Saturday, April 30, 2011

கள்ளக்காதலுக்கு காரணங்கள்-ஓர் அலசல்(வாத்ஸ்யாயனர் உதவியுடன்)

இது போன்ற பிரச்னைகளுக்கு காரணகர்த்தா யாருன்னு
சொல்லுங்க சார்.
                                                       மேற்கண்ட கருத்துரை “சிரிப்பாய் சிரிக்கும் கள்ளக்காதல்கள் பதிவிற்கு இடப்பட்ட்து.

கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள். படிக்கும்போது பெரும்பாலானவர்களுக்கு தோன்றும் எண்ணம் ஏன் இப்படி?ஆனால் தெளிவாக சொல்ல யாருமில்லை.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.
உறவுகளிலும்,குடும்பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை,தற்கொலை,குடும்பசிதைவு,என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன?இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை?படிக்கப்படவில்லை?

 பத்திரிக்கை செய்திகளை தாண்டி கள்ளக்காதல்கள் பற்றி அதிகம் காணக்கிடைக்கவில்லை. சமூகப்பிரச்சினை என்பதற்கு உள்ள வரையறைகள் கள்ளக்காதலுக்கு பொருந்தும்.மரபு சார்ந்து நாம் காதல்,பாலியல் தொடர்பான விஷயங்களை திரும்பிப்பார்க்காமல் ஓரக்கண்ணால் படபடப்புடன் பார்த்து வந்திருக்கிறோம்.

                                        குற்றங்களை ஆய்வு செய்கிறோம்.மதுப்பழக்கம்,புகைபிடித்தல்,வறுமை,என்று சமூகப்பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.படிக்கப்படுகின்றன.கள்ளக்காதல் போன்றவற்றை அவ்வப்போது சில பத்திரிக்கைகள்ஆய்வுக்கு உட்படுத்துகின்றனவே தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை.

                           கள்ளக்காதல் சமூகத்தில் நோய்க்கூறாக சிந்திக்கப்ப்படும்போது,அனுமானங்களும்,அதையொட்டி ஆய்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது.ஆய்வுகள் மூலம் கண்டடையப்படும் உண்மைகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.பல குழந்தைகள் அனாதையாவது,கொலை,தற்கொலைஎன்று நீளும் குற்றச்செயல்களை ஓரளவாவது நம்மால் குறைக்கமுடியும்.முயற்சி இருந்தால் முடியாதது இருக்கிறதா என்ன?

                             இனி விஷயத்துக்கு வருவோம்.வாத்ஸ்யாயனார் காம சூத்திரத்தில் கள்ளக்காதலை குறித்துள்ளார்.அவரது காலத்தை கவனியுங்கள்.வேலி தாண்டுவது காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள் கள்ளக்காதலில் விழுபவர்கள்தான் என்கிறார்.

                        மதிக்கப்படாத நிலை,சூழல் போன்றவற்றை முக்கிய காரணமாக கூறுகிறார்.ஏதோ ஒருவகையில் மணவாழ்வில் திருப்தியில்லாத நிலை இதைத்தூண்டும் என்பது அவரது கூற்று.அது மனதளவிலும் இருக்கலாம். ஏராளமான காரணங்களை கூறுகிறார்.

                                   சட்டப்பூர்வ திருமண உறவை தாண்டி ஆணோ,பெண்ணோ வேறொரு நபருடன் காதலில் ஈடுபடுவதை கள்ளக்காதல் என்கிறோம்.காமமே இதன் அடிப்படையாக கருதப்படுகிறது "கணவனுக்கு அல்லது மனைவிக்கு போதுமான பாலியல் திறன்கள் இல்லை என்று கருதுவோர் இருக்கிறார்கள்.நாட்டுப்புற நம்பிக்கைகளில் ஒன்றாக இவை இருந்து கொண்டிருக்கிறது.

                              பரிணாமக்கொள்கையும் ,பிராய்டிசமும் உலகை மாற்றின.தற்போது கள்ளக்காதலுக்கு மரபணுக்களை காரணமாக கருதுவோர் இருக்கிறார்கள்.மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன்.ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது முன்னோர்களுக்கு ஏது?விலங்குகளுக்கு குடும்பம்,அவமானம்,கௌரவம் என்று ஏதேனும் உண்டா?

                             மனிதன் கால்களால் நிமிர்ந்து நடந்து சிந்திக்க ஆரம்பித்து என்னென்னவோ கொண்டு வந்தான். ஒருவருக்கு மேற்பட்ட காதல் உணர்ச்சிகள் மரபணுக்கள் மூலம் பெறப்பட்டாலும் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தாது.ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.தவிர தம்பதியர் நீண்ட நாட்கள் பிரிந்திருத்தல்,தனிமை,சூழல்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.இவையெல்லாம் அனுமான்ங்கள்தான் ஆய்வுமுடிவுகள் அல்ல!

