Monday, February 28, 2011

கன்னிப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட வாலிப பேய்.




                               வயசுப் பெண் என்றால் தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.திருத்தமாக உடை உடுத்தி,யாராவது பார்த்தால் மனைவியாகவோ,மருமகளாகவோ கொள்ள மனம் வரவேண்டும்.அந்த பெண் அப்படியில்லை.சமீப காலமாக சரியாக சாப்பிடுவதில்லை.தூங்குவதில்லை.எந்த வேலை சொன்னாலும் ஈடுபாட்டுடன் செய்வதில்லை.

                              அப் பெண்ணின் தாய்க்கு பாட்டி யோசனை கூறினாள்.’’போய் அந்த சாமியிடம் குறி கேட்டுவிட்டு வா”.அம்மா குறி கேட்டு விட்டு வந்து சொன்னது:’’அவளுக்கு பேய் பிடித்திருக்கிறதாம்இரவு குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்தார்கள்.பேய் ஓட்டுபவனை அழைத்து வர வேண்டும்.அண்ணனுக்கு தெரியும்.

                              அண்ணன் காலையிலேயே பேய் ஓட்டுபவனை காண கிளம்பிச் சென்றார்.திரும்பி வந்து,பேய் ஓட்ட பவுர்ணமிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்.இதுல இருக்கிற பொருளெல்லாம் தயார் செய்ய வேண்டும்.எலுமிச்சம்பழம்,விபூதி,குங்கும்ம்,வேம்பு இலை,ஆணி,சாட்டை,போன்ற பொருட்கள் முக்கியமாக அதில் இருந்த்து.

                               இதெல்லாம் என் வீட்டிலிருந்து பத்தடி தூரம் உள்ள ஒரு வீட்டில் நடந்தவை.எங்கள் வீட்டிலும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு பேய் ஓட்டுவதை பார்க்கவேண்டுமென்று ஆசை.அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அம்மாவிடம் அனுமதி கேட்டேன்.உடனே மறுக்கப்பட்டுவிட்ட்து.

                              பவுர்ணமி வந்து விட்ட்து.காலையிலிருந்து எனக்கு பரபரப்பு.எப்படியாவது அதை பார்க்கவேண்டும்.அப்பாவிடம் போய் கேட்டேன்.அது இரவு பத்து மணிக்கு மேல்தான்!அவ்வளவு நேரத்துக்கு நீ அங்கெல்லாம் போக முடியாது”.என் முகம் போன போக்கை அம்மா கவனித்து விட்டாள்.இன்னொரு அண்ணனை பாதுகாப்புக்கு துணை சேர்த்து அனுமதி கிடைத்து விட்ட்து.

                             இரவு பத்து மணிக்கு மேல் முழு நிலவு இரவென்ற எண்ணத்தை தராமல் போய்க் கொண்டிருந்த்து.சாமியாருடன் சேர்த்து ஏழெட்டு பேர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.நீ எதுக்கு வர?என்றார்கள் யாரோ என்னைப் பார்த்து!குடியிருப்பிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல்போய் விட்டோம்.

                              கல்லுக்கு நீர் தெளித்து சாமியாக்கி பூசைகள் ஆரம்பமானது.பேய் ஓட்ட வந்திருந்தவர் பாட்டொன்றை பாட ஆரம்பித்தார்.அந்த அக்கா தலையை வேகமாக ஆட்டி ஆட ஆரம்பித்த்து.யார் நீ? சொல்? என்று உறுமினார் வேப்ப இலையை தலை மீது அடித்தார்.வேம்பு சக்தி.கடவுள்.பேய் அலறி ஏதோ ஒரு பெயரை கூறியது.

                              நான் நினைத்தேன்என்றார் ஒருவர்.கல்யாணமாகாமல் தூக்கு போட்டுக் கொண்டு செத்துப் போனானே அவன் தான்”.கடவுளின் அருள் தாங்காமல் பேய்,நான் போய் விடுகிறேன் என்று ஒப்புக் கொண்ட்து.எழுந்து ஓடு என்று சாமி உறும அந்த அக்கா எழுந்து ஓட ஆரம்பித்த்து.

