்.ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு கொண்டு சேர்ப்பதும்,கழிவை கொண்டுவருவதும் இதன் முக்கிய பணி.ஹீமோகுளோபின் குறைவையே ரத்தசோகை என்கிறோம்.உடல் இயக்கம் சீராக நடைபெறாமல் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கி விடுகிறது.ஆண்களுக்கு 13.5 கிராமிற்கு மேலும்,பெண்களுக்கு 11.5 கிராமிற்கு மேலும் இருப்பது ஆரோக்கியமானது.ஆனால் பலருக்கு குறைவாகவே இருக்கிறது.குறிப்பாக பெண்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் கூட 10க்கு கீழ்தான் இருக்கிறது.
                                பரம்பரை உள்ளிட்ட காரணங்கள் இருந்தாலும் சத்துக்குறைவு ஒரு முக்கிய காரணம்.இரும்புச்சத்து குறைபாடு,பி வைட்டமின் குறைபாடு போன்றவையே ரத்த சோகைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் சாதாரணமாக காணப்படும் பிரச்சினை.கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மட்டும் இரும்புச்சத்து,வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.மற்றவர்கள் இதைப்பற்றி தெரியாமலேயே இருந்துவிடுகிறார்கள்.அடிக்கடி சோர்ந்து போவதும்,உணவு காரணமாக கொஞ்சம் ஹீமோகுளோபின் கூடியதும் ஆறுதலாக உணர்வார்கள்.
                                  விழிப்புணர்வு இல்லாத நிலையே பெரும்பிரச்சினையாக இருக்கிறது.சரிவிகித உணவு இல்லாமல் இருப்பது நம்மிடையே சாதாரணம்.உணவை தேர்ந்தெடுக்க தெரியாமல் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்.இக்குறைபாட்டுக்கு ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்.பலருக்கு இப்படி குறைபாடு இருப்பதே தெரியாது.இரும்புச்சத்தின் ,,வைட்டமின்களின் அவசியம் தெரிந்தவர்கள்,எந்தெந்த உணவு வகைகளில் இருக்கிறது என்று தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.தெரிந்தவர்கள் உணவு தயார் செய்யும் நபராக இருப்பதில்லை.
                                                                                  கிடைக்கும் உணவை சாப்பிடும் பழக்கம்தான் நமக்கு உண்டு.அதிக சதவீத வறுமையும்,சத்துக்குறைவும் இன்னும் இந்தியாவில் பிரச்சினையாக இருக்கிறது.பெண்களின் கல்வியறிவு,ஊட்டச்சத்து பற்றிய அறிவும் குறைவாக இருக்கிறது.தனக்கு இப்படி ஒரு குறைபாடு இருக்கிறது என்பதே பலர் அறிவதில்லை.நல்ல உடல்நலத்திற்கு ஹீமோகுளோபின் அளவு போதுமான அளவு இருக்க வேண்டும்.நாள்தோறும் உணவு,சமையல் பட்டியலில் இரும்புச்சத்து,ஃபோலிக் அமிலம்,வைட்டமின்  போன்றவை நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

                                                                     பேரீச்சம்பழம்,வெல்லம்,இறைச்சி,பச்சை காய்கறிகள்,கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.சரியாக உடலில் சேர அஸ்கார்பிக் அமிலம் கொண்ட (விட்டமின்  சி) உணவுப்பொருள்களையும் சாப்பிடவேண்டும்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு ,கொய்யா போன்றவை.சைவ உணவுப் பழக்கம் உடையவர்ளுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உண்டு. இவர்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.ஆறு மாதம் ஒருமுறையாவது குடல்புழுக்களை அகற்ற சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.உணவு உண்டபின் ஒரு மணிநேரம் வரை காபி,தேநீர் அருந்துவது தவிர்க்க வேண்டும்.இவை இரும்புச்சத்து உள்ளிட்டவற்றை உடலில் சேர்வதை தடுக்கின்றன.

25 comments:

  1. உடல் சோர்விற்கு நல்ல மருத்துவ விளக்கமும்
    அதற்கான மருந்துகளும் ஏற்புடையதாக சொல்லியிருகீங்க.
    பயனுள்ள பதிவு நண்பரே.
    பகிர்வுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  2. //விழிப்புணர்வு இல்லாத நிலையே பெரும்பிரச்சினையாக இருக்கிறது.//
    இது தான் உண்மை.
    அருமையான பதிவு.

