Friday, April 15, 2011

அக்வாராணியும்,நிர்வாண அரவாணியும்-ஒரு வாக்குமூலம்.

                               நான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன் என்று சரியாக நினைவில்லை.ஆண்களுடன் பள்ளியில் அமர்ந்திருந்தாலும் ஒரு பெண்ணாகவே என்னை நினைத்துக் கொண்டிருந்தேன்.பெண்கள் திட்டினாலும் அவர்களிடமே ஒட்டிக் கொள்ள மனம் விரும்பும்.

                               அப்பா ரிக்‌ஷா ஓட்டுவார்.அம்மா வீட்டு வேலைக்குப் போவார்.நான் ஆண்போல இருந்தேன்.மனசுக்குள் வேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்த்து.பதினான்கு வயதிலேயே ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போனேன்.என் நடவடிக்கை பார்த்து விட்டு பையன்கள் தொல்லை தாங்க முடியவில்லை.

                               யாருடனும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் ரயிலேறி மும்பை சென்றுவிட்டேன்.ரயில் நிலையத்திலேயே என்னைப்போன்ற ஒருவரை பிடித்தேன்.அவருடன் ஒரு வீட்டுக்குப் போனேன்.அங்கே சடங்களுக்குப் பிறகு நான் நிர்வாண அரவாணியானேன்.ஆபரேஷன் செய்து கொண்டவர்களை நிர்வாண அரவாணி என்றும்,ஆணுறுப்பு உள்ளவர்களை அக்வாராணி என்றும் சொல்வார்கள்.

                                இரண்டு வருடங்கள் கழித்து குடும்பத்தை பார்க்கலாம் என்று ஆசை வந்துவிட்ட்து.அங்கிருந்து வந்து விட்டேன்.என்னை எதற்காக வந்தாய் என்று அப்பா கேட்டார்.தம்பி வித்தியாசமாக பார்த்தான்.கடைகேட்டு வைத்திருந்த பணத்தை அப்பாவிடம் கொடுத்து தம்பிக்கு ஏதாவது வாங்கிக்கொடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

                               தினமும் கடை கேட்க போவேன்.யாராவது தொழிலுக்கு அழைத்தால் போவேன்.பணக்கார பையன்கள் கார் எடுத்துவந்து அழைத்துப்போவார்கள்.500,1000ரூபாய் கூட கிடைக்கும்.எல்லாவற்றையும் வீட்டுக்குத்தான் கொடுக்கிறேன்.என் அப்பா வேலைக்கு போவதேயில்லை.குடிப்பதுதான் வேலை.எல்லாம் என்னுடைய பணம்.

                               என் தம்பி காலேஜில் படிக்கிறான்.இஞ்சினியருக்கு படிக்கிறான்.ஒரு நாள் காலேஜ் பக்கம் போன போது தம்பி என்று கூப்பிட்டேன்.முறைத்துவிட்டு பேசாமல் போய்விட்டான்.அப்புறம் ஒரு நாள் நான் வீட்டிற்கு போனபோது வழியில் எங்கே பார்த்தாலும் என்னுடன் பேசாதே,எனக்கு அவமானமாக இருக்கிறது.கூட படிப்பவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்கிறான்.அவன் படிப்பதே என் காசில்தான்!

                               எங்களை மாதிரி இருப்பவர்களை வயதான அரவாணிகளை நீங்கள் அதிகம் பார்க்கமுடியாது.யாரோ ஒருவர் தான் வீடு வைத்து எங்களை மாதிரி ஆட்களுடன் இருப்பார்கள்.மற்றவர்கள் எல்லாம் கண் காணாத இட்த்துக்குப்போய் செத்துப்போவார்கள்.தற்கொலை செய்து கொள்கிறார்கள்.நான் கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.பார்ப்போம்.
(நேற்று திருநங்கைகள் தினத்திற்கு வரவேண்டிய பதிவு)

-

9 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எங்களை மாதிரி இருப்பவர்களை வயதான அரவாணிகளை நீங்கள் அதிகம் பார்க்கமுடியாது.யாரோ ஒருவர் தான் வீடு வைத்து எங்களை மாதிரி ஆட்களுடன் இருப்பார்கள்.மற்றவர்கள் எல்லாம் கண் காணாத இட்த்துக்குப்போய் செத்துப்போவார்கள்.தற்கொலை செய்து கொள்கிறார்கள்.நான் கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.பார்ப்போம்.--
பாவம் இவர்கள்...

Anonymous said...

உருக்கமான பதிவு !!! பெற்ற பிள்ளையையும், சகோதரியையும் கூட மதிக்காத இப்படியான குடும்பங்கள் பல உள்ளன................. !!! அவர்களை இந்த சமூகம் சக மனிதனாக மதித்து, கேலிப் பொருளாக்காமல் இருக்க வேண்டும்... அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உபகாரம் ...........

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எங்களை மாதிரி இருப்பவர்களை வயதான அரவாணிகளை நீங்கள் அதிகம் பார்க்கமுடியாது.யாரோ ஒருவர் தான் வீடு வைத்து எங்களை மாதிரி ஆட்களுடன் இருப்பார்கள்.மற்றவர்கள் எல்லாம் கண் காணாத இட்த்துக்குப்போய் செத்துப்போவார்கள்.தற்கொலை செய்து கொள்கிறார்கள்.நான் கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.பார்ப்போம்.--
பாவம் இவர்கள்...

yes karun thank you

shanmugavel said...

