Showing posts with label எதிர்மறை எண்ணங்கள். Show all posts
Showing posts with label எதிர்மறை எண்ணங்கள். Show all posts

Sunday, July 31, 2011

நல்லது மட்டுமே நடக்கவேண்டுமானால் என்ன வழி?

நமக்கு நல்லது மட்டுமே நடக்கவேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறோம்.இயற்கையாக நிகழும் சில விஷயங்களை தடுக்க முடியாது.சில நேரங்களில் நாமே நமது முன்னேற்றத்திற்கு எதிரியாய் அமைந்து விடுவது பற்றியது இந்தப் பதிவு.நமது பழக்க வழக்கங்கள்,உறவுகளில் கோணல்கள் என்று பல இருந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் ஒருவரை அதிக அளவு பாதித்து முடக்கி விடுகின்றன.

                                  நமது எண்ணங்கள்தான் செயலாக மாறுகின்றன என்பது உங்களுக்கு தெரியும்.நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்றும் கெட்ட்து நினைத்தால் அப்படியே நடக்குமென்றும் சொல்லப்பட்டுவிட்ட்து.மனதின் ஆற்றல் என்பது அளவிட முடியாத ஒன்று.வழக்கமாக நேர்மறையாகத்தான் எண்ண வேண்டும்.ஆனால் எதிர்மறை எண்ணங்கள் சிலருக்கு தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

                                  சில முறை தேர்வில் தோற்றுவிட்டால் மீண்டும் தேர்வெழுத வேண்டுமா? நமக்கு அதிர்ஷ்டமில்லை என்று எண்ணுவது இப்படித்தான்.கடந்த காலத்தில் நடந்த தோல்விகளும்,கெட்ட விஷயங்களும்,நோய்களும்,இழப்புகளும் மனதை பாதித்து சோர்வைத் தந்து விடுகிறது.அப்புறம் நெகடிவாக நினைப்பதே வாழ்க்கையாக இருக்கும்.முயற்சி செய்தால் இவற்றில் இருந்து எளிதில் விடுபடவும் முடியும்.அதற்கான வழிகளை பார்ப்போம்.

                                  முதலில் உங்களுக்கு இருப்பது எதிர்மறை எண்ணம்தான் என்பதை நீங்களே கண்டுபிடிப்பதுதான் அடிப்படை.உங்களையே உற்றுநோக்குங்கள்.தோன்றும் எண்ணத்தை நண்பர்களிடம்,உங்கள் நலம் விரும்புவோரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.அல்லது ஒரு பேப்பரில் எழுதுங்கள்.நீங்கள் நினைப்பது தவறானது என்று கண்டு கொண்டாலே பாதி வெற்றி நிச்சயம்.சில நேரங்களில் நண்பர்கள் கூறுவார்கள்’’ ஏண்டா அப்படி நினைக்கிற?அப்படி ஒண்ணும் நடக்காது,நல்லதையே நினைப்போம்

                                  உங்களுக்கு தோன்றுவது எதிர்மறை எண்ணம்தான் என்று தெரிந்த பின் அதை மாற்றுங்கள்.அதை சரி செய்யுங்கள்.பதிலாக நல்லதைப்பற்றி எண்ணுங்கள்.தொடர்ந்து முயற்சி செய்து முன்னேற்றத்தை கவனித்து வாருங்கள்.இது மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒன்றுதான்.நன்மையை எதிர் நோக்கும்போது மனம் உற்சாகமடைவதை நீங்கள் உணரமுடியும்.எண்ணங்கள் வலிமையடைந்து மனம் தானாகவே செயலில் இறங்கும்.மேலும் சில...

  • ·         நிகழ்காலத்தில் வாழுங்கள்.கடந்த காலம் போனதுதான்.
  • ·         மனச்சோர்வு இருந்தால் மறைந்துவிடும் என்பதை நினைவில் இருக்கட்டும்.
  • ·         உடற்பயிற்சியிலும் உடல் உழைப்பிலும் ஈடுபடுங்கள்.
  • ·         அதிகாலையில் எழுவது,குறித்த நேரத்தில் தூங்கச்செல்வது போன்ற வழக்கத்தை கடைபிடிக்கவும்.
  • ·         போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
  • ·         உற்சாகமான நண்பர்களுடன் பொழுது போக்குங்கள்.
  • ·         உரிய நேரத்தில் சத்தான உணவு சாப்பிடுங்கள்.
  • ·         நல்ல புத்தகங்கள் படிக்கலாம்.

                                  நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.அப்புறம் வெற்றி உங்களுடையது.
-