                                  இருவர் இரு புறமும் பிடித்துக் கொண்டு ஓட,என்னால் முடியவில்லை.துணைக்கு வந்தவரின் பெயரை சத்தமாக்க் கூறிக்கொண்டே நானும் ஓடிக் கொண்டிருந்தேன்.முடிந்த பிறகுதான் போய் சேர்ந்தேன்.புளிய மரமொன்றில் அக்காவின் தலை முடி கொஞ்சம் இருக்குமாறு ஆணி அடித்திருந்தார்கள். முடிகள் தொங்கிக் கொண்டிருந்த்து.

                                 புளிய மரம் பேய் குடியிருக்குமிடம் என்பது கிராமப்புற நம்பிக்கை.புளிய மரத்தின் கீழே உறங்க்க் கூடாது.அக்கா அமைதியாக காணப்பட்டார்.அவரது தந்தை கனிவுடன் விசாரித்தார்.இப்போ நல்லா இருக்காம்மா? பேயை புளிய மரத்தில் விட்டு விட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.பேய் பிடித்தல் மன நல பாதிப்புதான் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன்.


-

Sunday, February 27, 2011

காலில் மாட்டிக் கொண்ட பெண் உடைகள்.


காதலிக்கும் பெண் பயன்படுத்தும் பொருட்களை சேமித்து வைக்கும் காதலர்களை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.உடைகளை திருடுபவர்கள் கூட உண்டு.Fetishism  என்று முறையற்ற பழக்கம் ஒன்று இருக்கிறது.பெண்ணின் உடைகள்,பொருட்கள் போன்றவை அவர்களுக்கு பாலுறவு திருப்தியைத் தந்துவிடும்.
                                           
                               உடன் பணியாற்றும் நண்பன் ஒருவனை பார்க்க போயிருந்தேன்.அவனே சமைப்பதுண்டு.சுவையாக சமைப்பதில் கை தேர்ந்தவன்.நான் விருந்தாளியாக போய்விட்டால் சிறப்பு உணவுகள் இருக்கும்.அன்று வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அவனுடைய அறையிலேயே தூங்கிவிட்டேன்.

                              விழித்துக் கொண்டபோது காலில் ஏதோ மாட்டிக்கொண்டிருப்பதை பார்த்தேன்.பெண்களின் உடைகள் அவை.பத்து துணிகளுக்கு மேலிருக்கும்.எனக்கு குழப்பம்.நண்பன் திருமணமாகாத பிரம்மச்சாரி.அவனும் அறையில் ஆள் இல்லை.வெளியே வந்து பார்த்தால் லேசான தூறல்.

                              செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் அறையிலேயே மணிச் சத்தம்.எடுத்துப்போகாமல் விட்டு விட்டு போய்விட்டான்.எனக்கு குழப்பம் அதிகமாகிக் கொண்டிருந்த்து.ஒருவேளை உடனடி திருமணம் ஏதாவது செய்து கொண்டிருப்பானோ? அப்படியும் என்னை அழைக்காமல் எப்படி?

                               நாளிதழ்களில் படித்திருக்கிறேன்.காதலி,காதலன் வீட்டுக்கே சென்று போராட்டம் நட்த்துகிறார்கள்.எந்த பெண்ணாவது நேரடியாக இவனைத் தேடி வந்திருக்குமோ? எனக்கு தெரிந்து அவனுக்கு காதல் இருந்தமாதிரி தெரியவில்லை.இதிலெல்லாம் யாரையும் நம்பவும் முடியாது.

                               கீழே ஏதோ சத்தம் கேட்கிறமாதிரி இருந்த்து.எட்டிப் பார்த்தேன்.பக்கத்து வீட்டு முன் இருபது பேருக்குமேல் நின்றிருந்தார்கள்.அவர்கள் பேச்சை கவனித்த்தில் ஏதோ திருடு போயிருக்கவேண்டும்.ஒரு பாட்டி வந்து சத்தமிட்டுக் கேட்ட்து.என்னாச்சு? கூட்ட்த்தில் இருந்த ஒருவர் பதில் சொன்னார்.யாரோ துணிகளை திருடிக் கொண்டு போய் விட்டார்கள்’’

                               எனக்கு படபடப்பு அதிகமாகிவிட்ட்து.பாவி எங்கே போனான் என்று தெரியவில்லை.துணிகளை திருடும் அளவுக்கு கேவலமானவன் என்று என்னால் நம்பமுடியவில்லை.துணிகளை எடுத்துப் போய் கொடுத்துவிடலாமா?.எப்படி உன்னிடம் வந்த்தென்று கேட்டால்? தர்ம சங்கடமாக இருந்த்து.இனி இந்த அறைக்கு வரவே கூடாதென்று முடிவு செய்தேன்.