@இக்பால் செல்வன் said...

உருக்கமான பதிவு !!! பெற்ற பிள்ளையையும், சகோதரியையும் கூட மதிக்காத இப்படியான குடும்பங்கள் பல உள்ளன................. !!! அவர்களை இந்த சமூகம் சக மனிதனாக மதித்து, கேலிப் பொருளாக்காமல் இருக்க வேண்டும்... அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உபகாரம் ...........

yes iqpalselvan,thank you

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திரு நங்கைகள் என்ன? சம்பாதிக்கிற முதிர்கன்னிகளையும் பொறுப்பற்ற குடும்பம் அப்படித் தானே நடத்துகிறது? அவர்கள் வேண்டாம் அவர்கள் பணம் மட்டும் வேண்டுமாம்? ச்சே...என்ன உலகமடா இது?
மிருகங்களுக்குக் கூட பாசம் இருக்கும்..இங்கு எல்லாமே சுய நலமாய்ப் போய் விட்டது!

MANASAALI said...

நாம் படித்த இலக்கியம் நாம் பார்த்த திரைப்படங்கள் நமக்கு சொல்லி கொடுத்ததை தான் நாம் செய்கிறோம் . அவர்களை அன்றைய சுருளி முதல் இன்றைய விவேக் , கருணாஸ் வரை கிண்டல் தானே செய்கிறார்கள். திருநங்கைகளை கிண்டல் செய்பவர்களிடம் நான் சொல்வது. நம் வீட்டில் ஒரு வேலை நம்மக்கு பிறப்பவர்களே இப்படி பிறந்தால் என்ன செய்வது. இதுவும் ஒரு வகை ஊனம் தான் . இவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் அன்றி கிண்டல் செய்யப்பட வேண்டியவர்கள் அல்ல.

shanmugavel said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திரு நங்கைகள் என்ன? சம்பாதிக்கிற முதிர்கன்னிகளையும் பொறுப்பற்ற குடும்பம் அப்படித் தானே நடத்துகிறது? அவர்கள் வேண்டாம் அவர்கள் பணம் மட்டும் வேண்டுமாம்? ச்சே...என்ன உலகமடா இது?
மிருகங்களுக்குக் கூட பாசம் இருக்கும்..இங்கு எல்லாமே சுய நலமாய்ப் போய் விட்டது!

சுயநலம்தான் அதிகமாகிக் கொண்டு வருகிறது நண்பரே! நன்றி

shanmugavel said...

@MANASAALI said...

நாம் படித்த இலக்கியம் நாம் பார்த்த திரைப்படங்கள் நமக்கு சொல்லி கொடுத்ததை தான் நாம் செய்கிறோம் . அவர்களை அன்றைய சுருளி முதல் இன்றைய விவேக் , கருணாஸ் வரை கிண்டல் தானே செய்கிறார்கள். திருநங்கைகளை கிண்டல் செய்பவர்களிடம் நான் சொல்வது. நம் வீட்டில் ஒரு வேலை நம்மக்கு பிறப்பவர்களே இப்படி பிறந்தால் என்ன செய்வது. இதுவும் ஒரு வகை ஊனம் தான் . இவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் அன்றி கிண்டல் செய்யப்பட வேண்டியவர்கள் அல்ல.

உண்மைதான்.தங்கள் கருத்துரைக்கு நன்றி

miya sow said...

hi, i am sowreshwaran from pondy, naan ithai oppukolkiren, annal niraiya aravanikal thangalai oru vilaimathargal yendru mattum than nenaikiralrgal athu thavaru yendru puriya villai avargaluku, than oru aravani yendru therintha udane avargal rail yeruvathum, mubai ku poi aruthukolvathum thavaru, avargal thangal padipai mattume thangal kavalagvum, pidipagavum nenaika vendum, thangalai nilai paduthikonda pirage avargal thangal orupai aruka muyala vendum, yen yendral arutha piragu yaraium avargal yethir parkka vendam avargal thangal uzhaipai mattume nambi vazhalam kai, kaal illathavargal kooda STD boothla velai seikiragal, avargalaivida aravanigal yentha vagilum kurainthavargal illai, avargalidam angaludiaya thembum, pengaludaiya menmaium irukirathu, athai avargal unara vendum, athai vittu vittu, kadai ketpathum, paliyal thozhil seivathumai irrukirargal, innum sillar singnalil nirpavarai thottu, thadavi,pichai yedukiralgal, avargalai parthale yeruchal than varugirathu, aagaiyal than annaivarum avargalai verukirargal, neengal muthlil ithai purinthu kollungal. intha velaiyellam, Rose, Priya Babu,Kalki, innum palar seithu irrunthal avargal ippadi samuthayathil thalai nimrnthu nindru irruka mudiyathu, avrgalai pol irruka anaivarum kattruka vendu appa than samugathil ungalalum thaalai nimrnthu vazh mudium, inni varum aravanigalauthu ithai pin pattri vazha vendum yenbathu yen karuthu, ithu year manthaium kayapaduthi irrunthal, avargal yennai mannikaum................