-

20 comments:

மைந்தன் சிவா said...

இன்ட்லி எங்க சார்??

மைந்தன் சிவா said...

இப்ப ஓகே...
கள்ள எண்ணங்கள் இருக்கும் வரையில் கள்ளக் காதலும் இருக்கத்தான் செய்யும் சார்...

MANO நாஞ்சில் மனோ said...

இதை ஆய்வு செய்வது நல்லதென படுகிறது...

நிரூபன் said...

சகோ, பாலியல் திருப்தி இன்மையும் கள்ளக் காதலுக்கு ஒரு காரணமாக அமைகின்றது, அதே வேளை.. எல்லாப் பூக்களையும் நுகர்ந்து பார்க்க வேண்டும் எனும் எண்ணங்களும் இதற்கு காரணமாக அமைகின்றது தானே?
இது பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன சகோ?
மனித மனங்களில் தினம் தினம் வெவ்வேறு சாப்பாடு வேண்டும் எனும் எண்ணமும் இக் கள்ளக் காதலுக்கான ஒரு காரணமாகவும் இருக்கலாம் தானே?

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

இன்ட்லி எங்க சார்??

இருக்கே சார்.நன்றி சிவா

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

இப்ப ஓகே...
கள்ள எண்ணங்கள் இருக்கும் வரையில் கள்ளக் காதலும் இருக்கத்தான் செய்யும் சார்...

அட! சிவா இது புதுசா இருக்கே!

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

இதை ஆய்வு செய்வது நல்லதென படுகிறது...

ஆமாம் மனோ,இது சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

சகோ, பாலியல் திருப்தி இன்மையும் கள்ளக் காதலுக்கு ஒரு காரணமாக அமைகின்றது, அதே வேளை.. எல்லாப் பூக்களையும் நுகர்ந்து பார்க்க வேண்டும் எனும் எண்ணங்களும் இதற்கு காரணமாக அமைகின்றது தானே?
இது பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன சகோ?
மனித மனங்களில் தினம் தினம் வெவ்வேறு சாப்பாடு வேண்டும் எனும் எண்ணமும் இக் கள்ளக் காதலுக்கான ஒரு காரணமாகவும் இருக்கலாம் தானே?

மனித மனங்களில் என்பதல்ல!சிலருக்கு அப்படி இருக்கலாம் என்ற பார்வையும் இருப்பது உண்மைதான் சகோ,நன்றி

Anonymous said...

அவசியமான ஒரு பதிவு சகோ. ஆனால் கள்ளக் காதல் என்ற சொல்லில் எனக்கு உடன்படில்லை. மணம் மீறிய உறவு என்பது தான் சரி. சட்டப்படியான திருமணத்துக்கு அப்பால் அமையும் உடலுறவு, மன உறவு தான். மணம் மீறிய உறவால் அவரும், அவரது துணையும், குழந்தைகளுமே பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் பேசி விட்டுக் கொடுத்து, ஒருவரின் தேவையையும், எதிர்ப்பார்ப்பையும் மற்றவர் புரிந்துக் கொண்டு, இருவரும் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக வாழ வேண்டும், இல்லை எனில் பிரிந்துவிடுவது நலம்.

உண்மையாக எனில் - உண்மையாகவே !!! தவறிழைத்திருந்தால் அதனை உங்கள் துணையிடம் எடுத்து வைப்பதே நல்லது.

Ramani said...

சமீப காலங்களின் கொலைக்கான
முக்கிய காரணங்களில் இந்தப்
பிரச்சனை முதன்மையானதாக இருக்கிறது
இது குறித்து சிந்தித்து அழகாக தெளிவாக
பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்

hamaragana said...

அன்புடன் வணக்கம் நண்பரே.
பொதுவாக இது போன்ற கள்ளகாதலுக்கு உணவு பழக்கமும் ஒரு முக்கிய காரணம்!!... . முன்னர் சந்நியாச தர்மம் இலை தழைகளை உண்டு காட்டில் வசிக்க வேண்டும்.!!! காம உணர்வுகள் மட்டுப்படும்.!!!. இப்போது சாமியார்கள் நல்லா புல் கட்டு கட்டி.... இருக்கும்போது எப்பிடி கட்டுபடுத்த முடியும் (யாரையும் தனிப்பட சொல்லவில்லை.) உணவு நமக்கு சக்தி மட்டும் அளிப்பதில்லை உணர்வுகளையும் அளிக்கிறது.. ஊறுகாய் என எண்ணினாலே ...எச்சில் ஊறுகிறதே !!அதீத அசைவ+தாமச குண விருத்தி பொருட்கள் // உணவு பழக்கம் எப்பிடி ??காம உணர்வு கட்டுப்படும் ???---- உங்கள் பதிவு ...நல்லா இருக்கு.!!!.

Rathnavel said...