    ReplyDelete
  3. @மகேந்திரன் said...

    உடல் சோர்விற்கு நல்ல மருத்துவ விளக்கமும்
    அதற்கான மருந்துகளும் ஏற்புடையதாக சொல்லியிருகீங்க.
    பயனுள்ள பதிவு நண்பரே.
    பகிர்வுக்கு நன்றிகள் பல.
    நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  4. @நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    //விழிப்புணர்வு இல்லாத நிலையே பெரும்பிரச்சினையாக இருக்கிறது.//
    இது தான் உண்மை.
    அருமையான பதிவு.
    நன்றி சார்.

    ReplyDelete
  5. அனீமியா பற்றி விளக்கமான பதிவு.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. //இரும்புச்சத்தின் ,,வைட்டமின்களின் அவசியம் தெரிந்தவர்கள்,எந்தெந்த உணவு வகைகளில் இருக்கிறது என்று தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.தெரிந்தவர்கள் உணவு தயார் செய்யும் நபராக இருப்பதில்லை.//

    பெண்கள் சத்துணவை அறிந்திருப்பது அவசியம்.

    ReplyDelete
  7. அண்ணே, என்னத்த சொல்லுறது? வழக்கம் போல மிகவும் பயனுள்ள தகவல்! நன்றி

    ReplyDelete
  8. புத்துணர்ச்சி ஆகிட்டோம்....

    ReplyDelete
  9. @RAVICHANDRAN said...

    அனீமியா பற்றி விளக்கமான பதிவு.பகிர்வுக்கு நன்றி

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. @RAVICHANDRAN said...

    //இரும்புச்சத்தின் ,,வைட்டமின்களின் அவசியம் தெரிந்தவர்கள்,எந்தெந்த உணவு வகைகளில் இருக்கிறது என்று தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.தெரிந்தவர்கள் உணவு தயார் செய்யும் நபராக இருப்பதில்லை.//

    பெண்கள் சத்துணவை அறிந்திருப்பது அவசியம்.

    ஆமாம்,உணவு தயாரிப்பது அவர்களிடம்தானே இருக்கிறது நன்றி

    ReplyDelete
  11. @ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

    அண்ணே, என்னத்த சொல்லுறது? வழக்கம் போல மிகவும் பயனுள்ள தகவல்! நன்றி

    நன்றி தம்பி

    ReplyDelete
  12. @சசிகுமார் said...

    புத்துணர்ச்சி ஆகிட்டோம்

    நன்றி சார்

    ReplyDelete
  13. உங்களுக்கும் பொங்கலுக்கும் என் உள்ளம் பொங்கும் அன்புவாழ்த்துக்கள்,!

    ReplyDelete
  14. சோர்வு போக்கும் மருந்து!
    சொன்னவிதம் நல்ல மருந்து!
    பயன் தரும் பதிவு!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளீர்கள். இந்த கால குழந்தைகளை (கீரை, காய்கறிகள்) சாப்பிட வைப்பது தான், பெரிய வேலை சார்! எல்லா பெற்றோர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் :
    "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

    ReplyDelete
  16. அப்போது ஓட்டுபோட இயலவில்லை தற்போது போட்டேன்!

    த ம ஒ 8

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. nanbar thiru. Dhanabal( dindugal) sonnathupola mihavum payanulla pathivu. intha kaalathu kulanthaikalai keerai pondra unavukalai saappita vaippathu mikavum kashtam.Pathivukku
    parattukkal.
    ellaa vaasakarkalukkum PONGAL VAALTHTHUKKAL

    ReplyDelete
  18. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய
    அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

    தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. வழமைபோல மற்றுமொரு நல்ல விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  20. வணக்கம் அண்ணா,
    நல்ல பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
    இரும்புச் சத்துக் குறைபாட்டின் மூலம் ஏற்படும் சோர்பு பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  21. இதற்கு உண்மையான காரணம், நல்ல வசதி இல்லாமையே. நம் சமூகத்தில் பெரும்பான்மையோர் கிடைக்கும் உணவை சாப்பிடுபவர்களே. இந்த சூழலில் இது வெறும் உடலியல் பிரச்சினை மட்டுமல்ல. ஒரு சமூகம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாகவே இது அணுகப்பட வேண்டும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  22. எனக்கு மிகவும் அவசியமான பதிவாய் இருக்கிறது.நன்றி !

    ReplyDelete