                               வெளியே பார்ப்பதும்,அறைக்குள் வருவதுமாக சிரமத்துடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன்.கூட்டம் கலைந்து விட்டிருந்த்து.வெகுநேரம் கழித்து எங்கிருந்தோ வந்தான்.தூங்கி எழுந்தாச்சா? என்றான் சிரித்துக் கொண்டே! பாவி,என்னென்னவோ செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல் பாவனை காட்டுகிறான்.

                               அறைக்குள் நுழைந்தவன் துணிகளை அள்ளி எடுத்தான்.உடலோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு வேகமாக கீழே இறங்கினான்.மாடியில் நின்று அவனை கவனித்துக் கொண்டிருந்தேன்.பக்கத்து வீட்டில் நுழைந்தான்.மீண்டும் கூட்டம் கூடி விட்ட்து.அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.வெட்கப்பட்டுக் கொண்டே வந்தவன் “இல்ல,மழை வர மாதிரி இருந்த்து.நனைஞ்சிடும்னு எடுத்து வச்சேன்






-

Saturday, February 26, 2011

நீங்கள் கவலைப்படுவதுண்டா? படியுங்கள்!



நண்பர் ஜனா,எனது முந்தைய பதிவுக்கு இட்ட கருத்துரைஇது.சமூகத்தை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் அதே வேளை அதிகம் கவலையும் படுகின்றீர்கள் என்பது புரிகிறதுஎன் மீதுள்ள மரியாதையால் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வலைப்பதிவின் தலைப்புக்கு கீழே உள்ள வரிகளைப் படிக்கவும்.ஆம்.கவலையற்றிருத்தலே வீடு; களியே அமிழ்தம்.மகாகவி பாரதியின் சத்திய வார்த்தைகள்.எனது சமூகம் சார்ந்த மதிப்பீடுகள் பாரதி உருவாக்கியவை.

ஜனா சொல்வது சரி.சமூகத்தை உன்னிப்பாக கவனிக்கிறேன்.ஆமாம்.மனிதர்களையும்,முகங்களையும்,கை,கால்களையும்,நடவடிக்கைகளையும் கவனிப்பதும் அசை போடுவதும் எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.பார்த்த்தையும்,கேட்ட்தையும்,என்னை பாதித்தவற்றையும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு நகைச்சுவை படித்தால் சிரிக்கலாம்.இறுக்கம் குறைந்து மனம் லேசாகும்.தொடர்ந்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க சிலதை கூட்டவோ,குறைக்கவோ வேண்டியிருக்கிறது.அது என்னென்ன என்பதை எனக்கு தெரிந்த்தை சொல்கிறேன்.

கவலை நான் விரும்பும் ஒன்றல்ல! அது ஒரு உணர்ச்சி என்ற அளவில் என்னை சில நேரங்களில் பாதிப்பதுண்டு.மிக விரைவில் மீண்டு விடுவேன்.அதற்கு காரணம் பாரதி.கவலை பற்றிய மகாகவியின் வரிகளை கீழே படியுங்கள்.ஆம்.மகிழ்ச்சியோடு இருங்கள்.எப்போதும்!நன்றி ஜனா!

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

மனக்குறையென்னும் பேய்,எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது.அதற்கு நிவாரணம் தேடவேண்டும்.கவலையைக் கொல்வோம்,வாருங்கள்,அதிருப்தியைக் கொத்துவோம்,கொல்லுவோம்.

வாருங்கள்,வாருங்கள்,வாருங்கள்,துயரத்தை அழிப்போம்,கவலையைப் பழிப்போம்.மகிழ்வோம்,மகிழ்வோம்,மகிழ்வோம்.

மந்திரங் கூறுவோம்.உண்மையே தெய்வம்,கவலையற் றிருத்தலே வீடு.களியே அமிழ்தம்.பயன்வருஞ் செய்கையே அறமாம்.அச்சமே நரகம்;அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதேசெய்க


என்றுமிங் குளவாம்; சலித்திடாய்;ஏழை
நெஞ்சே!வாழி!நேர்மையுடன் வாழி!
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!

