தற்கொலை-நிகழ்வு அதிர்ச்சியையும்,உருக்கத்தையும் கொண்டுவரும் ஒரு சொல்.உயிர் போக்க் கூடாதென்று மனிதன் என்னவெல்லாம் செய்கிறான்?அதிலும் விவசாயிகளின் தற்கொலை தேசிய அவமானம்.வாழ்வுரிமை பறிக்கப்பட்ட கொடுஞ்செயல்.அவனை தற்கொலை செய்யத் தூண்டுவது அவனது சூழலை கண்டு கொள்ளாத அரசாங்கமே!
எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் தனது நிலத்தில் பயிர் செய்தான்.புன்செய் நிலமது.ஆனால்,அந்த பயிருக்கு தண்ணீர் வேண்டும்.அருகிலிருந்த ஏரியிலிருந்து தினமும் தனது தோளில் குட்த்தில் நீரைச் சுமந்து சென்று பயிரைக் காத்தான்.இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு செடிக்கு ஒரு காய்.பத்து ரூபாய் என்றால் கூட இவ்வளவு கிடைக்கும்.கனவுகளுடன் உழைத்தான்.தோள்கள் காய்ப்பேறி கருத்துவிட்ட்து.
அவனது கனவு பலிக்கவில்லை.எனக்கே அதிர்ச்சியாக இருந்த்து.ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.எல்லா செடியும் மலடாகிப்போனது போல ஒருசெடியும் காய்க்கவில்லை.வெகு நாட்களுக்கு அவன் நிலத்துப் பக்கம் போகவே இல்லை.முதலீடும் உழைப்பும் வீணாகிப்போனது.இப்படியான விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் விவசாயிகள் என்னதான் செய்வார்கள்
தேசிய குற்றங்கள் ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தியாவில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட்தாக கூறப்பட்டுள்ளது.இவற்றில் மஹாராஷ்டிரா முன்னணியில் உள்ளது.தொடர்ந்து ஆந்திரபிரதேசம்,கர்னாடகா,சத்தீஸ்கர்,மத்திய பிரதேசம் போன்றவை.தமிழ்நாட்டில் 1,060 பேர்.
பெரும்பாலான தற்கொலைகள் காவல்துறையில் பதிவாவதில்லை.மருத்துவமனை,போஸ்ட்மார்ட்டம்,காவல்துறை நடைமுறைகள் போன்றவை எளிய கிராமத்தானை அவதிக்குள்ளாக்குகின்றன.எனவே புள்ளிவிவரங்களை விட எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
சிறு,குறு விவசாயிகள் தான் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.வட்டிக்கு கடன் வாங்கி விதைப்பவர்கள் இவர்கள்.மழை பொய்த்துப்போனால், பயிர் மலடாகிப்போனால் கடனையும் கட்ட முடியாமல்,குடும்பத்தை நட்த்த முடியாமல் விவசாய கூலியாகவோ,கட்டுமான தொழிலாளியாகவோ மாறி குடும்பத்தை நட்த்த முயற்சி செய்வான்.கடன் அதிகமாகி கையறு நிலையில் ஆதரவற்று தற்கொலை செய்து கொள்கிறான்.
4 comments:
வேளாண்மைத் துறை மூலம் இத்தகைய ஏழை விவசாயிகள் கண்டறியப்பட்டு நஷ்ட ஈடு வழங்குவது அவலங்களை குறைக்கலாம்.இல்லையெனில்,கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளியை நாம் தற்கொலைக்கு தூண்டிய பாவத்துக்கு ஆளாவோம்/:
உண்மைதான் நண்பரே! நல்லதொரு பதிவு போட்டுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!!
உங்களுக்கு நன்றி,மாத்தியோசி
This is true.. Even though the Govt is trying to do something as freebees for Farmers, ultimately that does not reach all the deserved.
Very pathetic.
http://anubhudhi.blogspot.com/
நன்றி சங்கர் குருசாமி
Post a Comment