Saturday, February 12, 2011

பொறாமை தூண்டி வரும் காதல் நிலைக்குமா?


செல்போன் நிறுவன்ங்கள் காதலர் தினத்துக்கு இலவச குறுஞ்செய்தி சேவை கிடையாது என்று சொல்லிவிட்டன.நஷ்டம் அதிகமாக இருக்கும் என்று அனுபவத்தில் தெரிந்து கொண்ட்துதான்.தீபாவளி,புத்தாண்டு,பொங்கல் போல காதலர்தினமும் முக்கியமாகிவிட்ட்து.அதிக எஸ்.எம்.எஸ் கள் பறப்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.செல்போன் நல்ல,கள்ள காதலையெல்லாம் அதிகப்படுத்துவிட்ட்து

டாஸ்மாக் மது விற்பனையும் காதலர்கள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.கல்லூரி காதல்கள்தான் இவற்றில் அதிகம்.இதில் பெரும்பாலானவை கல்யாணம் வரையெல்லாம் போகாது.இன்பாக்சுவேஷன் என்பார்களே அந்த மாதிரி!தொற்றிக் கொள்வதும் கூட!ஒரு வகுப்பில் காதலர்களாகவே இருப்பார்கள்,இன்னொரு வகுப்பில் இல்லாமலும் இருக்கலாம்.

மனிதன் தோன்றிய காலம் முதல் காதல் இருந்து வருவது தெரிகிறது.சங்க காலத்தில் அகநானூறு இருக்கிறது.பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போவது அப்போதிருந்தே இருந்து வருகிறது.ஆதலினால் காதல் செய்வீர்என்றார் பாரதி.கவலை தீரும் என்று வேறு சொல்கிறார்.மனதை சந்தோஷமாக்கி சிலிர்ப்பை தருவது காதல்.காதல்,காமத்தால்மூளையில் சுரக்கும் ரசாயனம் கவலை,இறுக்கம்,மன உளைச்சல் போன்ற்வற்றை போக்கிவிடுகிறது.

வீட்டில் பெற்றோருக்கு காதல் கசப்பாக தோன்ற காரணம்,தங்கள் குழந்தைகளை மனிதர்களாக பார்க்காமல் சொத்தாக பார்ப்பதுதான்.தவிர காதல்கள் தகுதி,அந்தஸ்து எல்லாம் பார்க்காமல் வந்து விடுகிறது.ஏழைப்பையனாகவோ,வேறு சாதியிலோ இருந்தால் சங்கடம்.ஊரில் கேலி பேசுவார்கள்,யாரும் மதிக்க மாட்டார்கள்.இப்போது பார்வை மாறியிருக்கிறது.

சில காதல்களை அருகிருந்து கவனித்திருக்கிறேன்.காதல் என்பதே உணர்ச்சிகளின் விளையாட்டுதான்.அதில் அன்பு,காம்ம் மட்டுமல்லாது,கோபம்,ஆத்திரம்,குற்ற உணர்வு எல்லாவற்றுக்கும் பங்கிருக்கிறது.பொறாமைக்கு முக்கிய இடம் இருப்பதை கவனித் திருக்கிறேன்.என்னை உறுத்தியதும் உண்டு.

காதலன் தன்னையே சுற்றி சுற்றி வரவேண்டும் என்பதற்காகவும்,மேலும் கவனத்தை கோரவும் காதலி இன்னொரு ஆணுடன் நெருக்கமாக பழகுவதுபோல காட்டிக் கொள்வது!அதே போல காதலனும் இன்னொரு பெண்ணுடன்! இந்த உத்தி சிறப்பாக வேலை செய்வதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.அவனுடன் பேசாதே,அவளுடன் பேசாதே என்பதெல்லாம் தாவிவிடுவார்களோ என்ற கலக்கத்தில்தான்.

எனக்கென்னவோ இது சரியாக படவில்லை.நீ, நீ மட்டும்தான் என்பதுதானே காதல்.பிளாக்மெயில் செய்து வரும் காதல் பிரச்சினையை உருவாக்கும்.தன்னை விட்டு விட்டு வேறொருவருக்கு தாவிவிடுவார்களோ என்ற எண்ணத்துடனே இருப்பது அப்போதைக்கு நெருக்கத்தை அதிகரித்தாலும் பின்னாளில் பிரச்சனையை உருவாக்கும்.

ஒரு வேளை இருவருக்கும் திருமணமாகி விட்டால் பிளாக்மெயில் காதலர் மீது சந்தேகம் தோன்றுவது –நம்மை விட்டு விட்டு வேறு யாரையாவது?-தவிர்க்க முடியாது போகலாம்.சந்தேகம் சூறாவளியாகி சந்தோஷத்தை அடித்துக் கொண்டு போய்விடும்.காதல் வாழ்க!மேலதிக விபரங்களுக்கு எனது நேற்றைய இடுகையை பார்க்கவும் -

4 comments:

Anonymous said...

//நீ, நீ மட்டும்தான் என்பதுதானே காதல்//

இந்த ஒரு வார்த்தை தான் காதல்.இதை இருவரும் புரிந்து கொண்டால் போதும் புரிந்து கொள்வதில்லை என்பது தான் சோகம்..இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..

மாத்தி யோசி said...

ஆமாங்க சந்தேகம் கூடவே கூடாது!

shanmugavel said...

தமிழரசி said...

//நீ, நீ மட்டும்தான் என்பதுதானே காதல்//

இந்த ஒரு வார்த்தை தான் காதல்.இதை இருவரும் புரிந்து கொண்டால் போதும் புரிந்து கொள்வதில்லை என்பது தான் சோகம்..இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..

தங்கள் வருகைக்கு நன்றி,வாழ்த்துக்கள்

shanmugavel said...

மாத்தி யோசி said...

ஆமாங்க சந்தேகம் கூடவே கூடாது!

ஆம் நண்பனே,தங்களுக்கு நன்றி