கவலைப் படுதலே கருநரகு, அம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி;

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு

-

Friday, February 25, 2011

பீதியைக் கிளப்பும் பெற்றோர்கள்



குழந்தைகளைப் பற்றி அவர்களது பெற்றோர் தவிர வேறு யார் கவலைப்படுவார்கள்? ஆசிரியர்களுக்கு அக்கறை இருக்கலாம்.தனது பாட்த்தில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டுமென்று!தற்போது தேர்வுகள் வந்து விட்ட்து.பாழாய்ப்போன கிரிக்கெட்டும்தான்.

பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு மாணவன் வாழ்விலும் வகிக்கும் முக்கியத்துவம் நமக்கு தெரியும். தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனுடனும்,அதிக கவலையுடனும் இருக்கும் நேரமிது.

தங்களால் முடியாமல் போன கனவுகளையும் இனி மீதமுள்ள ஆசைகளையும் மகனோ,மகளோ நிறைவேற்றப்போகிறார்கள் என்ற எண்ணத்துடனே புதிய மாற்றத்திற்கும் தயாராக வேண்டும்.வெளியூருக்கு படிக்க அனுப்ப வேண்டியிருக்கும்,பணம் தயார் செய்ய வேண்டும்.

பெற்றோர்களின் கவலையும் எதிர்பார்ப்புகளும் நியாயமானவை.அதிகப்படியான ஆர்வங்கள் எதிர் விளைவையும் ஏற்படுத்தக் கூடும்.நான் அறிந்த சம்பவம் ஒன்றை கீழே தருகிறேன்.மனதில் கொண்டு மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

தற்போதைய கல்விக் கட்டணங்கள் நடுத்தர வகுப்பினருக்கு கஷ்ட்த்தை கொடுக்கும் ஒன்று.ஏழைகளுக்கு எட்டாக்கனி! ஆனால் ஏழைகளுக்கும் ஆசை இருக்கத்தான் செய்கிறது.கடன் வாங்கியாவது மகனை படிக்க வைக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.

அந்த குடும்பத்தை எனக்கு தெரியும்.தாய்,தந்தை இரண்டு பேரும் படிக்கவில்லை.இரண்டு மகன்கள்.ஒருவன் பத்தாம் வகுப்பு,ஒருவன் பனிரெண்டாம் வகுப்பு.சாப்பிடும்போதும்,தூங்கும்போதும் அதே பேச்சுதான்.காலையில் எழுந்த்தும் மகன்களுக்கு பெருத்த கவலையுடன் புத்திமதி தொடங்கிவிடும்.

இன்னும் மூன்று மாதம்தான் இருக்கிறது!பார்க்கத்தான் போகிறேன்.இன்னும் இரண்டரை மாதம்தான் இருக்கிறது நீங்கள் யாரென்று தெரிந்துவிடும்.இப்படி போய்க் கொண்டிருக்கும்.தந்தைக்கோ அப்போதுதான் மகன்களுக்கு புரியும் என்ற எண்ணம்.மேலும் இது தொடர்ந்த்து,இன்னும் இருபது நாள் இருக்கிறது......

குழந்தைகள் பாவம்.அவர்களுக்கு படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை விட மதிப்பெண் குறைவாக வந்தால் அல்லது தோற்றுப்போனால் என்ற அச்சமும் அதையொட்டிய கலக்கமும் ஏற்பட்டு விட்ட்து.மனம் அமைதியிழக்க பனிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கு காதில் குரல்கள் கேட்க ஆரம்பித்தன.யாரும் அவனுடன் பேசவில்லை.அவன் பேசிக் கொண்டிருந்தான்.

வெளியே யாருக்கும் சொல்லாமல் பெங்களூருவில் உள்ள மன நல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள்.தந்தைக்கு அப்போது மருத்துவர்கள் புரிய வைத்தார்கள்.அம் மாணவன் மீண்டு தேர்ச்சிபெற நான்கு வருடங்கள் ஆனது.

சில பெற்றோர்கள் தங்களது குடும்ப கஷ்டங்களையெல்லாம் சொல்லி வைத்தால் மகனோ அல்லது மகளோ புரிந்துகொண்டு நன்றாக படிப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.இதுவும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.தவிர,ஒவ்வொருவருக்கும் கிரகிக்கும் திறன்,நினைவாற்றல் போன்றவை வேறுபடும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

-