Friday, April 22, 2011

மின்னல் வேகத்தில் திருடப்பட்ட என்பதிவு -தமிழ்மணம் பதில்

பெண்மைக்குறைவு-ஆண்மைக்குறைவு-நரம்புத்தளர்ச்சி  என்ற பதிவை  திரட்டிகளில் இணைத்துவிட்டு வெளியில் சென்று விட்டேன்.இரண்டு மணி நேரம் கூட இருக்காது என்று நினைக்கிறேன் .தமிழ்மணத்தை பார்த்தபோது எனது இடுகை வேறொருவர் பதிவாக முதல் பக்கத்தில் இருந்தது.அந்த பதிவை சுட்டிப்போனால் சரவணன் எழுதி வெளியிட்டதாக ஓடிக்கொண்டிருக்கிறது.சுத்தமாக காபி.எனக்கு சிரிப்புதான் வந்தது.இவ்வளவு வேகமாகவா? அதுவும் இருப்பதை அப்படியே!

                                                             நெருக்கமில்லாத தம்பதிகள் அதிரும் மணவாழ்க்கை பதிவில் என்று குயபிட்டிருந்தால் அதுவும் அப்படியே இருக்கிறது.என் பதிவில் பெண்மைக்குறைவு பற்றி எழுதிவிட்டு ,ஆண்மைக்குறைவு ,நரம்புத்தளர்ச்சி பற்றிய செய்திகளுக்கு சுட்டி கொடுத்திருந்தேன்.அவர்கள் வெளியிட்டதில் பெண்மைக்குறைவுக்கான செய்தி மட்டும்தான் இருக்கிறது.

                                                                     மேற்குறிப்பிட்டுள்ள பதிவே மருத்துவர் ஒருவர் இதைப்பற்றி நீங்கள் எழுதலாமே என்று கூறியதால் எழுதப்பட்டதுதான்.சொல்லிவிட்டு போய் விட்டாரே  தவிர தகல்களை கேட்க போகும்போதெல்லாம் அவர் பயங்கர பிஸி.நான்கு முறை அவர் கிளினிக்குக்கு சென்று இரவு பத்து மணிக்கு அவருடன் பேச முடிந்தது.

                                                                              ஆண்மைக்குறைவு ,நரம்புத்தளர்ச்சி இடுகை ஆரம்பத்தில் (சில மாதங்களுக்கு முன்பு)எழுதியது.ஆயிரக்கணக்கான ரூபாயை லாட்ஜ் வைத்தியர்களிடம் தொலைத்துவிட்டு வந்து ஒரு இளைஞன் என்னிடம் புலம்பிய பின் அதை எழுதினேன்.சிரமப்பட்டும் நேரம் ஒதுக்கியும் பதிவுகளை எழுதுகிறோம்.மின்னல் வேகத்தில் காபி பேஸ்ட் செய்துவிட்டு மார் தட்டிக் கொள்கிறார்கள்.

                                                                                   இதற்கு முன்பு பாண்டிச்சேரி வலைப்பூ ,tamillook  ஆகிய வற்றில் என்னுடைய பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.ஆனால் அனுமதி கேட்டபின்பே வெளியிட்டார்கள்.அதுவும் என் பெயரில் இருக்கும்.அடுத்தவன் பதிவை காப்பியடித்து தன் பெயரில் வெளியிட்டு எதை சாதிக்க அலைகிறார்கள்? இவர்களையெல்லாம் என்ன செய்வது? தமிழ்மணம் நிர்வாகத்திற்கு இதைப் பற்றி தெரிவித்தேன்.we will look into it and let you know soon  என்று மின்ன்ஞ்சலில் பதில் அளித்திருக்கிறார்கள்.தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றி!

காபியடித்த பதிவின் சுட்டி கீழே

http://amanushyam.blogspot.com/2011/04/blog-post_8677.html
-

33 comments:

நிரூபன் said...

திருந்தவே மாட்டாங்களா, நம்ம ஆட்கள்?
காப்பி, பேஸ்ட் அடிப்பதை விடுத்து, சொந்தமாக எழுத மாட்டாங்களா?

Anonymous said...

////அடுத்தவன் பதிவை காப்பியடித்து தன் பெயரில் வெளியிட்டு எதை சாதிக்க அலைகிறார்கள்?// நியாயமான கேள்வி

வலிபோக்கன் said...

அய்யய்யோ!இந்தியாதான் பன்னாட்டு முதலாளிகளுக்கு
கொள்ளை போகுதுன்னா,சார் எழுதின பதிவும் கொள்ளை போகுது.

ஜீ... said...

அடப்பாவிங்களா? இதெல்லாம் வேற நடக்குதா?

MANO நாஞ்சில் மனோ said...

//அடுத்தவன் பதிவை காப்பியடித்து தன் பெயரில் வெளியிட்டு எதை சாதிக்க அலைகிறார்கள்?//

கடுமையாக, வன்மையாக கண்டிக்கிறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

காய்ச்ச மரம்தான் கல்லடி படும், ஸோ நீங்க நம்பர் ஒன் பதிவர், காலரை தூக்கி விட்டுகொள்ளுங்கள் மக்கா...

shanmugavel said...