நல்ல பதிவு.
இது மனம் சம்பந்தப்பட்டது.
நன்றி.

shanmugavel said...

@இக்பால் செல்வன் said...

அவசியமான ஒரு பதிவு சகோ. ஆனால் கள்ளக் காதல் என்ற சொல்லில் எனக்கு உடன்படில்லை. மணம் மீறிய உறவு என்பது தான் சரி. சட்டப்படியான திருமணத்துக்கு அப்பால் அமையும் உடலுறவு, மன உறவு தான். மணம் மீறிய உறவால் அவரும், அவரது துணையும், குழந்தைகளுமே பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் பேசி விட்டுக் கொடுத்து, ஒருவரின் தேவையையும், எதிர்ப்பார்ப்பையும் மற்றவர் புரிந்துக் கொண்டு, இருவரும் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக வாழ வேண்டும், இல்லை எனில் பிரிந்துவிடுவது நலம்.

உண்மையாக எனில் - உண்மையாகவே !!! தவறிழைத்திருந்தால் அதனை உங்கள் துணையிடம் எடுத்து வைப்பதே நல்லது.

சரிதான் இக்பால்செல்வன்.மணம் மீறிய உறவுதான்.பிரிந்துவிடுவதில் குழந்தைகள் போன்ற சிக்கல்கள் இருக்கின்றன.இருவருக்கும் குடும்பம் இருக்கலாம்.நன்றி

shanmugavel said...

@Ramani said...

சமீப காலங்களின் கொலைக்கான
முக்கிய காரணங்களில் இந்தப்
பிரச்சனை முதன்மையானதாக இருக்கிறது
இது குறித்து சிந்தித்து அழகாக தெளிவாக
பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

shanmugavel said...

@hamaragana said...

அன்புடன் வணக்கம் நண்பரே.
பொதுவாக இது போன்ற கள்ளகாதலுக்கு உணவு பழக்கமும் ஒரு முக்கிய காரணம்!!... . முன்னர் சந்நியாச தர்மம் இலை தழைகளை உண்டு காட்டில் வசிக்க வேண்டும்.!!! காம உணர்வுகள் மட்டுப்படும்.!!!. இப்போது சாமியார்கள் நல்லா புல் கட்டு கட்டி.... இருக்கும்போது எப்பிடி கட்டுபடுத்த முடியும் (யாரையும் தனிப்பட சொல்லவில்லை.) உணவு நமக்கு சக்தி மட்டும் அளிப்பதில்லை உணர்வுகளையும் அளிக்கிறது.. ஊறுகாய் என எண்ணினாலே ...எச்சில் ஊறுகிறதே !!அதீத அசைவ+தாமச குண விருத்தி பொருட்கள் // உணவு பழக்கம் எப்பிடி ??காம உணர்வு கட்டுப்படும் ???---- உங்கள் பதிவு ...நல்லா இருக்கு.!!!.

உணர்வுகளுக்கும்,உணவுக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான்.நன்றி

shanmugavel said...

@Rathnavel said...

நல்ல பதிவு.
இது மனம் சம்பந்தப்பட்டது.
நன்றி.

சரியாக சொன்னீர்கள் அய்யா!மனம் தொடர்புடையதே!நன்றி

Jana said...

அருமையான பதிவு. கள்ளக்காதல் தொடர்பாக சங்க காலம் தொட்டு தமிழ் இலக்கியங்களிலேயேயும் சில செய்யுள்கள் தொட்டுக்காட்டுவதையும் கவனிக்கவேண்டும். அதேவேளை "காதலில் என்ன நல்ல காதல்- கள்ளக்காதல்" என்ற ரீதியில் சில எழுத்தாளர்களும் திரைப்பட இயக்குனர்களும் புரட்சி செய்கின்றோம் பேர்வழிகளில் கள்ளக்காதலை மையப்படுத்தி நூல்களையும், திரைப்படங்களையும் வெளியிடுகின்றனர்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மனசு சம்பந்தப் பட்ட பதிவு.. அருமை..

shanmugavel said...

@Jana said...
அருமையான பதிவு. கள்ளக்காதல் தொடர்பாக சங்க காலம் தொட்டு தமிழ் இலக்கியங்களிலேயேயும் சில செய்யுள்கள் தொட்டுக்காட்டுவதையும் கவனிக்கவேண்டும். அதேவேளை "காதலில் என்ன நல்ல காதல்- கள்ளக்காதல்" என்ற ரீதியில் சில எழுத்தாளர்களும் திரைப்பட இயக்குனர்களும் புரட்சி செய்கின்றோம் பேர்வழிகளில் கள்ளக்காதலை மையப்படுத்தி நூல்களையும், திரைப்படங்களையும் வெளியிடுகின்றனர்.

உண்மைதான் ஜனா ! பணம் பண்ணுவதற்கு ,நன்றி

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மனசு சம்பந்தப் பட்ட பதிவு.. அருமை.

நன்றி கருன்