Pages

Thursday, January 19, 2012

நண்பனின் பொங்கல் வேட்டை.

சினிமாவுக்கு போகலாம் என்று அழைத்தான் நண்பன். 5 காட்சியா? டேய் நீ எந்த காலத்துலடா இருக்கே? அதெல்லாம் போய் ரொம்ப நாளாச்சு! அவனவன் 4 காட்சி ஓட்டறதுக்கே கண்ணுமுழி பிதுங்கி கிடக்கிறான்.பழைய காலத்து ஆளாக இருக்கிறானே என்று  நினைத்திருக்க வேண்டும். அதெல்லாம் போகில எரிச்சாச்சு என்றான்.நான் சொன்னேன்,இதற்கும் போகிக்கும் என்ன சம்பந்தம்? மழைக்காலம் முடிந்து ஈரத்தில் பழைய துணிகள் போன்றவற்றில் பூஞ்சை தொற்றியிருக்கும்.அவற்றை எரிப்பதற்கு சரியான நேரம் இது.ஒரு மாதம் கழித்து வெயில் ஆரம்பித்துவிடும்.போதும் நிறுத்து!சினிமாவுக்கு போகலாமா? வேண்டாமா?
                               கிராமத்தில் போரடிப்பது போல ஆகிவிடுகிறது.ஒலிப்பெருக்கி சத்தம் பல நேரங்களில் இனிமையாக இல்லை.கோயிலின் முன்னால் மாடுகளை கொண்டுவந்து நிறுத்தினால் இவ்வளவுதானா? என்று கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறது.எனக்கும் சினிமாவுக்கு போகலாம் என்று தோன்றியது. சரி,எந்த படம் நல்லா இருக்காம்? என்றேன்.விமர்சன்ங்களை கூட படிக்க முடியவில்லை.கணினியை பார்த்து சில நாட்கள் ஆகிறது.ஏதோ ஒண்ணு வாடா! பொழுது போனா சரி! பழைய விஷயங்களை பேசிக் கொண்டே பயணம் .ஒரு மணி நேரத்திற்கு முன்பே அரங்கம் முன்னால் அலைந்து முட்டிமோதி டிக்கெட் வாங்கி சினிமா பார்த்த சிறுவயது அனுபவம் இப்போது இருக்காது.
                                நண்பன் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு போய் நின்றோம்.50 ரூபாய் டிக்கெட்.ஹவுஸ்புல் என்று ஒரு தகவல் பலகை இருக்கும்.அதை என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.அதையும் போகியில் போட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே எரித்து விட்டிருப்பார்களோ? இருக்கைகள் காலியாக இருந்து கொண்டிருந்த்து.படம் ஆரம்பிக்கவில்லை.சலிப்பாக இருக்கிறது.பேசாமல் ஏதேனும் இணைய மையத்துக்கு போயிருக்கலாம்.பதிவுகளை படித்து கருத்துரை சொல்லியிருக்கலாம்.ஆனால் திறந்திருப்பது சாத்தியமில்லை.
                                                                           சத்யன் மெஷினுக்கு வரையறை சொல்லும்போது நண்பன் சொன்னான்.நல்ல விஷயம் இல்ல!படம் அவன் சொன்னதைப் போன்று முக்கியமான ஒன்றை பேசுவதாகவே படுகிறது.மனப்பாட கல்வி,இன்றைய சாரமற்ற பயனில்லாத கல்விமுறை,இறுக்கமான கிளிப்பிள்ளை ஆசிரியர்கள்,பெற்றோர்களின் ஆசைக்கு கனவுகளை,திறமைகளை பலியாக்கும் பிள்ளைகள்.இவையெல்லாம் அதிகம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.சமூக மாற்றத்தை கோருபவை.ஆனால் நண்பன் சொல்ல வந்த செய்தியை மனதில் பதிய வைத்த சினிமாவா? படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் யாரும் இதைப்பற்றி பேசியதாக தெரியவில்லை.எத்தனை சினிமா விமர்சனம் இந்த பார்வையை கொண்டிருக்கிறது என்று வாசகர்கள்தான் சொல்லவேண்டும்.
                                 சினிமா என்றில்லாமல் எந்த படைப்பும் சொல்லும் விதம்தான் மனதில் பதிய வைக்கிறது.நண்பன் இந்த முயற்சியில் வெற்றிபெறவில்லை.தமிழ் சினிமாவுக்கு ஒரு பிரச்சினை உண்டு.நல்ல கதையை தேர்வு செய்த பின்னரும் குழம்பித்தவிக்கும்.சி செண்டரில் ஓடாது இரண்டு ஃபைட் வேண்டும் என்பார்கள்.கவர்ச்சி இல்லையே என்று ஆலோசனை சொல்வார்கள்.நல்ல முயற்சிகள் சில வெற்றி பெற்ற பின்னரும்கூட இதுதான் நிலை.ரீமேக் படம் என்பதால் ரொம்ப யோசித்து நட்சத்திரங்களை தேர்வு செய்திருக்கிறார் சங்கர்.வேறு நடிகர்கள் பொருந்துவார்களா என்பது சந்தேகம்.பலரையும் போலவே அந்த வறுமையை கேலி செய்த விதம் வருத்தமான விஷயம்.அதிகமும் அப்படியான ஏழைகளைக் கொண்ட இந்தியாவில் சமூக அச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.
                                அடுத்து வேட்டை என்றொரு படம் வந்திருக்கிறது.அடுத்த நாட்களில் பார்க்க வேண்டிய கட்டாயத்தை நண்பர்கள் உருவாக்கினார்கள்.வழக்கமான லிங்குசாமியின் பரபரவிறுவிறு படம்.இம்மாதிரி படங்கள் வசூலாகித்தான் விடுகின்றன.சிறுவர்கள் பட்டம் அறுத்த பிரச்சினையில் சண்டை ஆரம்பிக்கும்போது விசில் சத்தம் காதைக் கிழித்துப்போனது.விஷயம் இருக்கிறதோ இல்லையோ யாராவது விசில் அடித்தால் பலரும் கிளம்பிவிடுவது தியேட்டரின் இயல்பு.மனதில் அடுத்தவனை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருந்து கொண்டே இருக்கிறது.அடிப்பது சந்தோஷமான விஷயம் ஆகிவிடுகிறது.ரௌடி,சவால் விடுவது,அடிதடி,மிரட்டல் இதெல்லாம் பார்த்த விஷயம்தானே என்றேன்.பொழுது போச்சு இல்லையாடா?என்றான் நண்பன்.சரிதான்.