@நிரூபன் said...

திருந்தவே மாட்டாங்களா, நம்ம ஆட்கள்?
காப்பி, பேஸ்ட் அடிப்பதை விடுத்து, சொந்தமாக எழுத மாட்டாங்களா?

எழுத தெரியாதோ என்னவோ ! நன்றி நிருபன்

ரஹீம் கஸாலி said...

என்னது உங்க பதிவ திருடிட்டான்களா? கை கொடுங்க சார் நீங்க பிரபல பதிவராகிட்டீங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது அடிக்கடி நடக்குது...பரபரப்பான பதிவுகளை உடனே அடித்துவிடுகிறார்கள்

shanmugavel said...

@கந்தசாமி. said...

////அடுத்தவன் பதிவை காப்பியடித்து தன் பெயரில் வெளியிட்டு எதை சாதிக்க அலைகிறார்கள்?// நியாயமான கேள்வி

ஆமாம் சார் .தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@வலிபோக்கன் said...

அய்யய்யோ!இந்தியாதான் பன்னாட்டு முதலாளிகளுக்கு
கொள்ளை போகுதுன்னா,சார் எழுதின பதிவும் கொள்ளை போகுது.

நல்ல கமென்ட் சார்.நன்றி

DrPKandaswamyPhD said...

என்ன அக்கிரமம்? நான் என் பதிவில் பப்ளிக்காக, என் பதிவை யார் வேண்டுமானாலும் காப்பி, பேஸ்ட் (coffee, paste இல்லீங்க copy, paste தானுங்க) பண்ணலாம்னு கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறேன். ஒருத்தரும் பண்ண மாட்டேங்கிறாங்களே?

shanmugavel said...

@ஜீ... said...

அடப்பாவிங்களா? இதெல்லாம் வேற நடக்குதா?

ஆமாம் ஜீ .தங்கள் கருத்துரைக்கு நன்றி

saravanan said...

வணக்கம் நண்பரே எனது தவறுக்கு நான் வருந்துகிறேன் தங்களுடைய படைப்புகளை திருட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை தங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் தங்களுட கருத்துக்கள் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் எனது ப்ளாக்கில் வெளியிட்டு விட்டேன் மன்னிக்கவும் தங்களுடைய அந்த பதிவுகளை எனது தளத்திலிருந்து நீக்கி விட்டேன் தயவு செய்து பார்க்கவும்

http://amanushyam.blogspot.com/2011/04/blog-post_8677.html

மைந்தன் சிவா said...

ரஹீம் ஹசாளியை வழிமொழிகிறேன் பாஸ்..
என்றாலும் அவர்களது நடத்தை கண்டிக்கத்தக்கது

Anonymous said...

இதைத் தான் ஈயடித்தான் காபி என்பார்கள். இப்படி அவசரக் கதியில் காப்பி அடித்து தமது பெயரில் வெளியிடுபவர்களை இப்படிச் சொல்லலாம் -

யாரோ பெற்றப் பிள்ளைக்கு தானே தந்தை என அறிவித்துக் கொள்பவர்கள் போன்று.

அவசரக் கதியில் பதிவைக் காப்பி அடித்து சுட்டி இல்லாமல் வெளியிடுவோன் - மெரினாப் பீச் கரையில் ஐம்பது ரூபாய்க்கு கிராக்கியை பிடித்து அவசரம் அவசரமாக ஒன்றுக்கு அடிப்பது போல புணர்பவன் போலே !!!

இப்படியான கேவலச் செயல் செய்பவர்களை இதை விட கேவலமாக எனக்கு சொல்லத் தெரியவில்லை.

றமேஸ்-Ramesh said...

விடுங்க அண்ண. சகஜம். மற்றும் உங்கள் கனி இனிக்குது.
நன்றி சரவணண். ஒப்புக்கொண்டதற்று. ஆனால் நீக்கியிருக்கத் தேவையில்லை. இது எங்கிருந்து எடுத்துபோட்டிருக்கீங்க என்று ஒரு இணைப்பும் நன்றியும் சொல்லியிருக்கலாம்.

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

//அடுத்தவன் பதிவை காப்பியடித்து தன் பெயரில் வெளியிட்டு எதை சாதிக்க அலைகிறார்கள்?//

கடுமையாக, வன்மையாக கண்டிக்கிறேன்....

நன்றி நண்பரே

டக்கால்டி said...

Vidunga Boss...Vishyam innum niraiya perukku poyi serum...

துளசி கோபால் said...

பேசாம எழுத்துநடையை உங்களுக்கே மட்டுமான தனி ஸ்டைலில் மாத்திப்பாருங்க. அப்ப காபி & பேஸ்ட் பார்த்தவுடன் யாரு எழுதி இருப்பாங்கன்னு புரிஞ்சுரும்,.

சி.பி.செந்தில்குமார் said...

