Sunday, February 27, 2011

காலில் மாட்டிக் கொண்ட பெண் உடைகள்.


காதலிக்கும் பெண் பயன்படுத்தும் பொருட்களை சேமித்து வைக்கும் காதலர்களை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.உடைகளை திருடுபவர்கள் கூட உண்டு.Fetishism  என்று முறையற்ற பழக்கம் ஒன்று இருக்கிறது.பெண்ணின் உடைகள்,பொருட்கள் போன்றவை அவர்களுக்கு பாலுறவு திருப்தியைத் தந்துவிடும்.
                                           
                               உடன் பணியாற்றும் நண்பன் ஒருவனை பார்க்க போயிருந்தேன்.அவனே சமைப்பதுண்டு.சுவையாக சமைப்பதில் கை தேர்ந்தவன்.நான் விருந்தாளியாக போய்விட்டால் சிறப்பு உணவுகள் இருக்கும்.அன்று வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அவனுடைய அறையிலேயே தூங்கிவிட்டேன்.

                              விழித்துக் கொண்டபோது காலில் ஏதோ மாட்டிக்கொண்டிருப்பதை பார்த்தேன்.பெண்களின் உடைகள் அவை.பத்து துணிகளுக்கு மேலிருக்கும்.எனக்கு குழப்பம்.நண்பன் திருமணமாகாத பிரம்மச்சாரி.அவனும் அறையில் ஆள் இல்லை.வெளியே வந்து பார்த்தால் லேசான தூறல்.

                              செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் அறையிலேயே மணிச் சத்தம்.எடுத்துப்போகாமல் விட்டு விட்டு போய்விட்டான்.எனக்கு குழப்பம் அதிகமாகிக் கொண்டிருந்த்து.ஒருவேளை உடனடி திருமணம் ஏதாவது செய்து கொண்டிருப்பானோ? அப்படியும் என்னை அழைக்காமல் எப்படி?

                               நாளிதழ்களில் படித்திருக்கிறேன்.காதலி,காதலன் வீட்டுக்கே சென்று போராட்டம் நட்த்துகிறார்கள்.எந்த பெண்ணாவது நேரடியாக இவனைத் தேடி வந்திருக்குமோ? எனக்கு தெரிந்து அவனுக்கு காதல் இருந்தமாதிரி தெரியவில்லை.இதிலெல்லாம் யாரையும் நம்பவும் முடியாது.

                               கீழே ஏதோ சத்தம் கேட்கிறமாதிரி இருந்த்து.எட்டிப் பார்த்தேன்.பக்கத்து வீட்டு முன் இருபது பேருக்குமேல் நின்றிருந்தார்கள்.அவர்கள் பேச்சை கவனித்த்தில் ஏதோ திருடு போயிருக்கவேண்டும்.ஒரு பாட்டி வந்து சத்தமிட்டுக் கேட்ட்து.என்னாச்சு? கூட்ட்த்தில் இருந்த ஒருவர் பதில் சொன்னார்.யாரோ துணிகளை திருடிக் கொண்டு போய் விட்டார்கள்’’

                               எனக்கு படபடப்பு அதிகமாகிவிட்ட்து.பாவி எங்கே போனான் என்று தெரியவில்லை.துணிகளை திருடும் அளவுக்கு கேவலமானவன் என்று என்னால் நம்பமுடியவில்லை.துணிகளை எடுத்துப் போய் கொடுத்துவிடலாமா?.எப்படி உன்னிடம் வந்த்தென்று கேட்டால்? தர்ம சங்கடமாக இருந்த்து.இனி இந்த அறைக்கு வரவே கூடாதென்று முடிவு செய்தேன்.

                               வெளியே பார்ப்பதும்,அறைக்குள் வருவதுமாக சிரமத்துடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன்.கூட்டம் கலைந்து விட்டிருந்த்து.வெகுநேரம் கழித்து எங்கிருந்தோ வந்தான்.தூங்கி எழுந்தாச்சா? என்றான் சிரித்துக் கொண்டே! பாவி,என்னென்னவோ செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல் பாவனை காட்டுகிறான்.

                               அறைக்குள் நுழைந்தவன் துணிகளை அள்ளி எடுத்தான்.உடலோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு வேகமாக கீழே இறங்கினான்.மாடியில் நின்று அவனை கவனித்துக் கொண்டிருந்தேன்.பக்கத்து வீட்டில் நுழைந்தான்.மீண்டும் கூட்டம் கூடி விட்ட்து.அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.வெட்கப்பட்டுக் கொண்டே வந்தவன் “இல்ல,மழை வர மாதிரி இருந்த்து.நனைஞ்சிடும்னு எடுத்து வச்சேன்






-

4 comments:

சக்தி கல்வி மையம் said...

Ha..ha..ha..ha..ha...

shanmugavel said...

நன்றி,கருன்

Jana said...

பெண்களின் உடைகள், உள்ளாடைகளை கவர்ந்து சென்று வைத்திருப்பது ஒரு போபியாதான். எல்லா நாடுகளிலும் பல இந்தமாதிரி போபியாக்கள் உண்டு.

shanmugavel said...

உண்மை ஜனா,மிக்க நன்றி