17 comments:

  1. முதலில் ஒரு முன்னுரை.பின் வித்தியாசமான விமரிசனம்!
    நன்று.

    ReplyDelete
  2. @சென்னை பித்தன் said...

    முதலில் ஒரு முன்னுரை.பின் வித்தியாசமான விமரிசனம்!
    நன்று.
    வருக அய்யா! நன்றி

    ReplyDelete
  3. Namma iyakkunarkalukku samooga akkarai kidaiyathu Sir. Nadunilaimaiyana vimarsanangal.

    ReplyDelete
  4. @துரைடேனியல் said...

    Namma iyakkunarkalukku samooga akkarai kidaiyathu Sir. Nadunilaimaiyana vimarsanangal.

    தங்கள் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  5. @சசிகுமார் said...

    மிக அருமை...

    நன்றி சார்!

    ReplyDelete
  6. சினிமா பொழுது போவதற்கு மட்டும்தான் சார்.அதிகம் எதிர்பார்க்கக்கூடாது.

    ReplyDelete
  7. சின்ன வயசு சினிமா அனுபவங்கள் இப்ப கிடைக்காது.ஷாப்பிங் போற மாதிரி சினிமாவுக்கு போய் வர வேண்டியது தான்.

    ReplyDelete
  8. பொழுதுபோக தியேட்டர்களுக்கு போன காலம் மலையேறிப் போச்சி. இப்பொல்லாம் பொழுது டிவிக்கே சரியா இருக்கு. குடும்பத்துக்கே நேரமில்லைன்னு சொல்ற காலம் இது. இத்தனை களேபரத்துலயும் இரண்டு சினிமா பார்த்திருக்கிறீர்கள். அனுபவப் பகிர்வு அருமை.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  9. @RAVICHANDRAN said...

    சினிமா பொழுது போவதற்கு மட்டும்தான் சார்.அதிகம் எதிர்பார்க்கக்கூடாது.

    சரிதான் சார்! நன்றி

    ReplyDelete
  10. @கோகுல் said...

    சின்ன வயசு சினிமா அனுபவங்கள் இப்ப கிடைக்காது.ஷாப்பிங் போற மாதிரி சினிமாவுக்கு போய் வர வேண்டியது தான்.

    அப்படித்தான் ஆகிவிட்டது சார்,நன்றி

    ReplyDelete
  11. @Sankar Gurusamy said...

    பொழுதுபோக தியேட்டர்களுக்கு போன காலம் மலையேறிப் போச்சி. இப்பொல்லாம் பொழுது டிவிக்கே சரியா இருக்கு. குடும்பத்துக்கே நேரமில்லைன்னு சொல்ற காலம் இது. இத்தனை களேபரத்துலயும் இரண்டு சினிமா பார்த்திருக்கிறீர்கள். அனுபவப் பகிர்வு அருமை.

    நன்றி சங்கர்.

    ReplyDelete
  12. இந்த காலத்தில் எல்லாமே 'Just' like that என்றாகி விட்டது! ...ம்... நன்றி Sir!

    ReplyDelete
  13. வணக்கம் அண்ணா,
    நல்லா இருக்கிறீங்களா?

    கொஞ்ச நாளா ஓய்வெடுத்து சினிமா எல்லாம் பார்த்திருக்கிறீங்க.

    நண்பன், வேட்டை படம் பார்க்க நண்பர்களோடு சென்ற அனுபவத்தினை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.


    எடுத்துக் கொண்ட கருப் பொருள் ஓக்கே.
    வழமையான விஜய் சினிமாவில் இருந்து வித்தியாசமாக காட்ட முனைந்திருக்கிறார்கள்.
    ஆனால் விஜய் ரசிகர்களையும் படம் திருப்திப்படுத்தியிருப்பது போல இருக்கு!

    ReplyDelete
  14. அருமையான கருத்து.

    நண்பனின் மூலம் சொலப்படும் மெசேஜ் ரசிகனை சென்று அடைய வேண்டுமெனில் விஜய் போன்ற நடிகர்களை உபயோகப் படுத்தியிருக்கக் கூடாது. மெசேஜும் சொல்ல வேண்டும், கையையும் கடிக்கக் கூடாது என்ற பாலிசி படம் எடுப்பவர்களுக்கு. இதன் ஒரிஜினலை ஹிந்தியில் பார்த்தவர்கள் மெசேஜை நிச்சயம் புரிந்து கொண்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  15. வேட்டைதான் பார்க்கலாம்ன்னு இருக்கேன்

    ReplyDelete
  16. வெறுமனே விமர்சனம் என்பதையும்தாண்டி சுவாரசியமான விடயங்களுடன் இனிய பதிவு

    ReplyDelete