ரைட்டு அவர் மன்னிப்புக்கேட்டுட்டாரு..

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

காய்ச்ச மரம்தான் கல்லடி படும், ஸோ நீங்க நம்பர் ஒன் பதிவர், காலரை தூக்கி விட்டுகொள்ளுங்கள் மக்கா...

காய்க்காத மரத்திலும் சில நேரம் கல்லடி பட்டு விடுகிறது.நன்றி சார்

shanmugavel said...

@DrPKandaswamyPhD said...

என்ன அக்கிரமம்? நான் என் பதிவில் பப்ளிக்காக, என் பதிவை யார் வேண்டுமானாலும் காப்பி, பேஸ்ட் (coffee, paste இல்லீங்க copy, paste தானுங்க) பண்ணலாம்னு கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறேன். ஒருத்தரும் பண்ண மாட்டேங்கிறாங்களே?

இதுக்குமேல பண்ணுவாங்க சார்.சொல்லிட்டீங்க இல்ல! நன்றி

shanmugavel said...

@saravanan said...

வணக்கம் நண்பரே எனது தவறுக்கு நான் வருந்துகிறேன் தங்களுடைய படைப்புகளை திருட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை தங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் தங்களுட கருத்துக்கள் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் எனது ப்ளாக்கில் வெளியிட்டு விட்டேன் மன்னிக்கவும் தங்களுடைய அந்த பதிவுகளை எனது தளத்திலிருந்து நீக்கி விட்டேன் தயவு செய்து பார்க்கவும்

நல்லது நண்பரே ஒருமணி நேரம்கூட ஆகவில்லை.தமிழ்மணத்தில் இணைத்துவிட்டீர்கள்.அதன் நோக்கமென்ன?இனி யாருக்கும் செய்யாமல் இருந்தால் நல்லதுதான்.

shanmugavel said...

@ரஹீம் கஸாலி said...

என்னது உங்க பதிவ திருடிட்டான்களா? கை கொடுங்க சார் நீங்க பிரபல பதிவராகிட்டீங்க

அய்யோ வேணாம் சார்.நான் சாதா பதிவராகவே இன்னும் ஆகல!நன்றி சார்.

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

ரஹீம் ஹசாளியை வழிமொழிகிறேன் பாஸ்..
என்றாலும் அவர்களது நடத்தை கண்டிக்கத்தக்கது

நன்றி சிவா

shanmugavel said...

@ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது அடிக்கடி நடக்குது...பரபரப்பான பதிவுகளை உடனே அடித்துவிடுகிறார்கள்

ஆமாம் சார்.உடனே திரட்டிகளிலும் இணைத்துவிடுகிறார்கள்.நன்றி

shanmugavel said...

@இக்பால் செல்வன் said...

ஒருபிடிபிடித்து விட்டீர்கள் .நன்றி இக்பால்செல்வன்.

shanmugavel said...

@றமேஸ்-Ramesh said...

விடுங்க அண்ண. சகஜம். மற்றும் உங்கள் கனி இனிக்குது.
நன்றி சரவணண். ஒப்புக்கொண்டதற்று. ஆனால் நீக்கியிருக்கத் தேவையில்லை. இது எங்கிருந்து எடுத்துபோட்டிருக்கீங்க என்று ஒரு இணைப்பும் நன்றியும் சொல்லியிருக்கலாம்.

நன்றி றமேஸ்.

shanmugavel said...

@டக்கால்டி said...

Vidunga Boss...Vishyam innum niraiya perukku poyi serum...

சரிதான் பாஸ்.உடனே தமிழ்மணத்துல இணைச்சுட்டதால அதிகம் பேருக்கு ரீச் ஆகாம போயிடுச்சு! நன்றி

shanmugavel said...

@துளசி கோபால் said...

பேசாம எழுத்துநடையை உங்களுக்கே மட்டுமான தனி ஸ்டைலில் மாத்திப்பாருங்க. அப்ப காபி & பேஸ்ட் பார்த்தவுடன் யாரு எழுதி இருப்பாங்கன்னு புரிஞ்சுரும்,.

உண்மைதான் மேடம்.நன்றி

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

ரைட்டு அவர் மன்னிப்புக்கேட்டுட்டாரு..

ஆமா சார்.நன்றி

அம்பாளடியாள் said...

ஆகா இப்படிக்கூட நடக்குதா!!..... இதற்காக ஒரு நட்ப்புவட்டாரம் இணையுங்கள். உங்கள் நண்பர்களின் ஆக்கம் பிற தளங்களில் இப்போது
நடந்த சம்பவம் போன்று இனி வேறு எங்காவது இடம்பெற்றால் உடனடியாகக் கண்டித்துவிடுங்கள்.
திருடர்களுக்கு இது ஒரு நல்லபாடமாகவும் எமது
ஆக்கங்களுக்கு சிறந்த பாதுகாப்பாகவும் அமையும்
என நான் நினைக்கின்றேன்.நன்றி சகோ தங்களின்
இந்தத் தகவலுக்கு.